என் மலர்
நீங்கள் தேடியது "கணவன்-மனைவி"
- அதிகாலை 1 மணியளவில் தனது மனைவி பபிதாவுடன் (29) உடன் கணவன் ராம் சாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
- மறுநாள், பபிதா தனது தாயார் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார்.
வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த கணவன் மனைவியின் தலையை மொட்டையடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அவுராய் பகுதியில் உள்ள சியூர் கிராமத்தில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது.
அதிகாலை 1 மணியளவில் தனது மனைவி பபிதாவுடன் (29) உடன் கணவன் ராம் சாகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கணவன் திட்டியதற்கு பபிதா எதிர்ப்பு தெரிவித்தார்.
மனைவி தன்னை எதிர்த்தால் ஆத்திரமடைந்த கணவன், பபிதாவை கொலை செய்வதாக மிரட்டி, அவரை தாக்கி, பின்னர் கூர்மையான பொருளைப் பயன்படுத்தி அவரின் தலையை மொட்டையடித்தார்.
மறுநாள், பபிதா தனது தாயார் பெற்றோர் வீட்டிற்குச் சென்றார். நேற்று முன் தினம் இரவு, பபிதாவும் அவரது தாயாரும் அவுராய் காவல் நிலையம் சென்று, ராம் சாகர் மீது புகார் அளித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார் என்றும் அவரைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றும் போலீசார் இன்று தெரிவித்தனர்.
- பெண்ணை கவர்ந்ததாக திருமணமான ஆணின் மீது வழக்குத் தொடரப்பட்டது.
- ஆணுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
திருமணமான ஆண் மற்றும் பெண் தங்கள் திருமணத்தை மீறி விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல என கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருமணமான பெண்ணை கவர்ந்ததாக திருமணமான ஆண் ஒருவருக்கு எதிரான வழக்கு அண்மையில் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிபாஸ் ரஞ்சன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய அவர், "ஆரம்பத்திலிருந்தே சம்மதத்துடன் கூடிய இரண்டு திருமணமான ஆண் - பெண் இடையேயான உடல் ரீதியான உறவு, வாக்குறுதியின் பேரில் ஒருவரை ஏமாற்றுவதற்குச் சமமாகாது.
அத்தகைய உறவு பரஸ்பர ஈர்ப்பு காரணமாக ஒப்புதலுடன் உருவானது என்ற அடிப்படையில் கருதப்படும்" என்று தெரிவித்தார். எனவே குற்றம் சாட்டப்பட்ட திருமணமான ஆணுக்கு எதிரான நடவடிக்கைகளை ரத்து செய்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
- அவர்களின் சேனல் 34,000 பின்தொடர்பவர்களுடன் பிரபலம் அடைந்துள்ளது.
- 6 கிலோமீட்டர் தள்ளியுள்ள பிரவீனின் உடல் மார்ச் 28 இல் அழுகிய நிலையில் சாக்கடை ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
அரியானா மாநிலம் ஹிஸார் மாவட்டம் பிரேம் நகரை சேர்ந்தவர் ரவீனா (32 வயது). இவரது கணவர் பிரவீன் (35 வயது). இவர்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். ரவீனாவுக்கு சுரேஷ் என்பவருடன் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் -இல் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ரவீனா - சுரேஷ் இருவரும் இணைத்து ஷார்ட்ஸ் வீடியோக்களை உருவாக்கி யூடியூபில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
கணவன் பிரவீன் மற்றும் குடும்பத்தினர் எதிர்ப்பையும் மீறி ரவீனா சுரேஷுடன் இணைந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக யூடியூபில் இயங்கி வந்துள்ளார். அவர்களின் சேனல் 34,000 பின்தொடர்பவர்களுடன் பிரபலம் அடைந்துள்ளது.
இதற்கிடையே கணவன் பிரவீன், கடந்த மார்ச் 25 ஆம் தேதி ரவீனா சுரேஷுடன் அந்தரங்கமான நிலையில் இருப்பதை கண்டுள்ளார். இதனால் இருவருடனும் பிரவீன் மோதலில் ஈடுபட்டுள்ளார். அப்போது ரவீனா மற்றும் சுரேஷ் பிரவீனை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர்.
பின் பைக்கில் உடலை கொண்டு சென்று, 6 கிலோமீட்டர் தள்ளியுள்ள சாக்கடையில் வீசியுள்ளனர். மார்ச் 28 இல் அழுகிய நிலையில் சாக்கடையில் கண்டெடுக்கப்பட்டது.
அதன்பின் போலீசார் சிசிடிவியை ஆராய்ந்ததில் உண்மை வெளிப்பட்டது. இதன்பின் நடந்த விசாரணைக்குப் பின் இருவரும் தற்போது கைது செய்துள்ளனர். பிரவீன் - ரவீனாவின் 6 வயது மகன் அவனது தாத்தாவின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளான்.
- வேலைக்காக வெளியூர் சென்று வெள்ளிக்கிழமை வீடு திரும்புவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
- ஆனால் வியாழக்கிழமை இரவே கணவர் வீடுதிரும்பினார்.
உத்தரப் பிரதேசத்தில் மனைவியை பக்கத்து வீட்டுக் காரருடன் படுக்கையில் பார்த்த கணவன் செய்த விபரீத சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கான்பூரில் பாபுபூர்வா பகுதியில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வரும் கணவன் வேலைக்காக வெளியூர் சென்று வெள்ளிக்கிழமை வீடு திரும்புவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் விளையக்கிழமை இரவே கணவர் வீடுதிரும்பினார்.
அப்போது வீட்டில் படுக்கையில் தனது மனைவியுடன் பக்கத்துவீட்டு நபர் இருப்பதை கண்டு கணவர் ஆத்திரதமடைந்தார். அந்த நபர் அங்கிருந்த ஓட முயன்ற நிலையில் பெண்ணின் கணவன் அந்த நபரை பிடித்து அவரின் ஆணுறுப்பை பற்களால் கடித்துள்ளார்.
இதில் அந்த நபரின் ஆணுறுப்பில் இருந்து ரத்தம் கொட்டியது. அந்த ரத்தத்துடன் பயத்தில் அங்கிருந்து தப்பித்து காவல் நிலையத்தை நோக்கி ஓடி அடைக்கலம் புகுந்தார்.
போலீசார் அந்த நபரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி தலைவர் ஜித்தன்ராம் மஞ்சி, பீகார் முதல்வராகவும் இருந்துள்ளார்
- சுஷ்மாவும் ரமேஷும் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர்.
மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் பேத்தி புதன்கிழமை பீகாரில் அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி தலைவர் ஜித்தன்ராம் மஞ்சி, 2014-15 காலகட்டத்தில் பீகார் முதல்வராகவும் இருந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் என்டிஏ கூட்டணியில் கயா தொகுதி எம்.பி.யாக தேர்வானார். தற்போது இந்திய குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சராக உள்ளார்.
இவரது பேத்தி சுஷ்மா தேவி பீகாரின் கயாவில் தனது கணவன் ரமேஷ் உடன் வசித்து வந்தார். சுஷ்மாவும் ரமேஷும் சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் ரமேஷ் தனது மனைவியை நாட்டுத் துப்பாக்கியால் வீட்டிற்குள் வைத்து சுட்டுக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அவரைச் சுட்ட பிறகு, ரமேஷ் ஆயுதத்தை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டார். துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் கிராம மக்கள் அங்கு விரைந்தனர்.
உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு சுஷ்மாவை கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவன் ரமேஷை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது 9 வயது மகள் இனயா ஆகியோரின் சிதைந்த உடல்கள் கிடந்தன.
- ஷபினா இவரின் இரண்டாவது மனைவி.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் பெண், அவரது 9 வயது மகள் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆக்ராவின் ஜகதீஷ்புராவில் பூட்டிய வீட்டிற்குள் 40 வயது ஷபினா மற்றும் அவரது 9 வயது மகள் இனயா ஆகியோரின் சிதைந்த உடல்கள் ஒரு போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக இன்று போலீசார் தெரிவித்தனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு உடல்கள் மீட்கப்பட்டன. அவர்கள் சுமார் நான்கு முதல் ஐந்து நாட்கள் முன்னர் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
காவல்துறையினரின் கூற்றுப்படி, வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் குழு கதவை உடைத்து பார்த்தபோது, அறைக்குள் ஷபினா மற்றும் அவரது மகள் இனயாவின் உடல்கள் இருப்பதைக் கண்டனர்.
அவை மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. மேலும் ஷபினாவின் கணவர் ரஷீத்தை காணவில்லை. ஷபினா இவரின் இரண்டாவது மனைவி.
ரஷீத் தனது மனைவியையும் வளர்ப்பு மகளையும் கொன்றுவிட்டு தப்பி ஓடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளியைக் கண்டுபிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
- அப்பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை.
- கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தெலுங்கானாவில் சாலையில் வைத்து, கர்ப்பிணிப் பெண் ஒருவர் தனது கணவரால் கொடூரமாக தாக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் சிசிடிவி வீடியோ வெளியாகி உள்ளது.
ரங்கா ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த 32 வயதான முகமது பஸ்ரத், தனது 22 வயது மனைவி ஷபானா பர்வீனை குடும்பத்தகராறு காரணமாக கோண்டாபூரில் உள்ள நெடுஞ்சாலையில் வைத்து கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சரமாரியாக தாக்கியுள்ளார்.
தற்போது வெளியாகி உள்ள சிசிடிவி வீடியோவில், பஸ்ரத் தனது மனைவியை நோக்கி ஓடி வந்து தரையில் தள்ளுவதைக் காண முடிந்தது. இதனால் மனைவி நிலைகுலைந்து கீழே விழுகிறார்.
அதன் பின் அவர் தனது மனைவியை செங்கற்களால் கொலைவெறியுடன் கொடூரமாக தாக்குவது பதிவாகியுள்ளது. அப்பெண்ணுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. தாக்குதலுக்கு பின் கணவர் தனது பைக்கில் அவ்விடத்தை விட்டுச் சென்றார் .
தகவல் கிடைத்ததும், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்தப் பெண் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் அங்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதுவரை, பஸ்ரத் கைது செய்யப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
- இவர் தனது 35 வயது மனைவி சாரதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்துள்ளார்.
- சாரதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் மனைவியை மக்கள் முன்னிலையில் கணவன் கழுத்தறுத்து கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் உள்ள பாகேபள்ளியைச் சேர்ந்த தினசரி கூலித் தொழிலாளி கிருஷ்ணப்பா (43 வயது). இவர் தனது 35 வயது மனைவி சாரதா தனக்கு துரோகம் செய்வதாக சந்தேகத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் பெங்களூருவில் எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் சாரதா வேலை முடித்து வீட்டுக்கு வரும் வழியில் கிருஷ்ணப்பா காத்திருந்தார். அவர் வந்ததும், சாலையில் வைத்தே தனது மனைவியின் கழுத்தை கிருஷ்ணப்பா அறுத்து கொலை செய்தார்.
சாரதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அதன்பின் அங்கிருந்து ஓட முயன்ற அவரை பிடித்த மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸ் சாரதாவின் உடலை மீட்டு, கிருஷ்ணப்பாவை கைது செய்தனர்.
- விஷாலின் 70 வயது தாய் சரளா பத்ராவும் வசித்து வருகிறார்
- சம்பவத்தன்று, வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஷாலை நீலிகாவின் தந்தையும் சகோதரனும் தாக்கியுள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தில் ஒரு பெண் தனது மாமியாரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் மாவட்டத்தில் ஆதர்ஷ் காலனியில் வசிப்பவர் விஷால் பத்ரா. இவரது மனைவி நீலிகா. இவர்களுடன் விஷாலின் 70 வயது தாய் சரளா பத்ராவும் வசித்து வருகிறார். இந்நிலையில் மாமியாரின் சொத்துக்களை தன்வசப்படுத்திக்கொண்டு அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்குமாறு தனது கணவனை நீலிகா நச்சரித்து வந்துள்ளார்.
ஆனால் தாயின் உடல்நிலை கருதி விஷால் அதற்கு மறுத்துள்ளார். இதனால் விஷாலை மன ரீதியாகவும், உடல் ரீதியாவதும் நீலிகா துன்புறுத்தி வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, வேலைக்கு சென்று வீடு திரும்பிய விஷாலை நீலிகாவின் தந்தையும் சகோதரனும் தாக்கியுள்ளனர்.
தடுக்க வந்த விஷாலின் தாய் சரளாவின் தலை முடியை பிடித்து இழுத்து மருமகள் நீலிகா தாக்கியுள்ளார். இந்த சம்பவம் மொத்தமும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து தாக்கப்பட்ட தாயும் மகனும் நீலிகா குடும்பத்தினர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
- மனைவி வேலைக்கு செல்லும் நிலையில் கணவர் ஹைதர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.
- அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் மனைவி தகாத உறவில் இருப்பதாக சந்தேகித்து அவரை கணவன் சுத்தியலால் அடித்துக் கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக வேலை பார்த்து வந்தவர் அஸ்மா கான் (44 வயது). நொய்டாவில் செக்டார் 15 இல் தனது கணவன் நூருல்லா ஹைதர் (55 வயது) மற்றும் ஒரு மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார். கணவன்-மனைவி இருவரும் பொறியியல் பட்டதாரிகள். மனைவி வேலைக்கு செல்லும் நிலையில் கணவர் ஹைதர் வேலையில்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று வீட்டில் வைத்து மனைவியில் தலையில் சுத்தியலால் அடித்துக் கொலை செய்துவிட்டு, இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று கணவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரை கைது செய்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து உடலை மீட்டனர். மேலும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட சுத்தியலையும் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, அஸ்மாவுக்கு திருமணத்திற்குப் புறம்பான தொடர்பு இருப்பதாக ஹைதர் சந்தேகித்தார். இந்த சந்தேகத்தின் காரணமாக, அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தார். மேலும் தம்பதியினரிடையே தொடர்ந்து சண்டைகள் நடந்து வந்தன.
இதன் உச்சமாக நேற்று காலை 5 மணியளவில் அவர் மனைவியை கொலை செய்தார். தனது தாய் கொலை செய்யப்பட்டதாக மகன் உறவினர்களுக்கு போன் மூலம் கூறியுள்ளான். அவர்கள் அங்கு வருவதற்குள் கணவனே நேரடியாக போலீசில் சரணடைந்துள்ளார்.
- தர்ஷனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார்.
- கணவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் ஆண் குழந்தை பிறக்காததற்காக தனது 25 வயது மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தானே மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் நகரில் வசிப்பவர் 33 வயதான விஷால் கவாய். இவர் தர்ஷனா என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் தனது மனைவியின் பெற்றோரிடம் இருந்து விஷால் கவாய் தொடர்ந்து பணம் கேட்டு வந்துள்ளார்.
இதற்கிடையே தர்ஷனாவுக்கு இரண்டு மகள்கள் பிறந்த பிறகு அவரது துன்புறுத்தல் மோசமடைந்தது. ஆண் குழந்தையை பெற்றெடுக்காததற்காக விஷால் தர்ஷனாவை மனரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார்.
இதனால் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வீட்டின் கூரையில் தர்ஷனா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் பாரதீய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 108 (தற்கொலைக்குத் தூண்டுதல்), 80 (வரதட்சணை மரணம்), 115(2) (காயப்படுத்துதல்) மற்றும் 352 (வேண்டுமென்றே அவமதித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் கணவர் விஷாலை போலீசார் கைது செய்துள்ளனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- மனைவியுடன் சேர்ந்து வாழ அனுமதிக்காததால் கொலை செய்தேன் என மாமனாரை கொன்ற வாலிபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
- தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
மதுரை
மதுரை தெற்குவாசல் எப்.எப்.ரோடு பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது52). இவரது மகள் நாகரத்தினம். இவருக்கும் காஜா தெருவை சேர்ந்த பிரபாகரன் என்பவரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஆத்விக் என்ற மகன் உள்ளான்.
கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக நாகரத்தினம் கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கு வந்து விட்டார். பிரபாகரன் பலமுறை சமரசம் பேசியும் நாகரத்தினம் வர முடியாது என கூறிவிட்டார். மேலும் விவாகரத்து வழக்கும் நாகரத்தினம் சார்பில் தொடரப்பட்டது.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியன் தனது மகளுக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதையறிந்த பிரபாகரன் மாமனார் பாலசுப்பிரமணியனிடம் தகராறு செய்ததாக தெரிகிறது. நேற்று மாலை பாலசுப்பிரமணியன் வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது பிரபாகரன் உள்பட 4 பேர் அரிவாளால் பாலசுப்பிரமணியனை வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இது தொடர்பாக தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.
அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், நானும், நாகரத்தினமும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்ற மனைவியை என்னுடன் சேர்த்து வைக்காமல் மாமனார் பாலசுப்பிரமணியன் மறுமணம் வைத்து வைக்க முயற்சி செய்தார்.
பலமுறை சமரசம் பேசியும் எங்களை பிரித்து வைப்பதிலேயே ஆர்வம் காட்டினார். இதனால் மாமனாரை கொலை செய்தேன் என பிரபாகரன் போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.