search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • தனியார் வேலை வாய்ப்பு முகாம் மதுரையில் நாளை நடக்கிறது.
    • இந்த தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்த முகாமில் தனியார் முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு கல்வித்தகுதிக்கேற்ப வேலை நாடும் இளைஞர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாமில் 10-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ படித்த வேலைநாடுநர்கள் கலந்து கொண்டு தங்களது தகுதிக்கேற்ப தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுக்கொள்ளலாம். வேலைநாடுநர்கள் மற்றும் வேலையளிக்கும் நிறுவனங்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுயவிவரங்களைப் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம்.

    இந்த முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலைநாடுநர்கள் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை காலை 10 மணிக்கு மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முகாம் மூலம் தனியார் நிறுவனங்க ளில் வேலைவாய்ப்பு பெறுவதனால் வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு எவ்விதத்திலும் பாதிக்காது.

    இந்த தகவலை மதுரை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகம் தெரிவித்துள்ளது.= 

    • இரவில் கூடாரமிட்டுத் தங்குதல், கயிறு பாலம் அமைத்தல் மற்றும் சுடரொளிக் களியாட்டம் முதலான நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.
    • நல்ல பண்பாட்டினை மாணவர்களது மனதில் விதைக்கும் வகையில் இம்முகாம் தொடங்கப்பட்டது.

    திருப்பூர்  :

    திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் சாரண, சாரணியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. மேலும் சாரணர் இயக்க மாணவர்களுக்கு சாதி, மதம், மொழி கடந்து சகோதர மனப்பான்மையுடன் சமூகத்தை அணுகுவதற்கான நல்ல பண்பாட்டினைக்கற்றுத் தருகிறது. அந்த நல்ல பண்பாட்டினை மாணவர்களது மனதில் விதைக்கும் வகையில் இம்முகாமை பள்ளியின் செயலாளர் டாக்டர் சிவகாமி ெதாடங்கி வைத்தார். இம்முகாமின் சிறப்பு விருந்தினர்களாக மயிலாடுதுறை மாவட்ட சாரணப்பயிற்சி ஆணையர் கே.சாரண தேவேந்திரன், மதுரை மாவட்டம் சாரணப்பயிற்சியாளர் எம்.முத்தையா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

    பயிற்சியில் மாணவ சாரண, சாரணியர்கள் சிக்கனம், ஒழுக்கம், பாதுகாப்பு விழிப்புணர்வு, முதலுதவி மற்றும் முகாம் கூடாரம் அமைத்தல், பலவகையான முடிச்சுகள் பற்றிய பயிற்சி பெறுதல், உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளைக் கற்றுக்கொண்டனர். மேலும் இரவில் கூடாரமிட்டுத் தங்குதல், கயிறு பாலம் அமைத்தல் மற்றும் சுடரொளிக் களியாட்டம் முதலான நிகழ்வுகளில் ஈடுபட்டனர்.

    முகாமில் கலந்து கொண்ட மாணவ சாரண, சாரணியர்களையும் அதற்கு உறுதுணையாக இருந்த சாரண ஆசிரியர் நந்தகுமாரையும், சாரணியர் ஆசிரியர்கள் ராஜலட்சுமி, நந்தினி மற்றும் விஜயசபரி ஆகியோரை பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம்.
    • பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிருக்கு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணா் பணி வழங்கப்படவுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிா் தனியாா் நிறுவனத்தில் பணியில் சேருவதற்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 26-ந்தேதி நடைபெறுகிறது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் ஆகியன சாா்பில் பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற மகளிருக்கு ஓசூரில் உள்ள டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இளநிலை தொழில் நிபுணா் பணி வழங்கப்படவுள்ளது.

    இதற்கான வேலைவாய்ப்பு முகாம் திருப்பூா் கே.எஸ்.சி. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வருகிற 26-ந்தேதி காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையில் நடைபெறுகிறது.

    ஆகவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 18 வயது முதல் 22 வயதுக்கு உள்பட்ட மகளிா் தங்களது மாற்றுச்சான்றிதழ், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றுடன் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஏற்காடு செம்மநத்தம் கால்நடை மருந்தகம் எல்லைக்கு உட்பட்ட மலை கிராமங்களில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
    • கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை, கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    ஏற்காடு:

    தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் ஏற்காடு செம்மநத்தம் கால்நடை மருந்தகம் எல்லைக்கு உட்பட்ட மலை கிராமங்களில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.

    இம்முகாமில் கால்நடை–களுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை கருவூட்டல், சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம், கால்நடைகளுக்கு மலடு நீக்க சிகிச்சை, கோழிகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

    மேலும் சிறந்த கிடாரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு, கால்நடை–களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இம்முகாமில் கால்நடை மருத்துவர் பாண்டியன், கால்நடை ஆய்வாளர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் பல விவசாயிகள் கலந்து கொண்டு பலன் பெற்றனர்.

    • மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடைபெற்றது
    • 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வகை மாற்றுத்திறனா ளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடையாள அட்டை, யுபிஐ கார்டு பெறுவதற்கான மனுக்களும் பதிவு செய்யப்பட்டது. இந்த முகாமில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் சிவக்குமார், கோமதி, மலையாண்டி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

    • இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் பன்னீர் தேவர் நினைவு கல்வி அறக்கட்டளை, திருச்சி அப்பல்லோ மருத்துவமனை மற்றும் கறம்பக்குடி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு ஆகியவை இணைந்து மழைக்கால இலவச பொது மருத்துவ முகாம் சுக்கிரன் விடுதியில் உள்ள பன்னீர் தேவர் திருமண மஹாலில் நடைபெற்றது.

    முகாமை தொழில் அதிபர் கரிகாலன் குத்துவிளக்கு ஏற்றி துவங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, இந்த அறக்கட்டளையின் மூலம் இந்தப் பகுதியில் இது நான்காவது இலவச பொது மருத்துவ முகாம். இனிவரும் காலங்களில் இப்பகுதியில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து அறக்கட்டளை மூலம் சேவைகள் தொடரும் என்றார்.

    முன்னதாக வருகை தந்த அனைவரையும் பழனி அருள்மிகு ஆண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி பேராசிரியரும் பிரபல பட்டிமன்ற நடுவருமான தங்க ரவிசங்கர் வரவேற்று பேசினார். முகாமில் திருச்சி அப்போலோ மருத்துவமனையின் இருதய சிகிச்சை சிறப்பு மருத்துவர் ரவீந்திரன், புதுக்கோட்டை மாவட்ட சித்தா பிரிவு மாவட்ட அலுவலர் வனஜா, கறம்பக்குடி அரசு மருத்துவமனை சித்தா பிரிவு டாக்டர் சுயமரியாதை ஆகியோர் மருத்துவ சம்பந்தமான அறிவுரைகளை பொதுமக்களுக்கு வழங்கினர். முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருந்து மாத்திரைகள் பெற்று பயன்பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் சித்த மருத்துவ துறையின் மூலம் கபசர குடிநீர், நிலவேம்பு கசாயம், ஆடாதொடை கசாயம், முடக்கத்தான் கசாயம் ஆகியவை வழங்கப்பட்டது. முடிவில் அறக்கட்டளையின் செயலாளர் கருப்பையா நன்றி கூறினார்.

    • ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தில் பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் வருகிற 24,25-ந் தேதிகளில் நடக்கிறது.
    • மாத வருமானம் ரூ.25 ஆயரத்துக்கு மிகாமலும் உள்ளது என சான்றளிக்க வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் மதுரை கோட்டத்தின் மூலம் "அனைவருக்கும் வீடு" திட்டத்தின் கீழ் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டும் திட்டம் சிவகங்கை தாலுகா, பையூர்பிள்ளை வயல் திட்டப்பகுதி கட்டி முடிக்கப்பட்டுள்ள 608 அடுக்கு மாடி குடியிருப்புகள் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

    இந்த திட்டத்தில் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு சிவகங்கை நகராட்சி எல்கைக்குட்பட்ட அரசுக்கு சொந்தமான நீர்நிலை வகைப்பாடு கொண்ட ஆட்சேபகரமான நீர்நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான இதர புறம்போக்கு நிலங்களில் குடியிருந்து வரும் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பரிந்துரைக்கப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் ஒப்புதல் பெறப்பட்ட பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேலும், நகர்புற வீடற்ற பொருளாதாரத்தில் நலி வடைந்த பிரிவினர்களுக்கு முன்னுரிமை அளித்து குடி யிருப்புகள் ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் ஒரு குடியிருப்புக்கான செலவுத் தொகையில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்தொகை போக மீதமுள்ள பயனாளிகளின் பங்குத்தொகையை பயனாளிகள் செலுத்த வேண்டும். ''அனைவருக்கும் வீடு" திட்ட விதிகளின்படி மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு மேற்கண்ட திட்டப்பகுதி களில் கட்டப்படுகின்ற அடுக்குமாடி குடியிருப்புகள் தேவைப்படுவோர் இந்தியாவில் எனது பெயரிலோ, எனது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலோ வேறு எங்கும் வீடுகள் இல்லை எனவும், மாத வருமானம் ரூ.25 ஆயரத்துக்கு மிகாமலும் உள்ளது என சான்றளிக்க வேண்டும்.

    பயனடைய விரும்பும் பயனாளிகள் குடும்ப தலைவர் மற்றும் குடும்ப தலைவி ஆகிய இருவருடைய ஆதார், வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றுடன் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், பையூர்பி ள்ளைவயல் அடுக்குமாடி குடியிருப்பு திட்டப்பகுதி, சிவகங்கை என்ற முகவரியில் வருகிற 24, 25-ந்தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் பயனாளிகள் ரூ.5 ஆயிரம் மதிப்பிற்கான கேட்பு காசோலையினை The Executive Engineer TNUu;DB PIU - I Madurai) என்ற பெயரில் எடுத்து (மனுதார், பயனாளியின் ஆதார் நகல் (கணவன் மற்றும் மனைவி), வண்ணப்புகைப்படம் - 2, குடும்ப அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல்) ஆகியவற்றை மனுவுடன் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த தொகையானது பயனாளியின் பங்களிப்பு தொகையில் வரவு வைக்கப்பட்டு மீத தொகையினை குடியிருப்பு ஒதுக்கீடு செய்யும்போது பயனாளிகள் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இருதய நோய் 45 நபர்களுக்கு கண்டறியப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.
    • மருத்துவர் பாபு மற்றும் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    டெல்டா ரோட்டரி சங்கம், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மணி பல்நோக்கு மருத்துவமனை இணைந்து திருத்துறைப்பூண்டி பகுதியில் இருதய நோய் கண்டறியும் முகாம் நடத்தியது.

    இதில் 450 நபர்கள் கலந்து கொண்டனர். அதில் இருதய நோய் 45 நபர்களுக்கு கண்டறியப்பட்டு அவர்கள் மேல் சிகிச்சைக்காக தனல ட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூலம் அழைத்து செல்லப்ப ட்டனர்.

    இந்த முகாமிற்கு டெல்டா ரோட்டரி சங்கத்தின் மருத்துவ சேர்மன் மணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவர் பாபு மற்றும் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராஜதுரை, பொருளாளர் அகிலன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். டெல்டா ரோட்டரி சங்கத்தின் சாசன தலைவர் கணேசன் மற்றும் முன்னாள் தலைவர்கள் தலைவர் தேர்வு மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள பொன்பரப்பிபட்டி ஊராட்சி அண்ணாமலைப்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
    • சித்த மருத்துவம் உள்பட 1036 பேருக்கு சிகிச்சை மற்றும் பரிந்துரை அளிக்கப்பட்டது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி ராசிபுரம் அருகே உள்ள பொன்பரப்பிபட்டி ஊராட்சி அண்ணாமலைப்பட்டியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமிற்கு பொன் பரப்பிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி ராஜா ஆதவன் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் மனோகரன், சித்த மருத்துவர் செங்கோட்டுவேல் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பேசினர்.

    முகாமில் மருத்துவம், ஸ்கேன் பரிசோதனை, இ.சி.ஜி. பரிசோதனை, ரத்த பரிசோதனைகள், எலும்பு மருத்துவம், கண் மருத்துவம், குழந்தை மருத்துவம், இயன்முறை மருத்துவம், சித்த மருத்துவம் உள்பட 1036 பேருக்கு சிகிச்சை மற்றும் பரிந்துரை அளிக்கப்பட்டது.

    • இளையான்குடியில் அரசு அலுவலர்களுக்கான மருத்துவ முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர் குடும்பத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

    மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.

    • ஊராட்சி பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், ெஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களுக்காக முழு உடல் பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. ெஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில நடைபெற்ற முகாமை சட்டப் பேரவை உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தொடக்கி வைத்து பார்வையிட்டார். ஒன்றியக் குழுத் தலைவர் ந.ரவிசங்கர், துணைத் தலைவர் லதா கண்ணன், வட்டார வளரச்சி அலுவலர்கள் பிரபாகரன், அமிர்தலிங்கம் ஆகியோர முன்னிலை வகித்தனர். வட்டார தலைமை மருத்துவ அலுவலர் மேகநாதன் தலைமையிலான மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டு, ஊராட்சி அனைத்து நிலை பணியாளர்களின் உடலை பரிசோதித்து, சிகிச்சை அளிக்கப்பட்டது.

    • ஆனங்கூர் கிராமத்தில் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை உதவி இயக்குநர் தலைமையில் மண் மாதிரி சேகரித்தல், ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் பரிசோதனை வாகனம் மூலம், விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்து ஆய்வறிக்கை வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரம், ஆனங்கூர் கிராமத்தில் அனைத்து கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலை உதவி இயக்குநர் சின்னதுரை தலைமையில் மண் மாதிரி சேகரித்தல், ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமில் மண் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் பயிர்கள் பற்றி கூறப்பட்டது.

    திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் பரிசோதனை வாகனம் மூலம், விவசாயிகளிடம் மண் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்து ஆய்வறிக்கை வழங்கப்பட்டது.

    அறிக்கையில் பயிர் சாகுபடி செய்ய உள்ள நிலத்தின் கார, அமில தன்மை, தொழு உரம், பயிருக்கு தேவையான உரங்கள், நுண்ணூட்டச் சத்து மற்றும் பேரூட்டச்சத்துகள் விபரம் தெரிவிக்கப்பட்டு, அவற்றை பயன்படுத்தும் அளவு ஆகிய விபரங்களை மூத்த வேளாண்மை அலுவலர் சவுந்திரராஜன் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

    நிகழ்ச்சியில் நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் அருள்ராணி, உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×