என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 223336"
- கோடையில் உடல் வறட்சியை தவிர்க்க நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
- வெள்ளரிக்காயில் அதிகமான அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது.
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1 (வேண்டுமென்றால்)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
கருப்பு உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெள்ளரிக்காயை தோல் சீவி, பின் அதனை வட்ட வடிவில் நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை துருவியது போல் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது நொடியில் வெள்ளரிக்காய் சாலட் ரெடி!!!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சூடான சாதத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்.
- தோசை, சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் இது.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி (பொடிதாக நறுக்கியது) - 2 கப்
ஓமம் - ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2
பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை
எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஓமத்தைப் போட்டு பொரிய வைக்கவும்.
பின்பு அதில் பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்.
பின்னர் நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இப்போது முள்ளங்கியில் இருந்து சாறு வெளியேற ஆரம்பிக்கும். அது வற்றும் வரை நன்றாக வதக்கவும்.
முள்ளங்கி முழுவதுமாக வெந்தபின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
இப்போது சூப்பரான முள்ளங்கி சப்ஜி ரெடி.
- ஊளைச்சதையை குறைக்கும் சக்தி கொள்ளுக்கு உண்டு.
- அடிக்கடி உணவில் கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்க உதவும்.
தேவையான பொருட்கள்:
கொள்ளு - 1 கைப்பிடி
தேங்காய் - கால் மூடி
சிவப்பு மிளகாய் - 7
பூண்டு - 6 பல்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காயினை துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொள்ளினைப் போட்டு அடுப்பினை இளந்தீயில் வைத்து, நன்கு வாசனை வரும் வரை வறுக்கவும்.
தேங்காய் துருவல், கொள்ளு, உப்பு, சிவப்பு மிளகாய், பூண்டு இவற்றை மிக்ஸியில் தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும்.
கொள்ளு துவையல் தயார்.
கொள்ளு தானியத்தை நம் உணவில் அடுக்கடி சேர்த்துக் கொள்வதால் நமக்கு ஏற்படும் தொண்டை வலி, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் தீரும் என சொல்லப்படுகிறது. சாப்பாட்டில் கொள்ளு சேர்ப்பதால் நல்ல கண் பார்வை கிடைக்கும் என்றும், ஜுரம் அதிகமாக இருக்கும்போது கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் ஜுரம் சரியாகும் என்றும் கூறப்படுகிறது. வாதப் பிரச்சினைகளும், வயிற்று வலியும் குணமாகும். கொள்ளினை உணவில் சேர்ப்பதால் இரத்தம் சுத்திகரிக்கப் படுகிறது.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- முட்டைகோஸை அளவுக்கு அதிகமாக வேகவைத்தால் அதில் உள்ள சத்துக்கள் வெளியேறிவிடும்..
- முட்டைகோஸில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல், செரிமான பிரச்சனையை குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள் :
துருவிய முட்டைகோஸ் - ஒரு கப்,
வடித்த சாதம் - ஒரு கப்,
கடலை பருப்பு - ஒரு டீஸ்பூன்,
பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன் (ஊற வைக்கவும்),
மிளகு சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
வறுத்த வேர்க்கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்,
இஞ்சி (மிகவும் பொடியாக நறுக்கியது) - ஒரு டேபி ள்ஸ்பூன்,
பட்டை - சிறிய துண்டு,
கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
தாளிக்க :
கடுகு, உளுத்தம் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிதளவு,
காய்ந்த மிளகாய் - 2,
எண்ணெய் - சிறிதளவு.
செய்முறை :
ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
வடித்த சாதம், சூடாக இருக்கும் போதே ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கலந்தால் பொல பொலவென்று உதிர்ந்து விடும்.
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை போட்டு தாளித்த பின்னர் பட்டை, மிளகு, சீரகத்தூள், கடலை பருப்பு, உப்பு, வேர்க்கடலை போட்டுக் கிளறி, ஊற வைத்த பாசிப்பருப்பு, நறுக்கிய இஞ்சி சேர்த்து மேலும் கிளறவும்.
இதில் துருவிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கி, சிறிது நீர் தெளித்துப் புரட்டி வேக விட்டு இறக்கவும்.
இந்த முட்டைகோஸ் மசாலாவை வெந்த சாதத்தில் போட்டுப் புரட்டி, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.
இப்போது சத்தான சுவையான முட்டைகோஸ் சாதம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- தயிர் வடை கேள்விப்பட்டிருப்பீங்க. அது என்ன தயிர் பக்கோடா?
- வாங்க இன்னைக்கு இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தயிர் - 400 கிராம்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்
கரம் மசாலா - அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 3 கப்
பக்கோடா செய்ய :
கடலை மாவு - 1 கப்
சீரகம் - 4 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - சிறிதளவு
தாளிக்க :
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
செய்முறை :
வெங்காயத்தை நீளவாக்கில் மெலிதாக வெட்டிக்கொள்ளவும்.
ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் , நறுக்கிய கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் ஊற்றி கடலை மாவுக் கலவையை பக்கோடா போல் உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும். இறுதியாக தண்ணீர் ஊற்றி கலந்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் , இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
அடுத்து மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், பெருங்காயத் தூள், கரம் மசாலா பொடி சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
இவை நன்கு வதக்கியபின் கலந்து வைத்துள்ள தயிர் கலவையை அதில் ஊற்றவும்.
ஒரு முறை கொதித்ததும் வறுத்து வைத்துள்ள பக்கோடாவை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கி பரிமாறவும்.
அடுப்பில் இருந்து இறக்கி அரை மணி நேரம் கழித்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
இப்போது சூப்பரான தயிர் பக்கோடா ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ரவையில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று ரவையில் இனிப்பு பொங்கல் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
ரவை - 1/4 படி
அச்சு வெல்லம் - 12
நெய் - 5 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 12
காய்ந்த திராட்சை - 12
ஏலக்காய் பொடி - 1 தேக்கரண்டி
ஃபுட் கலர் (மஞ்சள்) - ஒரு சிட்டிகை
செய்முறை:
ரவைவை வெறும் கடாயில் போட்டு நன்றாக வறுத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதி வந்ததும் ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றிய பின் நன்றாக வறுத்த ரவாவை சிறிது சிறிதாக கலந்து நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
ஃபுட் கலரை சிறிதளவு பாலில் கலந்து இந்த பொங்கலில் கலந்தால் சீராகக் கலந்துவிடும்.
வேறொரு பாத்திரத்தில் வெல்லத்தை நன்கு காய்ச்சி வடுகட்டி எடுத்து வைத்தக் கொள்ளவும்.
இந்த வெல்லப் பாகை, ரவா கலவையுடன் சேர்த்து அடுப்பில் வைத்து நன்றாக சேர்ந்து வரும் வரை கிளறவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் நெய்யை சுட வைத்து முந்திரி, திராட்சை வறுத்து ரவா பொங்கலில் கலக்கவும்.
ஏலக்காய் பொடி கலந்துவிட்டால் சுவையான ரவை இனிப்பு பொங்கல் தயார்.
- காராமணிக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது.
- தினமும் ஏதாவது ஒரு காயை உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
தேவையான பொருட்கள்:
காராமணிக்காய் - 400 கிராம்
சாம்பார் வெங்காயம் - 200 கிராம்
கடுகு - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி
சில்லி பிளேக்ஸ் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
தேங்காய் எண்ணெய் - தேவைக்கேற்ப
உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை:
காராமணிக்காயை நன்றாக சுத்தம் செய்து சற்று பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும், பின்னர் அவற்றை அடி கனமான பாத்திரத்தில் போட்டு எண்ணெய் சேர்க்காமல் மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, கறிவேப்பிலை, பொடிதாக நறுக்கிய சாம்பார் வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
பின்பு அதில் மஞ்சள் தூள், சில்லி பிளேக்ஸ் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து மீண்டும் வதக்கவும்.
பிறகு அதில், வதக்கிய காராமணியை மசாலாவுடன் சேர்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை மிதமான தீயில் கிளறவும்.
இப்பொழுது சுவையான 'காராமணிக்காய் பொரியல்' தயார்.
இதனை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
- சாம்பார் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.
- இந்த ரெசிபியை 30 நிமிடத்தில் செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - கால் கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 4
காய்ந்த மிளகாய் - 3
பூண்டு - 5 பல்
தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்
கடுகு- 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
சாம்பார்த்தூள் - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
* தக்காளி, கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* அரிசி, பருப்பை நன்றாக கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் ப.மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளி, மஞ்சள் தூள், சாம்பார்த்தூள் சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் தக்காளி வதங்கியதும் தண்ணீரை வடித்து விட்டு அரிசி, பருப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
* தேவையான தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, மூன்று விசில் வைக்கவும்.
* பிரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரைத் திறந்து சாதத்தை மெதுவாக கிளறிவிட்டு கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
* இப்போது சூப்பரான அரிசி பருப்பு சாதம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிடுபவர்களுக்கு தோல் சம்பந்தமான வியாதிகள் எளிதில் அணுகாது.
- இதயத்திற்கு நன்மை பயப்பதில் கறிவேப்பிலை மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
தேவையான பொருட்கள் :
விழுதாக அரைக்க:
நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
துவரம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்,
மிளகு - 2 டீஸ்பூன்,
தனியா - ஒரு டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
நல்ல கொழுந்து கறிவேப்பிலை - ஒரு கிண்ணம்.
குழம்புக்கு:
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்,
கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 5,
பூண்டுப் பல் - 4,
புளி - எலுமிச்சம்பழ அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
சின்ன வெங்காயம், பூண்டை தோல் உரித்து வைக்கவும்.
புளியை சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துகொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து ஆற வைக்கவும்.
ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும்.
இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து போட்டு தாளித்த பின்னர் உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
அடுத்து இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
அடுத்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
இப்போது சுவையான கறிவேப்பிலை சின்ன வெங்காயம் குழம்பு ரெடி.
சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வாய்க்கசப்பு, பித்தம் குறைய உதவும் இந்த சட்னி.
- இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தனியா - கால் கப்,
காய்ந்த மிளகாய் - 8 (அல்லது தேவைக்கேற்ப),
பூண்டு - 2 பல்,
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு,
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் தனியாவை போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.
பின்னர் சிறிதளவு எண்ணெய் ஊற்றி... காய்ந்த மிளகாய், பூண்டு, புளி, கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து நன்றாக வறுத்து ஆறவைக்கவும்.
எல்லா பொருட்களும் நன்றாக ஆறியபின் மிக்சியில் போட்டு அதனுடன் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.
இப்போது சூப்பரான தனியா சட்னி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சிறுதானியங்களை அடிக்கடி சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
- இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.
தேவையான பொருட்கள்:
சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு தலா - 50 கிராம்,
மோர் - 3 கப்,
தண்ணீர் - 4 கப்,
சின்ன வெங்காயம் - 8,
சீரகம் - 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - தேவையான அளவு,
பச்சைமிளகாய் - 3,
கடுகு - 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கொத்தமல்லிதழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு குருணையாகப் பொடிக்க வேண்டும்.
* இதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.
* கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்து சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கஞ்சியில் கொட்டவும்.
* பிறகு அதில் மோர், கொத்தமல்லிதழை சேர்த்து நன்றாக கலந்து பருகவும்.
* உடலுக்கு ஆரோக்கியம் இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வெயிலுக்கு குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவது நல்லது.
- இன்று ஜவ்வரிசியில் மோர்க்களி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மாவு ஜவ்வரிசி, தயிர் - தலா 200 கிராம்,
கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன்,
மோர் மிளகாய் - 4,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஜவ்வரிசியை தயிரில் 3 மணி நேரம் ஊற வைத்து, உப்பு சேர்க்கவும்.
அடி கனமான கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், மோர் மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து அதில் ஊற வைத்த ஜவ்வரிசி கலவையைச் சேர்த்து நன்றாகக் கிளறவும். கைவிடாமல் கிளற வேண்டும். அடிபிடிக்கக்கூடாது. அடுப்பை மிதமான தீயில் வைத்து கொள்ளவும்.
கடாயில் ஒட்டாமல் களி மாதிரி வரும் போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
இப்போது சூப்பராக ஜவ்வரிசி மோர்க்களி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்