search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223193"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்தது.
    • ஒரு கிராம் தங்கம் ரூ.5,165-க்கும் ஒரு சவரன் ரூ.41,320-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கத்தின் விலை கடந்த சில தினங்களாக ஏற்றமும் இறக்கமுமாக காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.41,320-க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.5,235-க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.5,165-க்கு விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.67.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.67,500-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்று நாட்களாக குறைந்து வருவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ள தால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    • கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன்வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் ,மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கும் ஏலம் போனது.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி கரையோர பகுதிகளான வெங்கரை, குச்சிபாளையம், பொத்தனூர், பரமத்தி வேலூர், அண்ணாநகர்,

    பிலிகல்பாளையம், கு.அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர் கொத்தமங்கலம், அனிச்சம்பாளையம், நன்செய்இடையாறு, பாலப்பட்டி மற்றும் மோக னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பூவன், பச்ச நாடன், கற்பூரவல்லி, ரஸ்தாலி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகை யான வாழைகளை விவசா யிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்செய்துள்ள னர்.

    வாழைத்தார் முதிர்ச்சி அடைந்தவுடன் கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார் களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்ற னர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாழைத்தார் களை வாங்கி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு ,கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்க ளுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் பூவன்வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.350-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.250-க்கும், பச்சைநாடன் ரூ.200-க்கும், கற்பூரவள்ளி ரூ.350-க்கும் ,மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.6-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.400-க்கும், ரஸ்தாலி வாழைத்தார் ரூ.300-க்கும், பச்சைநாடன் அதிகபட்சமாக ரூ.250-க்கும், கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.300-க்கும் , மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ.4-க்கு ஏலம் போனது. வாழைத்தார்களின் விலை உயர்வடைந்துள்ள தால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 குறைந்துள்ளது.
    • வெள்ளி விலை உயர்ந்து இருக்கிறது. கிராம் ரூ.70-ல் இருந்து ரூ.70.60 ஆகவும், கிலோ ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.70,600 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது. இன்று கிராம் 1 ரூபாயும், பவுனுக்கு ரூ.8-ம் குறைந்தது. நேற்று கிராம் ரூ.5,251-க்கும் பவுன் ரூ.42,008-க்கும் விற்பனை ஆனது. இன்று கிராம் ரூ.5,250-க்கும் பவுன் ரூ.42 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் வெள்ளி விலை உயர்ந்து இருக்கிறது. கிராம் ரூ.70-ல் இருந்து ரூ.70.60 ஆகவும், கிலோ ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.70,600 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    • தமிழகத்தில் பெரம்பலூர்,சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.
    • விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

    உடுமலை:

    இந்தியாவில் கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிக அளவில் பயிரிடுகின்றன. நம் நாடு 2020-21ம் ஆண்டு 3.43மில்லியன் மெட்ரிக் டன் மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்துள்ளது. தமிழகத்தில் 2020-21ம் ஆண்டில் 4 லட்சம் எக்டர் பரப்பில் 25.64 லட்சம் டன்கள் மக்காச்சோளம் உற்பத்தி செய்துள்ளது. தமிழகத்தில் பெரம்பலூர்,சேலம், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்படுகிறது.

    தமிழகத்திற்கு மக்காச்சோளம் வரத்தானது ஆந்திரா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் இருந்து வருகிறது. இந்த 3 மாநிலங்கள் தமிழகத்தின் மக்காச்சோள தேவையை 30 சதவீதம் பூர்த்தி செய்கின்றன.கோழி, கால்நடை தீவனத்திற்கான ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு தேவைகள் அதிகரிப்பதன் காரணமாக உள்நாட்டு சந்தையில் சமீபகாலமாக விலை அதிகரித்து வருகிறது.

    வேளாண் பல்கலைக்கழகம் விலை முன்னறிவிப்பு திட்டமானது கடந்த 27 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலை மற்றும் சந்தை ஆய்வுகளின் படி தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலையானது மார்ச் முதல் ஏப்ரல் வரை குவிண்டாலுக்கு 2000 ரூபாய் முதல் 2200 ரூபாய் ஆக இருக்கும். விவசாயிகள் மேற்கூறிய ஆலோசனையின் அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.மேலும், விபரங்களுக்கு 0422- 2431405/ 243278 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.41,920-க்கு விற்கப்படுகிறது.
    • நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,243-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூ.5,240-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கமாக காணப்படுகிறது. கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ. 41,944-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.24 குறைந்து ரூ.41,920-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,243-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் குறைந்து ரூ.5,240-க்கு விற்கப்படுகிறது.

    அதே நேரத்தில் இன்று வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. 1 கிராம் வெள்ளி ரூ.70-க்கும், 1 கிலோ பார் வெள்ளி ரூ.70 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது.
    • ஒரு கிராம் சவரன் ரூ.5,207-க்கும், சவரன் ரூ.41,880-க்கும் விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில வாரமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,656-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41,880-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,207-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.28 அதிகரித்து ரூ.5,235-க்கு விற்கப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69.20-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.70.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.70,200-க்கு விற்பனையாகிறது.

    • வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69-க்கு விற்கப்பட்டது.
    • இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கு விற்கப்படுகிறது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று அதிகரித்துள்ளது.

    நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.41,608-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.41,656-க்கு விற்கப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5201-க்கு விற்கப்பட்டது.

    இன்று கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ரூ.5207-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.69-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.69.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.69,200-க்கு விற்பனையாகிறது.

    • மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

    இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலைவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.

    கிழங்கு ஆலைகளில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி மற்றும் கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.

    கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.500 வரை உயர்வடைந்து, ரூ.11ஆயிரத்து 500-க்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி கிழங்கு டன் ஒன்று, கடந்த வாரம் டன் ஒன்று ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது டன் ஒன்றுக்கு ரூ.1500 வரை உயர்வடைந்து, ரூ.12 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

    மரவள்ளி கிழங்கு வரத்து குறைந்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளதாகவும், மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வருகிறது. நேற்று 1 பவுன் தங்கம் ரூ.42,520-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,240-க்கு விற்கப்படுகிறது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5,315-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,280-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று 1 கிராம் வெள்ளி ரூ.72-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 20 காசுகள் குறைந்து ரூ.71.80-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.71,800-க்கு விற்பனையாகிறது.

    • வெள்ளி விலை இன்று சற்று குறைந்து உள்ளது.
    • வெள்ளி ஒரு கிராம் ரூ 74-ல் இருந்து ரூ.73.50 ஆகவும், கிலோ ரூ.74 ஆயிரத்தில் இருந்து ரூ.73,500 ஆகவும் குறைந்து உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்து பவுன் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. பின்னர் அதன் விலை குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. நேற்று தங்கம் பவுன் ரூ.43.064-க்கு விற்பனை ஆனது . இன்று பவுன் ரூ.64 குறைந்து ரூ.43 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது. கிராம் ரூ.5383-ல்இருந்து 5,375 ஆக குறைந்து இருக்கிறது. இன்று கிராம் ரூ.8 குறைந்து இருக்கிறது.

    இதேபோல வெள்ளி விலையும் சற்று குறைந்து உள்ளது. கிராம் ரூ 74-ல் இருந்து ரூ.73.50 ஆகவும், கிலோ ரூ.74 ஆயிரத்தில் இருந்து ரூ.73,500 ஆகவும் குறைந்து உள்ளது.

    • கடந்த மாதம் 9-ந்தேதி 560 காசுகள் என்ற புதிய உச்சத்தை முட்டை விலை தொட்டது.
    • பின்னால் முட்டை கொள்முதல் விலை படிப்படியாக சரிவடைய தொடங்கியது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இதில் 5 கோடிக்கு மேல் முட்டை கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 4½ கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    முட்டை கொள்முதல் விலையானது தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களில் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயிக்கும் விலைக்கே பண்ணையாளர்கள், வியாபாரிகள் முட்டை கொள்முதல் செய்ய வேண்டும்.

    கடந்த மாதம் 9-ந் தேதி 560 காசுகள் என்ற புதிய உச்சத்தை முட்டை விலை தொட்டது. பின்னால் முட்டை கொள்முதல் விலை படிப்படியாக சரிவடைய தொடங்கியது. நேற்று முட்டை விலை நாமக்கல் மண்டலத்தில் 460 காசுகளாக இருந்தது.

    தேசிய ஒருங்கிணைப்பு குழு 460 காசுகளாக முட்டை விலையை நிர்ணயம் செய்தாலும், வியாபாரிகள் 70 காசுகள் வரை குறைத்து வாங்குவதாக குற்றச்சாட்டு இருந்தது. இதனால் பண்ணையாளர்கள் கடுமையான நஷ்டம் ஏற்பட்டதாக கூறி வந்தனர்.

    இந்த நிலையில் நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதை அடுத்து 460 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலையை, 20 காசு குறைத்து 440 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. வட மாநிலங்களில் விலை குறைத்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே நாமக்கல்லில் நேற்று பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது. இதில் ஒரு கிலோ முட்டைகோழி 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மேலும் 5 ரூபாய் குறைத்து 74 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் 79 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையை 1 ரூபாய் உயர்த்தி, ஒரு கிலோ ரூ.80 என நிர்ணயம் செய்யப்பட்டது.

    • தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதால் அதிக பூக்கள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பூ வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை அதிக விலைக்கு வாங்கிச் சென்றனர்.
    • தைப்பூச திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூச தேர் திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு பூக்கள் ஏல சந்தையில் பூக்களின் விலை உயர்வடைந்துள்ளதால் பூக்கள்

    பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளான தண்ணீர் பந்தல், கபிலர்மலை, சின்ன மருதூர், பெரிய மருதூர், ஆனங்கூர், பாகம்பாளையம், நகப்பாளையம், செல்லப்பம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், நொய்யல், நடையனூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லி, முல்லை பூ, காக்கட்டான், சம்பங்கி, ரோஜா, அரளி, செவ்வந்தி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் செயல்பட்டு வரும் தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர்.வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். வாங்கிய உதிரிப்பூக்கள் மூலம் பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்கின்றனர்.சிலர் உதிரிப்பூக்களை பிளாஸ்டிக் கவரில் போட்டு உள்ளூர் பகுதிகளுக்கு கொண்டு சென்று பாக்கெட்டுகளாக விற்பனை செய்து வருகின்றனர். தைப்பூசத் திருநாளை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதால் அதிக பூக்கள் தேவைப்படுகிறது. இதன் காரணமாக பூ வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை அதிக விலைக்கு வாங்கிச் சென்றனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.800- க்கும், சம்பங்கி கிலோ ரூ.60- க்கும், அரளி கிலோ ரூ.90- க்கும், ரோஜா கிலோ ரூ.160- க்கும், முல்லைப் பூ ரூ.1000- க்கும், செவ்வந்திப்பூ ரூ.80- க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், காக்கட்டான் ரூ.500- க்கும் ஏலம் போனது. தைப்பூசத் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1200-க்கும், சம்பங்கி கிலோ ரூ90- க்கும், அரளி கிலோ ரூ.100- க்கும், ரோஜா கிலோ ரூ.220- முல்லைப் பூ கிலோ ரூ.1200-க்கும், செவ்வந்திப்பூ ரூ.100- க்கும், கனகாம்பரம் ரூ.1000-க்கும், காக்கட்டான் ரூ.700-க்கும் ஏலம் போனது. தைப்பூச திருநாளை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×