search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223314"

    • விழுப்புரம் தீயணைப்பு போலீசார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர்.
    • தீ விபத்தில் கடையில் உள்ள சுமார் 50,000 மதிப்புள்ள பொருள்கள் முழுவதும் எரிந்து சேதமானது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் மாம்பழப்பட்டு பகுதியை சேர்ந்தவர் அபித் ரஹிமான். இவர் அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரி எதிரில் பட்டாணிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    நேற்று இரவு வழக்க ம்போல் வியாபாரத்தை முடித்து கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை திடீரென அந்த கடை மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி யளித்தது. இதை அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து விழுப்புரம் தீயணைப்பு போலீஸ் நிலையம் மற்றும் கடை உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து விரைந்து வந்த விழுப்புரம் தீயணைப்பு போலீசார் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீ மற்ற கடைகளுக்கு பரவாமல் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் கடையில் உள்ள சுமார் 50,000 மதிப்புள்ள பொருள்கள் முழுவதும் எரிந்து சேதமானது.

    இது குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீ விபத்து ஏற்பட்ட பகுதிகளை பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடையின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார்.
    • கொலை வழக்கு,3 வழிப்பறி, குடவாசலில் கூட்டு கொள்ளைமுயற்சி வழக்கு உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் திருமுருகன்பூண்டி சன்னதிவீதியை சேர்ந்தவர் நாகராஜ்(வயது 35).இவர் அப்பகுதியில் புதியபொருள் பழைய பொருட்கள்வாங்கிவிற்பனை செய்யும் கடைநடத்தி வருகிறார்.

    கடந்த ஜூன் 26 ந்தேதி இவரது கடைக்கு மாமூல் கேட்டு ஒருவர்சென்றார். பணத்தைகொடுக்க மறுத்ததால்,திருப்பத்தூரை சேர்ந்த சுபாஷ் சந்திரபோஸ் (29) என்பவர், கடையின் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தார். இது குறித்த புகாரின் பேரில் சுபாஷ் சந்திரபோசை திருமுருகன்பூண்டி போலீசார்கைது செய்து சிறையில்அடைத்தனர்.

    இவர் மீது வடக்கு போலீஸ் நிலையத்தில் இரண்டு வழிப்பறி, வேலம்பாளையத்தில் கொலை வழக்கு,3 வழிப்பறி, குடவாசலில் கூட்டு கொள்ளைமுயற்சி வழக்கு உள்ளது. இவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில்நடந்துவருவதால், சுபாஷ் சந்திரபோசை குண்டர் தடுப்புசட்டத்தில் கைது செய்துசிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர்பிரபாகரன் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் போலீசார் சுபாஷ் சந்திர போசை இன்று குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருப்பூர் மாநகரில் கடந்த 8 மாதங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாக 62 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • எதிா்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்துள்ளது.
    • தீக் காயங்களுடன் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் உப்புப்பாளையம் (கிழக்கு) பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருபவா் நடராஜ் (வயது 62). இவரது வீடு ஆலை வளாகத்துக்குள் அமைந்துள்ளது. இந்நிலையில், இவரது தாயாா் வேலுமணி (85), வீட்டைச் சுற்றியுள்ள குப்பைகளை கூட்டி தீ வைத்துக் கொண்டிருந்தாா்.

    அப்போது, எதிா்பாராத விதமாக சேலையில் தீப்பிடித்துள்ளது. இதில் பலத்த தீக் காயங்களுடன் பாதிக்கப்பட்ட வேலுமணி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.இது குறித்து வெள்ளக்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் கீற்றுகளால் நேயப்பட்ட பழக்கடைகள் உள்ளன.
    • மின்சார ஒயர்கள் உரசியதால் கீற்றுக்கொட்டையின் மீது தீப்பொறி பறந்து விழுந்ததில் பழக்கடையில் தீப்பிடித்தது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர்- நாமக்கல் செல்லும் சாலையில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனை அருகில் தார் சாலை ஓரத்தில் நெடுகிலும் கீற்றுகளால் நேயப்பட்ட பழக்கடைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11 மணியளவில் கீற்றுக் கொட்டகை உள்ள பழக்கடை வழியாக மேலே செல்லும் மின்சார ஒயர்கள் உரசியதால் கீற்றுக்கொட்டையின் மீது தீப்பொறி பறந்து விழுந்ததில் பழக்கடையில் தீப்பிடித்தது.

    இதில் சாலை ஓரத்தில் போடப்பட்டிருந்த கீற்றுக் கொட்டகை திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடிய வில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீஅருகில் உள்ள கடைகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.இருப்பினும் பழக்கடை முழுவதும் எரிந்து சாம்பலாயின.

    • சந்தோஷ் நாராயணன் இசையில் கடந்த ஆண்டு வெளியான பாடல் 'என்ஜாய் எஞ்சாமி'.
    • இந்த பாடலை தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியிருந்தனர்.

    சமீபத்தில் நடந்த சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் 'என்ஜாய் எஞ்சாமி' பாடலை தீ மற்றும் மாரியம்மாள் பாடியிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியில் இப்பாடலை எழுதி, அதில் நடித்திருந்த தெருக்குரல் அறிவு இடம்பெறவில்லை.

    இதுதொடர்பாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் அறிவு ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என கேள்வி எழுப்பி வந்தனர். இதைத்தொடர்ந்து, அறிவு தான் புறக்கணிக்கப்படுவது குறித்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த பதிவு வைரலானது. இதற்கு பதிலளிக்கும் விதமாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பதிவிட்டிருந்தார். இந்நிலையில், பாடகி தீ சார்பில் விளக்கமளிக்கப்பட்ட பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.


    என்ஜாய் எஞ்சாமி

    அதில்,  "எஞ்சாயி எஞ்சாமி பாடலின் ஒவ்வொரு கட்டத்திலும் அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் இருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் எனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர்கள் இருவரையும் குறிப்பாக அறிவு குறித்து பெருமையுடனே பேசியுள்ளேன். அவர்கள் இருவரின் முக்கியத்துவத்தை எந்தக் கட்டத்திலும் நான் குறைத்து மதிப்பிட்டது கிடையாது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், மேடையிலும் இருவரின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தியுள்ளேன்.

    இயக்குனர் மணிகண்டனும், அவரின் `கடைசி விவசாயி' திரைப்படமும் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் உருவாக்கத்துக்கு பெரிய உந்து சக்தியாக அமைந்தது. 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் வரிகளும், அதன் உருவாக்கமும் எங்களது அணியால் விவாதிக்கப்பட்டே செம்மைப்படுத்தப்பட்டது. பாடல் வெளியாகும் வரை நாங்கள் அனைவரும் ஒரே பக்கத்தில்தான் இருந்தோம்.

    பாடலுக்கான அர்த்தங்கள் மற்றும் அதன் கதைகள் பெரும்பாலானவற்றை பாடல் வெளியான பின் அறிவின் ஒவ்வொரு இன்டெர்வியூ மூலமாக நான் தெரிந்துகொண்டேன். அறிவு சொன்னது மிகவும் முக்கியமானது மட்டுமல்ல முதன்மையானது என நம்பி, அறிவின் குரல் எப்போதும் ஓங்கி ஒலிக்க வேண்டும் என விரும்பினேன். பாடல் மூலம் கிடைத்த அனைத்து வருமானம் மற்றும் உரிமைகளும் எங்கள் மூவருக்கும் சமமாகப் பகிரப்பட்டன. 'எஞ்சாயி எஞ்சாமி' எட்டிய உயரங்களை அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணனுடன் இணைந்து அனுபவிக்கவே ஆசைப்பட்டேன். ஏதேனும் ஒரு வாய்ப்பு அதில் சமத்துவமின்மையாக இருந்தால் ​​நிச்சயம் அதன் ஒரு பகுதியாக நான் இருக்கமாட்டேன்.


    என்ஜாய் எஞ்சாமி

    கடந்த ஆண்டு வெளியான "ரோலிங் ஸ்டோன் இந்தியா" இதழின் அட்டைப்படத்தில் நானும், ஷானும் இடம் பெற்றிருந்தோம். எங்கள் இணைப்பில் அடுத்து வரவுள்ள ஆல்பத்துக்கான அட்டைப்படமே அது. மற்றபடி, அது "எஞ்சாயி எஞ்சாமி" பாடலுக்கானதோ அல்லது "நீயே ஒலி" பாடலுக்கானதோ அல்ல. அந்த அட்டைப் படத்திலும் அந்த பாடல் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அறிவு, சந்தோஷ் நாராயணன் மற்றும் மாஜா கலைஞர்கள் பற்றிய கட்டுரைகளை ரோலிங்ஸ்டோன் வெளியிட இருக்கிறது என்பது எனக்கு தெரிவிக்கப்பட்டது. எங்களின் அட்டைப்படம் வெளியாகும் முன்பே ரோலிங் ஸ்டோன் இதழ் ஒரு ட்வீட்டில் அறிவித்தது. அந்த அறிவிப்பை கண்டு நான் மகிழ்ச்சியடைந்தேன்.

    செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியில் என்னுடன் அறிவையும் பங்கேற்பதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அணுகினர். அறிவு அமெரிக்காவில் இருந்ததன் காரணமாக அவரால் பங்கேற்க முடியாததை அடுத்து அவர் குரலை நிகழ்ச்சியில் பயன்படுத்திக் கொண்டோம். தனது குரலுக்காகவும், பாடலில் அவரின் பங்களிப்புக்காகவும் நிகழ்வில் அறிவு பேசப்பட்டார். 'எஞ்சாயி எஞ்சாமி' பாடலை உருவாக்கியதற்காக சந்தோஷ் நாராயணன், அறிவு, மாஜா உள்ளிட்ட ஒட்டுமொத்த குழுவின் ஆதரவிற்கும் என் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த பிரபஞ்சத்தின் மீதும் உயிர்கள் மீதும் கொண்டுள்ள அன்பு, மரியாதையின் பொருட்டால் சக கலைஞர்களால் 'எஞ்சாயி எஞ்சாமி' பாடல் பிறந்தது. என்னைப் பொறுத்தவரை, அது எப்போதும் அப்படியே இருக்கும். உண்மை எப்போதும் வெல்லும்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.



    • கம்பெனியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் கம்பெனியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
    • இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையத்தில் ஒரு தனியார் பனியன் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனியில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோபி செட்டிபாளையம் தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத்து றையினர் தீயை அணைத்தனர்.

    விசாரணையில் பனியன் கம்பெனியில் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் கம்பெனியில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

    இதில் சுமார் 5 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் சேதமானதாக தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வலம்புரி விளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீ பிடித்தது.
    • நேற்று மதியம் நாகர்கோவிலில் கன மழை கொட்டி தீர்த்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோட்டில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் நேற்று முன்தினம் தீ பிடித்தது.

    இதையடுத்து நாகர் கோவில், கன்னியாகுமரி, திங்கள் சந்தையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தீயை அணைக்கும் பணி நடந்தது. நேற்று 2-வது நாளாகவும் தீயணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்தனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடிய வில்லை.

    நேற்று மதியம் நாகர்கோவிலில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ முற்றிலுமாக அணைந்தது.

    இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    • எருமாபாளையம் பகுதியில் ஒரு லாரி பட்டறை உள்ளது. இந்த பட்டறையில் பழைய லாரிகளை வாங்கி உடைத்து வியபாரம் செய்து வந்தனர்.
    • அதில் இருந்த பெட்ேரால் சிதறி விழுந்ததில் அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது.

     சேலம்:

    சேலம்-சென்னை தேசியநெடுஞ்சாலையில் எருமாபாளையம் பகுதியில் ஒரு லாரி பட்டறை உள்ளது. இந்த பட்டறையில் பழைய லாரிகளை வாங்கி உடைத்து வியபாரம் செய்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி ஒரு லாரியின் பெட்ரோல் டேங்கை வெல்டிங் எந்திரத்தால் உடைத்த போது அதில் இருந்த பெட்ேரால் சிதறி விழுந்ததில் அங்கிருந்த பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். அப்போது அங்கு பணியில் இருந்து ஓமலூர் நாராயணம் பாளையம் அண்ணா நகரை சேர்ந்த பட்டறை ஊழியரான பங்குராஜ் (வயது 45) என்பவர் தீக்காயம் அடைந்தார். இததனை பார்த்த சக ஊழியர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு பங்குராஜ் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி அழுதனர். சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்தனர்.
    • பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் டூவீலருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஐந்துமுனை பகுதியைச் சேர்ந்தவர் சேக் முகமது உசேன் (25). வாடகை கார் டிரைவர்.

    நேற்று இரவு இவர் வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சேதமடைந்து கிடந்தது. இதுகுறித்து பரமக்குடி நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் டூவீலருக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கணவர் “அழகில்லை” என கூறியதால் முகத்தில் தீ வைத்து கொண்ட இளம்பெண் இறந்தார்.
    • எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள மறவர் பெருங்குடியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி கற்பகம் (வயது 27). இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கற்பகம் தனது முகத்தில் தீ வைத்துக் கொண்டார்.

    தீயில் கருகிய அவரது முகம் கோரமானது. வலியால் துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது தீ வைத்தது குறித்து பேச்சியம்மாள் மகளிடம் விசாரித்துள்ளார். இதில் கணவர் அடிக்கடி "அழகில்லை" எனக்கூறி கேலி கிண்டல் செய்து வந்தார். இதனால் விரக்தியடைந்த தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த கற்பகம் பரிதாபமா இறந்தார்.

    இதுகுறித்து பேச்சியம்மாள் ெகாடுத்த புகாரின் பேரில் எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • பெருந்துறையில் மின் கசிவு காரணமாக ஜவுளி கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
    • இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை மெயின் ரோடு பகுதியை சேர்ந்த வர் வசந்தகுமார் (40). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று இரவு வியாபரம் முடிந்து கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் இரவு 11 மணிக்கு கடைக்குள் இருந்து புகை வந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக வசந்த குமாருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் கடையை திறந்து பார்த்த போது கடைக்குள் இருந்த துணிகள் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை.

    இது குறித்து பெருந்துறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் நவீந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதில் கடையின் முன் பகுதியில் இருந்த துணிகள் எரிந்து நாசமானது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்தது.

    • ஆரம்ப கட்ட தீ விபத்தை தடுப்பதற்கு எல்லா இடங்களிலும் தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளன
    • தனியார் நட்சத்திர ஓட்டலில் நடந்த தீத்தடுப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர்.

    ஊட்டி:

    ஊட்டியில் தனியார் நட்சத்திர ஓட்டலில் தீத்தடுப்பு ஒத்திகை நடைபெற்றது. இதில் தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் அளித்தனர். இதில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி நாகராஜ், நிலைய அலுவர் பிரேம் தலைமையில் 12 பேர் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில், ஆரம்ப கட்ட தீ விபத்தை தடுப்பதற்கு எல்லா இடங்களிலும் தீயணைப்பு கருவிகள் தயார் நிலையில் உள்ளன. ஆனால் அவற்றை முறையாக பயன்படுத்த பெரும்பாலானோருக்கு தெரியாததால் தீயணைப்பு துறையினர் வருவதற்குள் தீ கட்டுக்கடங்காமல் பரவி விடுகிறது.

    எனவே தீ விபத்து ஏற்பட்டால் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது என்றார்.

    இதில் ஓட்டல் நிர்வாகிகள், பணியாளர்கள் என 50 பேர் கலந்து கொண்டனர். தீயணைப்பு துறையினரீன் இந்த தீத்தடுப்பு ஒத்திகை தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக அமைந்ததாக அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்

    ×