search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோஜா"

    • நடிகையும், சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருபவர் ரோஜா.
    • மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என அமைச்சர் ரோஜா கூறினார்.

    சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

     

    குத்துச் சண்டை விளையாடிய ரோஜா

    குத்துச் சண்டை விளையாடிய ரோஜா

     

    இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள உடா சிறுவர் பூங்காவில் நடந்த 12-வது தேசிய மினி ரோல் பால் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. ஆண்கள் பிரிவில் ராஜஸ்தான் அணியும், பெண்கள் பிரிவில் ஒடிசாவும் முதல் பரிசை வென்றன. விழாவில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ரோஜா கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

     

    குத்துச் சண்டை விளையாடிய ரோஜா

    குத்துச் சண்டை விளையாடிய ரோஜா

    அப்போது ரோஜா பேசியதாவது, ஆந்திராவில் 11 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கொண்டு இந்த விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டியில் 19 மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்று உள்ளனர். மாணவர்கள் படிப்புடன் விளையாட்டிலும் சிறந்து விளங்கி சிகரத்தை தொட வேண்டும் என்றார். பின்னர் அமைச்சர் ரோஜா அங்கிருந்த பெண்களுடன் குத்துச்சண்டை விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். இதனை கண்டு ரசிகர்கள் உற்சாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.

    கடந்த மாதம் ஜெகன்மோகன் ரெட்டி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் ரோஜா கலைக்குழு பெண்களுடன் மேடையில் நடனமாடி உற்சாகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • தமிழில் 90களில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரோஜா.
    • இவர் தற்போது ஒரு ஏழை மாணவியின் கனவை நனவாக்க உதவியுள்ளார்.

    சூரியன், உழைப்பாளி, வீரா, மக்கள் ஆட்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ரோஜா. இவர் 90களில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்தார். தற்போது ஆந்திர மாநிலம், நகரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், சுற்றுலாத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் கொரோனா காலத்தில் தாய், தந்தை என இரண்டு பேரையும் இழந்து வறுமையில் வாடிய தனது தொகுதியை சேர்ந்த புஷ்பா என்ற மாணவியை தத்தெடுத்து கொண்டார். அந்த மாணவியின் கல்வி செலவை முழுவதும் தான் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.

     

    மாணவி புஷ்பா தனது பள்ளி படிப்பை முடித்துவிட்டு நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, திருப்பதியில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கூறியதாவது, "மருத்துவ வசதி இல்லாமல் என் தாய், தந்தையர் இறந்ததைப் போன்று எந்தக் குழந்தைக்கும் அது போன்று ஒரு நிகழ்வு ஏற்படாமல், வருங்காலத்தில் என்னால் முடிந்த அனைத்து மருத்துவ உதவிகளையும் என்னைப் போன்ற குழந்தைகளுக்கு இலவசமாக கொடுப்பதே என் லட்சியம்" என்றார். 

    • ஆந்திராவில் காதலனை நம்பி செல்லும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.
    • முதலில் காதலிப்பவரின் பின்னணி குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே காதலியுங்கள்.

    திருப்பதி:

    திருப்பதியில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் உலக நன்மைக்காக மகா சண்டி யாகம் நடந்தது. இதில் அமைச்சர் ரோஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள் காதல் வலையில் விழுந்து மோசம் போகக்கூடாது.

    ஆந்திராவில் காதலனை நம்பி செல்லும் பெண்கள் கொலை செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பெண்கள் உஷாராக இருக்க வேண்டும்.

    முதலில் காதலிப்பவரின் பின்னணி குறித்து முழுமையாக தெரிந்து கொண்ட பின்னரே காதலியுங்கள்.

    தொழில்நுட்பம் பெருகிவரும் இந்த காலகட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என விரும்பத்தகாத சம்பவங்களும் நடந்து வருகிறது.

    நமக்கு நாமே தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரோஜா.
    • தற்போது இவரின் மகள் அன்ஷு மாலிகா கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

    தமிழ், தெலுங்கு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ரோஜா. பின்னர் குணசித்திர நடிகையாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்று இருக்கிறார். தற்போது ஆந்திர சுற்றுலாத்துறை மந்திரியாக இருக்கும் ரோஜா, மந்திரியானதும் நடிப்புக்கு முழுக்கு போட்டு ஒதுங்கினார்.

    தற்போது நடிகை ரோஜா தனது மகள் அன்ஷு மாலிகாவை கதாநாயகியாக அறிமுகம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். தனது மகள் அன்ஷு மாலிகாவை நடிகையாக்க தானே நடிப்பு பயிற்சி அளித்து வருவதாக கூறப்படுகிறது. ரோஜாவின் கணவரும், பிரபல இயக்குனருமான செல்வமணியும் அன்ஷு மாலிகாவுக்கு நடிப்பு பயிற்சி அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

     

    அன்ஷு மாலிகா - ரோஜா

    அன்ஷு மாலிகா - ரோஜா

    ஏற்கனவே தமிழ், தெலுங்கு தயாரிப்பாளர்கள் அன்ஷுவை கதாநாயகியாக நடிக்க வைக்க தன்னை அணுகியதாக ரோஜா தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல திரைப்பட கல்லூரியில் படிக்க அன்ஷு மாலிகாவுக்கு இடம் கிடைத்துள்ளதாகவும், அங்கு சென்று நடிப்பு, இயக்குனர், திரைக்கதை எழுதுதல் போன்ற பயிற்சிகளை எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. படிப்பை முடித்து நாடு திரும்பியதும் அன்ஷு கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • பிரதமர் நரேந்திர மோடி வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டார்.
    • நடிகையும் ஆந்திர மந்திரியுமான ரோஜா பிரதமர் மோடியுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

    ஆந்திரப்பிரதேச மாநிலம் பீமாவரத்தில், விடுதலைப் போராட்ட வீரர் அல்லூரி சீதாராம ராஜூவின் 125-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி 30 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து பல்வேறு அரசு திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் முடிவில் பிரதமர் மோடி புறப்பட்டு செல்லும்போது நடிகையும் ஆந்திர மந்திரியுமான ரோஜா, பிரதமரிடம் செல்ஃபி எடுக்க அனுமதி கேட்டு அவருடன் செல்பி எடுத்துக்கொண்டார்.


    செல்ஃபி புகைப்படம்

    அப்போது ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி உடனிருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார். ரோஜா அவருடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டார். ரோஜாவின் இந்த செல்ஃபி புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • குழந்தைகள் அனைவரும் இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்து ரோஜாபூக்களாக பள்ளிக்கு வந்தனர்.
    • பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வின் தலைமை தாங்கினர்.

    தென்காசி:

    செங்கோட்டை ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் மழலையர் பிரிவு குழந்தைகளுக்கு வாரந்தோறும் சிறப்பு தின கொண்டாட்டம் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்வார கொண்டாட்டமாக ரோஜா தினம் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் அனைவரும் இளஞ்சிவப்பு நிறத்தில் உடை அணிந்து ரோஜாபூக்களாக பள்ளிக்கு வந்தனர்.

    ரோஜா தினத்தையொட்டி குழந்தைகள் ரோஜாப்பூவின் படம் வரைந்தும், வண்ணத்தாளில் பூ வடிவத்தை செய்தும் எடுத்து வந்தனர். அவற்றைக்கொண்டு வகுப்பு முழுவதும் அலங்கரிக்கப்பட்டது. பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வின் தலைமை தாங்கினர். ஆசிரியைகள் ரோஜா தினம் பற்றி உரையாற்றினர். குழந்தைகள் ரோஜாப்பூ குறித்த பாடல்களை பாடினர்.

    பின்னர் பள்ளியில் உள்ள அனைவருக்கும் ரோஜா பூக்களை கொடுத்து மகிழ்ந்தனர்.

    ×