என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223230"

    • சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடித்தனர்.
    • பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி வசந்தம் நகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் சாந்தகிரி (வயது 36). இவரது மனைவி கிராந்தி (32). இவர் நேற்று மதியம் 2 மணி அளவில் வீட்டைப் பூட்டி விட்டு, அருகில் வசிக்கும் தனது தாயார் வீட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது, அவரது வீட்டின் முன்பக்க கதவு, பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராந்தி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 4 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூ. 5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து கிராந்தி கருப்பூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். 

    • கொள்ளையடித்த பணத்தை ஜாலியாக செலவு செய்தேன் என கைதான வாலிபர் வாக்குமூலம்
    • நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது.

    இதை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவ டிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தர வின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரு கிறது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் போஸ்கோ தலைமையிலான போலீசார் மணவாளக்குறிச்சி பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்தனர்.

    அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப் பின் முர ணான தகவல்களை தெரி வித்தார். சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மணவா ளக்குறிச்சி போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் எஸ்.டி.மங்காடு பகுதியைச் சேர்ந்த எட்வின் ஜோஸ் (வயது 30) என்பது தெரிய வந்தது.

    இவர்குமரி மாவட்டம் மட்டு மின்றி கேரளாவில் பல்வேறு இடங்களில் கை வரிசை காட்டி இருப்ப தும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் எட்வின் ஜோசை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து 25¾ பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.

    கைது செய்யப்பட்ட எட்வின் ஜோஸ் மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, கருங்கல், மார்த்தாண்டம், நித்திர விளை போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதி களில் கடந்த 6 மாதத் தில் 20 இடங்களில் கைவரிசை காட்டி இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    போலீசார் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

    நான் கேரளாவில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் சேர்ந்தேன். படிப்பு செலவுக்காக ஓய்வு நேரத்தில் கட்டுமான வேலைக்கு சென்று வந்தேன். எனக்கு செலவுக்கு அதிக பணம் தேவைப்பட்டது. இதை யடுத்து கொள்ளையடிக்க முடிவு செய்தேன். மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு பகுதியாக சென்று நகைகளை திருடினேன். போலீசாரிடம் சிக்காமல் இருக்க ஒவ்வொரு முறை ஒவ்வொரு பகுதிக்கு சென்று கைவரிசை காட்டுவேன்.குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளாவிலும் கைவரிசை காட்டி உள்ளேன்.

    கைவரிசை காட்டிய நகைகளை அடகு வைத்து வரும் பணத்தை ஜாலியாக செலவு செய்தேன். பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலாவும் சென்று உல்லாசமாக வாழ்க்கையை நடத்தி வந்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட எட்வின் ஜோசை போலீசார் இரணி யல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட எட்வின் ஜோஸ் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • வீட்டு பீரோவை திறந்த போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை
    • வீட்டில் பதிவாகியிருந்த 2 கைரேகைகளை கைப்பற்றினர்.

    கோவை,

    கோவை சரவணம்பட்டி விநாயகபுரத்தை சேர்ந்தவர் பிரின்ஸ் (70). ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவர் கடந்த 14-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் அத்திபாளையம் பிரிவில் உள்ள சர்ச்சுக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினர்.

    மறுநாள் காலையில் அவர் வீட்டு பீரோவை திறந்த போது அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகளை காணவில்லை. வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் நகைகளை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கொள்ளையடித்த நபரை தேடி வருகின்றனர்.

    இதேபோல் கோவை சேரன்மாநகரை சேர்ந்தவர் ஜெயபால் (வயது 65). மில் தொழிலாளி. இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு சொந்த வேலை காரணமாக காரமடைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 55 ஆயிரம் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஜெயபால் பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வீட்டில் பதிவாகியிருந்த 2 கைரேகைகளை கைப்பற்றினர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்கிருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    • வாடிக்கையாளரிடம் 37 பவுன் நகை- ரூ.4 லட்சம் வாங்கி மோசடி செய்யப்பட்டுள்ளது.
    • வியாபாரி உள்பட 3 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே சேர்வைக்காரன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 32). இவர் விருதுநகர் பஜார் பகுதியில் உள்ள ஒரு நகைக்கடைக்கு கடந்த 2 வருடமாக சென்று வந்தார்.

    இதில் கடை உரிமையா ளர் மண்டலே உத்தம் ஜோதி ராம், அவரது மனைவி அஸ்வினி, மாமனார் யஷ்வந்த் ஆகியோர் பழக்கமாகினர்.

    இந்த நிலையில் முத்துக்குமார் தனக்கு சொந்த மான நகைகளை அடகு கடையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார். அவரிடம் நகைக்கடை உரிமையாளர் மண்டலே உத்தம் ஜோதிராம் நகைகளை என்னிடம் கொடுங்கள், வட்டி வேண்டாம் என்று கூறி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து முத்துக்குமார் கடந்த 2021ம் ஆண்டு 37 பவுன் நகைகளை மண்டலே உத்தம் ஜோதிராமிடம் கொடுத்துள்ளார். மேலும் நகையை மீட்பதற்கு ரூ.4 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட 3 பேரும் நகை-பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர்.

    இதுபற்றி முத்துக்குமார் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் மண்டலே உத்தம் ஜோதி ராம், அஸ்வினி, யஷ்வந்த் ஆகிேயார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் இதேபோல் பலரிடம் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண்ணிடம் நகை, பணம் மோசடி செய்தவரை சிறையில் அடைத்தனர்.
    • தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி சித்ரா (வயது 50).

    இவர் பெரம்பலூர் போலீஸ் நிலைத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் இந்திய தொழிலாளர் கட்சியின் மாநில தலைவர் பெரம்பலூர் மாவட்டம் கோனேரிபாளையத்தை சேர்ந்த பி.ஆர்.ஈஸ்வரன்(42) என்பவர் பணம் தேவை இருப்பதாககூறி கேட்டதால், நான் ரூ.8 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். மேலும் 8 பவுன் தங்க நகைகளை அவரிடம் கொடுத்தேன். மேலும் ஈஸ்வரனின் மகனிடம் ரூ.1 லட்சம் கொடுத்தேன். பணம் மற்றும் நகை கொடுத்து 3 ஆண்டுகள் ஆகியும் பலமுறை திருப்பி கேட்டு ஈஸ்வரன் தரவில்லை.

    இந்நிலையில் அண்மையில் பணத்தையும், நகையையும் திருப்பிதருமாறு கேட்டதற்கு என்னை தகாத வார்த்தையால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

    புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிவு செய்து ஈஸ்வரனை கைது செய்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.
    • பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள் கணபதிபாளையம் ஊராட்சி பெத்தாம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி. இவரது மனைவி கல்யாணி(வயது 48). இவர் வீட்டின் அருகேயுள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் முகவரி கேட்பது போல் நடித்து கல்யாணியின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இது குறித்து கல்யாணி கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • தாயின் தாலிசங்கிலியையும் அபகரிக்க முயன்றதாக புகார்
    • தக்கலை அருகே இன்று அதிகாலை துணிகரம்

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள பனங்கான விளை பகுதியைச் சேர்ந்தவர் அலோசியஸ், வியாபாரி.

    இவர், தனது பெற்றோர், மனைவி அனிட்டா(வயது 32) மற்றும் 1 வயது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று இரவு இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தனர்.

    அனிட்டா தனது குழந்தை யுடன் ஒரு அறையில் படுத்தி ருந்தார். அந்த அறையில் காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்து உள்ளனர். இதனை அறிந்த யாரோ மர்மநபர் இன்று அதிகாலை திறந்திருந்த ஜன்னல் வழியாக கை விட்டு கதவை திறந்துள்ளார்.

    பின்னர் அந்த நபர் வீட்டின் அறைக்குள் நுழைந்து குழந்தை கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளான். மேலும் அனிட்டா அணிந்திருந்த 9 பவுன் தாலிச்சங்கிலியையும் அபகரிக்க முயன்றுள்ளான்.

    அந்த நேரத்தில் குழந்தை அழுததால், அனிட்டா கண் விழித்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மர்மநபர், நகையை பறித்து விட்டு தப்பி ஓட முயன்றான். ஆனால் அனிட்டா, தனது கழுத்தில் கிடந்த நகையை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டார்.

    இதனால் அந்த மர்ம நபர், அனிட்டாவின் நகையை விட்டு விட்டு குழந்தையிடம் பறித்த ஒரு பவுன் நகையுடன் தப்பி ஒடிவிட்டான். இந்த துணிகர சம்பவம் குறித்து தக்கலை போலீசில் அனிட்டா புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அந்தப் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில் நகை பறித்த நபர் ஸ்கூட்டரில் ஏறிச் செல்வது தெரியவந்தது. சுமார் 30 வயது மதிக்கத்தக்க அவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.
    • ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    கருங்கல் அருகே உள்ள பாலூர் வெட்டுக்காட்டு விளையை சேர்ந்தவர் ஐயப்பன் ஆசாரி மகன் சுனில்குமார் (வயது 46). இவர் நகை தொழில் செய்து வந்தார். இவர் கடநத சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று, இவரது மனைவி சாந்தி இவரை வேலைக்கு செல்ல வலியு றுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சுனில்குமார் அவரை தள்ளி விட்டு அறைக்குள் சென்று மனைவியின் சேலையால் பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண் டார்.

    இதுகுறித்து சாந்தி கருங்கல் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் பேரில் கருங்கல் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காட்டை சேர்ந்தவர் வரதராஜன் (வயது 32). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சிவரஞ்சனி. கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று வரதராஜன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

    இதுபற்றி ராஜாக்க மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத் திற்கு விரைந்து வந்து வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.
    • கண்காணிப்பு காமிரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகரை சேர்ந்தவர் சங்கரநாராயணன்( வயது 38).தனியார் நிறுவன மேலாளர். இவரது மனைவி பிருந்தா. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    கடந்த 7-ந் தேதி பிருந்தா குழந்தையுடன் வில்லுக்குறி அருகே உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். சங்கரநாராயணன் வேலை விஷயமாக நிறுவனத்தில் தங்கியிருந்தார்.அதிகாலையில் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 62 பவுன் நகை, ரூ.90 ஆயிரம் ரொக்க பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளையும் போலீசார் பதிவு செய்தனர். அப்போது இரண்டு கைரேகைகள் சிக்கியது. கொள்ளையர்களை பிடிக்க இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.

    அந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டது .அப்போது கண்காணிப்பு கேமராவில் இரண்டு நபர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீசார் கைப்பற்றி உள்ளனர் .அந்த நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்த ப்பட்டு வருகிறது.

    முதல் கட்ட விசாரணையில் அவர்கள் வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. அவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

    • சி.சி.டி.வி. காமிராவில் பதிவான 2 கொள்ளையர் உருவம்
    • 3 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டை

    நாகர்கோவில்:

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர நாராயணன் (வயது 38).

    இவர், நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் மேலாளராக வேலை பார்த்து வரு கிறார். இதையடுத்து சங்கர நாராயணன் குடும்பத்தோடு நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். நேற்று முன் தினம் சங்கரநாராயணன் மனைவி பிருந்தா மகள் இருவரும் வில்லுக்குறியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தனர்.

    சங்கர நாராயணன் வேலை பார்த்த நிறுவ னத்தில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை 4 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 62¾ பவுன் நகை, ரூ.90 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. இது குறித்து சங்கரநா ராயணன் நேசமணிநகர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்த தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நாகர்கோவில் டி.எஸ்.பி. நவீன்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்த னர். அதில் 2 பேரின் கைரேகைகள் சிக்கி உள்ளது.

    அந்த கைரேகை போலீ சார் கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வரு கிறார்கள். மோப்பநாய் மோப்பம் பிடித்து விட்டு யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை யர்கள் 2 பேரின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை போலீ சார் கைப்பற்றி தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை யர்கள் நள்ளிரவு 1.36 மணிக்கு வந்துவிட்டு 2.40 மணி வரை கைவரிசையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் 4 நிமிடம் கொள்ளையர்கள் அங்கேயே இருந்து கைவரி சையில் ஈடுபட்டுள்ளனர்.சங்கர நாராயணன் மற்றும் அவரது மனைவி வீட்டில் இல்லாததை நோட்டமிட்டே இந்த கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர்.

    போலீசார் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான உருவத்தை வைத்து தேடுதல் வேட்டையில் ஈடு பட்டு வருகிறார்கள். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், இன்னும் ஓரிரு நாட்களில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

    • மார்த்தாண்டம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    வல்லவிளை குருசடி வளாகத்தைச் சேர்ந்தவர் மேரிசைனி (வயது 32). இவரது மாமியார் டெல்பி.

    இவர்கள் இருவரும் வல்ல விளையிலிருந்து மார்த்தாண்டத்திற்கு பஸ்சில் வந்து கொண்டிருந்த னர். மார்த்தாண்டம் அருகே வெட்டுவெந்நி பஸ் நிறுத் தத்தில் பஸ் நின்றபோது டெல்பியின் கழுத்தில் கிடந்த 2½ பவுன் தாலிச் செயினை இளம்பெண் ஒருவர் பறித்துவிட்டு தப்பி ஓடினார்.

    இதை பார்த்த ஷைனி அந்த பெண்ணை துரத்தி சென்று மடக்கி பிடித்தார். உடனே பொது மக்கள் அங்கு திரண்டனர். இது குறித்து மார்த்தாண் டம் போலீசுக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த பெண்ணை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சென்று அவரிடம் விசாரணை நடத்திய போது பிடிபட்ட பெண் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பவானி (39) என்பது தெரிய வந்துள்ளது.இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பவானிக்கு குமரி மாவட்டத்தில் வேறு ஏதாவது வழக்குகள் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பவானியுடன் அவரது கூட்டாளிகள் யாரும் வந்தார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஏற்கனவே நாகர்கோவில் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மூன்று பெண்களிடம் ஓடும் பஸ்சில் நகை பறிக்கப்பட்டது இது தொடர்பாக பெண் ஒருவரை போலீசார் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    ×