search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர், அது குறித்து புகார் மனுக்களை அளிக்க சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
    • காலை 10 மணி முதல் மாவட்ட எஸ்.பி மற்றும் அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களிடமும் பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை கொடுக்கலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டோர், அது குறித்து புகார் மனுக்களை அளிக்க சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மாவட்ட எஸ்.பி மற்றும் அனைத்து உட்கோட்ட டி.எஸ்.பி.க்களிடமும் பொதுமக்கள் நேரடியாக புகார் மனுக்களை கொடுக்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனுக்களின் மீது உடனடியாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • முகாமில் ஸ்கேனிங் இ.ஜி.சி., கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல், சுகர் மற்றும்உயர் ரத்தழுத்தம், கண் சிகிச்சை, சித்தா, ஹோமியாபதி, யுனானி உள்ளிட்டவைகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர்.
    • இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஊராட்சி அரசு நடுநிலைப்பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் பிரியா பெரியசாமி தலைமை தாங்கினார். ஒன்றிய ஆணையர்அன்பர சன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, சேர்மன் காமாட்சி மூர்த்திஆகியோர் முன்னிலை வகித்த னர். சுகாதார மேற்பார்வை யாளர் பாஸ்கர் வரவே ற்றார். ராஜ்குமார் எம்.எல்.ஏ. குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார்.

    முகாமில் ஸ்கேனிங் இ.ஜி.சி., கர்ப்பிணி பெண்களு க்கான பரிசோதனை, புற்றுநோய் கண்டறிதல், சுகர் மற்றும்உயர் ரத்தழுத்தம், கண் சிகிச்சை, சித்தா, ஹோமியாபதி, யுனானி உள்ளிட்டவைகள் மூலம் நோய்களைக் கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் வட்டார மருத்துவர் பிரபா, மருத்துவர்கள் கிளின்டன், செந்தில், சுகாதார ஆய்வாளர் மலர்கொடி, தி.மு.க ஒன்றிய செயலாளர் ஞான இமயநாதன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நிகழ்ச்சியின் முடிவில் ஊராட்சி செயலர் ரஜினி நன்றி கூறினார்.

    • ஏற்றுமதி-இறக்குமதி தொடர்பான இலவச பயிற்சி முகாம் 5 நாட்கள் நடக்கிறது.
    • பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிறு, குறு, நடுத்தர தொழிலில் நிறுவனங்களின் வளர்ச்சி அலுவலகத்தின் சார்பில் ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகள் மற்றும் ஆவணங்கள் பற்றி 5 நாட்கள் மேலாண்மை மேம்பாட்டு திட்டம் குறித்து சிவகங்கை அருகே உள்ள முத்துப்பட்டியில் இயங்கி கொண்டிருக்கும் நறுமண பூங்கா ( ஸ்பீசிஸ் பார்க்) அலுவலகத்தில் வருகிற 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெற இருக்கிறது.

    தொழில் முனைவோ ருக்கான சான்றிதழ் (உத்யம்) பெற்றுள்ளவர்கள் மற்றும் ஏற்றுமதி தொழிலில் விருப்பமுடைய குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்த நிகழ்வில் இலவசமாக பங்கேற்று பயனடையலாம். பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்ய வேண்டும்.

    பதிவு செய்ய விரும்புப வர்கள் புகைப்படம், தொழில் முனைவோருக்கான சான்றிதழ், ஆதார் அட்டை ஆகிய ஆவணங்களுடன் எண்:11, கோ.புதூர் சிட்கோ தொழிற்பேட்டையில் இயங்கிக் கொண்டிருக்கும் MSME-DFO மதுரை கிளையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து பதிந்து கொள்ளலாம். முதலில் வரும் 25 பேருக்கே முன்னுரிமை வழங்க ப்படும்.

    இந்த 5 நாட்களில் ஏற்றுமதி, இறக்குமதி வழி முறைகள், ஆவண தேவைகள், ஏற்றுமதி மேம்பாட்டிற்காக கிடைக்கும் பல்வேறு அரசு சலுகைகள் பற்றிய தகவல் மற்றும் அதைப் பெறுவதற்கு தேவையான வழிமுறைகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சில்கள், ஏற்றுமதி மேம்பாட்டு அதிகாரி களுடன் ஆலோசனை, பேக்கேஜிங் ரூ லேபிளிங் சிக்கல்கள், சர்வதேச தரத்தின் தயாரிப்புக்களை எவ்வாறு உருவாக்குவது? ஏற்றுமதியாளர்களுக்கு தேவையான சட்டஉதவிகள் போன்றவை குறித்து விளக்கமாக பயிற்சி வழங்கப்படும்.

    பயிற்சியில் பங்கேற்ப வர்களுக்கு வங்கிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி சிவகங்கை மாவட்டத்தில் உற்பத்தியாகும் பொருட்க ளை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யப்படும். பயிற்சியில் கலந்து கொள்ப வர்களுக்கு மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும்.

    நேரில் வர இயலாதவர்கள் மேற்கண்ட ஆணை விவரங்களை கைபேசி வாட்ஸ் அப் வழியாக உதவி இயக்குநர் MSME-DFO மதுரை, 98420 35441 எணணிற்கு தொடர்பு கொண்டு நிகழ்விற்கு பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.

    • 1,677 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது
    • 2,880 பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    கரூர்:

    கரூர் மாவட்டத்தில் 32-வது கொரோனா தடுப்பூசி முகாம் 1,677 மையங்களில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. கரூர் மாநகராட்சி குமரன் உயர்நிலைப்பள்ளி மற்றும் புகழூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவன பணியாளர் குடியிருப்பு பகுதிகளில் நடந்த கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் கூறுகையில், கரூர் மாவட்டத்தில் 12 -18 வயதுடையவர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் சதவீதம் குறைவாக உள்ளதால் அவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதால் இந்த வயதுடையவர்கள் இத்தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.

    இதில் துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) சந்தோஷ்குமார், மாநகராட்சி சுகாதார அலுவலர் லட் சியவர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 153 பேர் முதல் தவணையும், 12,718 பேர் 2-ம் தவணையும், 20,727 பேர் பூஸ்டர் தடுப்பூசி என மொத்தம் 33,598 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். ஆசிரியர்கள், அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்கள் தலா 960 பேர், செவிலியர்கள், சுயஉதவிக்குழுவினர் தலா 480 பேர் என மொத்தம் 2,880 பணியாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

    கரூர் மாவட்டத்தில் உள்ள 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 8,53,600 பேர் இதில் 8,12,088 பேர் என 95.14 சதவீதம் பேரும், 15,455 பேர் முதல் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
    • மக்களை பாதிக்கும் மின்சாரக் கட்டண உயர்வு என்ற தமிழக அரசின் அறிப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    இன்று ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். குமரி கிழக்கு மாவட்ட த.மா.கா. செயலாளர் டி.ஆர்.செல்வம் பொருளாளர் டாக்டர் சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழகம் முழுவதும் தற்போது தமிழக அரசு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இது மிகவும் கண்டிக்கதக்கது. கடந்த மூன்று, நான்கு வருடமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிறு தொழில், குறு தொழில்கள் எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் மிகவும் நசிந்து பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் வீட்டுவரி, சொத்துவரியை உயர்த்தியது. தொடர்ந்து ஏழை, எளிய மக்களை பாதிக்கும் மின்சாரக் கட்டண உயர்வு என்ற தமிழக அரசின் அறிப்பு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக உள்ளது. ஆட்சி பொறுப்பு ஏற்று ஒரு ஆண்டு நிறைவு செய்த தி.மு.க. அரசு ஏழை, எளிய மக்களை பாதிக்கின்ற அறிவிப்பினை உடனே திரும்ப பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாநகரத் தலைவர் சேகர் துணைத்தலைவர்கள் பொன் மாதவன்,செல்வி விலாஸ் குமார், வட்டாரத் தலைவர்கள் லீனஸ்,சேகர், நாஞ்சில் முருகன், அருள்,ரூபன் ,மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ் ,பிரபா, அஸ்வின் மற்றும் நிர்வாகிகள் வந்திருந்தனர்.

    • தூய்மை பணி முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார்.
    • முகாமில் சாலையோரம் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது.

    தென்காசி:

    பண்பொழி பேரூராட்சியில் சுகாதார மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது.முகாமிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் ராஜராஜன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் விமலா ஸ்டெல்லா பாய் முன்னிலை வகித்தார்.

    இளநிலை உதவியாளர் ஆறுமுகப்பாண்டியன், அனைவரையும் வரவேற்று பேசினார். தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் தலைப்பின் கீழ் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். சாலையோரம் 100 மரக்கன்றுகள் நடப்பட்டது. பண்பொழி பகுதியில் உள்ள கடப்ப குளத்தில் செடிகள் அகற்ற ப்பட்டது. நீர் நிலைகளுக்கு செல்லும் வாறுகால்கள் சுத்தம் செய்யப்பட்டது.

    இந்த முகாமில் பண்பொழி பேரூராட்சி மன்றத் துணைத்தலைவர் நாகலெட்சுமி, வார்டு உறுப்பினர்கள் மாரி, கணேஷ், ராஸியாத்பேகம் மஜித், ஜோதி சுப்பையா க்கண்ணு, பூமாரி காளிமுத்து, ஆறுமுகம், முகம்மது இஸ்மாயில் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் வரிவசூலர் சங்கர நாராயணன், அனைத்து பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் சமுதாய ஒருங்கிணைப்பாளர் சுந்தரி, சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று மட்டும் மாவட்டத்தில் 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
    • இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர். குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 4 -ம் அலையை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி இன்று மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் , அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் உள்பட 1,597 மையங்களில் காலை 7 மணிக்கு தடுப்பூசி முகாம் தொடங்கியது.

    12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதே போல் 18 வயதுக்கு மேற்பட்ட இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் கடந்தவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியும் போடப்பட்டது. இன்று மட்டும் மாவட்டத்தில்

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணியில் மாவட்டம் முழுவதும் 3,196 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    70 வாகனங்கள் முகாமிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சிரமம் இன்றி தடுப்பூசி எடுத்துக்கொள்ள பொதுமக்கள் அதிக கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செய்து கொண்டனர்.

    குறிப்பாக தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. இதனால் இன்று பூஸ்டர் தடுப்பூசியை ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டுக் கொண்டனர்.

    • மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்ட சிறப்பு முகாமை ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தொடங்கி வைத்தார்.
    • ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் தேதி வாரியாக மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்ட சிறப்பு முகாமை ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி தொடங்கி வைத்தார்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்கள் லோகநாதன், ஜெகன், முருகன், சிவகுமார், லலிதா, வனிதா ஆகியோர் முன்னிலையில் இந்த முகாம் தொடங்கியது. முகாம் காலை 9.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது.

    இதில் மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டது. ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 200-க்கும் அதிகமான மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

    • அன்சாரி நகர், கோட்டைவிளை பகுதியிலும் புதுமனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார்250 மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • சுய உதவி குழுக்கள் பொதுமக்களுக்கு தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கொள்கைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின்ப டியும் நெல்லை மண்டல பேரூராட்சி களின் உதவி இயக்குனர் வழிகாட்டுதல் படியும் உடன்குடி தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் நடவடிக்கையாக டி.டி.டி.ஏ. மேல்நிலை பள்ளி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், பேரூராட்சி தலைவர், மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பெண்கள் சுய உதவி குழு உறுப்பினர்கள் இணைந்து தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்னர் பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி புதுமனை அன்சாரி நகர் வரை பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடர்ந்து அன்சாரி நகர், கோட்டைவிளை பகுதியிலும் புதுமனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார்250 மரக்கன்றுகள் நடப்பட்டு பாதுகாப்பு வேலியும் அமைக்கப்பட்டது.

    புதுமனை வடக்கு தெரு மற்றும் மேலத்தெரு பகுதியில் பொது மக்களுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் முன்னிலையில் திட கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. அதனைத் தொடர்ந்து சுய உதவி குழுக்கள் இணைந்து சுல்தான்புரம் பகுதியில் பொதுமக்களுக்கு மக்கும் குப்பை , மக்காத குப்பை மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கொள்கைகளை விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ஹுமைரா அஸ்ஸாப் கல்லாசி, செயல் அலுவலர் பாபு, டி.டி.டி.ஏ. மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் டேனியல், கவுன்சிலர்கள் கம்மது ஆபித், சபானா தமீம், அன்புராணி, மும்தாஜ்சலீம், ராஜி , சிவா மற்றும் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் ரத்த அளவு உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டது.

    சாத்தான்குளம்:

    தமிழக அரசின் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் தூத்துக்குடி சுகாதார பணிகளின் பொற்செல்வன் உத்தரவின் பேரில் சாத்தான்குளம் அருகே ஆனந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பண்டாரபுரம் சத்தியநகரம் டி.என்.டி.டி.ஏ. நடுநிலைப்பள்ளியில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில் சுகாதார ஆய்வாளர் மந்திர ராஜன் வரவேற்று பேசினார்.

    வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஐலின் சுமதி திட்ட விளக்க உரையாற்றினார். சத்தியநகரம் சேகர குரு மர்காசிஸ் டேவிட் வெஸ்லி ஜெபம் செய்து முகாமை தொடங்கி வைத்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மோரிஸ் செல்வதுரை நன்றி கூறினார்.

    முகாமில் கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, சர்க்கரை நோய் பரிசோதனை, கொலஸ்டிரால் பரிசோதனை, கொரோனா சளி பரிசோதனை, கொரோனா தடுப்பூசி ரத்த அளவு பரிசோதனை செய்யப்பட்டது. 

    • நாமக்கல் மாவட்டத்தில் நாளை 32-வது கட்ட கொரோனா தடுப்பூசி மெகா முகாம் நடைபெற உள்ளது.
    • இதில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட ஏற்பாடு

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் 12 வயதிற்கு மேற்பட்டவர்க ளுக்கு 15 லட்சத்து 15 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 13 லட்சத்து 10 ஆயிரத்து 72 பேருக்கு முதல் தவணை தடுப்பூசி யும் 10 லட்சத்து 62 ஆயிரத்து 524 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டு உள்ளது. சதவீத அடிப்படையில் முதல் தவணை தடுப்பூசி 86.47 சதவீதம்பேரும், 2-ம் தவணை தடுப்பூசி 70.13 சதவீதம் பேரும் போட்டுள்ளனர்.

    இன்னும் 2 லட்சத்து 4 ஆயிரத்து 928 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும்ம், 2 லட்சத்து 47 ஆயிரத்து 548 பேருக்கு 2-ம் தவணை தடுப்பூசியும் போடப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை நடந்த 31 மாபெரும் தடுப்பூசி முகாம்களில் 8,93,463 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர். அதேபோல் நாளை( ஞாயிற்றுக்கிழமை) 32-ம் கட்டமாக 2766 முகாம்கள் மூலமாக காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை கொரோனாநோய் "சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்" நடைபெற உள்ளது. இம்முகாம் பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1,600 அங்கன்வாடி பணியாளர்கள், 1,400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1,400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.சுமார் 1 லட்சம் தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த முகாமில் அந்தந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் முழுமையாக பங்கேற்று இதுவரை ஒரு தவணை தடுப்பூசிகூட போடாதவர்களும் முதல் தவணை தடுப்பூசி போட்டு முடித்து 2-ம் தவணைக்காக நிலுவையில் உள்ளவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஊக்குவிப்பு தடுப்பூசியாக 3-ம் தவணை தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் கேட்டுக்கொண்டுள்ளார். 

    • முகாமிற்கு நாகை மாவட்ட தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) கிரிஜாதேவி தலைமை தாங்கினார்.
    • வருவாய் ஆய்வாளர் ஜீவா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் திருப்பயத்தங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பில்லாளி, திருப்பயத்தங்குடி, கீழத்தஞ்சாவூர், கீழப்புதனூர், காரையூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கான மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நாகை மாவட்ட தனி தாசில்தார் (தேர்தல் பிரிவு) கிரிஜாதேவி தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ஜீவா, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரூர் மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கை மனுக்கள் அளித்தனர். மொத்தம் 269 மனுக்கள் அளிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேவி சகாயராஜ், பாண்டியன் சத்யமூர்த்தி, தமிழரசி கணேசன், கலாராணி உத்திராபதி, உள்ளாட்சி பிரதிநிதி லீலாவதி பிரபாகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×