search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • வேளாண்மை (ஆங்கிலம், தமிழ் வழி), தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.
    • 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர், ஜூலை.3-

    கோவை வேளாண் பல்கலைகழகத்தில் பட்டயப்படிப்புக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க ஜூலை 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இப்பல்கலையின் கீழ் வேளாண்மை (ஆங்கிலம், தமிழ் வழி), தோட்டக்கலை, வேளாண் பொறியியல் ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பம் பெறப்படுகிறது.விண்ணப்பம் வழங்க தற்போது 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    www.tnagfi.ucanapply.com என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விபரங்களுக்கு, 0422-6611346, 9488635077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • “நான் முதல்வன்“ திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    • மாணவ மாணவிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்து போட்டியில் பங்கு பெற்று தனி நபர்களின் திறமைகளை நிரூப்பித்திட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் "நான்முதல்வன்" திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சர்வதேச அளவிலான மற்றும் இந்திய அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்பட்டு வரும் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    மேற்படி மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க https://naanmudhalvan.tn.gov.in/tnskills/  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.போட்டிகளுக்கு விண்ணப்பிக்க வருகிற ஜூலை மாதம் 7-ந் தேதி கடைசி நாள் ஆகும்.விண்ணப்பதாரர்கள் கடந்த 2002 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில குழுவாக பங்குபெறும் சில தொழில் பிரிவுகளுக்கு கடந்த 1999 ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதி அல்லது அதற்கு பிறகு பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தொழிற் பயிற்சி நிலையங்களில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்கள் தொழில் பழகுநர்கள் பயிற்சி முடித்தவர்கள் தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு திருப்பூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக மாவட்ட உதவி இயக்குநரை தொடர்பு கொள்ளலாம்.

    இப்போட்டிக்கு இதுவரை சுமார் 1000 விண்ணப்பதாரர்கள் பதிவு செய்துள்ளனர். திறன் ேபாட்டிக்கு பதிவு செய்திட ஜூலை 7-ந் தேதி கடைசி என்பதால் மாணவ மாணவிகள் மற்றும் தகுதியுடைய நபர்கள் இப்போட்டிக்கு பதிவு செய்து போட்டியில் பங்கு பெற்று தனி நபர்களின் திறமைகளை நிரூப்பித்திட இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.

    மேலும் மாவட்ட அளவிலான திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநிலஅளவிலான திறன் போட்டிக்கும் மாநில அளவில் வெற்றி பெற்றவர்கள் இந்திய அளவிலும்,இந்திய அளவில் வென்றவர்கள் சர்வதேச அளவிலான திறன் போட்டிக்கும் பங்கு பெறலாம்.தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0421-2250500, 94990 55695,94434 71184. https://naanmudhalvan.tn.gov.in/tnskills/என்ற இணையதள முகவரியின் வாயிலாகவோ அல்லது கீ QR Code- மூலமாகவோ பதிவுகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.  

    • மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர்.
    • எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும்.

    திருப்பூர்:

    நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அழைப்பு விடுத்துள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளிகளை சேர்ந்த 437 பேர் நீட் தேர்வெழுதியதில் 215 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கும் வகையில் எவ்வாறு ஆன்லைனில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது என்பது குறித்து விழிப்புணர்வு ஆலோசனைக்கூட்டம், திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் நடந்தது.

    பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா தலைமை வகித்தார். எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இணையதளத்தில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன உள்ளன, எவ்வளவு நாட்களுக்குள், என்னென்ன ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். சுயநிதி மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிக்கான ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளிட்ட விபரங்களை மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் விளக்கினார்.

    இதில் மாவட்டத்தில் நீட் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவிகள் 90 பேர் பங்கேற்றனர். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புக்கு https://tnhealth.tn.gov.in/  https://tnmedicalselection.net/  என்ற இணையதளத்தில் ஜூலை 10-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    • கணினி இயக்குபவர் பணியிடம் ஒன்று பூர்த்தி செய்யப்பட உள்ளது.
    • திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்ட சமூகநல அலுவலகத்தில் இயங்கிவரும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பொதுப்பிரிவில் (முன்னுரிமையற்றவர்கள்) ஒப்பந்த அடிப்படையில் மாதம் ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் கணினி இயக்குபவர் பணியிடம் ஒன்று பூர்த்தி செய்யப்பட உள்ளது.

    இந்த பணியிடத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மாதிரி விண்ணப்பம் மற்றும் இதர விபரங்களை திருவாரூர் மாவட்ட இணையதளத்தில் https://tiruvarur.nic.in பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பதிவு அஞ்சலில் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக இணைப்பு கட்டிடம், தரைத்தளம், திருவாரூர்-610 004 என்ற முகவரிக்கு வருகிற 30-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதில் இருந்து 45 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 45 வயதில் இருந்து 55 வயது வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.

    பெரம்பலூர்:

    தமிழகத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உருவாக்கும் (யூ.ஒய்.இ.ஜி.பி.) நோக்கத்தின் அடிப்படையிலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் திட்டம் தமிழக அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசாணையின் படி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் 25 சதவீத அரசு மானியமாக அதிகபட்சம் ரூ.1.25 லட்சம் வரை வழங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் என்ற அடிப்படையில் திட்டம் செயல்பட்டு வந்தது. இந்த நிதியாண்டில் வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

    இதற்கு அரசு மானியம் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 35 வயதில் இருந்து 45 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 45 வயதில் இருந்து 55 வயது வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் வியாபார தொழில் செய்ய விண்ணப்பிக்க விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப நகலை பெரம்பலூர் மாவட்ட தொழில் மையத்திலும் ஒப்படைக்க வேண்டும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு செல்போன் எண்கள் 8925533977, 8925533978 மற்றும் 04328 225580 ஆகிய தொலைபேசி எண்ணில் அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரை நேரில் அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • தீவனப் பயிர் சாகுபடி திட்டங்களில் பயன்பெற கால்நடை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    • சங்க உறுப்பினர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பசுந்தீவன பற்றாக்கு றையை நிவர்த்தி செய்யும் வகையிலும், வறட்சி காலங்களில் கால்நடை களுக்கு தீவனம் வழங்கும் பொருட்டும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனம் உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும் கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் நடப்பு நிதியாண்டில் (2023-24) அரசு மானியத்துடன் கூடிய கீழக்கண்ட தீவனப் பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

    வேளாண்மைத்துறை இணை இயக்குநருடன் கலந்தாலோசித்து தோட்டம், பழத் தோட்டங்களில் ஊடு பயிராக பசுந்தீவனங்கள் சாகுபடி செய்வதற்கு 20 ஏக்கர் குறியீடு பெறப்பட்டுள்ளது.

    கால்நடை வளர்ப்பவராக இருந்து, குறைந்த பட்சம் 0.25 ஏக்கர், அதிக பட்சம் 1 ஏக்கர் பரப்பில் பாசன வசதியுடன் கூடிய நிலம் உள்ளவராக இருத்தல் வேண்டும். மேலும், இதற்கு முன் இச்சலுகையை பெற்றவராக இருத்தல் கூடாது.

    பசுந்தீவனங்கள் வீணாவதை குறைப்பதற்காக புல்வெட்டும் கருவிகள் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற 2 கால்நடைகள் வைத்திருக்க வேண்டும். இதற்கு முன் 10 வருடங்களில் இந்த சலுகையை பெறாத வராகவும் புல் வெட்டும் கருவி 50 சதவீத தொகையை ஏற்பவராகவும் இருக்க வேண்டும்.

    எல்லா இனங்களிலும் 30சதவீதம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்த வர்கள் தேர்ந்தெடுக்கப் படுவர். மேலும் குறுவிவ சாயிகள் மற்றும் ஆவின் கூட்டுறவு சங்க உறுப்பி னர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெற விருப்பமுள்ள திட்டங்களை குறிப்பிட்டு எழுத்து மூலமாக விண்ணப்பம் அளிக்கலாம்.

    மேலும் தங்கள் கால்நடை களுக்குத் தேவையான தீவன விதைகளை இத்திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வயதுவரம்பு 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும்.
    • 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரான்ஸில் உள்ள லியான் நகரில் செப்டம்பர் 2024-ம் ஆண்டு சர்வதேச திறன் போட்டி நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள ஏதுவாக தொடக்க நிலையில் மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடத்தப்படு கிறது.

    இதில் பங்கேற்க naanmudhalvan.tn.gov.in/tnskills/ என்ற இணையதளத்தில் தகுதி வாய்ந்த விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பிக்க லாம். இதில் 55 தொழிற்பிரி வுகளில் தங்களது தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற உள்ள இப்போட்டிக்கு விண்ணப் பிக்க வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும்.

    இதற்கான வயதுவரம்பு 1.1.1999 அன்றும், அதற்கு பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கு 1.1.2002 அன்றும், அதற்கு பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

    இதற்கான கல்வித்தகுதி 5 முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள், படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்பயிற்சி நிலையம், தொழில்நுட்ப கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இதுதொடர்பான விவரங்களை இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

    மேலும் விபரங்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரிடம் நேரிலோ, அல்லது 04365-250126 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மத்திய அரசின் உள்துறை சாா்பில் 3 பிரிவுகளில் தொடா் விருதுகள் வழங்கப்படுகின்றன.
    • ஜூன் 26 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    திருப்பூர் :

    மத்திய அரசின் உள்துறை சாா்பில் 2023 ம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா தொடா் விருதுகளுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

    இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு :- மத்திய அரசின் உள்துறை சாா்பில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜீவன் ரக்ஷா தொடா் விருதுகள் தைரியமான மற்றும் மனிதாபிமான செயல்களை செய்து உயிா்களைக் காத்த நபா்களுக்கு சா்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக், உத்தம் ஜீவன் ரக்ஷா பதக், ஜீவன் ரக்ஷா பதக் ஆகிய 3 பிரிவுகளில் தொடா் விருதுகள் வழங்கப்படுகின்றன.nஇந்த விருதுக்கு உயிரைக் காக்கும் மனிதத் தன்மை மிகுந்த தீரச்செயலான நீரில் மூழ்குதல், விபத்துகள், தீ விபத்துகள், மின்கசிவு, நிலச்சரிவுகள், விலங்குகள் தாக்குதல் மற்றும் சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை போன்றவற்றில் இருந்து உயிரைக் காப்பாற்றிய நபா்களுக்கு இந்த தொடா் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    மேற்குறிப்பிட்டுள்ளபடி தகுதி வாய்ந்த நபா்கள் உரிய ஆவணங்களுடன் திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் படிவம் பெற்று வரும் ஜூன் 26 -ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இணையதளம் வழியாக வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்ப கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    2023-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாற்றுசான்றிதழ் , மதிப்பெண் சான்றிதழ் (8-ம் வகுப்பு, 10, 12-ம் வகுப்பு ), சாதிசான்றிதழ் , முன்னுரிமை சான்றிதழ் (மாற்றுதிறனாளிகள்/விதவை/முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்/ மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையானவர்/ தாய், தந்தை இழந்த ஆதரவற்ற மாணவர்கள்), புகைப்படம் - 2 , ஆதார் கார்டு ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம். ஆகஸ்ட்-2023 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்புதேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை பயிற்சியில் சேரலாம். முன்னாள் இராணுவத்தினருக்கு 14 முதல் 45 வயது வரை . மாற்று திறனாளிகளுக்கு குறைந்த பட்ச வயது 14 முதல் உட்ச வரம்பு வயது இல்லை. 2020-2021 ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 8-ம் வகுப்பு கல்வித் தகுதிக்குரிய தொழில் பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும்.

    மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ்பாஸ், வரைபடகருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 750வழங்கப்படும்.

    அரசுபள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்விதிட்டத்தின் கீழ் ரூ.1000 மாதாந்திர கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூர் அல்லது அருகிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 9994043023 , 7708709988 , 9840950504 , 9442220049 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மானிய விலையில் பசுந்தீவனம் பயிரிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
    • பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில், 2023-24 நிதியாண்டில் பசுந்தீவனப் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ரூ.2.7 லட்சம் பசுந்தீவன வளர்ப்பு நிதி இலக்கீட்டில் ஒதுக்கப் பட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக, தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள் ஆகும். பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு, கறவை மாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது.

    கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவினத்தில் 70 விழுக்காடு தீவன மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படு கிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும் உற்பத்திக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது.

    ஆகவே தீவனப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் மாநில தீவன அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டில், ஒருங்கிணைந்த தீவன அபிவிருத்தி திட்டம் 2023-24-ன் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 90 ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

    கால்நடை வளர்ப்போர் பயன் பெறும் பொருட்டு நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை, பழந்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களான தீவன சோளம், கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், பல்லாண்டு பயிர் வகைகள், பல்லாண்டு தீவன புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு மூன்று வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரமும், ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,500 வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.

    மேலும் இந்த திட்டத்தில் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களில் உள்ள சிறு, குறு மற்றும் தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடி யினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். எல்லா திட்ட இனங்களிலும், 30 சதவீதத்திற்கும் மேல், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    மேற்காணும், திட்டத்தின் மூலம், பயன்பெற விருப்பமுள்ள கால்நடை வளர்ப்பில், ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்கள் பகுதிகளிலுள்ள, கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி எழுத்து மூலமாக விண்ணப்பத்தை வருகிற ஜூன் 20-ந் தேதிக்குள் அளித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்திட்டங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • மகளிர் குழு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முடிவடைந்திருக்க வேண்டும்.
    • வருகிற 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் 2023-24 சிறுதானிய ஆண்டினை முன்னிட்டு பொதுமக்கள் மத்தியில் சிறுதானியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணமும், சிறுதானிய உணவு பழக்க வழக்கங்களை அதிகப்படுத்தும் வண்ணமும் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகத்தில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் சிறுதானிய சிற்றுண்டி உணவகம் நடத்திட விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    பெறப்படும் விண்ணப்பங்களை மாவட்ட அளவிலான குழுவினால் கூர்ந்தாய்வு செய்யப்படும்.

    மாவட்ட ஆட்சித்தலைவர் பெருந்திட்ட வளாகம் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள ஊராட்சியின் மகளிர் சுய உதவிக்குழு , உற்பத்தியாளர் குழுக்கள் , கூட்டமைப்பு மட்டுமே தேர்வு செய்யப்படும்.

    தகுதியுள்ள சுயஉதவிக் குழுக்கள் இல்லை எனில் சம்மந்தப்பட்ட குழு கூட்டமைப்பு தீர்மானத்தின் அடிப்படையில் அருகாமையில் உள்ள வேறு மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தேர்வு செய்யப்படும்.

    மகளிர் குழு துவங்கப்பட்டு குறைந்த பட்சம் 2 ஆண்டுகள் முடிவுற்றிறுக்க வேண்டும். NRLM MIS இணையதளத்தில் பதிவு செய்திருக்க வேண்டும்.

    கூட்டமைப்பாக இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு A அல்லது B சான்று பெற்றிருக்க வேண்டும். உற்பத்தியாளர் குழுவாக இருக்கும் பட்சத்தில் இருக்கும் பட்சத்தில் தரமதிப்பீடு செய்யப்பட்டு திட்ட நிதி பெறப்பட்டிருக்க வேண்டும்.

    சுய உதவிக்குழுக்கள், உற்பத்தியாளர் குழுக்கள், கூட்டமைப்பு சிறுதானிய உணவு உற்பத்தி மற்றும் சிறு தானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் ஆர்வம் மற்றும் முன் அனுபவம் உடையவராக இருத்தல் வேண்டும்.

    விண்ணப்பிக்கும் தகுதியான கிராமப்புற சமுதாய அமைப்புகள் தொடர்புடைய ஊராட்சி

    ஒன்றியத்தைச் சார்ந்த வட்டார இயக்க மேலாளரை தொடர்புகொண்டு வரும் 16-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சேர்க்கைக்கு விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
    • இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதா வது:-

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகப்பட்டினம், திருக்குவளை மற்றும் செம்போடை அரசு தொழிற் பயிற்சி நிலையம் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கு 20.06.2023 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

    www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக பதிவு செய்ய வேண்டிய கடைசி நாள்.20.06.2023.

    இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மேற்கண்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    கல்வித்தகுதி 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10-ம் வகுப்பு தேர்ச்சி. விண்ணப்பக் கட்டணம் ரூ.50 - தொழிற் பயிற்சி நிலைய விவரங்கள் தொழிற் பிரிவுகள் இவற்றிற்கான கல்வித் தகுதி வயது வரம்பு இடஒதுக்கீடு ஆகியவை www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள விளக்க கையேட்டில் தரப்பட்டுள்ளது.

    மேலும் விவரங்களுக்கு நேரிலோ அல்லது தொலைபேசி எண் 04365-250129 04369-276060 9487160168 மற்றும் மின்னஞ்சல் முகவரி govtitinagai@gmail.comதொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×