search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது
    • பயிற்சியில் மொத்தம் 90 ஆசிரியர்களும், கருத்தாளர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    உப்பிலியபுரம்:

    தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதுறையின் சார்பாக திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியத்திலுள்ள 1 முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் மூன்றாம் பருவத்திற்கான தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் உப்பிலியபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. முகாமில் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் ஜோதிமணி, உப்பிலியபுரம் வட்டார கல்வி அலுவலர்கள் ரேவதி, ராஜ்குமார், சிவக்குமார், வட்டார வளமையம் மேற்பார்வையாளர், சரவணன், பயிற்றுநர்கள் சிவனேசன், புவனேஸ்வரி கண்ணன், பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டனர். பயிற்சியில் மொத்தம் 90 ஆசிரியர்களும், கருத்தாளர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


    • கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது
    • மருத்துவ குழுவினர் 300 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பு ஊசி செலுத்தி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர்

    அரியலூர்:

    அரியலூர் அடுத்த மணக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவர் சங்கீதா அசோக் குமார் தொடக்கி வைத்தார். முகாமில் கலந்து கொண்ட கடுகூர் கால்நடை மருத்துவர் குமார் மற்றும் கால்நடை ஆய்வாளர் மாலதி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவகுழுவினர், பெரியமணக்குடி, சின்ன மணக்குடி, மணக்குடி காலனி உள்ளிட்ட பகுதியிலுள்ள 300 கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பு ஊசி செலுத்தி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகளை வழங்கினர். முகாம் முடிவில் மணக்குடி ஊராட்சி துணைத் தலைவர்பாப்பா பரமசிவம் நன்றி கூறினார்.


    • தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறுவது, தொழில்வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
    • நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரும் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் நகராட்சி மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆகியவை சார்பில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வணிக நிறுவனங்களுக்கு தொழில் உரிமம் பெறுவது, தொழில்வரி செலுத்துவதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    இதுவரை தொழில் உரிமம் பெறாதவர்கள் உரிய ஆவணங்களாக, வாடகைதாரர் என்றால் கடை வாடகை ஒப்பந்த நகல், கட்டிட உரிமையாளர் ஒப்புதல் கடிதம், சொத்துவரி ரசீது ஆகியவற்றில் ஏதாவது ஒன்றையும் ஜி.எஸ்.டி உரிமம் எண், வணிக நிறுவன முகவரி சான்று, ஆதார் அல்லது ரேசன் அட்டை ஆகியவற்றுடன் நாமக்கல் நகராட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரும் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பதிவு செய்யலாம்.

    ஜி.எஸ்.டி உரிமம் இல்லாத வணிகர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக இணைய தொழில் உரிமம் மற்றும் தொழில் வரி ரசீது அவசியம் தேவை என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

    • மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • சிறப்பு முகாம் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற உள்ளது

    கரூர்

    கரூர் மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஏற்பாட்டின் பேரில் சிறப்பு முகாம் கரூர் மாவட்டத்தில் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த முகாம் புதுக்கநல்லி சமுதாயக்கூடம், ஆண்டாங்கோவில் புதூர் மந்தை, சின்ன கொங்குதிருமண மண்டபம், விவிஜி நகர், சாய்பாபா கோவில் அருகில், ஜவகர்பஜார், தாலுகா அலுவலகம் அருகில், செங்குந்தபுரம், டெல்லி ஸ்வீட்ஸ் அருகில், கணபதிபாளையம், பகவதி அம்மன் கோவில், மின்னாம்பள்ளி பஞ்சாயத்து அலுவலகம், காதபாறை பஞ்சாயத்து அலுவலகம், ரங்கநாதன் பேட்டை பஸ் நிலையம், நெரூர் வடக்கு பஞ்சாயத்து அலுவலகம், ரெங்கநாதபுரம் பள்ளியிலும் நடக்கிறது. மேலும் வடக்கு பாளையம், குன்னனூர் ஆரம்ப சுகாதார நிலையம், உப்பிடமங்கலம் சந்தை, ஜெகதாபி சமுதாயக்கூடம், சின்ன மூக்கனாங்குறிச்சி அரசு பள்ளி, வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தாளப்பட்டி பஞ்சாயத்து அலுவலகம், அரவக்குறிச்சி தினசரி மார்க்கெட் ரேஷன் கடை, சீதப்பட்டி காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வேலாயுதம்பாளையம் ரவுண்டானா, சத்திரம் பஸ் நிறுத்தம், நொய்யல் பஸ் நிறுத்தம், புகலூர் நால்ரோடு, சாநகர், புதுப்பட்டி பள்ளிக்கூடம், மற்றும் ஆண்டிபட்டி பஸ் நிறுத்தம், ஈசநத்தம் பள்ளிவாசல், சின்னதாராபுரம் அக்ரஹார பகுதி, சூடாமணி மாசாணி அம்மன் கோவில், பரமத்தி பஞ்சாயத்து அலுவலகம், கூனம்பட்டி பள்ளிக்கூடம் உள்ளிட்ட இ்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    • வேலாயுதம்பாளையம் பகுதியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது
    • முகாமில் கலந்து கொண்ட கால்நடைகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது

    கரூர்:

    கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை சார்பில் புகளூர், செம்படாபாளையம் பகுதியில் கால்நடைகளுக்கான பெரியம்மை தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் வேலாயுதம்பாளையம் கால்நடை மருத்துவமனை மருத்துவர் கண்ணன் தலைமையில் கால்நடை ஆய்வாளர் நடராஜன், உதவியாளர் மீரா ஆகியோர் கொண்ட குழுவினர் கலந்து கொண்டு முகாமில் கலந்து கொண்ட கால்நடைகள் மற்றும் கன்று குட்டிகளுக்கு பெரியம்மை நோய்க்கான தடுப்பூசி போடப்பட்டது. விவசாயிகளுக்கு கால்நடைகளை தாக்கும் நோய்கள் குறித்தும், கால்நடைகளுக்கு புரதம் சத்து நிறைந்த பசுன தீவன உற்பத்தி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் செம்படாபாளையம் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் தங்களது கால்நடைகளையும், கன்றுகுட்டிகளையும் கொண்டு வந்து பெரியம்மை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

    • ஆலங்குடியில் கால்நடை சிறப்பு முகாம் நடைபெற்றது
    • கால்நடை மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றன.

    ஆலங்குடி

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி கிராமத்தில் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல் செய்தல், சினை பரிசோதனை செய்தல், மலடு நீக்க சிகிச்சை அளித்தல், தாது உப்பு கலவை வழங்குதல், தீவனப் பயிர் மற்றும் தீவனபுல் சாகுபடி விளக்கம், கால்நடை மற்றும் கோழிகளுக்கு தடுப்பூசி வழங்குதல் ஆகியவை நடைபெற்றன.இம்முகாமில் மண்டல இணை இயக்குனர் மரு. சம்பத் உதவி இயக்குநர் ரவிச்சந்திரன் கால்நடை உதவி மருத்துவர் பாவை, உதவி கால்ந டை மருத்துவர் சுவிதா, கால்நடை பராமரிப்பு உதவியாளர் வடிவேலு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வின்சென்ட் தேபவுல் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்,





    • இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி.
    • 2022 -23-ம் ஆண்டிற்கு அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தில் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது.

    பாபநாசம்:

    பாபநாசம் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் மன்ற கூட்ட அரங்கத்தில் பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், துணைத் தலைவர் பூபதி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் தேன்மொழி, முத்துமேரி, ஜாபர் அலி, புஷ்பா, கீர்த்தி வாசன், சமீரா பர்வீன், பிரேம்நாத் பைரன், பாலகிருஷ்ணன், பிரகாஷ், விஜயா, கெஜலட்சுமி, கோட்டையம்மாள், துரைமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு தங்கள் வார்டுகளில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

    பேரூராட்சி தலைவர் செயல் அதிகாரி ஒவ்வொரு பேரூராட்சி கவுன்சிலர்களின் கோரிக்கைகள் முழுவதும் பரிசீலனை செய்து உடனடியாக நடவடிக்கை எடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இக்கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 2023 -ஆம் ஆண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை வழங்கிட உத்தரவிட்ட முதல்- அமைச்சருக்கு மன்றம் நன்றியை செலுத்துகிறது.

    பாபநாசம் பேரூராட்சியில் 2022 - 23 ஆம் ஆண்டு கலைஞர் நகர் புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்வது எனவும், பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தகுதியான தெருவோர வியாபாரிகளை கணக்கெடுப்பு செய்து அடையாள அட்டை வழங்குவது எனவும், பாபநாசம் பேரூராட்சிக்கு 2022 - 23 ஆம் ஆண்டிற்கு அம்ரூத் 2.0 குடிநீர் திட்டத்தில் ரூ.14.82 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்வது எனவும், உள்பட பேரூராட்சி வார்டுகளில் கோரிக்கை களை நிறைவேற்றுவது எனவும் தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • சீனாவில் இருந்து சேலம் வந்த மகுடஞ்சாவடியைச் சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    • கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஜவுளி வியாபாரியை கண்காணிப்பதற்காக மகுடஞ்சாவடியில் சுகாதாரத்துறையினர் முகாமிட்டுள்ளனர்.

    மகுடஞ்சாவடி:

    சீனாவில் பி.எப்.7 என்ற புதிய வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் நமது நாட்டிலும் அந்த வகை தொற்று பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சீனாவில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவைக்கு விமானத்தில் வந்த சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை சேர்ந்த ஜவுளி வியாபாரிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    அவருக்கு இருப்பது புதிய வகை கொரோனாவா? என்பது குறித்து கண்டறிய சளிமாதிரிகள் மரபணு சோதனைக்காக சென்னையில் உள்ள மாநில சுகாதார ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதையடுத்து அந்த ஜவுளி வியாபாரி, மகுடஞ்சாவடியில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். அவரை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் நோய் தொற்று அறிகுறி இல்லை. எனினும் அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    மகுடஞ்சாவடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த மருத்துவக்குழுவினர் கொரோனா பாதித்த ஜவுளி வியாபாரியை காலை மற்றும் மாலை இருவேளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதவிர, அந்த நபரின் வீடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நோய் தொற்று அறிகுறியுடன் யாரேனும் வசிக்கிறார்களா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

    எனவே, அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மகுடஞ்சாவடி பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒலிப்பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.தொடர்ந்து மகுடஞ்சாவடி பகுதியில் கண்கா ணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுஉள்ளது. சுகாதார, மருத்துவ துறை யினர் மகுடஞ்சாவடியில் முகாமிட்டுள்ளனர்.

    • பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி கோட்டை அரிமா சங்கம் மற்றும் கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனை இணைந்து கபிலர்மலை தொகுதி அ.தி.மு.க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மணியின் நினைவாக, பரமத்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு பரமத்தி கோட்டை அரிமா சங்க தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். அரிமா சங்க அறக்கட்டளை தலைவர் ராகா ஆயில் தமிழ்மணி வரவேற்றார். பரமத்தி அ.தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். முகாமினை குமாரபாளையம் தங்கமணி எம்.எல்.ஏ, பரமத்தி வேலூர் சேகர் எம்.எல்.ஏ, அரிமா சங்கம் முன்னாள் பன்னாட்டு இயக்குனர் தனபாலன் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர்.

    முகாமில் பரமத்தி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் பரமத்தி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் திலகவதி வெற்றிவேல், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் ஜே.பி.ரவி, பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளர் ரவி, பரமத்தி நகர செயலாளர் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வாடிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • மாவட்ட துணைச் செயலாளர் கராத்தே சிவா வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம்-வாடிப்பட்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசனின் 59-வதுபிறந்தநாள் விழாவையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் கிரட்வளாகத்தில் நடந்தது. வட்டார தலைவர் பாலசரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் பாரத் நாச்சியப்பன், பைரவ மூர்த்தி, மாநில இணைச் செயலாளர் ஜெயபிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் கராத்தே சிவா வரவேற்றார். மாவட்டத் தலைவர் தனுஷ்கோடி தொடங்கி வைத்தார்.

    நிர்வாகிகள் கச்சைகட்டி பாண்டி, தண்டீசுவரன், பொதும்பு செல்வம், புதுப்பட்டி கார்த்தி, பரவை ராமு, எம்.ஏ.முத்து, காமாட்சி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் கோவை சங்கரா கண் மருத்துவமனை மருத்துவ அலுவலர் நிஷா தலைமையில் 82 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு 41 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். நகர தலைவர் ராம்குமார் நன்றி கூறினார்

    • பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • முகாமில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே அரங்கக்குடி-வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் அரவிந்தநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சம்சுதீன், ஒன்றியக்குழு உறுப்பினர் மஜினா பர்வீன் ஷேக் அலாவுதீன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் அர்ஷத் ஆகியோர் முன்னிலை வைத்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல்அன்சாரி வரவேற்றார்.

    இதில் நிவேதாமுருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்து பேசினார். தொடர்ந்து முகாமை பார்வையிட்டு பொது மக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    முகாமில் டாக்டர்கள் மற்றும் செவிலியர்களைக் கொண்ட மருத்துவ குழுவினர், ரத்தப் பரிசோதனை, ஸ்கேன், பொதுமருத்துவம், இசிஜி, சித்த மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனை களை செய்தனர்.

    இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பரிசோதனை செய்து பயனடைந்தனர். இந்த முகாமில் இயற்கை உணவுகள், பாரம்பரிய உணவுகள், குழந்தை களுக்கான ஊட்டச்சத்து தரக்கூடிய உணவுகள் குறித்து விளக்கும் வகையில் கண்காட்சி வைக்கப்பட்டி ருந்தது.

    இதில் ஒன்றிய ஆணையர் மீனா, வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) விஜயலட்சுமி, தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் தஞ்சை மண்டல பொறுப்பாளர் ஸ்ரீதர், ஒன்றியக்குழு துணை தலைவர் மைனர் பாஸ்கர், அரங்கங்குடி குட்டி ராஜா மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதாரம் மேற்பார்வையாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

    • பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.
    • சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு ஆகிய பகுதியில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது.

    முகமிற்கு பேரூராட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், அலுவலக பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பி னர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு பகுதிகளான பாப்பாத்தி அம்மன் கோவில் தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு, காவேரி சாலை கஞ்சிமடம் தெரு, அக்ரகாரம் தெரு ஆகிய இடங்களில் பொது சுகாதாரப் பணிகளை மேற்க்கொண்டனர்.

    மேலும் பராமரிப்பு செய்தல், கொசு ஒழிப்பு மருந்து அடித்தல் மற்றும் பொது மக்களின் தேவைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    ×