search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223230"

    • கார்த்திக் மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.
    • கார்த்திக் நகை, பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    கோவை,

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பங்களா மேட்டை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 38). இவர் அந்த பகுதியில் மெஸ் வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பட்டப்பகலில் கார்த்திக்கின் வீட்டிற்குள் மர்மநபர் ஒருவர் உள்ளே நுழைந்தார். அவர் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், மோதிரம், வளையல் உள்பட 9 பவுன் தங்க நகைகள், ரூ.45 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வெளியே சென்று விட்டு வீட்டிற்கு திரும்பிய கார்த்திக் நகை, பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    • இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார்.
    • ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயசு 51). இவர் கோணம் பகுதியில் உள்ள வலை கம்பெனியில் மேலாளராக பணி செய்து வருகிறார்.

    இவர் தனது கம்பெனிக்காக இடம் பார்த்து வந்துள்ளார். அப்போது தோவாளை 4 வழிச்சாலை அருகே ஒரு இடம் உள்ளதாக தகவல் கிடைத்தது. அதில் குறிப்பிடப்பட்ட எண்ணை தொடர்பு கொண்ட போது, 4 வழிச்சாலைக்கு வரும் படி கூறி உள்ளனர்.

    அதன்பேரில் இடத்தை பார்ப்பதற்காக ரமேஷ் சென்றார். அப்போது அங்கு 3 பேர் வந்தனர். அவர்கள் திடீரென ரமேசை சரமாரியாக தாக்கி உள்ளனர். மேலும் அவரது கையில் கிடந்த 4 கிராம் மோதிரம் மற்றும் ரூ.6 ஆயிரம், ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசில் ரமேஷ் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாப்பிள்ளை ரூ.1 லட்சம் பணம், 40 பவுன் தங்க நகை மற்றும் காலி இடத்துக்கான பத்திரம் ஆகியவற்றுடன் மாயமானார்.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் பிரபாகரன் (வயது27). இவர் பி.எஸ்.சி படித்து விட்டு மதுரை திருமங்கலத்தில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வந்தார்.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இவர்கள் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. அவர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது.

    இந்த நிலையில் பிரபாகரன் கார், ரூ.1 லட்சம் பணம், 40 பவுன் தங்க நகை மற்றும் காலி இடத்துக்கான பத்திரம் ஆகியவற்றுடன் மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை தேடி வருகி ன்றனர். திருமணத்தன்று நகை, பண த்துடன் புதுமாப்பிள்ளை மாயமானது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கடந்த 21 -ம் தேதி வீட்டில் தனியாக இருந்த லட்சுமியிடம் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் அரசு மூலம் மாதம் ரூபாய் 5000 கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
    • அப்போது அந்த இளம்பெண் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து பெட்டியில் இருந்த 5½ பவுன் நகைகளை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை பெரிய கிணறு பகுதி சேர்ந்தவர் லட்சுமி. (வயது 90). இவர் தனது மகள் கலா (56) என்பவருடன் வசித்து வருகிறார்.

    கடந்த 21 -ம் தேதி வீட்டில் தனியாக இருந்த லட்சுமியிடம் 35 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வந்து வங்கி கணக்கு புத்தகம் மற்றும் வீட்டில் கியாஸ் இணைப்பு புத்தகத்தை கொடுத்தால் அரசு மூலம் மாதம் ரூபாய் 5000 கிடைக்கும் என்று ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லட்சுமி, வீட்டில் இருந்த ஒரு பெட்டியை எடுத்து வந்து அவற்றில் மேற்கண்ட புத்தகங்களை தேடி உள்ளார். அப்போது அந்த இளம்பெண் மூதாட்டிக்கு உதவுவது போல் நடித்து பெட்டியில் இருந்த 5½ பவுன் நகைகளை திருடிக் கொண்டு ஓடிவிட்டார்.

    இது குறித்த புகாரின்பேரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி சின்னத்திருப்பதியில் இறங்கினார்.
    • அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை காணவில்லை.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தம்மாள் (வயது 70). இவர், சின்னத்திருப்பதி எம்.ஜி.ஆர். நகரில் தன்னுடைய அண்ணன் வெங்கட்ராமன் வீட்டிற்கு வந்தார். சேலத்தில் இருந்து டவுன் பஸ்சில் ஏறி சின்னத்திருப்பதியில் இறங்கினார். அப்போது தான் கழுத்தில் அணிந்து இருந்த 4½ பவுன் நகையை காணவில்லை. ஓடும் பஸ்சில் கோவிந்தம்மாளிடம் யாரோ மர்மநபர், நகையை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • திருச்சியில் பரபரப்பு இரும்பு லாக்கரில் வைத்த 107 பவுன் நகை மாயமானது
    • அந்த லாக்கரை முழுமையாக திறக்க வேண்டும் என்றால் 12 சாவிகளை பயன்படுத்த வேண்டும்.

    திருச்சி:

    திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் பகுதியை சேர்ந்தவர் மேகநாதன் (வயது 64) தொழிலதிபரான இவர், தனது வீட்டின் அறையில் இரும்பு லாக்கரில் 107 பவுன் நகையை கடந்த மாதத்துக்கு முன்பு வைத்து பூட்டி உள்ளார். பின்னர் இருத்தனங்களுக்கு முன்பு அந்த லாக்கரை திறந்து பார்த்தபோது நகைகள் காணாமல் போய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அந்த லாக்கர் பழங்கால லாக்கர் ஆகும். இதனை முழுமையாக திறக்க வேண்டும் என்றால் 12 சாவிகளை பயன்படுத்த வேண்டும். இந்த நிலையில் லாக்கர் எப்படி திறக்கப்பட்டது என்பது மர்மமாக உள்ளது. வீட்டில் தொழிலதிபரின் மனைவி, மகன், மருமகன் உள்ளிட்டோர் உள்ளனர். வீட்டிலிருந்து யாரும் வெளியூரும் செல்லவில்லை. அதே போன்று வீட்டின் பூட்டு எதுவும் உடைக்கப்படவில்லை. லாக்கரை இரும்பு ராடால் கூட உடைக்க முடியாது என போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மேகநாதன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து 107 பவுன் நகை மாயமானது எப்படி? யார் திருடியது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோன்று திருச்சி பாலக்கரை அருணாச்சலம் நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 55)இவர்உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று விட்டார். இந்நிலையில் வீட்டின் அருகில் வெளி பகுதியில் வீட்டு தெய்வதற்கு சிறிய அளவில் மேடை அமைத்து இருந்த பூஜை அறையில் இருந்த பூஜை பொருட்கள் திருட்டுப் போய் இருப்பத்தை கண்டு ரவிசந்திரன்அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ரவிச்சந்திரன் பாலக்கரை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பூஜை பொருட்களை திருடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.





    • சேலம் அருகே ஆட்டையாம்பட்டி டாக்டர் வீட்டில் கதவை உடைத்து 5 பவுன், ரூ.2.15 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    • டாக்டர் வீட்டின் அருகே இருந்த மற்றொரு டாக்டர் வீட்டிலும் மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் வக்கீல் வினோத் சேவியர். இவரது மனைவி ஆர்த்தி மரியா. இவர் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் கடந்த 12-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு, சேலம் மாவட்டம் கொளத்தூரில் உள்ள தங்களது பண்ணை வீட்டின் தோட்டத்திற்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டி்ன் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 5 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் ரொக்கம் மாயமாகி இருந்தது.

    மர்ம நபர்கள் வீட்டில் நுழைந்து, கொள்ளையடித்துச் சென்றதை அறிந்த அவர்கள், சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் கொள்ளை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஏற்கனவே கடந்த 12-ந் தேதி, இவர்களது வீட்டின் அருகில் உள்ள மற்றொரு டாக்டர் வீட்டில் 8 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மர்ம நபர்களின் இந்த தொடர் திருட்டை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

    மகன் வெளி மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள கலைஞர் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் இறந்து விட்டார். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 59). இவரது மகன் வெளி மாநிலத்தில் ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகள் அஞ்சுகிராமம் அருகே உள்ள காணிமடத்தில் வசித்து வருகிறார். இதனால் விஜயலட்சுமி மட்டும் இந்த வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று அவர் தனது வீட்டை பூட்டி விட்டு தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இதை பயன்படுத்தி யாரோ சில மர்ம ஆசாமிகள் நேற்று இரவு இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து உள்ளனர். அவர்கள் அங்கிருந்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. இன்று காலை இவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சிஅடைந்தனர். உடனே அவர்கள் இது பற்றி காணி மடத்தில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு தகவர் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து விஜயலட்சுமி அங்கு இருந்து தனது வீட்டுக்கு விரைந்து வந்தார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது பற்றிய அவர் கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, கதிரேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    மேலும் தடைய அறிவியல் நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடையங்களை பதிவு செய்தனர். எவ்வளவு நகை, பணம் கொள்ளை அடிக்கபட்டு உள்ளது என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. இது பற்றி கன்னியாகுமரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தன் குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
    • பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை,ரொக்கம் 25 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது.

    சரவணம்பட்டி,

    கோவை கணபதி மாநகரை சேர்ந்தவர் பழனிச்சாமி (48) கட்டிட காண்ட்ராக்டர். இவர் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு தன் குடும்பத்தோடு வீட்டை பூட்டி விட்டு சென்றார்.இந்த நிலையில் அருகில் உள்ள வீட்டுக்காரர் பழனிச்சாமிக்கு போன் செய்து வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதாக கூறினார். போனில் வந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்த பழனிச்சாமி உடனடியாக வீடு திரும்பினார். தனது வீட்டின் முன்புற கதவு உடைந்திருப்பதை கண்டு வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறந்துகிடந்தது.பீரோவில் வைத்திருந்த 7 பவுன் நகை,ரொக்கம் 25 ஆயிரம் ஆகியவை கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிசு வழங்கி பாராட்டு
    • ஆட்டோ டிரைவர் சரவணன் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில், பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.

    இவர் நாகர்கோவில் பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 28-ந் தேதி இவரது ஆட்டோவில் 2 பவுன் தங்க செயின் ஒன்று கிடந்தது. இதை பார்த்த சரவணன் அந்த நகையை எடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஒப்படைத்தார்.

    போலீசார் விசாரணையில் அவரது ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் நகையை தவற விட்டு சென்றது தெரியவந்தது. அந்த வாலிபர் யார்? என்பது குறித்து போலீசார் பீச் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன். ஆட்டோ டிரைவர்.சாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் சரவணன் ஆட்டோவில் நகையைதவற விட்டது திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பிரமோத் (வயது 40) என்பது தெரிய வந்தது. இவர் துபாயில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

    தற்பொழுது விடுமுறையில் ஊருக்கு வந்த இவர் குமரி மாவட்டம் வில்லுகுறி பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துவிட்டு நாகர்கோவிலில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவதற்காக வந்துள்ளார்.

    அப்போது சரவணன் ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது தான் பிரமோத் 2 பவுன் நகையை தவறவிட்டது தெரியவந்தது. இதையடுத்து பிரமோத்திற்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.

    இன்று காலை கோட்டார் போலீஸ் நிலையத்திற்கு வந்த பிரமோத் நகையின் அடையாளங்களை தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரிடம் 2 பவுன் நகை ஒப்படைத்தனர். நகையை எடுத்துக் கொடுத்த ஆட்டோ டிரைவர் சரவணனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு நினைவு பரிசையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழங்கினார். ஆட்டோவில் தவறவிட்ட இரண்டு பவுன் நகையை எடுத்து போலீசிடம் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர் சரவணனை போலீசார் மட்டுமின்றி சக ஆட்டோ டிரைவர்களும் பாராட்டினார்கள்.

    • நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டார்.
    • இந்த கொலையில் சம்பந்தப்பட்ட வாலிபருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் அருகே அல்லம்பட்டியை சேர்ந்தவர் சரவணபாண்டியன் (43). காவலாளியாக பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2016-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த குருவம்மாள்(54) என்பவரை நகைக்காக கொலை செய்தார். சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணபாண்டியனை கைது செய்தனர்.

    வழக்கு விசாரணை திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி பகவதியம்மாள், குற்றவாளி சரவணபாண்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.14 ஆயிரம் விதித்து உத்தரவிட்டார்.

    • கடந்த அக்டோபர் மாதம் பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை
    • சி.சி.டி.வி. காமிரா பதிவு காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்ததில் அடையாளம் தெரிந்தது

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட மருதன்கோடு பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 4 பவுன் தாலி செயினை பறித்துச் சென்றனர்.

    இது குறித்து பெண் கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா பதிவு காட்சிகளை சேகரித்து ஆய்வு செய்தனர்.

    தனிப் பிரிவு போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் நடத்திய இந்த விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டவன் அடையாளம் தெரியவந்தது. அவனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

    அடையாளம் காணப்ப ட்டவன் கேரள மாநிலம் பாற சாலை பகுதியைச் சேர்ந்த ஜினில் (வயது 28) என்பது உறுதியானதால் சப்- இன்ஸ்பெக்டர் அருளப்பன் தலைமையிலான தனிப் படை போலீசார் கேரளா விரைந்தனர். அவர்கள் பாறசாலையில் பதுங்கி இருந்த ஜினிலை கைது செய்தனர்.தொடர்ந்து அவனிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    ஜினில், இருசக்கர வாகனத்தில் சென்று பல பெண்களிடம் நகை பறித்து இருப்பதும் அவன் மீது கேரளா மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் குற்றச் செயலில் ஜினிலுடன் ஈடுபட்டு வந்த அவரது நண்பரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

    ×