search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
    • இந்த முகாமில் மருத்துவர் சாக்க்ஷி குமார் நோயாளிகளை பரிசோதனை செய்து கண் கண்ணாடி வழங்கினார்.

     அலங்காநல்லூர்

    பாலமேட்டில் உள்ள தனியார் மகாலில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவர் சாக்க்ஷி குமார் நோயாளிகளை பரிசோதனை செய்து கண் கண்ணாடி வழங்கினார். முகாம் ஏற்பாடுகளை அரவிந்த் கண் மருத்து வமனை முகாம் ஒருங்கி ணைப்பாளர் முருகேசன், தானம் அறக்கட்டளையின் கிராமப்புற மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்தையா மற்றும் பாலமேடு வட்டார களஞ்சிய ஒருங்கி ணைப்பாளர் வள்ளி ஆகியோர் செய்திருந்தனர்.

    முகாமிற்கான பணிகளை பாலமேடு வட்டார களஞ்சிய தலைவிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து செய்தனர். இந்த முகாமில் சுமார் 230க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

    • விவசாய மின்நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
    • காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நாளை (செவ்வாய்கிழமை) ஆலங்குடி கோட்டத்திற்குட்பட்ட விவசாய மின் நுகர்வோருக்கான குறைதீர்க்கும் முகாம் ஆலங்குடி தபால் நிலைம் அருகில் உள்ள உதவி செயற்பொறியாளர் ஆலங்குடி அலுவலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் இப்பகுதியை சேர்ந்த அனைத்து விவசாயிகளும் கலந்து கொண்டு. தங்களுக்குரிய பிரச்சனைகளை கூறி அவற்றை நிறைவு செய்து கொள்ளலாம். இந்த வாய்ப்பை விவசாயிகள் பயன்படுத்தி தங்களது குறைகளை நேரில் பகிர்ந்து கொள்ள கேட்டு க்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

    • பட்டியல் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சட்ட விழிப்புணர்வு அறிக்கை பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்.
    • ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்தனர்.

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான மதுசூதனன் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுதா உத்தரவு படியும் பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவரும், மாவட்ட உரிமையியல்

    நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான அப்துல் கனி வழிகாட்டுதலின் படியும் ஒன்பத்து வேலி, நாகலூர், இடையிருப்பு ஆகிய கிராமங்களில் பொதுமக்கள் மற்றும் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மக்களுக்கான சட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

    முகாமில் பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவின் தன்னார்வ சட்ட பணியாளர் தனசேகரன், வட்ட சட்ட பணிகள் குழுவின் செயல்பாடுகள் பற்றியும் சிவில் வழக்குகள், குடும்ப பிரச்சினைகள், வங்கிக்கடன் தொடர்பான பிரச்சனைகள், கொடுக்கல் வாங்கல் பிரச்சினைகள், தொழிலாளர்களுக்கான பிரச்சனைகள் ஆகியதற்கு வட்ட சட்ட பணிகள் குழுவின் மூலம் நீதிமன்றம் முறையல்லாமல் மாற்றும் முறையில் தீர்வு காண்பது பற்றி விளக்கமாக கூறினார்.

    பட்டியல் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் சட்ட விழிப்புணர்வு அறிக்கை பற்றிய துண்டு பிரசுரத்தை பொதுமக்களுக்கு வழங்கினார். ஏற்பாடுகளை பாபநாசம் வட்ட சட்ட பணிகள் குழுவினர் செய்தனர்.

    • மதுரை மாநகராட்சி 2-வது மண்டலத்தில் குறைதீர்க்கும் முகாம் நாளை மறுநாள் நடக்கிறது.
    • மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள்.

    மதுரை

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.

    அதன்படி வருகிற 19-ந் தேதி(செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் 2-வது அலுவலகத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.

    மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜித்சிங் காலோன் ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இதில் 2-வ மண்டலத்திற்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவஹர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனேரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம்.

    சின்னசொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், 5 பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.

    • ரத்ததான முகாமிற்கு ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர்.
    • சிறப்பு அழைப்பாளராக ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் கலந்து கொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜீவ அனுக்கிரக பொதுநல அறக்கட்டளை சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு நிறுவனர் ராஜேந்திரன் தலைமை தாங்கினர். நகர்மன்ற உறுப்பினர்கள் லவராஜா சண்முகவேல் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் கமல வாசன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ரத்ததான முகாமை ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன் தொடங்கி வைத்து ரத்த தானம் செய்தவர்களை வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் அமளி பிரகாஷ், மகேஷ், கேசவன், சந்திரசேகர், மருத்துவர் தேவசேனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறுவன ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • ஊராட்சி முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் இருந்து வருகின்றன.
    • மேற்கண்ட குப்பை தொட்டிகளை மாதம் ஒருமுறை அகற்றி தூய்மைப்படுத்துவது வழக்கமாகும்.

     திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு ஊராட்சியில் குப்பைத்தொட்டியில் தங்கி உள்ள குப்பைகளை வாடகை டிராக்டர் மற்றும் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு குப்பைகளை அகற்றும் பணி ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

    ஊராட்சி முழுவதும் சுமார் 20-க்கும் மேற்பட்ட குப்பை தொட்டிகள் இருந்து வருகின்றன. மேற்கண்ட குப்பை தொட்டிகளை மாதம் ஒருமுறை அகற்றி தூய்மைப்படுத்துவது வழக்கமாகும்.

    அதுபோல் இம்மாதமும் குப்பைகளை அகற்றி தூய்மைப் படுத்தப்பட்டு ள்ளது ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில் பொதுமக்கள் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பைகளாக தரம் பிரித்து கொடுக்கவும் சிலர் குப்பைகளை சாலை ஓரங்களில் வீசுவதும் நீர் நிலைகளின் கரைகளில் நீர்நிலைகளில் கொட்டுவது வாடிக்கையாக உள்ளது

    இதை தவிர்க்க வேண்டும். கடைக்கு செல்பவர்கள் கேரிப்பையில் பொருட்கள் வாங்காமல் வர கேட்டு க்கொள்ளப்படுவதோடு வணிக நிறுவனங்களுக்கு செல்லும்போது துணிப்பை எடுத்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார்

    நிகழ்ச்சியில் துணைத்தலைவர் பாக்கியராஜ், செயலர் புவனேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள் கல்வியாளர் மற்றும் சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

    • போலீஸ் அலுவலகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது.
    • 11 மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நேற்று முன்தினம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். முகாமில் பெறப்பட்ட 11 மனுக்களின் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு மணி கூறுகையில், இனி வரும் காலங்களில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் மாவட்ட போலீஸ் அலுவலக வளாகத்தில் சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

    • மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் உடன்குடி ஒன்றியத்தில் 14 இடங்களில் மக்கள் குழு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
    • திட்டத்தின் பயன்கள், மக்களின் சுகாதாரம், அவசர முதல் உதவிகள், முதியோர் பயன்பெறும் விதம் குறித்து மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் பேசினார்.

    உடன்குடி:

    தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறையின் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் உடன்குடி ஒன்றியத்தில் 14 இடங்களில் மக்கள் குழு சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.

    மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் தலைமை தாங்கி மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் பயன்கள், மக்களின் சுகாதாரம், அவசர முதல் உதவிகள், முதியோர் பயன்பெறும் விதம் குறித்து பேசினார்.உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மால்ராஜேஷ் முன்னிலை வகித்தார்.வட்டார செவிலியர்கள் பேச்சியம்மாள், மணிமேகலை, உடன்குடி வட்டார தி.மு.க. வர்த்தக அணி அமைப்பாளர் ராஜேந்திரன், நகர மகளிரணி அமைப்பாளர் தேவி, உடன்குடிவட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஜெயராமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.
    • கடன் விண்ணப்பங்களை கே.சிகருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் நகர கூட்டுறவு வங்கிகள் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் என். கிருஷ்ணராஜ் தலைமையில் நடந்தது. முன்னதாக கிளை மேலாளர் வேலுமணி வரவேற்றார்.

    கடன் விண்ணப்பங்களை  கே.சி.கருப்பண்ணன் எம்.எல்.ஏ. 30-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பவானி யூனியன் சேர்மன் பூங்கோதை, கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பாவா தங்கமணி, மேலாளர்கள் லோகமுத்து, தர்மலிங்கம், கவுந்தி டெக்ஸ் மேலாளர் தண்டபாணி, டாக்டர் மனோகரன், ஜான், தட்சிணாமூர்த்தி, ஜெகதீஷ், ஆறுமுகம், வார்டு கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் மேற்பார்வையாளர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம் ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.
    • இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் உதவித்தொகை வழங்கும் முகாம், ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்துறை கிளையில் நடைபெற்றது.

    கிளை மேலாளர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    முகாமில் சிறப்பு அழைப்பாளராக பெருந்துறை ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு கடன் உதவி தொகை மற்றும் உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் அப்புகுட்டி (எ) வெங்கடாஜலபதி, பெருந்துறை பேரூராட்சி கவுன்சிலர் அருணாச்சலம், கல்யாணசுந்தரம், மாவட்ட பொருளாளர் மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மண்ணிலுள்ள சத்து குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு உரமிடுதல் மூலம் உரச்செலவினை குறைக்க முடியும்.
    • மண் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை வாகனத்திற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர் .

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு வட்டார வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் காடந்தேத்தி கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை தாங்கினார் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் முன்னிலை வகித்தார்

    முகாமில்மண்ணி லுள்ள சத்து குறைபாடு களை கண்ட றிந்து அதற்கு ஏற்றவாறு உரமிடுதல் மூலம் உரச் செலவினை குறைக்க முடியும் எனவும் மண் பரிசோதனைக்கு எடுக்கும் முறைகள் பற்றி அதன் அவசியம் குறித்தும் வேளாண் அலுவலர் சுதா செயல்விளக்கம் செய்து காண்பித்தார் விவசாயிகள் தங்கள் வயல்களில் சேகரித்த மண் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை வாகனத்திற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவ லர்களிடம் ஒப்படைத்தனர் . உடனடியாகவாகனத்தி லேயே மண் பரிசோதனை செய்து விவசாயி களுக்கு முடிவுகள் தெரிவி க்கப்பட்டது. இந்த முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அமிர்தராஜ், ரவிச்சந்திரன் , விதை அலுவலர்கள் ரவி, ஜீவா ஆகியோர் செய்து இருந்தனர்.

    • மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி உள்வட்டம், கண்டியூர் கிராமத்தில் நாளை (13-ந் தேதி) நடைபெற இருந்த மக்கள் தொடர்பு முகாம் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

    இதில் அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.

    எனவே கண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    ×