search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 223427"

    • கூட்டத்திற்கு இந்து முன்னணி தேனி மாவட்ட பொது செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.
    • இக்கூட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம், பொதுக்கூட்டம் தேனி பங்களாமேடு பகுதியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து முன்னணி தேனி மாவட்ட பொது செயலாளர் முருகன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட செயலாளர் உமையராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம், வேதபுரி சித்பவானந்த ஆசிரமம் ஸ்வாமி ஞானசிவானந்தர் ஆகியோர் கலந்து கொண்டு பிரச்சார பயணத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.

    முன்னதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

    இந்துக்களின் உரிமை மீட்க பிரச்சார பயணம் கடந்த 28-ம் தேதி திருச்செந்தூரில் இருந்து தொடங்கி இன்று தேனி வந்து அடைந்தது.

    வருகின்ற 31-ம் தேதி சென்னையில் இந்த பிரச்சார பயணம் நிறைவடைகிறது. இந்துக்களின் உரிமையை மீட்கவே இந்த பிரச்சார பயணம் நடத்தப்படுகிறது. இந்து முன்னணி அரசியல் கட்சி அல்ல இருப்பினும் அ.தி.மு.க-வில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நிர்வாகிகள் ஒற்றுமையுடன் செயல்பட்டு அக்கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பார்கள். தி.மு.க அரசு இந்து கோவில்களை திட்டமிட்டு இடித்து வருகிறது.

    ஆனால் சர்ச், மசூதி போன்றவற்றை இடிக்கவில்லை. தி.மு.க இந்து விரோத அரசு தான். தமிழக- கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். சிதம்பரம் நடராஜர் கோவில் முறையாக ஆய்வு செய்யவில்லை. இது தி.மு.க-வின் ஊழலுக்கு வழிவகுக்கும் வேலை.

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி காலத்தில் சர்க்கரையை எறும்பு சாப்பிட்டது என்றும், சாக்கு பையை கரையான் சாப்பிட்டது என்றும் சொல்லி ஊழல் செய்தனர். அதுபோல தான் கோவில் நகைகளை உருக்குவது. எனவே கோவில் நகைகளை உருக்கும் முடிவை கைவிட வேண்டும்.

    தி.மு.க அரசு இஸ்லாமியர்களுக்கு சாதகமாக உள்ளது. அதுபோல திராவிட மாடல் ஆட்சி என்பது இந்துக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஆட்சி. தமிழகத்தில் உள்ள அனைவரும் திராவிடர்கள் தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மதுரையில் நாளை மேலவளவு போராளிகள் பொதுக்கூட்டம் நடக்கிறது.
    • கூட்டத்துக்கு தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்குகிறார்.

    மதுரை

    மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலவளவு போராளிகள் 25-ம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் மதுரை புதூர் பேருந்து நிலையத்தில் நாளை (30-ந்தேதி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    கூட்டத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் தலைமை தாங்குகிறார். அலங்கை செல்வரசு, வி.பி.இன்குலாப் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். ப.கதிரவன் வரவேற்று பேசுகிறார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ் .அழகிரி, அமைச்சர் பி.மூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நவாஸ் கனி எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கூர் ராமலிங்கம், எவிடன்ஸ் கதிர், ம.தி.மு.க. மதுரை மாவட்ட செயலாளர் புதூர் பூமிநாதன் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வீரபாண்டியன், அ.தி.ம.மு.க. தலைவர் பசும்பொன் பாண்டியன், எஸ். டி .பி. ஐ .மாநில தலைவர் நெல்லை முபாரக், மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேன், மக்கள் சமூக நீதிப் பேரவை மாநில அமைப்பாளர் இரா.மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    அரசியல் கட்சி பிரமுகர்கள் மேலவளவு படுகொலை, அரசியல் அறியாமை, ஆதிகுடியினரின் அரசியல் உரிமை குறித்து கூட்டத்தில் பேசுகின்றனர். முடிவில் புதூர் பரமசிவம் நன்றி கூறுகிறார்.

    இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கிழக்கு தொகுதி செயலாளர் ஆ.கார்வண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

    • பல்லடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16வது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது.
    • பல்லடத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கடைவீதி வந்தடைந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அனைத்திந்திய மாதர் சங்கம் சார்பில் பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது. பல்லடத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 16வது திருப்பூர் மாவட்ட மாநாடு நடைபெற்றது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட ஊர்வலம் பல்லடம் அரசு கல்லூரி முன்பிருந்து துவங்கி பல்லடத்தில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று கடைவீதி வந்தடைந்தது. பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், மாநிலத் தலைவர் பொன்னுத்தாய், மாநில செயலாளர் பிரமிளா, திருப்பூர் மாவட்ட தலைவர் மைதிலி, மாநிலத் துணைத் தலைவர் சாவித்திரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை புதூரில் தியாகிகள் நினைவுதினம் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
    • காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கும்படி கொடுத்த மனு அன்றே நிராகரிக்கப்பட்டது.

    மதுரை

    அலங்காநல்லூரை சேர்ந்த செல்வராஜ் மதுரை ஐகேர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மேலவளவு தியாகிகளின் 25-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வருகிற 30-ந் தேதி திருமாவளவன் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் மதுரை அண்ணாநகர் அம்பிகா தியேட்டர் அருகில் நடத்த திட்டமிட்டிருந்தோம்.

    இதற்காக காவல் நிலையத்தில் அனுமதி அளிக்கும்படி கொடுத்த மனு அன்றே நிராகரிக்கப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மற்றும் மருத்துவமனை நிறைந்த பகுதியாக இருப்பதாக கூறி மனுவை நிராகரித்தனர்.

    பின்னர் மதுரை மாநகரில் ஏதேனும் ஒரு பகுதியை காவல்துறையினரை தேர்வு செய்து பொதுக்கூட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும் என மீண்டும் மனு அளித்தோம். அந்த மனு மீது தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    வருகிற 30-ந் தேதி மேல வளவு தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடத்த மதுரை மாநகருக்கு உட்பட்ட பகுதியில் அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

    இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை புதூரில் பொதுக்கூட்டம் நடத்த மாநகர காவல் ஆணையர் நேற்று அனுமதி வழங்கி உள்ளார் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

    • மேயர் மகேஷ் அறிவிப்பு
    • சுப. வீரபாண்டியன் பேசுகிறார்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க.சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் உள்ள பென்னப்ப நாடார் திடலில் நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் எனது(மகேஷ்) தலைமையில் நடைபெறும்.

    இதில் சிறப்பு பேச்சாளராக திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இந்த பொதுக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகளும்,அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறுப்பட்டுள்ளது.

    ×