search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • முகாமில் குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம் தொடர்பாக 316 மனுக்கள் பெறப்பட்டன.
    • அதில் 235 மனுக்களுக்கு உடனே அந்த முகாமிலே தீர்வு பெற்று பொதுமக்கள் பயனடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, செம்பனார்கோயில் ஒன்றியம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை ஒவ்வொரு வட்டத்திலும் ஏதேனும் ஒரு கிராமத்தில் மக்கள் குறைதீர் முகாம் நடத்தி, பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்திட உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை ஆணையரால் ஆணையிடப்பட்டது.

    அதன்படி மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா, மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் ஆகியோர் உத்தரவின் பேரில் தரங்கம்பாடி தாலுகாவுக்கு உட்பட்ட செம்பனார்கோயில் அருகே ஆறுபாதி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் தமிழரசி கலியபெருமாள் தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் பாபு, ஒன்றிய கவுன்சிலர் முத்துலட்சுமி ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் ஊராட்சிக்கு உட்பட்ட விளநகர், ஆறுபாதி, பால வெளி, மேட்டிருப்பு உள்ளி ட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், பெயர் திருத்தம், பிறந்தநாள் தேதி மாற்றம், செல்போன் எண் மாற்றம், முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் மற்றும் அட்டை வகை மாற்றம் ஆகியவை தொடர்பாக 316 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 235 மனுக்களுக்கு உடனே அந்த முகாமிலே தீர்வு பெற்று பொதுமக்கள் பயனடைந்தனர். மீதமுள்ள 81 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. முகாமில் 2 நபர்களுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டையும்,

    அட்டை வகை மாற்றம் தொடர்பான மனுக்களை வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை செய்திட அனுப்பி வைக்கப்பட்டும், மற்ற கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றம் செய்யவும் வட்ட வழங்கல் அலுவலர் பாபு ஒப்புதல் ஆணை வழங்கினார்.

    இதில் தனி வருவாய் ஆய்வாளர் மரிய ஜோசப்ராஜ், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராஜ், வட்ட பொறியாளர் ஐயப்பன், வட்ட கண்காணிப்பு குழு உறுப்பினர்சகாய ராஜ், அங்காடி விற்பனை யாளர்கள் முத்து, ஜெகதீ சன் மற்றும் கிராம முக்கிய ஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆலங்குடியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது
    • ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    தமிழகம் முழுவதும் 1 லட்சம் இடங்களில் 31-வது சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதா நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள், ஊராட்சி, நகராட்சி அலுவலகங்கள், பேருந்து, ரெயில் நிலையங்கள், பூங்காக்கள் என மக்கள் அதிகம் கூடும் அனைத்து இடங்களிலும் முகாம்கள் நடத்தப்பட்டன. அதன்படி புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் புனித அற்புத மாதா நடுநிலைப் பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய நடநிலைப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இதில் ஆலங்குடி சுகாதார ஆய்வாளர் ஜேம்ஸ், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்


    • தினமும் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது
    • 2100 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

    குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான குருந்தன் கோடு, முஞ்சிறை ஒன்றியத்தில் பலரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். இதைத் தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை உள்பட மாவட்டம் முழுவதும் பாதிப்பு அதிக ரித்தது.பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து கொரோனா சோதனையை தீவிர படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் தினமும் கொரோனா பாதிப்பு உள்ள பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    நேற்று மாவட்டம் முழுவதும் 371 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 47 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாதிக்க ப்பட்டதில் 19 பேர் ஆண்கள் 28 பேர் பெண்கள் ஆவார்கள். கடந்த ஜனவரி மாதம் முதல் இன்று வரை 20 ஆயிரத்து 822 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து தடுப்பூசி முகாமை தீவிர படுத்த நடவடிக்கை எடுக்க ப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடந்தது.

    2100 இடங்களில் நடந்த மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது. குறிப்பாக கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள குருந்தன் கோடு, முன்சிறை, ஒன்றி யங்களில் தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத் துறை அதிகாரிகள் முடுக்கி விட்டனர்.

    இதையடுத்து அங்கு அதிகமான இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குருந்தன்கோடு ஒன்றி யத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 232 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு ள்ளது.

    முன்சிறை ஒன்றியத்தில் 5 ஆயிரத்து 742 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதேபோல் தோவாளை ஒன்றியத்தில் 2,217 பேருக்கும், அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் 3 ஆயிரத்து 27 பேருக்கும், ராஜாக்கமங்கலம் ஒன்றிய த்தில் 3,812 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டது.

    கிள்ளியூர் ஒன்றியத்தில் 2248 பேருக்கும், மேல்புறம் ஒன்றியத்தில் 3590 பேருக்கும், திருவட்டார் ஒன்றியத்தில் 3,261 பேருக்கும், தக்கலை ஒன்றியத்தில் 4572 பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது .

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் 2475 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதே போல் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் 172 பேருக்கும், குலசேகரம் ஆஸ்பத்திரியில் 13 பேருக்கும், குளச்சல் ஆஸ்பத்திரியில் 10 பேருக்கும், கருங்கல் ஆஸ்பத்திரியில் 11 பேருக்கும், சேனவிளை ஆஸ்பத்திரியில் 15 பேருக்கும், கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரியில் 6 பேருக்கும் தடுப்பூசி செலுத்த ப்பட்டுள்ளது.

    நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் 36,403 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ெமகா தடுப்பூசி முகாமில் பூஸ்டர் தடுப்பூசியை அதிகமானோர் செலுத்தியுள்ளனர். 16,831 பேருக்கு நேற்று ஒரே நாளில் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.

    மேலும் 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 7587 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட வர்களில் 7557 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட வர்கள் 36 27 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார பகுதிகளில் மொத்தம் 128 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
    • வெள்ளகோவிலில் 2 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் மொத்தம் 128 இடங்களில் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு, 2ம் தவணை கொரோனா தடுப்பு ஊசியும், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2ம் தவணை கொரோனா தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    நேற்று முன்தினம் வரை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 6 ஆயிரத்து266 நபர்களுக்கும், 2ம் தவணை கொரோனா தடுப்பூசி 5 ஆயிரத்து 41 நபர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 75 ஆயிரத்து 166 நபர்களுக்கும், 2ம் தவணை கொரோனா தடுப்பூசி 64 ஆயிரத்து 319 நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி 1 ஆயிரத்து 209 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் மற்றும் மருத்துவ குழுவினர் மூலம் 2 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    • 3,400 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்களின் வருகையை பொறுத்து இன்று இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் .

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே நோய் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் இன்று 31-வது மெகா தடுப்பு ஊசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கியது. மதுரையில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் முகாம் நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

    மதுரை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 2,415 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இங்கு 1,055 சுகாதார ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர பகுதிகளில் உள்ள 1,000 மையங்களில், 600 ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 3,415 மையங்களில், 1,655 பணி யாளர்கள் மூலம் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் கூறுகையில், "பொதுமக்களின் வருகையை பொறுத்து இன்று இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    மதுரை மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த 4 லட்சத்து 1707 பேர் தகுதி உடையவர்கள் ஆவர். இதில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 740 பேர் மாவட்டத்திலும், 2 லட்சத்து 35 ஆயிரத்து 967 பேர் மாநகர பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 859 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அவர்கள் பூஸ்டர் ஊசி போட தகுதியானவர்களாக உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் இன்று நடந்து வரும் 31-வது சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ள, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கூட்டமான இடங்களில் சமூக இடைவேளி கடைபிடித்தல், முககவசம் அணிதல் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

    • தேவகோட்டை வட்டத்தில் வருகிற 13-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
    • தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி உள்வட்டம், கண்டியூர் கிராமத்தில் வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். எனவே, கண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்க சிறுவர்கள் விண்ணப்பிக்கலாம் என மதுரை கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • ஜூன் 1-ந் தேதி முதல் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஞாற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது.

    மதுரை, ஜூலை.9-

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் கலைபண்பாட்டு துறையின் கீழ் சவகர் சிறுவர் மன்றங்கள் செயல்பட்டு வருகிறது.

    5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் இருபாலருக்கும் பள்ளி கல்வி தவிர ஏதேனும் ஒரு கலையை கற்றுக் கொள்ளும் வகையில் கலை ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் நோக்கத்தில் சவகர் சிறுவர் மன்றத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது

    மதுரை மாவட்டத்தில் மாவட்ட மையம் (கலைபண்பாட்டு மையம், பாரதி உலா சாலை, கோ.புதூர்) விரிவாக்க மையம் (பி.டி.ராஜன் சாலை உழவர் சந்தை எதிரில் உள்ள மதுரை மாநகராட்சி பாண்டியன் நெடுஞ்செழியன் மேல்நிலைப்பள்ளி) ஊரக மையம் (ஊராட்சி தொடக்கப்பள்ளி ஒத்தக்கடை) ஆகிய 3 மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையங்களில் குரலிசை, பரதம், ஓவியம், சிலம்பம், கீபோர்டு, நாட்டுப்புற நடனம் ஆகிய கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

    பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக ஜூன் 1-ந் தேதி முதல் சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் ஞாற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும் கலைப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேர பதிவு கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும்.

    வேறு எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை இந்த கட்டணம் ஜூன் மாதம் முதல் மார்ச் வரைக்கும் உள்ளதாகும்.

    இதில் உறுப்பினராகி பயிற்சி பெறும் சிறுவர்களுக்கு மாவட்ட, மாநில, தேசிய அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்கவும், குளிர்கால- கோடைகால பயிற்சி முகாம்கள், செயல்முறை பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

    இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 0452-2566420 மற்றும் 98425 ௯௬௫௬௩ என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வில்லிபாளையம் கிராமத்தில் சிறப்பு நடமாடும் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
    • பரமத்திவேலூர் கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா வில்லிபாளையம் கிராமத்தில் சிறப்பு நடமாடும் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டம், பரமத்தி வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள வில்லிபாளையம் கிராமத்தில் சிறப்பு நடமாடும் மண் ஆய்வு விழிப்புணர்வு முகாம் நடைப்பெற்றது. முகாமில் விவசாயிகளிடமிருந்து மண் மாதிரி மற்றும் நீர் மாதிரிகளை பெற்று பரமத்தி வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி முகாமினை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

    நடப்பாண்டில் பரமத்தி வட்டாரத்தில் நல்லூர், இருட்டணை, வில்லிபாளையம், பிள்ளைகளத்தூர் ஆகிய கிராமங்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன. திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் கட்ட முறையில் மண் மாதிரிகள் இறவைப்பாசன நிலங்களிலிருந்து 2.5 எக்டருக்கு ஒரு மண் மாதிரியும் மானாவாரி நிலங்களில் 10 ஏக்கருக்கு ஒரு மண்மாதிரியும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

    ஆகவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் இருந்து மண் மாதிரிகளை சேகரித்து அந்தந்த பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களிடம் வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாமக்கல் தரக்கட்டுப்பாடு, வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்திட வந்த விவசாயிகளுக்கு அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார். முகாமில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு மண் மற்றும் நீர் மாதிரிகளை வழங்கி ஆய்வு செய்து ஆய்வு முடிவுகளை அன்றைய தினமே பெற்றனர்.

    விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட மண் மற்றும் நீர் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர்கள் சவுந்தர்ராஜன், அன்புசெல்வி, அருள்ராணி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ஜெயமணி ஆகியோர் ஆய்வு செய்து அதன் முடிவுகளை மண்வள அட்டையாக வழங்கினர். முகாம் ஏற்பாடுகளை பரமத்தி வட்டார வேளாண்மை அலுவலர் பாபு மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் ரகுபதி செய்திருந்தனர்.

    • விருதுநகரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்திருந்த நிலையில் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டிநாளை (10-ந் தேதி) சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அன்று சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். 

    • 3400 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் 10-ந் தேதி நடக்கிறது
    • றப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (10-ந்தேதி) 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இது மதுரையில் உள்ள வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது. இங்கு முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

    மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 2415 மையங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இங்கு 1055 ஊழியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.மாநகர பகுதிகளில் உள்ள 1000 மையங்களில், 600 ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 3415 மையங்களில், 1655 பணியாளர்கள் மூலம் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த 4 லட்சத்து 1707 தகுதி உடையவர்கள். இதில் மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 740 பேரும், மாநகர பகுதிகளில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 967 பேரும் வசித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் 1லட்சத்து 90 ஆயிரத்து 859 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி, பூஸ்டர் ஊசி போட தகுதியானவர்களாக உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் 10-ந் தேதி நடைபெற உள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கூட்டமான இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல், முககவசம் அணிதல் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    • குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு குறைதீர் நாள் முகாம் நாளை (9-ந்தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • நாமக்கல், ராசிபுரம், மோகனூர், குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

    நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளில், பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், கைபேசி எண் பதிவு, புதிய குடும்ப அட்டை கோருதல், மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளவும், பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டும் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம் வரும் நாளை (9-ந்தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.

    நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.

    எனவே, பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பொது விநியோகத்திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் - 2019 தொடர்பான தங்கள் குறைகளை தீர்வு செய்து கொள்வதற்கு இம்முகாமினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், முகாமில் கொரோனா முன்னெச்சரிக்கை அறிவுரைகளை தவறாமல் கடைபிடிக்குமாறும், அதாவது முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி பயன்படுத்துதலை கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள் ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் பல ஆண்டுகளாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. 9-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வியுற்றவருக்கு மாதம் ரூ.200-ம், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300-ம், பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400-ம், பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600- வீதம், 3 ஆண்டிற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் பதிவுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவராக இருக்க வேண்டும். தொடர்ந்து பதிவினை புதுப்பித்து இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோர் 40 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    அன்றாடம் கல்வி நிறுவனங்களுக்குச் சென்று பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட மாட்டாது. எனினும், தொலைதூரக் கல்வி அல்லது அஞ்சல் வழி மூலம் கல்வி கற்பவர்கள் உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். இந்த உதவித்தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.

    மேலும் மாற்றுத்தி றனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வரை உதவித் தொகை வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டுகள் நிறைவு பெற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை கோரி விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் படித்தவர்களுக்கு மாதம் ரூ.600 வீதமும் பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750-ம், பட்டதாரிகளுக்கு ரூ.1000-மும் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த உதவித் தொகை பெறுவதற்கு மேற்காணும் தகுதிகள் உள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் சென்று இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.உதவித்தொகை கோரும் விண்ணப்பத்தினை பயன்தாரர்கள் https://tnvelaivaaippu.gov.in அல்லது www.tnvelaivaaippu.gov.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்தும் விண்ணப்பிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×