search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223237"

    • முதன்மை அமர்வு நீதிபதி தொடங்கி வைத்தார்
    • 62 பேர் ரத்ததானம் கொடுத்தனர்

    கரூர்,

    கரூர் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில், கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், ரத்த தான முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் ரத்த தான முகாமை, தொடங்கி வைத்தார். தொடர்ந்து, நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 62 பேர் ரத்த தானம் செய்தனர். முகாமில், முதன்மை சார்பு நீதிபதி பாரதி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம், கூடுதல் சார்பு நீதிபதி மகேந்திரவர்மா, உரிமையியல் நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி, சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் பாக்கியம் உள்பட பலர் பங்கேற்றனர்.

    • எந்தவித கட்டணமும் இல்லாமல் எவ்வாறு தங்களது வழக்கிற்கு வக்கீல்களை நியமிப்பது.
    • பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் குறித்து பேசினார்.

    கும்பகோணம் தாலுகா, அண்ணலக்ரஹாரம் ஊராட்சி, அரியத்திடல் கிராமத்தில் குடும்ப தலைவிகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் கும்பகோணம் வட்ட சட்ட பணிகள் குழு தலைவரும், தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவருமான சண்முகப்பிரியா வழிகாட்டுதல்படி நடைபெற்றது.

    முன்னதாக வட்ட சட்ட பணிகள் குழு வக்கீல் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். முகாமில் தஞ்சை மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஜெசிந்தா மார்ட்டின் கலந்து கொண்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்ட பணிகள் குழுவின் சேவைகள் குறித்த பிரசுரங்கள், சட்ட உதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை வழங்கி, எந்தவித கட்டணமும் இல்லாமல் எவ்வாறு தங்களது வழக்கிற்கு வக்கீல்களை நியமிப்பது என்றும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

    தஞ்சை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு சட்டங்கள் குறித்து பேசினார். முன்னதாக நீதிபதிகள், பஞ்சாயத்து தலைவர் மற்றும் உறுப்பினர்கள் வளாகத்தின் அருகே மரக்கன்றுகள் நட்டனர்.

    முகாமில் தலைவர் பிரேமா ராமச்சந்திரன், துணை தலைவர் சங்கர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வட்ட சட்ட பணிகள் குழுவின் சட்ட தன்னார்வலர்கள் ராஜேந்திரன் நன்றி உரையாற்றினார். முகாம் ஏற்பாடுகளை குணசீலன் செய்திருந்தனர்.

    • தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
    • வருகின்ற 29-ந் தேதி நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமம், பெரம்பலூர் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 29-ந் தேதி அன்று பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழும வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்ஆர்எப் நிறுவனம் உட்பட சென்னை, காஞ்சிபுரம், ஓசூர்,கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை பகுதிகளில் அமைந்துள்ள 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியான நபர்களை தங்களது நிறுவனங்களுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.

    இந்த முகாமில் தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர் மற்றும் குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல்கள் மற்றும் சுயதொழில் மற்றும் அரசு கடன் உதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்படவுள்ளது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலை நாடுநர்கள் தங்களது ஆதார் எண், பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் வரும் 29-ந் தேதி (சனிக்கிழமை) காலை 8.00 முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login –ல் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு அனுமதி இலவசம் என மாவட்ட கலெக்டர் க.கற்பகம் தெரிவித்துள்ளார் .

    • கரூர் மாவட்டம் வெள்ளப்பட்டியில் நாளை நடைபெறுகிறது
    • கலெக்டர் பிரபுசங்கர் தகவல்

    கரூர்,

    கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வெள்ளப்பட்டி கிராமம், மஜ்ரா வேலாயுதப்பாளையம் கிராமத்தில் நாளை (26-ந்தேதி, புதன்கிழமை) பிற்பகல் சுமார் 3 மணியளவில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு அரசுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு அவர்களது துறை சார்பான நலத்திட்ட உதவிகள் பற்றி பொதுமக்களுக்கு எடுத்துரைக்க உள்ளனர். மேலும் மருத்துவ முகாம், அரசுத்துறை சார்பாக கண்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன. எனவே, வெள்ளப்பட்டி கிராமம், மஜ்ரா வேலாயுதப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மேற்படி மனுநீதி நாள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • ஆதிதிராவிட மாணவ, மாணவியர்களுக்கான ஆலோசனை முகாம்
    • கரூர் கலெக்டர் பிரபு சங்கர் அழைப்பு

    கரூர்,

    ஆதிதிராவிடர் மாணவ, மாணவி யருக்கு தொழில், வேலைவாய்ப்பு வழிகாட்டும் ஆலோசனை முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், கரூர் மாவட்ட அரசு பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் ஆதிதிராவிடர் மாணவ, மாணவியரின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் வகையில், அவர்களுக்கு தொழில் வேலைவாய்ப்பு அதிகம் உள்ள படிப்புகள் மற்றும் அந்த படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள் குறித்து தன்னார்வ இயக்கத்தின் மூலம் வழிகாட்டும் ஆலோசனை முகாம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி கரூர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 25) கரூர் அரசு கூட்டரங்கில் ஆலோசனை முகாம் நடைபெறும். இதே போல குளித்தலை கோட்டத்துக்கு வரும் 26-ந்தேதி அய்யர்மலை அரசு கலை கல்லுாரி கூட்டரங்கிலும் முகாம் நடைபெற உள்ளது. இதில் ஆதி திராவிட மாணவ, மாணவியர் பங்கேற்று பயன்பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • பயிற்சியில் பங்கேற்கும்அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
    • கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது.

     திருப்பூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான இலவச கோடை கால பயிற்சி முகாம் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 1-ந்தேதி முதல் 15-ந் தேதி வரை காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்து பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது.

    பயிற்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும்.எனவே இந்த பயிற்சி முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் உயர்நிலை, மேல்நிலை, நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் கலந்துகொள்ளலாம். பயிற்சியில் பங்கேற்பவர்கள் தங்கள் பெயரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ, தொலைபேசி மூலமாகவோ முன்பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு நல அதிகாரியை 74017 03515 என்ற எண்ணிலும், தடகள பயிற்சியாளரை 88838 73814 என்ற எண்ணிலும், உதவியாளரை 97886 47557 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் 25-ந்தேதி தொடங்குகிறது.
    • நீச்சல் பயிற்றுநர் -9786523704 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், சிவகங்கை மாவட்டத்தின் சார்பில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற 25.4.2023 முதல் 4.6.2023 வரையிலான காலங்களில் நடைபெறவுள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. அனைவரும் இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக் கலாம்.

    இந்த திட்டத்திற்கான 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1,000 ஆகும். இந்த தொகையை phone pay, gpay, debit card மூலம் POS machine வழியில் செலுத்த முடியும். நீச்சல் கற்றுக்கொள்ளும் திட்டத்தின் கீழ் வரும் சிறுவர்கள் குறைந்தபட்ச உயரம் 4 அடி (120 செ.மீ) இருக்க வேண்டும்.

    நீச்சல் கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாம் முதற் கட்டமாக 25.4.2023 முதல் 7.5.2023 வரையிலும், இரண்டாம் கட்டமாக 9.5.2023 முதல் 21.5.2023 வரையிலும், மூன்றாம் கட்டமாக 23.5.2023 முதல் 4.6.2023 வரையிலும் நடைபெற உள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் பயிற்சி நேரம் காலை 7.30 மணி முதல் 8.30 வரை மற்றும் 8.30 மணி முதல் 9.30 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை ஆகும்.

    நீச்சல் கற்றுக்கொள்ளும் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் 12 நாட்களுக்கு ஒருவேளை (1 மணி நேரம்) பயிற்சிக்கான தொகை ரூ.1,000 (18% GST) via phone pay, gpay, debit card மூலம் POS machine வழியில் மட்டுமே செலுத்த வேண்டும். மேற்கண்ட விபரங்கள் தொடர்பாக மாவட்ட விளையாட்டு அரங்கம்-04575 299293, மாவட்ட விளையாட்டு அலுவலர்-74017 03503, நீச்சல் பயிற்றுநர் -9786523704 என்ற தொலை பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    மேலும் தகவலுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மானாமதுரை ரோடு, ஆர்.டி.எம். கல்லூரி அருகில், சிவகங்கை என்ற அலுவலக முகவரிக்கும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • ரெட் கிராஸ் வரலாறு, குறிக்கோள், தன்னார்வலர்களின் பங்கு குறித்து பேசினார்.
    • யூத் ரெட் கிராஸ் அமைப்பின் மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் மாணவர்களுக்கு ஆற்றுப்படுத்துதல் பயிற்சி முகாம் கல்லூரி முதல்வர் ராஜாவரதராஜா தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பின் தஞ்சை மாவட்ட கிளை மேலாண்மைக்குழு உறுப்பினர் ஜெயக்குமார் கலந்து கொண்டு ரெட் கிராஸ் வரலாறு, குறிக்கோள், தன்னார்வலர்களின் பங்கு குறித்து பேசினார்.

    இதில் கல்லூரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், நிதியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பயிற்சியில் யூத் ரெட் கிராஸ் அமைப்பின் மாணவர்கள் சுமார் 100 பேர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை கல்லூரியின் கணினி அறிவியல் துறை தலைவரும், யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலரும், மாவட்ட அமைப்பாளருமான பேராசிரியர் முருகானந்தம் செய்திருந்தார்.

    • பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் வருகிற 25-ந்தேதி நடக்கிறது.
    • மேயர் இந்திராணி தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியின் மக்கள் தொடர்பு அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு செவ்வாய்கிழமை தோறும் வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்ட லங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி வருகிற 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) சி.எம்.ஆர். ரோட்டில் உள்ள மதுரை மாநகராட்சியின் தெற்கு மண்டல அலுவல கத்தில் காலை 10 மணி முதல் 12.30 வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது. மேயர் இந்திராணி தலைமை தாங்குகிறார்.

    தெற்கு மண்டலத்தி ற்குட்பட்ட செல்லூர், ஆழ்வார்புரம், ஐராவத நல்லூர், காமராஜர் சாலை, பங்கஜம் காலனி, சேர்மன் முத்துராமய்யர் ரோடு, காமராஜபுரம், பழைய குயவர்பாளையம், சின்னக்கடை தெரு, லட்சுமிபுரம், காயிதேமில்லத் நகர், செட்டியூரணி, கீழ வெளிவீதி.

    கீரைத்துறை, வில்லாபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, அனுப்பானடி, சிந்தாமணி, கதிர்வேல் நகர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரம்பலூரில்கோடைகால இலவச சித்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது
    • இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இலவச கோடைகால சிறப்பு சித்த மருத்துவ முகாம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. இந்த சிறப்பு முகாமை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைக்கிறார். முகாமில் பெண்களுக்கான கருப்பை கட்டி, சினைப்பை நீர்க்கட்டி, தைராய்டு, அதிக உதிரப்போக்கு, மாதாந்திர தீட்டுப்பிரச்சினை, மூட்டுவலிகள், தோல்நோய்கள், சளி, இருமல், மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவு, ஆஸ்துமா, சர்க்கரைநோய், இதயநோய், ரத்த கொதிப்பு நோய்க்கு இலவச பரிசோதனை மற்றும் இலவச மருந்துகள் வழங்கப்பட இருக்கிறது.

    முகாமில் மூலிகை கண்காட்சி மற்றும் சித்தமருந்துகள் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படுகிறது. ஆங்கில மருந்துகளை பல ஆண்டுகள் தொடர்ந்து உட்கொண்டு வரும் நிலையில், கட்டுப்படாத நிலையில் உள்ளவர்களும் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும் முகாமில் பங்கேற்பவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் சூரணம், கபசுரகுடிநீர் சூரணம் இலவசமாக வழங்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் எஸ்.காமராஜ் தெரிவித்துள்ளார்.




    • தேவிபட்டணத்தில் புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
    • தி.மு.க. நிர்வாகிகள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தேவிபட்டணத்தில் சக்தி விநாயகர் கோவில் முன்பு புதிய தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார்.கிளைச்செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் வக்கீல் ராமராஜ், துணைத்தலைவர் மாடசாமி, மாடக்குட்டி, கோபால், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தி.மு.க வடக்கு ஒன்றியத்தின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது
    • இதில் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார்.

    விழுப்புரம்:

    மயிலம் அருகே தீவனூர் பஸ் நிறுத்தம் அருகில் தி.மு.க வடக்கு ஒன்றியத்தின் சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதில் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. வழக்கறிஞர் சேதுநாதன், மயிலம் ஒன்றிய குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில். தலைமை கழக தொகுதி பொறுப்பாளர் ஜெரால்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி புதிய உறுப்பினர் சேர்க்கைகான படிவத்தை புதிய உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். இதில் 17 ஊராட்சிகளில் இருந்து தி.மு.க.-வில் சேர்வதற்க்கு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் மாவட்ட. ஒன்றிய மற்றும் கிளை கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×