search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • ஈரோடு மாவட்டத்தில் இன்று 1,597 மையங்களில் காலை தடுப்பூசி முகாம் தொடங்கியது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டது.

    இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி செலுத்தி கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக்கொண்டனர். 

    • ஈரோடு மாவட்டத்தில் நாளை 1,597 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்க உள்ளது.
    • பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா 4-ம் அலை பரவுதலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

    இதில் 12 வயதிற்கு மேற்பட்ட மற்றும் 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் 2-ம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட 18 வயது மேற்பட்ட வர்களுக்கு 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 6 மாதங்கள் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக அனைத்து அரசு மருத்து வமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்களில் செலுத்தப்பட உள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமையொட்டி நாளை அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1597 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் 2-ம் தவணையாகவும், 18 வயதுக்கு மேற்பட்ட 2-ம் தவணை செலுத்தி 6 மாதம் கடந்தவர்கள் அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி என 1.50 லட்சம் பேருக்கு இலவசமாக செலுத்தப்பட உள்ளது.

    மேலும் இந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் ஈரோடு மாவட்டம் முழுவதும் 3196 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தும் பணி செய்திடவும், 70 வாகனங்கள் முகாமிற்காக பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது மிக வேகமாக பரவி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்பி லிருந்து பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மிகவும் அவசியம்.

    ஈரோடு மாவட்ட பொது மக்கள் அனைவரும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு அச்சமின்றியும், தயக்கமின்றியும் தடுப்பூசியை செலுத்திக் கொண்டு கொரோனா 4-ம் அலையை தடுத்து சமூகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுமாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • மதுரை மாவட்டத்தில் மெகா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது-

    நாடு முழுவதும் தற்போது கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் 33-வது மெகா தடுப்பூசி முகாம் மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்த தீர்மா னிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் முதல் தவணை மற்றும் 2-வது தவணை கொரோனா தடுப்பூசி இதுவரை போடாத வர்களுக்கும், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதங்கள் நிறைவு பெற்ற 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், 3-வது தவணை முன்னெச்சரிக்கை தடுப்பூசி செலுத்துவதற்கு ஏதுவாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதுரை மாவட்டத்தில் 33-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.

    மதுரை ஊரக பகுதிகளில் 909 மையங்களில் 909 தடுப்பூசி செலுத்தும் பணி யாளர்களை கொண்டும், நகர் பகுதிகளில் 550 மைய ங்களில் 550 தடுப்பூசி செலுத்தும் பணி யாளர்களை கொண்டும் மொத்தம் 1,459 மையங்களில் 1,459 தடுப்பூசி செலுத்தும் பணியாளர்களை கொண்டு சிறப்பு தடுப்பூசி முகாம் காலை 7 முதல் மாலை 7 மணி வரை தடுப்பூசி ேபாடப்படுகிறது.

    அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவ மனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்களிலும் தடுப்பூசி முகாம் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • இந்த தகவலை ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அஜித்குமார் தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க தடுப்பூசி மட்டுமே ஆயுதம் என்று அரசு அறிவித்துள்ளது. உருமாறிய ஒமைக்ரான் கொரோனாவுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி 85 சதவீதம் சிறப்பாக செயல்படுவது ஆய்வில் தெரியவந்துள்ளது.

    இதையடுத்து, 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பூசி போடப்படுகிறது.

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பணியாளர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் போடுவதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    ஏற்கனவே 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் அனைவரும் பூஸ்டர் டோஸ் போட்டனர். அனைத்து அலுவலகங்களில் இருந்தும் அதிகாரிகள் முதல் அனைத்து பணியாளர்களும் ஆர்வமுடன் பூஸ்டர் டோஸ் போட்டுக்கொண்டனர்.

    மாலை வரை நடந்த சிறப்பு முகாமில் 300-க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். விடுபட்டவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும்.

    செப்டம்பர்30-ந்தேதி வரை 18 வயது முதல் 59 வயதிற்கு உள்பட்ட அனைவரும் அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி போடலாம் என்று ராமநாதபுரம் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் அஜித்குமார் தெரிவித்தார்.

    • பொதுமக்கள் நலன்கருதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது
    • சர்க்கரை பரிசோதனை, ஈசிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகள், ஆலோசனைகள், சிகிச்சை முறை குறித்த விளக்கங்கள் இலவசமாக அளிக்கப்படும்.

    நாகர்கோவில், ஆக.4-

    நாகர்கோவில் களியங்காட்டில் உள்ள பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் பொதுமக்கள் நலன்கருதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே மூளை, வயிறு, நரம்பு மண் டலம் போன்ற பிரச்னைகளுக்காக சிறப்பு நிபுணர்கள் கலந்துகொண்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்களில் ஏராளமான மக்கள் வந்து பரிசோதனையும், சிகிச்சையும் பெற்று பயனடைந்து உள்ளனர்.

    தற்போது இலவச சிறப்பு இதயவியல் சிகிச்சை முகாம் வருகிற 6 மற்றும் 7-ந்தேதிகளில் நடக்கிறது. இந்த முகாமில் நெஞ்சு வலி, மயக்கம், படபடப்பு, அதிக வியர்வை, உடல் சோர்வு மூச்சு விடுவதில் சிரமம், சர்க்கரை நோய் உள்ளவர்கள், அதிக உடல் எடை கொண்டவர்கள், புகை பிடிப்பவர்கள், அதிக மாக மது அருந்துபவர்கள், நீண்ட நாட்களாக மாத்திரை மருந்து எடுத்து கொள்பவர்கள் போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

    இந்த முகாமில், சர்க்கரை பரிசோதனை, ஈசிஜி, எக்கோ போன்ற பரிசோதனைகள், ஆலோசனைகள், சிகிச்சை முறை குறித்த விளக்கங்கள் இலவசமாக அளிக்கப்படும்.

    பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத் திரியின் இதயவியல் நிபு ணர் டாக்டர் வெங்கடேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக் கின்றனர். இந்த தகவலை பொன்ஜெஸ்லி சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ் பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் ஜார்ஜ் தெரிவித் துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளிடமிருந்து புதிய மனுக்கள் பெறப்பட்டு ஊனமுற்ற அளவீடு செய்து ஆய்வு செய்யப்பட்டது.
    • தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது.

    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தலின்படி மாற்றுத்திறனாளி களுக்கா ன சிறப்பு முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமையில் நடைபெற்றது. மருத்துவர்கள் சரவணன், ராஜ்குமார், சித்ராதேவி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும்வட்டார சுகாதார மேற்பார்வை யாளர் பாஸ்கரன்வரவேற்று பேசினார்.

    முகாமில் சிறப்பு விருந்தினர்களாக தனி வட்டாட்சியர் திருநாசுஜாதா, ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ், மற்றும் தஞ்சை மாற்று திறனாளிகள் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமில் மாற்றுத் திறனாளிகளிடம் புதிய மனுக்கள் பெறப்பட்டு ஊனமுற்ற அளவீடு செய்து ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்க ப்பட்டது. முகாமில் கபிஸ்தலம் அரசுஆரம்ப சுகாதார நிலைய மருத்து வர்கள், பணியாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அன்னப்பராஜா மேல்நிலைப்பள்ளியில் நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் நிலத்தடி நீர் விழிப்புணர்வு முகாம் அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பள்ளிச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ராஜா தலைமை தாங்கினார். பரமக்குடி நிலநீர் உப கோட்டத்தின் பொறியாளர் சந்திரன் முன்னிலை வகித்து ஜல் சக்தி அபியான் குறித்து பேசினார்.

    தலைமையாசிரியர் ரமேஷ் வரவேற்றார். ராம்கோ சிமெண்ட் தோட்டக்கலைப் பிரிவின் பொறியாளர் ஈஸ்வரன், ராம்கோ டெக்ஸ்டைல் மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் சுரேஷ்குமார், தன்னார்வ தொண்டு நிறுவனமான துளி அமைப்பின் தலைவர் ராம்குமார், விஷ்ணு ஆகியோரும் பேசினர். நிலத்தடி நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு காணொளிக் காட்சிகள் காண்பிக்கப்பட்டன. மாணவர்களுக்குவினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பிடம் பெற்றவர்களுக்குப் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு முகாமில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

    விருதுநகர் நீர்வளத்துறை நிலநீர்ப்பிரிவு அலுவலர் சந்திரமோகன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை தலைமையாசிரியர் உள்ளிட்ட சமூக அறிவியல் மன்ற ஆசிரியர்-ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    • செங்கோட்டை அருகே இலவச உடல்பரிசோதனை, இலவச கண்பரிசோதனை, பல் பரிசோதனை முகாம் நடந்தது.
    • முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனா்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை அருகே உள்ள வல்லம் நேஷனல் பப்ளிக் பள்ளி வளாகத்தில் வல்லம் ஷிபா மெடிக்கல், கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை, நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச உடல்பரிசோதனை, இலவச கண்பரிசோதனை, பல் பரிசோதனை முகாம் நடந்தது.

    முகாமில் கடையநல்லுார் கே.எம்.எஸ். மருத்துவமனை அறக்கட்டளை பொறுப்பாளா் அப்துல்ரஷீத் தலைமை தாங்கினார். தலைமை மருத்துவா் டாக்டா் முஹம்மதுபைசல், மகளிர் நல சிறப்பு மருத்துவா் டாக்டா் இஸ்மாயில்ஜாஸ்மின், பல் மருத்துவா் டாக்டா் மைதீன்அபுதாஹீா். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவா் டாக்டா் அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மருத்துவா்கள் தலைமையில் மருத்துவ குழுவினா் சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினா். முகாமில் கலந்து கொண்ட அனைத்து நபர்களுக்கும் கே.எம்.எஸ். மருத்துவமனையின் ஹெல்த் அட்டை வழங்கப்பட்டது.

    அதன் மூலம் கே.எம்.எஸ். மருத்துவமனையின் சிகிச்சை சர்வீஸ் அனைத்திலும் 25சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். முகாமில் வல்லம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை பெற்று சென்றனா். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி அப்துல்மஜீத் ஓருங்கிணைத்து செய்திருந்தார்.

    • நீர்நிலைகளில் தூய்மை பணி முகாம் நடந்தது.
    • பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து உறுதிமொழி வாசித்தார்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி பேரூராட்சியில் உள்ள ஒட்டன்குளம் மற்றும் நல்லா னூரணி பகுதிகளில் சிறப்பு துப்புரவு பணி முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் பால் பாண்டியன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து உறுதிமொழி வாசித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கிருஷ்ணவேணி, பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், கவுன்சிலர் பூமிநாதன் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர் கார்த்திக் வரவேற்றார். செயல் அலுவலர் சண்முகம், மேலாண்மை திட்ட பயிற்சியாளர் சிலம்பரசன் ஆகியோர் பேசினார்.

    சுகாதார பணியாளர்கள் ஒட்டாங்குளம், நல்லானூரணி பகுதி மற்றும் குளத்தில் வளர்ந்திருந்த செடி, கொடிகள், பாலீதின் பைகளை அகற்றி துப்புரவு பணிசெய்தனர். அதன்பின் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்து கொடுப்பது பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்து மஞ்சள் பைகளை வழங்கினர்.

    மகளிர் சுய உதவிக் குழுக்கள் ''எனது குப்பை எனது பொறுப்பு, நம் தூய்மை நகரத்தூய்மை'' என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சுகாதார பணி மேற்பார் வையாளர் திலீபன் சக்ரவர்த்தி நன்றி கூறினார்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டது.
    • 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை பணி செய்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் இரண்டாம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் துவங்கப்பட்டு வார்டு 10 திருவள்ளுவர்சாலை (குமரன் நகர்) பகுதிகளில் பொதுசுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்கள் தூர்வார்தல், செடி, கொடி, முட்புதர்கள் அகற்றுதல், தெருக்களை சுத்தம் செய்தல், குடிநீர் பைப்லைன் பழுதுகள் சரி செய்தல், தெரு மின்விளக்குகள் மற்றும் மின் இணைப்புகள், மின்மோட்டார்கள் பராமரிப்பு செய்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட்டது. பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தூய்மைப் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 80-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து தூய்மை பணி செய்தனர்.

    2-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாமிற்கு பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். முகாமில் மன்ற உறுப்பினர்கள், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன் மற்றும் அலுவலக பணியாளர்கள், மகளிர் சுய உதவி குழுவினர், தன்னார்வலர்கள் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கோபாலபுரத்தில் மக்கள்தொடர்பு முகாம் நடந்தது.
    • 361 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியம் செங்கப்படை அடுத்துள்ள எஸ்.கோபாலபுரத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேலு தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை 361 பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கள்ளிக்குடி வருவாய்த்துறை உள்ளிட்ட 14 அரசுதுறைகளின் சார்பில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. இந்த முகாமில் 361 பயனாளிகளுக்கு சுமார் ரூ. 66 லட்சத்து 44 ஆயிரத்து 975 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட அலுவலர் சௌந்தரியா, கள்ளிக்குடி தாசில்தார் சுரேந்திரன், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் நீலாதேவி, வருவாய் ஆய்வாளர் குமார், வி.ஏ.ஓ. முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
    • முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் பேரூராட்சியில் இன்று கொரோனா தவணை தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனையடுத்து ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு சுகாதார மேற்பார்வையாளர் ரவி மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இந்த சிறப்பு ஊக்கு ஊக்குவிப்பு முகாமை பேரூராட்சி தலைவர் வகிதா பேகம் ஹாஜா தலைமையில் செயல் அலுவலர் ராம்பிரசாத் மற்றும் மருத்துவ அலுவலர் ராஜ்குமார் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டு நடைபெற்றது.

    இந்த முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் ரவி ,நெடுஞ்செழியன் சமுதாய சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதை எடுத்து பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசியினை போட்டு செல்கின்றனர்.

    ×