என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி டாக்டர்"

      மத்தியப் பிரதேசத்தில் ஒரு போலி மருத்துவர் நோயாளிகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்ததில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      மத்தியப் பிரதேசத்தின் டாமோ நகரில் உள்ள ஒரு தனியார் மிஷனரி மருத்துவமனையில், பிரட்டன் நாட்டைச் சேர்ந்த பிரபல இதயவியல் நிபுணரான என்.ஜான் கெம் எனக் கூறி ஒருவர் போலி ஆவணங்கள் மூலம் மருத்துவராக சேர்ந்துள்ளார். பொறுப்பேற்ற பின் ஒரு மாதத்திலேயே இவர் இதய அறுவை சிகிச்சை செய்த 7 பேர் குறுகிய காலத்தில் உயிரிழந்தனர்.

      மாவட்ட அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இவர் போலி மருத்துவர் என்பதும், இவரின் உண்மை பெயர் நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்பது தெரியவந்தது.

      இதனையடுத்து தலைமறைவாக இருந்த போலி டாக்டரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாகராஜில் இருந்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். 

      • 10-ம் வகுப்பு கூட தாண்டாத யோகமீனாட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டோக்கன் போடும் ஆயாவாக பணியில் சேர்ந்துள்ளார்.
      • உங்கள் பகுதியில் வசிக்கும் நோயாளிகளை என்னிடம் அழைத்து வாருங்கள். ஒருவரை அழைத்து வந்தால் உடனடியாக 50 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

      மதுரை:

      மதுரை மாவட்ட சுகாதாரத்துறைக்கு ஒரு புகார் கடிதம் வந்தது. அதில் சம்மட்டிபுரம் ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு மனோரஞ்சிதம் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் காளிதாஸ் என்பவரின் மனைவி யோகமீனாட்சி (வயது 39) மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

      இந்த புகாரின் அடிப்படையில் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வராஜ், மருந்தாளுநர் பால செந்தில் மற்றும் எஸ்.எஸ். காலனி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி விசாரணை நடத்தினர். அப்போது யோகமீனாட்சி போலி டாக்டர் என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

      அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதன் விபரம் வருமாறு:-

      10-ம் வகுப்பு கூட தாண்டாத யோகமீனாட்சி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை பை-பாஸ் ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டோக்கன் போடும் ஆயாவாக பணியில் சேர்ந்துள்ளார். சில மாதங்களில் அங்கு வேலையை நன்கு கற்றுக்கொண்ட அவருக்கு நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை கொடுக்கும் வேலை வழங்கப்பட்டது.

      அதனையும் திறம்பட செய்த யோக மீனாட்சி அதற்கு அடுத்த கட்டமாக நர்சுகளிடம் பழகி நோயாளிகளுக்கு ஊசி போட பழகிக்கொண்டார். பின்னர் அவர் அந்த மருத்துவமனையில் டாக்டர்களின் அனுமதி இல்லாமல் நோயாளிகளுக்கு தன்னிச்சையாக ஊசி போடுவது, மருந்து வழங்குவது போன்ற வேலைகளை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

      ஆஸ்பத்திரிக்கு டாக்டர்கள் போல் டிப் டாப்பாக உடை அணிந்து வந்த யோகமீனாட்சி தன்னை ஒரு டாக்டர் என விவரம் தெரியாத நபர்களிடம் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். அவர்களிடம் தனது வீட்டு முகவரியை கொடுத்து ஏதேனும் உடல் நலக்குறைவு இருந்தால் என்னிடம் வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள். குறைந்த கட்டணம் தான் என கூறி உள்ளார்.

      இதனை நம்பி சிலர் யோக மீனாட்சியை சந்தித்து ஊசி போட்டு மருந்து மாத்திரைகளை வாங்கி உள்ளனர். இதில் சில பேருக்கு உடல் நலம் சீராகி உள்ளது.

      குறைந்த கட்டணத்தில் மருத்துவம் என்ற காரணத்தால் யோக மீனாட்சியிடம் சிகிச்சை பெற்றவர்கள் மூலம் அவருக்கு பொதுமக்கள் பலர் அறிமுகமாகினர். இதன் காரணமாக யோக மீனாட்சியை நாள்தோறும் குறைந்தது 30-க்கும் மேற்பட்டோர் சந்தித்து சிகிச்சை பெற்றனர்.

      இதையடுத்து யோக மீனாட்சி தனது வீட்டின் அருகிலேயே ஒரு கிளினிக் தொடங்கினார். நாட்கள் செல்ல செல்ல கிளினிக்கிற்கு வரும் கூட்டம் அதிகரித்தது. இதனால் 24 மணி நேரமும் பிசியாக யோகமீனாட்சி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இதற்காக ஒரு ஆண் உள்பட 2 பேரையும் வேலைக்கு சேர்த்தார்.

      அவர்களிடம், நான் ஏழை எளியோருக்கு குறைந்த செலவில் மருத்துவம் செய்ய விரும்புகிறேன். எனவே நீங்கள் உங்கள் பகுதியில் வசிக்கும் நோயாளிகளை என்னிடம் அழைத்து வாருங்கள். ஒருவரை அழைத்து வந்தால் உடனடியாக 50 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார்.

      இதனை நம்பி அவர்களும் 100-க்கும் மேற்பட்டோரை அழைத்து வந்துள்ளனர். இதற்காக, தான் வேலைக்கு சேர்த்த 2 பேருக்கும் யோக மீனாட்சி வெகுமதிகளை வழங்கினார். மேலும் மதுரையில் 200-க்கும் மேற்பட்டோருக்கு யோக மீனாட்சி குடும்ப டாக்டராக இருந்துள்ளார்.

      மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

      10-ம் வகுப்பு கூட தாண்டாத ஒருவர் மக்களின் உயிரை பற்றி சிந்திக்காமல் மருத்துவம் பார்த்தது மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      • 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்தார்
      • போலீசார் விசாரணை

      வந்தவாசி:

      வந்தவாசி காதர்ஜண்டா தெருவில் போலி டாக்டர் ஒருவர் கிளினிக் வைத்து மூல நோய்க்கு சிகிச்சை அளிப்ப தாக புகார்கள் வந்தன.

      இதை யடுத்து வந்தவாசி அரசு மருத் துவமனை தலைமை மருத் துவ அலுவலர் சிவப்பிரியா தலைமையிலான மருத்துவத் துறையினர் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட னர்.

      இதில் வந்தவாசி கஸ்தூரி பாய் தெருவைச் சேர்ந்த ரிஷி காந்த்ராய் மகன் அனந்தகு மார்ராய் (வயது 42) என்பவர் 9-ம் வகுப்பு வரை படித்து விட்டு கிளினிக் வைத்து மூல நோய்க்கு சிகிச்சை அளித்து வந்தது தெரிந்தது. இதைய டுத்து அவரிடமிருந்து மருத் துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்த னர்.

      இதுகுறித்து மருத்துவ அலு வலர் சிவப்பிரியா வந்தவாசி தெற்கு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனந்தகுமார்ராயை கைது செய்தனர்.

      மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • காவல்துறை அதிகாரிகள் துணையுடன் நாயக்கன் கொட்டாய் பகுதியில் சோதனை நடத்தினர்.
      • கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த ஊசிகள், மருந்து, மாத்திரைகளை கைப்பற்றி னர்.

      தருமபுரி,

      தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாய் பகுதியில் போலி மருத்துவர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாக மருத்துவம் மற்றும் ஊரக பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்திற்கு புகார் வந்தது.

      அதன் அடிப்படையில் போலி மருத்துவ ஒழிப்பு குழுவினருடன் கிருஷ்ணா புரம் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்து காவல்துறை அதிகாரிகள் துணையுடன் நாயக்கன் கொட்டாய் பகுதியில் சோதனை நடத்தினர்.

      அப்போது அப்பகுதியில் உள்ள மருத்துவமனை நடத்தி வந்த கண்ணன் (வயது 60) என்பவரிடம் உரிமை மற்றும் ஆவணங்கள் சோதனை மேற்கொண்டனர். அவர் பத்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து விட்டு கடந்த 10 ஆண்டுகளாக இந்த பகுதியில் மருத்துவம் பார்த்து வருவதாக விசாரணையில் தெரியவந்தது.மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது தந்தை ஹோமியோ மருத்துவம் பார்த்து வந்த பொழுது அதனை உடனிருந்து கற்று க்கொண்டு தனது தந்தை இறந்த பின்னர் கடந்த பத்தாண்டுகளாக நோயாளிகளுக்கு ஊசி போட்டும், மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.

      பின்னர் கிருஷ்ணாபுரம் போலீசார் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்த ஊசிகள், மருந்து, மாத்திரைகளை கைப்பற்றி னர்.

      • ராஜபாளையம் அருகே போலி டாக்டருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
      • சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி போன்றவை இருந்தன.

      ராஜபாளையம்

      விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுக ராஜ் (வயது 60) என்பவர் டாக்டர் என்று தெரிவித்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு அமலன் சேவுகராஜ் ஊசி போட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்தார். இவர் 5-ம் வகுப்பு வரை படித்து விட்டு மருத்துவம் பார்ப்ப தாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர் டாக்டர் முருக வேல் தலைமையிலான குழுவினர் மவுண்ட் சியோன் பகுதிக்கு சென்று அமலன் சேவுகராஜ் நடத்தி வந்த மருத்துவமனை யில் சோதனை நடத்தினர். அப்போது அமலன் சேவுகராஜ் அங்கில்லை. அங்கு அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி போன்றவை இருந் தன. அதனை பறிமுதல் செய்தனர். போலி டாக்டர் தலைமறைவாகி விட்ட தால் இது குறித்து தளவாய் புரம் போலீஸ் நிலையத்தில் மருத்துவ துறை இணை இயக்குநர் டாக்டர் முருக வேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலன் சேவுகராஜை தேடி வருகின்றனர்.

      • அனுமதியின்றி ரத்த பரிசோதனை நிலையம் வைத்துக்கொண்டு, அங்கு நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
      • நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் ராபர்ட்டை போலீசார் கைது செய்தனர்.

      திருவள்ளூர்:

      ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தாலுகா, பாண்டியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் (வயது 43). இவர், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகை பஜார் வீதியில் அனுமதியின்றி ரத்த பரிசோதனை நிலையம் வைத்துக்கொண்டு, அங்கு நோயாளிகளுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக திருத்தணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

      இதையடுத்து, திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ், திருத்தணி அரசு ஆஸ்பத்திரியின் தலைமை டாக்டர் ராதிகா தேவி ஆகியோர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் ராபர்ட், பிளஸ்-2 மற்றும் லேப் டெக்னீசியன் படித்து விட்டு அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. அங்கிருந்த மருந்துகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி டாக்டர் ராபர்ட்டை போலீசார் கைது செய்தனர்.

      இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட தனிப்படை போலீசார் பள்ளிப்பட்டு பகுதியில் அரசு டாக்டர் லட்சுமி நாராயண் உதவியுடன் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது பள்ளிப்பட்டு பகுதிகளில் 10-ம் வகுப்பு வரை மட்டும் படித்து விட்டு கிளினிக் நடத்தி வந்த மோகன் (47), வடிவேலு (53) ஆகிய போலி டாக்டர்களை போலீசார் கைது செய்தனர்.

      அதேபோல ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம், செங்கட்டானூர் பகுதியில் போலி டாக்டர் ஞானபிரகாசத்தை (40) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவர், எலக்ட்ரோபதி என்ற படிப்பை முடித்துவிட்டு மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது.

      மேலும் திருவாலங்காடு ஒன்றியம், வீரராகவபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வீரக்கோவில் கிராமத்தில் மூதாட்டி ஒருவர், அவருடைய கணவர் கிளினிக் வைத்து நடத்திய அனுபவத்தை கொண்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக திருவாலங்காடு போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் அந்த கிளிக்கில் சோதனை நடத்தினர்.

      இதில் மூதாட்டி ரெஜினா (74) அந்த பகுதியில் 15 ஆண்டுகளாக அலோபதி மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. சுகாதாரத்துறையினர் புகாரின்பேரில் திருவாலங்காடு போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      இதைபோல கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிறபேட்டையில் முதலுதவி மையம் என்ற பெயரில் மருந்து கடையுடன் சேர்த்து நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவம் பார்த்த மகேஷ் (31) மற்றும் கவரைப்போட்டையில் சித்தா மருத்துவம் படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த ஞானசுந்தரி (46) ஆகிய 2 பேரை பிடித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • சோதனையில் சிக்கினர்
      • போலீசார் விசாரணை

      ஆம்பூர்:

      ஆம்பூர் அரசு மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர் லோகேஷ் உமராபாத் போலீசாரிடம் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் அளித்தார்.

      அதன் பேரில் போலீசார் வெங்கட சமுத்திரம் கூட்டு ரோட்டில் சோதனையில் ஈடுபட்டனர்.

      இமானுவேல் (60) என்பவர் மருத்துவம் படிக்காமலேயே ஆங்கில முறையில் பொதுமக்களுக்கு சிகிச்சை செய்தது தெரிந்தது. பின்னர் போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • கரட்டாங்காட்டில் இயங்கி வந்த விஸ்வந்த் கிளினீக் குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது.
      • மருத்துவத் துறையினர் கடந்ந 13ந் தேதி, 'சீல்' வைத்தனர்.

      திருப்பூர் :

      திருப்பூர் கரட்டாங்கா ட்டில் இயங்கி வந்த விஸ்வந்த் கிளினீக் குறித்து கலெக்டருக்கு புகார் சென்றது. இதனால் கிளினீக்கில் ஆய்வு நடத்திய மருத்துவத் துறையினர் கடந்ந 13ந் தேதி, 'சீல்' வைத்தனர்.

      கிளினீக் நடத்தி வந்த அண்ணாதுரை, டில்லியில் சித்த மருத்துவ படிப்பு முடித்ததாக தெரிவித்தார். அதற்கான சான்றிதழை ஆய்வு செய்ததில், அது போலி என்பது தெரிந்தது. மேலும் மருத்துவ படிப்பு முடிக்காமல், நோயா ளிகளுக்கு மருத்துவம் பார்த்து, மருந்து, மாத்திரை எழுதிக் கொடுத்து, ஊசி செலுத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து கலெக்டரின் உத்தரவின்படி தெற்கு போலீசில் அண்ணாதுரை மீது புகார் அளிக்கப்பட்டது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

      • வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
      • வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

      கோவை:

      குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது49). இவர் ஓமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

      இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக எர்வினை கைது செய்து அழைத்து சென்றனர்.

      இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் தங்கராஜ், கைதான எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

      சோதனையின் போது வீட்டில் போலி தங்க கட்டிகள், மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், மற்றும் 3 ரப்பர் ஸ்டாம்பு, ஒரு துப்பாக்கி (ஏர்கன்) ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

      வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

      விசாரணையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் எவின்ஸ் வாடகைக்கு வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார்.

      கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை காணவில்லை என என்னிடம் கேட்டார். அதற்கு நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே என்றேன்.

      அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

      இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

      இதனையடுத்து போத்தனூர் போலீசார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? என விசாரித்து வருகிறார்கள். எர்வின் போலி டாக்டராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

      • மருத்துவம் படிக்காமல் டாக்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
      • சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      தருமபுரி,

      தருமபுரி மாவட்டம், அரூர் அருகே ஈச்சம்பாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன் (வயது42). இவர் 10-ம் வகுப்பு படித்து முடித்து தனியார் மருத்துவமனை நடத்தி வருவதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் அரூர் அரசு மருத்துவ அலுவலர் அருண்பிரகாஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சந்திரசேகரன் மருத்துவம் படிக்காமல் டாக்டராக பணியாற்றி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அரூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

      • ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர் என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
      • அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.

      திருப்பூர்:

      திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வலசுபாளையத்தில் அரசு அனுமதியின்றி இயங்கி வந்த "ஜெய்சக்தி நேச்சுரல் க்யூர் சென்டர்" என்ற அக்குபஞ்சர் சிகிச்சை மையத்திற்கு நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

      இந்தநிலையில் அங்கு சிகிச்சை பார்த்து வந்த அருள் என்பவரிடம் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்தில் நடத்திய விசாரணையில் அவர் அக்குபஞ்சர் மருத்துவம் படிக்காமல் உரிய தகுதியின்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது உறுதியானது.

      இதனைதொடர்ந்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் கனகராணி அளித்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் அருள் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் அவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

      • அதிகாரிகள் சோதனையில் சிக்கினார்
      • ஜெயிலில் அடைத்தனர்

      ராணிப்பேட்டை:

      ராணிப்பேட்டை அடுத்த மாந்தாங்கல் மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் வள்ளி (வயது 45). இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் அப்பகுதியில் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதார துறை அதிகாரி களுக்கு புகார்கள் வந்தன.

      அதன் பேரில் சுகாதார பணிகள் இணை இயக்குநர் விஜயா முரளி தலைமையில் அதிகாரிகள், வள்ளி வீட்டில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.

      அப்போது வள்ளியின் வீட்டில் ஆங்கில மருத்துவத்திற்கான மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசிகள் இருப்பதும், இவர் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்பட பல்வேறு வியாதி களுக்கு மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது.

      இதே தொடர்ந்து அதிகாரிகள் ராணிப்பேட்டை போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டரான வள்ளியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

      இதே போல் வாலாஜா ஒத்தவாடை தெருவில் போலி மருத்துவம் பார்க்கப்படுவதாக வந்த புகாரின் பேரில் அங்கு பரத் (25) என்பவரின் வீட்டை சோதனை செய்தனர்.

      சோதனையில் ஆங்கில மருத்துவம் படிக்காமல் மருத்துவம் பார்ப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த அறையை பூட்டி சீல் வைத்தனர்.

      ×