search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223295"

    • திண்டுக்கல் தாலுகாவில் வருவாய்த்துறையின் மூலம் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்றது.
    • பயனாளிகள் 50 பேருக்கு இலவச வீட்டு மனை வழங்கப்பட்டது

    குள்ளனம்பட்டி :

    திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் வருவாய்த்துறையின் மூலம் ஜமாபந்தி தொடங்கி நடைபெற்றது.

    நிறைவு நாளான நேற்று கிழக்கு தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் லதா தலைமை தாங்கினார்.இதில் ஏற்கனவே சாணார்பட்டி, சிலுவத்தூர், கம்பிளியம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்களில் இருந்து கொடுக்கப்பட்ட பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது.

    அதன் பின்னர் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் 50 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டாவை மாவட்ட வருவாய் அலுவலர் லதா வழங்கினார்.இதில் கிழக்கு வட்டாட்சியர் அபுரிஸ்வான், மண்டல துணை வட்டாட்சியர் தங்கமணி மற்றும் வருவாய் அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது.
    • உடனடியாக தீர்வு காண கலெக்டர் உத்தரவு.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற 1431 - ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கலெக்கடர் பா.முருகேஷ் பொது மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை நேற்று பெற்றுக்கொண்டார்.

    மேலும், வருவாய் துறையின் மூலம் நடைபெற்ற 1431 - ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயத்தில் பட்டா மாற்றம் சம்மந்தமாக 42 மனுக்களும், உட்பிரிவு பட்டா மாற்றம் தொடர்பாக 108 மனுக்களும், வீட்டுமனைப்பட்டா தொடர்பாக 51 மனுக்களும், முதியோர் உதவித்தொகை வழங்க கோரி 53 மனுக்களும், குடும்ப அட்டை வேண்டி 3 மனுவும், 61 இதர மனுக்களும், இதர துறையை சார்ந்த மனுக்கள் 14 என மொத்தம் 332 மனுக்கள் பெறப்பட்டது.

    மேற்படி பெறப்பட்ட மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணுமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்திரவிட்டுள்ளார்.

    இந்நிகழ்ச்சியில் உதவி இயக்குநர் (நில அளவை) எம்.சுப்பிரமணியன், அலுவலக மேலாளர் (பொது) ரவி, வேளாண் உதவி இயக்குநர் கோ.அன்பழகன், திருவண்ணாமலை வட்டாட்சியர் எஸ்.சுரேஷ் உட்பட பலர் கொண்டனர்.

    • ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது.
    • கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்து தங்களது நீண்டநாள் கோரிக்கை மனுக்களை கொடுத்து வருகிறார்கள்.

    நெல்லை தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பட்டா மாறுதல், பயிர்க்கடன் பெறுதல், பல்வேறு சான்றிதழ்கள் பெறுதல் உள்ளிட்ட மனுக்கள் பெறப்பட்டது.

    இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். அப்போது முதியோர் உதவித்தொகைக்கான ஆணையை 7 பேருக்கு கலெக்டர் விஷ்ணு வழங்கினார்.

    மேலும் ஓய்வூதிய ஆணைகளையும் வழங்கினார். இன்றைய நிழ்ச்சியில் மதவக்குறிச்சி, நாரணம்மாள்புரம் குறுவட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் மனு பெறப்பட்டது.

    நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (சர்வே) வாசுதேவன், தேர்தல் தாசில்தார் கந்தப்பன், கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடாச்சலம், நெல்லை தாசில்தார் சண்முக சுப்பிரமணியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    ×