search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • செயலாளர் ராஜேஷ்சரவணன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் கல்லணை கலைவாணர் நகரில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் கோல்டன் ஜூப்ளி அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை, அலங்காநல்லூர் ஆரம்ப கண் பரிசோதனை மையம் இணைந்து சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாமை நடத்தியது. கல்லணை ஒன்றிய கவுன்சிலர் சுப்பாராயலு தலைமை தாங்கினார்.

    பசுபதி, மணிகண்டன், அரிமா சங்க நிர்வாகிகள் ரகுபதி, சோமு, ஜெயராமன், கண்ணன் முன்னிலை வகித்தனர். கிட்டப் பார்வை,, தூரப்பார்வை, கண்ணில் நீர் கட்டி கோர்த்தல், அடிபட்டகண், நீர் வடிதல் போன்றவற்றுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவர் பிரித்திவிராஜ் பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார். பள்ளி தலைவர் விஜயன், கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முகாமை மதுரை கோல்டன் ஜூப்ளி அரிமா சங்க தலைவர் ராம்தாஸ், செயலாளர் ராஜேஷ்சரவணன், பொருளாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

    • 1341 இடங்களில் இன்று நடைபெற்றது.
    • பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 18 வய–திற்கு மேற்பட்டவர்களுக்கு 98.99 சதவீதம் கொரோனா தடுப்பூசி முதல் தவணையும், 78.13 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 88.59 சதவீதம் முதல் தவணையும், 74.98 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும், 12 முதல் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு 90.02 சதவீதம் பேருக்கு முதல் தவணையும், 65.81 சதவீதம் பேருக்கு 2-வது தவணையும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் பூஸ்டர் தடுப்பூசியும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்டத்தில் 34-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் 1341 இடங்களில் இன்று நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிகள், ஊராட்சி அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றில் நடைபெற்றது. இந்த பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த 2,681 பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.

    • சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஓமலூர் வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
    • கரு கலைப்பு இளம் வயது கர்ப்பத்தை தவிர்த்தல் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வை வழங்கினார்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் கோட்டை மேட்டுப்பட்டி ஊராட்சி சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் ஓமலூர் வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட கவுன்சிலர் அழகிரி, ஒன்றிய கவுன்சிலர் தேன்மொழி தனசேகரன், ஊராட்சி துணைத் தலைவர் மகாலட்சுமி பாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி கணேசன் கலந்துகொண்டு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் ஆண்கள், பெண்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள், ஸ்கேன், இ.சி.சி. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மருத்துவம், கண் பரிசோதனை மருத்துவம் தோல் மருத்துவம் பல் மருத்துவம் எலும்பு அறுவை சிகிச்சை மருத்துவம் இதய நோய் காச நோய் தொழுநோய் சிகிச்சை சித்த மருத்துவம் யுனானி மருத்துவம் பிசியோதெரபி மருத்துவம் ஆகிய மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

    இந்த மருத்துவ முகாமில் மாவட்ட விரிவாக்க கல்வியாளர் தனக்குமார் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு தற்கால மற்றும் நிரந்தர குடும்ப நல முறையில் பற்றியும் உயர் பிறப்பு வரிசை குறைத்தல் பாதுகாப்பான கரு கலைப்பு இளம் வயது கர்ப்பத்தை தவிர்த்தல் ஆகியவற்றைப் பற்றி விழிப்புணர்வை வழங்கினார்.

    இதைத் தொடர்ந்து இங்கு நீரிழி நோய் உள்ள முதியவர்களுக்கு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன இதில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இதில் இறுதியாக வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இதில் 500 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டையில், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ், இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. வெள்ளிக்கவுண்டனூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, பேளூர் வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன் வரவேற்றார்.

    புழுதிக்குட்டை ஊராட்சி மன்ற தலைவர் அறிவழகன், துணைத்தலைவர் ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், வாழப்பாடி ஒன்றிய தி.மு.க. செயலாளர் சக்கரவர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தனர்.

    டாக்டர்கள் பேரின்பம், வெற்றிவேல், ராகுல், ராஜ்குமார், அபிராமி, சித்த மருத்துவர் இலக்குமணன் ஆகியோர் கொண்ட மருத்துவகுழுவினர், சிசிச்சை அளித்தனர். இம்மு காமில், குழந்தைகளுக்கான இருதய நோய் கண்டுபிடிப்பு, ஸ்கேன் பரிசோதனை, சித்த மருத்துவம், கண், தோல் மற்றும் பல் மருத்துவ சிறப்பு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

    அங்கன்வாடி பணியா ளர்களின் ஊட்டச்சத்து கண்காட்சி, மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் சுகாதார பணியாளர்களின் காய்ச்சல் மற்றும் டெங்கு விழிப்புணர்வு கண்காட்சிகள் இடம் பெற்றிருந்தன. 54 கர்ப்பிணி பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. 56 பேருக்கு இருதய ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.

    முகாமிற்கான ஏற்பாடு களை சமுதாய சுகாதார செவிலியர் ராணி, சுகா தார ஆய்வாளர்கள் செல்வம், செல்வபாபு, கோபி, ஆனந்த், கந்தசாமி ஆகியோர் செய்திருந்தனர். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், மேற்பாற்வையாளர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். நிறைவாக, சுகாதார ஆய்வாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

    • முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
    • 30.9.22 தேதி வரையிலான 75 நாட்களுக்கு 18 வயதிற்கு மேல் 59 வயதிற்குள்ளான பயனாளிகளுக்குஇலவ சமாக அரசு மருத்துவ மனைகள் ஆரம்ப சுகாதார நிலைய ங்கள் , துணை சுகாதார நிலையங்கள் , அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமையான நாளை 34-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை 1700 மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெறும் இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நடத்தப்படுகிறது.

    இதில் முதல் தவணை தடுப்பூசி, இரண்டாம் தவணை தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    தற்போது 15.7.22 முதல் தொடங்கி 30.9.22 தேதி வரையிலான 75 நாட்களுக்கு 18 வயதிற்கு மேல் 59 வயதிற்குள்ளான பயனாளிகளுக்கு இலவசமாக அரசு மருத்துவ மனைகள் ஆரம்ப சுகாதார நிலைய ங்கள் , துணை சுகாதார நிலையங்கள் , அங்கன்வாடி மையங்களில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    இந்த மெகா முகாம்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்ப ட்டோர் பணிபுரிய உள்ளனர்.

    எனவே இந்த முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாகதடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும், முதல் தவணை போட்டுக்கொண்டு நாட்கள் கடந்தவர்கள் இரண்டாம் தவணையும், இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தி கொண்டவர்கள் குறிப்பிட்டகால இடைவெளியில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொள்ளஅறிவுறுத்தப்படுகின்றனர்.

    • இலவச கண்சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது.
    • 8 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் லயன்ஸ் கிளப் சார்பில் நாளை (21ம்தேதி) இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெறுகிறது.

    பெரம்பலூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், பெரம்பலூர் லயன்ஸ் கிளப் ஆகியவற்றின் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நாளை (21ம்தேதி) காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது.

    இதில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை டாக்டர்கள் கலந்துகொண்டு பரிசோதனை செய்து இலவசமாக மருந்து மாத்திரைகளும். கண்கண்ணாடிகளும் வழங்கவுள்ளனர். மேலும் அறுவை சிகிச்சை செய்ய தேர்வு செய்யப்படுவோருக்கு மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையில் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்படும்.

    எனவே கண்புரை, சர்க்கரை நோய், கண்நீர் அழுத்த நோய், குழந்தைகள் கண்நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, கண்ணின் கருவிழியில் புண் போன்ற கண்தொடர்பான பிரச்சனை உடையவர்கள் இம்முகாமில் கலந்துகொண்டு சிகிச்சை பெற்று பயன்பெறலாம் என லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

    முகாமில் கலந்து கொள்பவர்கள் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    • காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முகாம் நடைபெறும்.
    • முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

    வெள்ளகோவில் :

    தமிழகம் முழுவதும் மக்கள் நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவுதல் தடுக்கும் பொருட்டு 34-வது கட்ட கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதன்படி முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் முத்தூர் அரசு மருத்துவமனை வளாகம், மேட்டாங்காட்டுவலசு, மேட்டுப்பாளையம், ஊடையம், வீரசோழபுரம் ஆகிய துணை சுகாதார நிலையங்கள், முத்தூர் கடைவீதி, வரட்டுக்கரை ஆகிய அங்கன்வாடி மையங்கள் என மொத்தம் 7 மையங்களில் வருகிற 21-ந் தேதி நடைபெறுகிறது.

    இம்முகாமில் முத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதாரத்துறை மருத்துவ குழுவினர், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள், பணியாளர்கள், பேரூராட்சி, ஊராட்சி நிர்வாக பணியாளர்கள் கலந்து கொண்டு அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 12 வயதுக்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ-மாணவிகள், 18 வயதுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ-மாணவிகள், இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முதல், 2-வது தவணை மற்றும் பூஸ்டர் தடுப்பூசி கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசியை இலவசமாக போடுகின்றனர்.

    • ஈரோடு மாவட்டத்தில் 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
    • இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் வருகிற 21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படுகிறது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகள் செலுத்த ப்படுகிறது. இதேபோல் 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

    மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

    பொதுமக்கள் சிரமமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்படுகிறது.

    இந்த முகாமை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 40 லட்சமாக உயருமென சுகாதாரத்துறை நம்பிக்கையுடன் உள்ளது.
    • 7ந் தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 36 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், 34 ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் வருகிற 21ந்தேதி நடக்கிறது. தடுப்பூசி செலுத்தியோர் எண்ணிக்கை 40 லட்சமாக உயருமென சுகாதாரத்துறை நம்பிக்கையுடன் உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை, 21 லட்சத்து, 43 ஆயிரத்து, 139 பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 16 லட்சத்து 94 ஆயிரத்து 288 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 384 பேரும் என மொத்தம் இதுவரை 39 லட்சத்து 91 ஆயிரத்து 811 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.அதிகபட்சமாக 19.85 லட்சம் ஆண்கள், 18.51 லட்சம் பெண்கள் முன்வந்து தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்டியுள்ளனர். கடைசியாக கடந்த 7ந் தேதி, மெகா தடுப்பூசி முகாம் நடந்த நிலையில், இந்த வாரம் வரும் 21 ந் தேதி, 34 ம் கட்ட மெகா முகாம் திருப்பூர் மாவட்டத்தில் நடக்கவுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் இம்மாதம், 7ந் தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 36 ஆயிரத்து 700 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை இல்லாத வகையில் 29 ஆயிரத்து 600 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். தற்போதைய நிலவரப்படி மாவட்டத்தில் 39.91 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியிருப்பதால், வரும், 21ம் தேதி நடக்கும் முகாமில் மொத்த தடுப்பூசி செலுத்தியோரின் எண்ணிக்கை, 40 லட்சத்தை எட்டுமென சுகாதாரத்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

    • இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது
    • 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சி அட்லஸ் மருத்துவமனை, செட்டிகுளம் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச மருத்துவ முகாமை நடைபெற்றது. முகாமை செட்டிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு,ஒன்றியக்குழு உறுப்பினர் திருநாவுக்கரசு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த முகாமில் செட்டிகுளம்,பொம்மனப்பாடி,சத்திரமனை, நாட்டார்மங்கலம் கூத்தனூர் ஆலத்தூர்கேட் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

    • சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • 300-க்கும் மேற்பட்டோா் பயன்பெற்றனா்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நடமாடும் மருத்துவக் குழு சாா்பில் ஸ்ரீ பொற்பனைக்கோட்டை முனீஸ்வரா் கோயில் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சா்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம், கரோனா பரிசோதனை போன்ற பரிசோதனைகளை டாக்டா் எம். கோபாலகிருஷ்ணன் தலைமையில் செவிலியா்கள், சுகாதார ஆய்வாளா்கள் மேற்கொண்டனா். இதில், 300-க்கும் மேற்பட்டோா் பயன்பெற்றனா்.

    • ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2019–-20ல், 12-க்கும் மேற்பட்ட புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளனர்.
    • ஈரோடு மாநகராட்சி , கோபி நகராட்சி பகுதியில் தீவிர தொழுநோய் கண்டுபிடிக்கும் முகாம் வரும், 16 முதல் செப்டம்பர் 3-ந் வரை நடக்க உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 2019–-20ல், 12-க்கும் மேற்பட்ட புதிய தொழுநோயாளிகள் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளனர். அவ்வாறு கண்டறியப்பட்ட தாளவாடி, சிவகிரி, மொடக்குறிச்சி, சென்னிமலை, அம்மாபேட்டை, அந்தியூர், டி.என்.பாளையம், கோபி, பவானி, நம்பியூர் ஆகிய 10 யூனியன்,

    ஈரோடு மாநகராட்சி , கோபி நகராட்சி பகுதியில் தீவிர தொழுநோய் கண்டுபிடிக்கும் முகாம் வரும், 16 முதல் செப்டம்பர் 3-ந் வரை நடக்க உள்ளது.

    இப்பணியில், 1,322 முன் களப்பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். இவர்கள் வீடு,வீடாக சென்று ஆண்களை ஆண் களப்பணியாளரும், பெண்களை பெண் களப்பணியாளரும் பரிசோதனை செய்ய உள்ளனர்.

    ஆரம்ப அறிகுறியாக தோலில் சிவந்த அல்லது வெளிறிய உணர்ச்சியற்ற தேமல், கை மற்றும் கால்களில் மதமதப்பு, சூடு, குளிர்ந்த உணர்வு தெரியாமை, நீண்ட நாட்களாக ஆறாத புண், காது மடல் தடித்திருத்தல், புருவமுடி இல்லாமல் இருத்தல், உடலில் முடிச்சு, முடிச்சாக காணப்படுதல் உடனடியாக பரிசோதி க்கப்பட வேண்டும்.

    இதற்காக, அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவ கல்லுாரி மருத்துவனைகளியலும் பரிசோதனை மேற்கெ ாள்ளப்படுகிறது. நோயின் தன்மைக்கு ஏற்ப ஆறு முதல், ஒரு ஆண்டுக்குள் முழுமையான சிகிச்சை பெறலாம்.

    இதனை கண்ட றிவதால், ஊனத்தை தடுக்கலாம். புதிதாக கண்டுபிடிக்கப்படும் தொழுநோயாளிகளின் உடனிருப்போர், அருகில் வசிப்போர், உடன் பணி புரிவோருக்கும் தொழுநோய் தடுப்பு மருந்து வழங்கப்படும். மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும். இந்தத் தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    ×