search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் நடை பெற்றது.
    • இதில் பொதுமக்கள் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் ஆகிய சேவை வேண்டி மனு அளித்தனர்.

    புதுக்கோட்டை :

    ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனி வட்டாட்சியர் குடிமை பொருள் வழங்கல் அதிகாரி பெரியநாயகி தலைமையில் குடும்ப அட்டை குறைதீர்க்கும் முகாம் நடை பெற்றது.

    வட்டாட்சியர் குடிமை பொருள் வழங்கள்முதுநிலை வருவாய் ஆய்வாளர் ரவிக்குமார் தனி வருவாய் ஆய்வாளர் கணேசன் இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜானகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பொதுமக்கள் குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை அங்கீகாரச் சான்று ரேஷன் ன் கடைகள் குறித்து புகார், மொபைல் மாற்றம் மற்றும் இதர சேவை கள் குறித்த மனுக்கள் ஆகிய சேவைகளை வேண்டி கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    • 1459 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
    • 550 சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை முற்றிலும் தடுக்கும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று நடந்தது.

    மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்கு சாவடி மையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி உள்பட 1459 இடங்களில் இன்று 36-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதில் கிராமப்புற பகுதி களில் அமைக்கப்பட்ட 909 மையங்களில் 909 சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் மாநகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 550 மையங்களில் 550 சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம் 1,459 மையங்களில் இந்த சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணையாக 2,34,937 பேருக்கு தடுப்பூசி போட வேண்டி உள்ளது. இதில் கிராமப்புற பகுதிகளில் 1,10,229 பேரும், மாநகர பகுதிகளில் 1,24,708 பேரும் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் 11,68,614 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி போட வேண்டி உள்ளது. அவர்களில் 5,91,242 பேர் ஊரக பகுதிகளிலும், 5,77,372 பேர் மாநகர பகுதிகளிலும் உள்ளனர் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

    எனவே சுகாதார பணியாளர்களுடன் ரோட்டரி, லயன்ஸ் கிளப் மற்றும் தன்னார்வ தொண்டு பிரதிநிதிகள், பள்ளி-கல்லூரி என்.எஸ்.எஸ், என்.சி.சி மாண வர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து, மாவட்ட நிர்வாகம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் கூறுகையில், பொதுமக்கள் அனைவரும் நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி போட வேண்டும். கூட்டமான இடங்களில் சமூக இடைவெளி கடை பிடித்தல், முககவசம் அணிதல், பொது இடங்க ளுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றார்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அரசுபெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மக்கள்நல்வாழ்வு த்துறையின் சார்பில் தேசிய குடற்புழு நீக்க நாளை முன்னிட்டு பள்ளி மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பள்ளி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கினார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    உலக மக்கள் தொகையில் 24 சதவீதம் பேருக்கு மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த உலகளாவிய தொற்றுகளில் இந்தியாவில் தமிழகத்தில் 25 சதவீதம் பேர்இப்பரவல் காணப்படுகிறது. இந்நோய்ப்பரவலை கட்டுப்படுத்திட கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளிகள், கல்லூரிகள்,அரசு ஆரம்பசுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும்குழந்தைகள் நலமையங்களின் வாயிலாக மொத்தம் 1,382 நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் இன்றைய தினம்வழங்கப்படுகிறது. 1 முதல் 19 வயது வரை உள்ள 4,58,855 நபர்களுக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட 97,329 பெண்களுக்கும் என மொத்தம் 5,56,184 நபர்களுக்கும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கப்படுகிறது. இந்த மாத்திரைகளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை காலை உணவு அல்லது மதிய உணவுசாப்பிட்ட பிறகு மாத்திரையை நன்கு கடித்து, மென்று, சுவைத்து சாப்பிட வேண்டும். 1 முதல் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அல்பெண்டாசோல் (200 மி.கி) அரை மாத்திரை, 2 முதல் 19 வயது வரை உள்ளவர்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டாசோல் (400 மி.கி), 20-30 வயது வரை உள்ள பெண்களுக்கு 1 மாத்திரை அல்பெண்டாசோல் (400 மி.கி) வழங்கப்பட வேண்டும். மேலும், விடுபட்ட அனைத்து குழந்தைகளுக்கும் வருகின்ற 16 - ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று மாத்திரைகள் வழங்கப்படவுள்ளது.

    இதன் மூலம் குழந்தைகளுக்கு ஏற்படும் இரத்தசோகை நோய் தடுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சி மேம்படுத்தப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொதுசு காதாரத்து றையுடன் இணைந்து பள்ளி ஆசிரியர்கள், குழந்தைகள் நல மைய பணியாளர்கள், பெற்றோர்ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உள்ளாட்சி அமைப்பை சேர்ந்தவர்கள் குடற்புழு மாத்திரையின் பயன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இத்திட்டம் வெற்றியடைய ஒத்துழைக்க வேணடும் என கூறினார். அப்போது மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை இயக்கநர் (சுகாதாரப் பணிகள்) ராஜா, பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் மாணவியர்கள்கலந்து கொண்டனர்.

    • குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
    • 1-19 வயது மற்றும் 20-30 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அல்பெண்டசோல் (குடற்புழு நீக்கம் மாத்திரை) மாத்திரைகள் சாப்பிட்டு பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் தேசிய அளவிலான குடற்புழு நீக்க நாள் 2-ம் சுற்று நேற்று கடைபிடிக்கப்பட்டது. விடுபட்டவர்களுக்கு 16-ந் தேதி குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாம் நடக்கிறது.

    இந்த திட்டத்தின் கீழ் 1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைவருக்கும், 20 முதல் 30 வயதிற்குட்பட்ட பெண்கள் அனைவருக்கும் (கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் தவிர) ''அல்பெண்டசோல்'' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

    பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், கல்லூரிகள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரை இலவசமாக வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 1 முதல் 19 வயது வரை உள்ள 3 லட்சத்து 65 ஆயிரத்து 325 பயனாளிகளுக்கும், 20-30 வயது உள்ள 67 ஆயிரத்து 637 பெண்களுக்கும் மொத்தம் 4 லட்சத்து 32 ஆயிரத்து 962 பயனாளிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

    அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மாணவ, மாணவி களுக்கும், பள்ளி செல்லாத குழந்தைகளுக்கு வீடுகள் தோறும் சென்று இந்த மாத்திரை வழங்கப்பட உள்ளது.

    இந்த முகாமில் 281 கிராம சுகாதார செவிலியர்கள், 17 ஆஷா பணியாளர்கள், 1,277 அங்கன்வாடி பணியாளர்கள், 1,510 பள்ளி மற்றும் கல்லூரி நோடல் ஆசிரியர்கள் மூலமாக அல்பெண்டசோல் மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இந்த மாத்திரையை உட்கொள்வதன் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வதற்கும், கல்வித்திறன் அதிகரிக்கவும் உதவுகிறது.

    இந்த முகாமில் 1-19 வயது மற்றும் 20-30 வயதிற்குட்பட்ட பெண்கள் கலந்து கொண்டு அல்பெண்டசோல் (குடற்புழு நீக்கம் மாத்திரை) மாத்திரைகள் சாப்பிட்டு பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டதிற்கு கைரேகை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.
    • 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் முகாமில் கலந்து கொண்டனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அல்லாளபுரத்தில்,பல்லடம் வடக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமரின் விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் திட்டதிற்கு கைரேகை பதிவு செய்யும் முகாம் நடைபெற்றது.

    பல்லடம் வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் தலைமை வகித்தார். திருப்பூர் வடக்கு மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில்100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு ஊக்கத்தொகை திட்ட கைரேகை பதிவு செய்து புதுப்பித்துக் கொண்டனர். இதில் பா.ஜ.க.,நிர்வாகிகள் நித்யா ஆனந்தகுமார்,லதா, ஆதி கேசவன்,மகேஷ், குப்புராஜ், அய்யப்பன், திரிலோகசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
    • பொய்யாதநல்லூர் அரசு பள்ளியில் நடந்தது

    அரியலூர்:

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. மேலும் மத்திய அரசினால் மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் தொலை தூரங்களில் இருந்து அடையாள அட்டை பெற வரும் மாற்றுத்திறனாளிகளின் சிரமங்களை குறைக்கும் வகையில் அடையாள அட்டை வழங்க குறுவட்ட அளவில் 20 சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு பொய்யாதநல்லூர் குறுவட்டத்திற்கு இன்று (வியாழக்கிழமை) பொய்யாதநல்லூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

    • சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோருக்கு கடன் வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
    • மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு சிறுபான்மை யினர் (டாம்கோ), பிற்படு த்தப்பட்டோர் (டாப் செட்கோ) பொருளாதார மேம்பாட்டுக் கழகங்கள் மூலம் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. 2022--23 ஆண்டுக்குரிய தனி நபர் கடன், சுய உதவிக்குழு, சிறுதொழில் தொடங்கவும், கல்விக்கடன் வழங்கவும் சிறப்பு முகாம் தாலுகா அலுவலகங்களில் நடக்கிறது.

    திருவாடானையில் நாளை (8-ந்தேதி), ஆர்.எஸ்.மங்கலத்தில் 9-ந் தேதி, கடலாடியில் 13-ந் தேதி, கமுதியில் 14-ந் தேதி, பரமக்குடியில் 16-ந் தேதி, கீழக்கரை 19-ந் தேதி, ராமேசுவரத்தில் 20-ந் தேதி, முதுகுளத்துாரில் 22-ந் தேதிகளில் முகாம் நடக்கிறது.

    மேலும் விபரங்களுக்கு ராம நாதபுரம் பிற்படுத்தப் பட்டோர், சிறுபான்மை யினர் நல அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு வங்கிகளை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

    • மதுரையில் மண்டல அளவிலான தபால் சேவை குறைதீர்க்கும் முகாம் 27-ந் தேதி நடக்கிறது
    • புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்படமாட்டாது.

    மதுரை

    மதுரை மண்டல அளவிலான தபால்சேவை குறைதீர்க்கும் முகாம் வருகிற 27-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு மதுரை பீ.பீ.குளத்தில் உள்ள தெற்கு மண்டல அஞ்சல்துறை தலைவர் அலுவலகத்தில் நடக்கிறது.

    புகார் மனுக்களை வருகிற 14-ந் தேதிக்குள் (புதன்கிழமை) அனுப்பி வைக்க வேண்டும். தபால் சம்பந்தப்பட்ட புகாரில் தபால் அனுப்பப்பட்ட தேதி மற்றும் நேரம், அனுப்பியவர் மற்றும் பெறுபவரின் முகவரி, ரசீது எண், மணியார்டர், துரித தபால், பதிவு தபால் ஆகியவற்றுக்கான விவரங்களை குறிப்பிட்டிருக்க வேண்டும்.

    சேமிப்பு வங்கி, அஞ்சல் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீடு சம்பந்தமான புகாராக இருந்தால் கணக்கு எண், கணக்கு வைத்திருப்பவரின் பெயர் மற்றும் முகவரி, பாலிசிதாரரின் பெயர் மற்றும் முழு முகவரி, பணம் கட்டிய முழு விவரம், பணம் செலுத்திய அலுவலகத்தின் பெயர், அஞ்சல் துறை சம்பந்தப்பட்ட கடித தொடர்புகள் இருந்தால் அதனையும் புகாருடன் இணைக்க வேண்டும்.

    இந்த குறை தீர்க்கும் முகாம் சம்பந்தப்பட்ட அளவில் ஏற்கனவே மனுகொடுத்து அதற்குரிய அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அளித்த பதில் திருப்தி அடையாதவர்கள் மட்டும் தங்களது குறைகளை அனுப்பிவைக்க வேண்டும். புதிய புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இந்த முகாமில் எடுக்கப்படமாட்டாது.

    தனியார் கூரியரில் அனுப்பும் தபால்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. குறைகளை அனுப்ப வேண்டிய முகவரி, ''தபால் சேவை குறை தீர்க்கும் முகாம் ஜே.பிரதீப் குமார், உதவி இயக்குநர், அஞ்சல்துறை தலைவர் அலுவலகம், தெற்கு மண்டலம், மதுரை -625002'' என்ற முகவரிக்கும் pg.madurai@indiapost.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் அனுப்பலாம்.

    தபால் உறையின் மீது முன்பக்க மேல் பகுதியில் "தபால் சேவை குறை தீர்க்கும் முகாம்- செப்டம்பர் 2022" என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.மேற்கண்ட தகவலை மதுரை மண்டல தபால்துறை உதவி இயக்குநர் ரகுநாத் தெரிவித்துள்ளார்.

    • ஈரோடு மாவட்டத்தில் 57 இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்–2ன் கீழ் உள்ள 104 கிராமங்களை ஒருங்கிணைத்து 57 இடங்களில் அனைத்து துறைகளின் திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடையும் வகையில் பல்வேறு அரசு துறைகள் ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் 3 மாதங்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 6-ந் தேதி நம்பியூர் தாலுகாவில் உள்ள கெட்டிசெவியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருந்துறை தாலுகா திருவாச்சி அரசு உயர்நிலை பள்ளியிலும் 7-ந் தேதி நம்பியூர் தாலுகா எலத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலை ப்பள்ளி, பெருந்துறை தாலுகா திங்களூர் எம்.பி.டீ.அரசு மேல்நிலைப்ப ள்ளியிலும், வருகிற 9-ந் தேதி நம்பியூர் தாலுகா வேமாண்டன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, பெருந்துறை தாலுகா விஜயமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் சிறப்பு முகாம் நடக்கிறது.

    தேசிய அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (யூ.டி.ஐ.டி.,) கட்டாயம் என்பதால், அதற்கான பதிவு, மருத்துவ சான்றுடன் தேசிய அடையாள அட்டை அனைத்து துறைகளின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால், மாற்றுத்திறனாளிகள் தங்களிடம் உள்ள ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • இளையான்குடி சாகிர் உசேன் கல்லூரியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் முகாம் நடந்தது.
    • முகாமில் 750 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதல்வவர் அப்பாஸ் மந்திரி வழிகாட்டலின் படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கும் சிறப்பு முகாம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் இளையான்குடி, தாலுகா அலுவலகத்துடன் இணைந்து நடத்தியது.

    இதில் தாசில்தார் அசோக்குமார், மண்டல துணை தாசில்தார் முத்துவேல், சாலைகிராமம் துணை வட்டாச்சியர் பிரபாகரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சதீஷ் குமார், ராமகிருஷ்ணன் மற்றும் லதா ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் 750 மாணவ-மாணவிகள் பங்கேற்று பயனடைந்தனர். முகாமினை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ், சேக் அப்துல்லா ஆகியோர் ஒருங்கிணைத்தனர். ஆதார் எண்ணைவாக்காளர் அட்டையுடன் இணைக்க வேண்டியதன் அவசியம் குறித்த கருத்தரங்கமும் நடந்தது.

    • திட்டு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    • ஆச்சாள்புரம் கிராமத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை பார்வையிட்டு உணவு தரம் குறித்து கேட்டறிந்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவ ட்டம் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் தண்ணீர் சூழ்ந்துள்ள திட்டு கிராமங்களான நாதல் படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ள மணல் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    கண்காணிப்புஅலுவ லரும், குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள்இயக்குநருமான அமுதவல்லி அளக்குடி கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரை பலப்படுத்த ப்பட்டு வரும் பணி மற்றும் கொள்ளிடம் அருகே ஆச்சாள்புரம் கிராமத்தில் முகாமில் தங்க வைக்கப்பட்டு ள்ளவர்க ளையும் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

    அங்கு சமைக்கப்படும் உணவு தரம் உள்ளதாக இருக்கிறதா என்றும் கேட்டறிந்தார். மயிலாடு துறை கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் முருகண்ணன், மயிலாடுதுறை காவிரி வடிநில கோட்ட செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர் சிவசங்கரன், ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, பிடிஓ சரவணன் மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உடன் இருந்தனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
    • தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுபடுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் வரும் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலைய ங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்படுகிறது. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவ சமாக போடப்படுகிறது.

    மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியா ளர்கள் ஈடுபடுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

    இந்த முகாமை பொது–மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெ க்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டு கொண்டு உள்ளனர். 

    ×