search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    • நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதியில் வாழைத்தார் விலை திடீர் வீழ்ச்சி அடைந்தது.
    • கடந்த வாரத்தை விட இன்று பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ. 200 வரை வீழ்ச்சி.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் காவிரி கரையோரப் பகுதிகளான ஜேடர்பாளையம், பிலிக்கல்பாளையம், அண்ணா நகர், பாண்டமங்க லம், பொத்தனூர், பரமத்திவேலூர், அணிச்சம்பாளையம், நன்செய் இடையாறு, பாலப்பட்டி மோகனூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் வாழைத்தார்கள் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் தமிழகத்தின் சேலம், தர்மபுரி, ஈரோடு, கோவை, கரூர் திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் வாழைத்தார்களை வியாபாரிகள் வாழைத் தோப்பில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்கின்றனர். சிறு விவசாயிகள் விளைவிக்கும் வாழைத்தார்களை விற்பனை செய்ய பரமத்திவேலூரில் தினசரி வாழைத்தார் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் ஆயுத பூஜைக்கு இரு தினங்களே உள்ள நிலையில் இன்று வாழை தாருக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் வாழைத்தார்களை மார்க்கெட்டிற்கு விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். மூவாயிரத்துக்கும் அதிகமான வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்த நிலையில் வெளியூர் வியாபாரிகள் அதிகம் வராததால் வாழைத்தார்களுக்கு சரியான விலை கிடைக்கவில்லை.

    கடந்த வாரம் ரூ. 500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையான பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை இன்று ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது. கடந்த வாரத்தில் ரூ.400 ரூபாய்க்கு விற்பனையான பச்சை நாடன் தற்போது ரூ. 300 முதல் ரூ.350- க்கு விற்பனையானது. கடந்த வாரம் 300 ரூபாய்க்கு விற்பனையான ரஸ்தாலி, கற்பூரவள்ளி ரக வாலைத்தார்கள் இன்று விலை அதிகரித்து ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனையானது. கடந்த வாரத்தை விட இன்று பூவன் வாழைத்தார் ஒன்றின் விலை ரூ.100 முதல் ரூ. 200 வரை வீழ்ச்சி அடைந்தது. ஆயுத பூஜையை ஒட்டி வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு வாழைத்தார் விலை வீழ்ச்சி பெரும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    • பச்சைமிளகாயில் காரம் அதிகம் ஆனால் விலையோ குறைவு என பல்லட வட்டார விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
    • ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 3 ஆயிரம் செலவு செய்து மருந்து அடிக்கப்படுகிறது.

    வீரபாண்டி :

    பச்சைமிளகாயில் காரம் அதிகம் ஆனால் விலையோ குறைவு என பல்லட வட்டார விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.

    பல்லடம் வட்டம், கரைப்புதூர் ஊராட்சி அக்கணம்பாளையத்தை சேர்ந்த அரசன் தோட்டம் பகுதியை சேர்ந்த விவசாயி கோவிந்தசாமி வயது (55) மிளகாய் சாகுபடி செய்து வருகிறார். அவர் இது குறித்து கூறுகையில்; மிளகாய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை பச்சை மிளகாய் நாற்று நட்டு 60 நாட்களுக்கு மேல் ஆகிறது காய் பிடிப்பதற்கு. பச்சை மிளகாய் செடியில் வெள்ளை விழுவதால் இலைகள் சுருங்கி பூக்கள் பாதிப்பை ஏற்பட்டு காய்கள் சரியாக பிடிப்பதில்லை. ஒரு வாரத்திற்கு சுமார் ரூ. 3 ஆயிரம் செலவு செய்து மருந்து அடிக்கப்படுகிறது. 20-25 நாட்களுக்கு ஒரு முறை பறிக்கலாம். வியாபாரிகள் தோட்டத்திற்கே வந்து விற்பனைக்கு எடுத்து செல்கிறார்கள். ஒரு மாதத்திற்கு 1500கிலோ வரை கிடைக்கும். ஆட்கள் கூலி உயர்வு உயர்ந்துள்ளது.

    பராமரிப்புக்கும் அதிக செலவாகிறது. ஒரு கிலோ குறைந்த பட்சமாக 35 முதல் 40வரை விலை விற்றால் மட்டுமே ஓரளவு லாபம் கிடைக்கும்.ஆனால் ஒரு கிலோ 20 முதல் 25வரை மட்டுமே விலை போகிறது. இதனால் தொடர்ந்து மிளகாய் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கவலையுடன் தெரிவித்தார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்பகுதிகளில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருதால், பொரி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
    • தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்பகுதிகளில் ஆயுத பூஜை பண்டிகை நெருங்கி வருதால், பொரி விலை கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. பொரி தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பொரி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் பரமத்தியைச் சேர்ந்த துரையன் கூறியதாவது:

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொரி தயார் செய்யப்பட்டாலும், நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் பகுதியில் தயார் செய்யப்படும் பொரிக்கு, மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு அதிகம்.பொரி தயாரிப்பதற்கான கர்நாடக மாநிலத்தில் இருந்து நெல் வாங்கி வந்து பின் அதை ஊறவைத்து அரிசியாக எடுத்து பெரி தயார் செய்து வந்தோம்.

    தற்போது கர்நாடக மாநிலத்தில் இருந்து வியாபாரிகளே நேரடியாக அரிசியாக கொண்டு வந்து பொரி தயாரிக்கும் எங்களிடம் விற்பனை செய்கின்றனர். அந்த அரிசி மூலம் பொரி தயார் செய்யப்படுகிறது. பாரம்பரிய முறையில் நாங்கள் பொரி தயார் செய்து வருகிறோம்.

    கடந்த ஆண்டு 50 கிலோ கொண்ட பொரி தயாரிக்கும் அரிசி சிப்பம் ஒன்று ரூ.1750 க்கு வாங்கி வந்தோம். ஆனால் தற்போது 50 கிலோ கொண்ட சிப்பம் அரிசி ரூ.2500 க்கு வாங்கி வருகிறோம். இதன் காரணமாக கடந்த ஆண்டு 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.420 வரை விற்பனை செய்யப்பட்டது.தற்போது 50 பக்கா கொண்ட பொரி மூட்டை ஒன்று ரூ.550 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு பொரி அனுப்பப்படுகிறது.ஆயுத பூஜை பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பரமத்தி வேலூர் பகுதியில், பொரி தயாரிப்பு பணி விறுவிறுப்படைந்துள்ளது. அதே சமயம், கடந்த ஆண்டைக் காட்டிலும், தற்போது பொரியின் விலையும் கடும் ஏற்றம் கண்டுள்ளது.

    • உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    • இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் போதிய அளவு உரங்கள் கையிருப்பில் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட உர விற்பனையாளர்கள் ஆதார் அட்டையுடன் வரும் விவசாயிகளுக்கு மட்டுமே உரம் விற்பனை செய்ய வேண்டும். இந்த உத்தரவை மீறிடும் உர விற்பனை நிலையங்கள் மீது உரக் கட்டுப்பாட்டு ஆணை 1985-ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொத்த உர விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை மாற்றம் செய்திடவும், விற்பனை செய்திடவும் கூடாது. மேலும் உரங்களை வெளி மாவட்டங்களில் இருந்தும் கொள்முதல் செய்யக்கூடாது. விவசாயிகளின் தேவைக்கு மேல் அதிகமாகவும் மற்றும் இணை உரம் வழங்கக்கூடாது. ஒரே நபருக்கு அதிக அளவு உரம் வழங்கக்கூடாது. குறிப்பிட்ட விவசாயிகளின் பெயரில் அதிகப்படியாக உர விற்பனை கண்டறியப்பட்டால் சில்லரை விற்பனை உரிமம் எந்த முன் அறிவிப்பும் இன்றி ரத்து செய்யப்படும். விவசாயம் மேற்கொள்ளாத நபர்களுக்கு உரம் விற்பனை செய்யக்கூடாது.

    திடீர் ஆய்வின் போது மேற்காணும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உர விற்பனையாளர்களின் விற்பனை உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர்கள் மீது குற்ற வழக்கு தொடரப்படும். விவசாயிகள் தாங்கள் உரம் வாங்க செல்லும் போது ஆதார் அட்டையுடன் சென்று உரம் பெற்றுக்கொண்டு உரிய பட்டியல் கேட்டு பெற வேண்டும். உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்ட அதிகபட்ச விற்பனை விலைக்கு மேல் விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    • புரட்டாசி மாதம் என்பதால் சந்தைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
    • திருமண முகூர்த்தம் மற்றும் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் புறநகரில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. மேலும் சேலம், ஏற்காடு, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, ஓமலூர், மேச்சேரி, கொளத்தூர், வீரபாண்டி, தாரமங்கலம், காடையாம்பட்டி உள்பட பல்வேறு இடங்களில் தினசரி சந்தைகள் உள்ளன.

    தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சந்தைகளில் அதிகாலை முதலே பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி செல்கின்றனர். பழங்கள், தேங்காய், வாழை இலை, கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆகிறது. இதே போல் பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்படுகிறது.

    இந்த சந்தைகளுக்கு ஊட்டி, ஓசூர், கொடைக்கானல், கர்நாடகா உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் இருந்து தினமும் கேரட் லாரிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது பருவ நிலை மாற்றம் காரணமாக கேரட் லோடு வரத்து சரிந்துள்ளது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம், திருமண முகூர்த்தம் மற்றும் பண்டிகையை முன்னிட்டு காய்கறிகள் தேவை அதிகரித்துள்ளது. குறிப்பாக அன்றாட சமையல், ஜூஸ், அல்வா உள்ளிட்டவைகளுக்கு கேரட் பயன்படுத்துவதால் அதன் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 மாதங்களில் கேரட் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது.

    உழவர் சந்தைகளில் கடந்த ஜூலை மாதம் கிலோ 40 ரூபாய் முதல் 45 ரூபாய் வரை விற்ற முதல் ரக ஊட்டி கேரட் ஆகஸ்டு மாதம் 80 ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு கிலோ கேரட் 120 ரூபாய் முதல் 135 ரூபாய் வரை விற்பனையாகிறது. மற்ற சந்தைகள், சில்லரை காய்கறி கடைகளில் இதை விட அதிக விலைக்கு கேரட் விற்கப்படுகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 குறைந்தது.
    • நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை ரூ.37ஆயிரத்துக்கு கீழ் வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருகிறது. 22-ந்தேதிக்கு பிறகு தங்கத்தின் விலை குறைந்த வண்ணம் உள்ளது. நேற்று மட்டும் பவுன் 8 ரூபாய் உயர்ந்தது. இன்று தங்கம் பவுன் ரூ.328 குறைந்துள்ளது.

    நேற்று கிராம் ரூ4,651க்கு விற்பனையானது. இன்று இது குறைந்து ரூ.4,610 க்கு விற்பனையாகிறது. கிராம் 41 ரூபாய் குறைந்து இருக்கிறது. பவுன் ரூ.37, 208-ல் இருந்து ரூ.36,880 ஆக குறைந்தது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கத்தின் விலை ரூ.37ஆயிரத்துக்கு கீழ் வந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர்ந்து சரிவை சந்தித்து வருவது வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    • புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர்.
    • இதனால் பூக்கள் விலை இன்று உயர்ந்தது.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டு களுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று சேலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் வாங்க பொது மக்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் பூக்கள் விலை இன்று உயர்ந்தது. நேற்று சேலம் பூ மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லி ரூ.320-க்கு விற்பனையானது. முல்லை ரூ. 240, ஜாதி மல்லி, ரூ. 260, காக்காட்டான் ரூ.160, கலர் காக்காட்டான்

    ரூ. 120, அரளி ரூ. 100, வெள்ளைஅரளி ரூ. 100, மஞ்சள் அரளி ரூ. 100, செவ்வரளி ரூ. 120, நந்தியாவட்டம் ரூ. 60, சம்பங்கி ரூ. 80, சாதா சம்பங்கி ரூ. 80 க்கும் விற்பனையானது.

    இந்த நிலையில் இன்று பூக்கள் விலை மீண்டும் உயர்ந்தது. அதன்படி சேலம் மார்க்கெட்ககளில் மல்லிகைபூ ஒரு கிலோ இன்று 500 ரூபாக்கு விற்பனையானது. முல்லை 360, ஜாதி மல்லி 260, காக்காட்டான் 200, கல்ர் காக்காட்டான் 160, அரளி 120, செவ்வரளி 140, நந்தியாவட்டம் 60, சம்பங்கி 120 ரூபாய்க்கும் விற்பனையாது. ஆனாலும் பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் பூக்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.
    • ஒரு கிராம் ரூ.4,650-க்கும் ஒரு சவரன் ரூ.37,200-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    சென்னையில் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.

    நேற்று கிராம் ரூ.4,670 ஆக இருந்தது. இன்று இது ரூ4,650 ஆக குறைந்தது. பவுன் ரூ.37 ஆயிரத்து 360-ல் இருந்து ரூ 37 ஆயிரத்து 200 ஆக குறைந்து உள்ளது.

    தங்கம் ஒரே நாளில் கிராம் ரூ.20-ம் பவுன் ரூ160-ம் குறைந்துள்ளது. இதே போல் வெள்ளி விலையும் குறைந்து இருக்கிறது. கிராம் ரூ.62.50-ல் இருந்து ரூ.61.50 ஆகவும், கிலோ ரூ.62 ஆயிரத்து 500-ல் இருந்து ரூ.61 ஆயிரத்து 500 ஆகவும் குறைந்து உள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,960-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.61 ஆயிரத்து 800 ஆகவும் ஒரு கிராம் ரூ.61.80ஆகவும் உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலையில் சில நாட்களாக ஏற்ற தாழ்வு காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் பவுன் ரூ.37 ஆயிரத்துக்கும் கீழ் வந்தது.

    சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36 ஆயிரத்து 960க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 620ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிலோ வெள்ளி ரூ.61 ஆயிரத்து 800 ஆகவும் ஒரு கிராம் ரூ.61.80ஆகவும் உள்ளது.

    • சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்து ஒரு சவரன் ரூ.37,120-க்கு விற்பனையாகிறது.
    • வெள்ளி விலை இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.62.30-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த வாரம் ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. சென்னையில் நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.37,056-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.37,120-க்கு விற்கப்படுகிறது. நேற்று பவுனுக்கு ரூ.64 குறைந்திருந்த நிலையில் இன்று பவுனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது.

    நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,632-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.8 அதிகரித்து ரூ.4,640-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று வெள்ளி ஒரு கிராம் ரூ.62-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.62.30-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.62,300-க்கு விற்கப்படுகிறது.

    • பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி.
    • கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600க்கு விற்பனையானது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பொத் தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், அண்ணா நகர், பிலிக்கல் பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், நன்செய் இடையாறு, குப்புச்சிபாளையம், பால ப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக் கணக்கான ஏக்கர் பரப்பில் விவசாயிகள் பூவன், வாழை, ரஸ்தாலி, பச்ச நாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைகளை பயிரிட்டுள்ளனர்.

    வாழைத்தார்கள் நன்கு விளைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு வாழைத்தார்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    அதேபோல் வியா பாரிகள் வாழைத் தோப்பு களிலேயே நேரடியாக வாங்கி செல்கின்றனர். கடந்த வாரம் நடைபெற்ற பூவன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.600-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.450-க்கும், பச்சநாடன் வாழைத்தார் அதிகபட்சமாக தார் ஒன்று ரூ.300-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.400-க்கும் மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.550க்கும் வாங்கிச் சென்றனர். நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று ரூ.250-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் தார் ஒன்று ரூ.350-க்கும், பச்சநாடன் வாழைத்தார் தார் ஒன்று ரூ.200-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் தார் ஒன்று ரூ.300-க்கும், மொந்தன் வாழைத்தார் ஒன்று ரூ.400க்கும் வாங்கிச் சென்றனர்.

    திருமண முகூர்த்தங்கள், கோவில் விசேஷங்கள் இல்லாததால் பூவன் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித் தனர்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது.
    • வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.62 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62-க்கு விற்கிறது.

    சென்னை:

    தங்கம் விலையில் கடந்த 3 நாட்களாக குறைவு காணப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.112 அதிகரித்து ரூ.37 ஆயிரத்து 120-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 640-ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.62 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.62-க்கு விற்கிறது.

    ×