search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு"

    • அலுவலர் ஒருவர் 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு இருந்ததை பார்த்துள்ளார்.
    • சாரை பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்பு படையினர் பாம்பை வனப்பகுதியில் விட்டனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் கரூர் ரோட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. அருகிலேயே வேளாண்மை துறை அலுவலகம்,கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், நில வருவாய் அலுவலர் அலுவலகம், சட்டமன்றத் தொகுதி அலுவலகம்,பயணியர் விடுதி, நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் உள்ளன.

    நேற்று காலை 10 மணி அளவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் அருகே 6 அடி நீளமுள்ள சாரை பாம்பு ஒன்று இருந்தது. அந்த வழியாக சென்ற அலுவலர் ஒருவர் பார்த்துள்ளார். உடனே வெள்ளகோவில் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து 6 அடி நீளம் உள்ள சாரை பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.

    குமாரபாளையத்தில் கம்பி வலையில் பாம்பு சிக்கியது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் தட்டான்குட்டை ஊராட்சி, ஜெய்ஹிந்த் நகர் பகுதியில் 80க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு காலி இடத்தில் தோட்டம் அமைத்து தனி நபர் ஒருவர் கம்பி வேலி அமைத்து இருந்தார். நள்ளிரவில் வந்த பெரிய பாம்பு ஒன்று வேலியில் சிக்கி போக வழியில்லாமல் தவித்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் மிகவும் அஞ்சினர். இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில், மீட்பு படையினர் நேரில் வந்து பாம்பை லாவகமாக மீட்டனர். இது குறித்து இப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:

    அதிக குடியிருப்புகள் ஆன பின்பும் பலமுறை இங்கு மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர ஊராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டது. இதுவரை எவ்வித பலனும் இல்லை. இது போல் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் உள்பட அனைவரும் அஞ்சி வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. வேலை முடிந்து இரவு வீட்டிற்கு திரும்பும் போது இது போல் பல சம்பவங்கள் நடந்துள்ளன. இனியும் தாமதம் செய்யாமல் மாவட்ட நிர்வாகத்தினர் பொதுமக்களின் நலன் கருதி மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • நாட்டறம்பள்ளி அருகே 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தீயணைப்புத் துறையினர் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.
    • அப்பகுதி இளைஞர்கள் 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி அருகே 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை கண்டு தீயணைப்புத் துறையினர் மீட்டு அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

    நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தரபள்ளி கல்லுக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பூபதி (வயது 27) இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று மாலை 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்தன. இதனை கண்ட பூபதி உடனடியாக நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது 2 பாம்புகள் பின்னி விளையாடி கொண்டிருந்ததை கண்டு சுமார் அரை மணி நேரம் காத்திருந்தனர். அதன் பிறகு பாம்புகள் தனித்தனியாக பிரிந்து சென்றது. பாம்பு பிடிக்கும் கருவி மூலம் பாம்பை பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர்.

    மேலும் அப்பகுதி இளைஞர்கள் 2 பாம்புகள் பின்னி விளையாடிக் கொண்டிருந்ததை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனது கணவர்தான் நாகப்பாம்பாக மறுபிறவி எடுத்து வீட்டுக்கு வந்ததாக மானஷா நம்பத் தொடங்கினார்.
    • பாம்பை பிடிக்க முயன்ற அந்த பகுதி மக்களிடம் மானஷா தகராறு செய்தார்.

    பெங்களூர்:

    கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் குல்லஹள்ளி கிராமத்தில் வசித்து வரும் மூதாட்டி மானஷா. இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

    இந்நிலையில் தனியாக வசித்து வந்த மானஷாவின் வீட்டிற்குள் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு நாகப் பாம்பு புகுந்துள்ளது. அதை கண்ட மானஷா, இறந்துபோன தனது கணவர்தான் நாகப்பாம்பாக மறுபிறவி எடுத்து வீட்டுக்கு வந்ததாக நம்பத் தொடங்கினார். மேலும் அந்த பாம்பிற்கு தொடர்ந்து பால் ஊற்றியும் வந்துள்ளார்.

    அந்த பாம்பும் 4 நாட்களாக அவரது வீட்டிலேயே தங்கியிருந்தது. இதுபற்றி அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தவுடன், அவர்கள் அந்த பாம்பை பிடிக்க முயன்றனர். ஆனால் மானஷா பாம்பு உருவில் தனது கணவர் இருப்பதாக கூறி, மக்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறைக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×