search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தனக்கூடு"

    • சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
    • 17-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கீழ்வேளூர் அருகே ஆழியூர் மெயின் ரோட்டில் உள்ள செய்யது இனாயத்துல்லா வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக தர்காவில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு வரப்பட்டது.

    பின்னர் தர்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் பாத்திஹா ஒதி கொடி ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் ஆழியூர் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடந்தது.
    • ஆண்டவர் சமாதிக்கு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப். சந்தனம் பூசினார்.

    நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் உள்ள சின்ன ஆண்டவர் செய்யது முகமது யூசுப் சாஹிப் ஆண்டவருக்கு ஆண்டு தோறும் 3 நாட்கள் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நேற்று நடந்தது.

    ஆண்டவர் சமாதிக்கு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப். சந்தனம் பூசினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் மற்றும் ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிபு மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    • ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா நிறைவு பெற்றது.
    • இதையொட்டி பக்தர்களுக்கு நள்ளிரவு வரை நெய்சோறு விநியோகிக்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி குத்புல் அக்தாப் செய்யது இபுராஹீம் பாதுஷா நாயகத்தின் 848-வது ஆண்டு சந்தனக்கூடு திருவிழா கடந்த மாதம் 1-ந்தேதி மவ்லீது ஷரீப்புடன் தொடங்கியது.

    இதன் நிறைவு விழா நிகழ்ச்சியாக நேற்று (30-ந்தேதி) மாலை தர்கா வளாகத்தில் கொடியிறக்கம் நடந்தது.

    இரண்டு ஆண்டுகளுக்கு பின் கொடியிறக்கம் நடைபெற்றதால் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. இந்த விழாவில் தென் மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    கொடியிறக்கத்தை முன்னிட்டு மாலையில் தர்கா மண்டபத்தில் பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டு உலக மக்களின் நல்லிணக்கத்திற்காக மாவட்ட அரசு காஜி சலாஹூதீன் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    தக்பீர் முழக்கத்துடன் தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்க ள்கொடியிறக்கினர். இறக்கப்பட்ட கொடியை ஹக்தார்கள் மகான் அடக்க ஸ்தலத்திற்கு கொண்டு சென்றனர்.

    இதை தொடர்ந்து கொடிமரத்தில் உள்ள காவட்டம் கழற்றப்பட்டு பாதுஷா நாயகம் சன்னதியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    தொடர்ந்து அனைத்து சமுதாய மக்களும் இணைந்து கொடிமரத்தை இறக்கினர்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நள்ளிரவு வரை நின்று பாதுஷா நாயகத்தின் பிரசாதம் (நெய்சோறு) பெற்றுச்சென்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்தனர்.

    • அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.
    • அனைத்து சமுதாய மக்களுக்கு நெய் சோறு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 848-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடி இறக்கத்துடன் முடிவடைந்தது. விழாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களில் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.

    கடந்த 23-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹுதீன் ஆலிம் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக் காகவும் உலக அமைதிக் காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடியிறக்கம் நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களுக்கு நெய் சோறு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

    விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர், தலைவர் பக்கீர் சுல்தான், துணைத்தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் சிராஜூதீன் ஆகியோர் தலைமையில் தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.

    • கடந்த 2 ஆண்டுகளாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறவில்லை.
    • 30-ந்தேதி கொடியிறக்கப்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் நேர்ச்சை வழங்கி விழா நிறைவடையும்.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 848-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொள்வது வழக்கம்.

    கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் 2 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந்தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கப்பட்டு, 11-ந்தேதி மாலை கொடியேற்றப்பட்டது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.

    ஏர்வாடி முஜாஹிர் நல்ல இப்ராஹிம் மஹாலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் சந்தனக்கூடு புறப்பட்டு ஊர்வலமாக சென்று காலை 6 மணி அளவில் தர்காவை வந்தடைந்தது. இந்த சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

    அதன்பின் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக்காகவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு சந்தனக்கூடு திருவிழா நிறைவடைந்தது.

    வருகிற 30-ந்தேதி கொடியிறக்கப்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் நேர்ச்சை வழங்கி விழா நிறைவடையும் என்று ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபையினர் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பக்கீர் சுல்தான், உபதலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் சிராஜூதீன் ஆகியோர் தலைமையில் தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர்.பாதுகாப்பு பணிகளில் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

    • கடந்த 1-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது.
    • வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பாதுஷா நாயகம் தர்காவில் கடந்த 1-ந்தேதி மவுலுது (புகழ்மாலை) ஓதப்பட்டு சந்தனக்கூடு விழா தொடங்கியது. நேற்று மாலை குதிரை ஊர்வலத்துடன் சென்று தர்காவில் போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அதிகாலை ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு. காலை 6 மணிக்கு தர்கா வந்தடைந்தது, தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையை மாவட்ட காஜி சலாஹுத்தீன் ஓதினார்.

    மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்தில் இருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ஏர்வாடி சந்தனக்கூடு உருவாக்குவதில் அனைத்து சமுதாய மக்களும் பங்கேற்பதால் ஆண்டுதோறும் மதநல்லிணக்க விழாவாக கொண்டாடி வருகின்றனர்.

    தர்கா வளாகத்தில் கூடியிருந்த திரளான பக்தர்கள் மலர்களை தூவி சந்தனகூடை வரவேற்றனர். முன்னதாக தர்கா ஹக்தார்கள் பாதுஷா நாயகம் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசி, போர்வையை போர்த்தினர். அதன் பின் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கினர்.

    வருகிற 30-ந்தேதி (வியாழக்கிழமை) கொடியிறக்கம் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், தர்கா ஹக்தார்கள் செய்தனர். 2 ஆண்டுகளுக்கு பின் சந்தனக்கூடு திருவிழா நடந்தது. இதன் காரணமாக வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளது ஏர்வாடி குத்புசுல்தான் செய்யது இப்ராகீம் ஒலியுல்லா தர்கா
    • கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறவில்லை.

    கீழக்கரை ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்காவில் சந்தனக்கூடு திருவிழா கடந்த 1-ந் தேதி மவ்லுது (புகழ்மாலை) ஓதப்பட்டு தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்றது. விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் குடிநீர், மின் வசதி, தற்காலிக கழிப்பறை மற்றும் சுகாதார பணிகள் செய்யப்பட்டுள்ளன. சந்தனக்கூடு திருவிழா ஊர்வலம் நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கியது. குதிரையுடன் ஊர்வலமாக சென்று தைக்காவில் இருந்து போர்வை எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலை 3 மணிக்கு ஏர்வாடி முஜிபிர் நல்ல இபுறாகிம் தர்காவில் இருந்து சந்தனக்குடம் எடுத்து, அலங்கார ரதத்துடன் சந்தனக்கூடு ஊர்வலம் புறப்பட்டு காலை 5 மணிக்கு தர்கா வந்தடையும்.

    தர்காவை 3 முறை வலம் வந்த பின் சிறப்பு பிரார்த்தனையும், தொடர்ந்து தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சியும் நடைபெறும். இதையொட்டி மதுரை, கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் இருந்தும், ராமநாதபுரத்திலிருந்தும் ஏர்வாடி தர்காவிற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தர்கா வளாகத்தில் மருத்து வக்குழுவினர் முகாமிட்டு தயார் நிலையில் உள்ளனர். தட்டுப்பாடு இல்லாமல் பக்தர்களுக்கு குடிநீர் வழங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தர்கா வளாகத்தில் கூடுதலாக சிறப்பு கண்காணிப்பு கேராக்கள் பொருத்தப்பட்டு சமூக விரோதிகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை தர்கா நிர்வாக கமிட்டி தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா, நிர்வாக உறுப்பினர்கள் செய்யது சிராஜுத்தீன், செய்யது இபுறாஹீம், சோட்டை எஸ்.பாதுஷா, ஹாஜி ஹுஸைன், செய்யது இஸ்ஹாக், அபுல் ஹஸன், முர்சல் இபுறாஹீம் ஆலிம், பாக்கிர் சுல்தான், சுல்தான் செய்யது இப்ராஹீம், சாதிகுல் ஆமீன், அப்துல் கனி, கலில் ரஹ்மான், செய்யது இபுறாஹிம், அமிர் ஹம்ஸா, சித்திக் லெவ்வை, அப்துல் ரஹீம், அம்ஜத் ஹுஸைன், சாதிக் பாட்சா, லெவ்வை கனி, செய்யது அபூதாஹிர், செய்யது இஸ்ஹாக் மற்றும் ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் 24-ந்தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
    • அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும்.

    ராமநாதபுரம்,

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வா்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டத்தில் உள்ள ஏா்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நடைபெறுகிறது.

    சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வருகிற 24-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதை ஈடு செய்யும் வகையில், வருகிற ஜூலை 2-ந்தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.

    எனவே வருகிற 24-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சாா்நிலைக் கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அலுவல்களைக் கவனிக்கும் வகையில் குறிப்பிட்ட பணியாளா்களோடு செயல்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஜூன் 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 24-ந்தேதி தர்காவிற்கு சந்தக்கூடு வந்தடையும்.
    • ஜூன் 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    ராமநாதபுரம் மாவட்டம்,ஏர்வாடி மகான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர்.

    இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்ட்ரா போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானவர்கள் வந்து கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் 1-ந்தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் தர்கா மண்டபத்திற்கு எதிரே உள்ள கொடிமரம் மேடையில் அடிமரம் ஏற்றப்பட்டது .

    நேற்று மாலை ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மகாலில் இருந்து மாலை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக தர்கா வந்தடைந்தது. அலங்கார ரதம் தர்காவில் மூன்று முறை வலம்வந்த பின்னர் மாலை பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது.

    முன்னதாக தர்கா மண்டபத்தில் பக்தர்கள் ஒன்றிணைந்து மவுலீது ஒதீனர். இதைத் தொடர்ந்து செய்யது பாருக் ஆலிம் மத நல்லிணக்கம் தொடரவும், உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன்,நோய் நொடி இல்லாமல் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.

    ராமநாதபுரம் போலீஸ் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவின் பேரில் கீழக்கரை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சுபாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஜூன் 23-ந் தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 24-ந் தேதி அதிகாலை தர்காவிற்கு சந்தக்கூடு வந்தடையும். பின்னர் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 30-ந் தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பாக்கிர் சுல்தான், செயலாளர் சிராஜுதீன், உப தலைவர் சாதிக் பாட்ஷா ஏர்வாடி தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.

    ×