search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விண்ணப்பம்"

    • 3,4 ந் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
    • நியாய விலை அங்காடி பணியாளர்கள் மூலம் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    விழுப்புரம்:

    விழுப்புர மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியதாவது

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் பயனாளிகள் விண்ணப்பம் அளிப்பதற்கு ஒவ்வொரு நியாயவிலை அங்காடியினையும் ஒரு அலகாக கொண்டு சிறப்பு முகாம்கள் முதற்கட்டமாக 24.07.2023 முதல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சுமார் 1027 முகாம்கள் நடத்தப்பட்டது. முதற்கட்ட சிறப்பு முகாமில் கலந்துக்கொள்ள இயலாமல் விடுபட்ட பயனாளிகள் தங்களின் விண்ணப்பங்களை அளித்திட ஏதுவாக 03.08.2023 மற்றும் 04.08.2023 ஆகிய இரு தினங்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. மேலும் 2வது கட்டமாக வரும் 05.08.2023 முதல் 16.08.2023 வரை (சனி மற்றும் ஞாயிறு கிழமைகள் உட்பட) தொடர்ந்து சுமார் 2,77,315 குடும்ப அட்டைதாரர்களுக்கு 690 சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்கு 01.08.2023 முதல் விண்ணப்பங்கள் ஒவ்வொரு தெருவாரியாக நியாய விலை அங்காடி பணியாளர்கள் மூலம் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முதல்கட்டமாக 3,59,315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் செயல்படுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 59 ஆயிரத்து 315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் குண்டடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பம் பதிவு மையங்களை ஆய்வு மேற்கொண்டார்.

    இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக நடைபெறும் முகாம்களுக்கு கடந்த 20ம் தேதி முதல் 23 ம் தேதி வரை 4 நாட்கள் விண்ணப்ப படிவங்கள் மற்றும் டோக்கன்கள் ஒவ்வொரு வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கப்பட்டது.

    திருப்பூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக கடந்த 24ம் தேதி முதல் தொடங்கி 4 ம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-1 மற்றும் மண்டலம்-2 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், திருப்பூர் மாவட்டத்திலுள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் 265 ஊராட்சிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

    முதல்கட்டமாக 3,59,315 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,135 நியாயவிலைக் கடைகளில் 8,18,344 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் முதல் கட்டமாக 827 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 5,34,460 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    2ம் கட்டமாக, 308 நியாய விலை கடைகளுக்குட்பட்ட 2,83,884 குடும்ப அட்டைதாரர்களுக்கான விண்ணப்ப பதிவு செய்யும் பணிகள் வருகிற 5ம் தேதி முதல் 16 ம் தேதி வரை திருப்பூர் மாநகராட்சி மண்டலம்-3 மற்றும் மண்டலம்-4 ஆகிய பகுதிகளுக்குட்பட்ட 30 வார்டுகளிலும், 6 நகராட்சி பகுதிகளிலுள்ள 147 வார்டுகளிலும் மற்றும் 15 பேரூராட்சிகளுக்குட்பட்ட 233 வார்டுகளிலும் 2 வது கட்டமாக விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

    இந்த விண்ணப்பபதிவு முகாம்கள் பொது மக்களின் வசதிக்கேற்ப அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலைக்கடை அருகில் உள்ள அரசு அலுவலக கட்டடங்கள், சமுதாய நலக்கூடங்கள் மற்றும் பள்ளிகளில் விண்ணப்ப பதிவு முகாம்கள் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும்.
    • வருகிற 10-ந் தேதிக்குள் இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின்கீழ் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2½லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

    https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11-ம் வகுப்பு படித்து கொண்டிருக்க வேண்டும்.

    9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1¼ லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

    தேசிய தேர்வு முகமை நடத்தும் மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான நுழைவு தேர்வில் பெற்ற தகுதியுடன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

    இத்தேர்விற்கு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதிக்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தலில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் 29-ந் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைபேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இத்திட்டம் தொடர்பான முழுமையான விபரங்கள் https://yet.nta.ac.in மற்றும் https://socialjustice.gov.in/schemes/ Mfpa ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 2023-24- ஆம் ஆண்டிற்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
    • விண்ணப்பத்துடன் செல்போன் எண், மாணவரின் ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

     திருப்பூர்:

    மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பித்து எழுத்துத்தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெறலாம். அதன்படி 2023-24-ம் நிதியாண்டில் நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தை சேர்ந்த 3ஆயிரத்து 93 மாணவ-மாணவிகளுக்கு இந்த கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில்பட்டியலிடப்பட்டுள்ளபள்ளிகளில் 9-ம் வகுப்புஅல்லது 11-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையும், 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாகரூ.1 லட்சத்து 25 ஆயிரமும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத்தேர்வில் பெற்ற தேர்ச்சியின் அடிப்படையில் https://yet.nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி முதல் 16-ந் தேதிக்குள் விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

    செப்டம்பர் மாதம்29-ந்தேதி எழுத்துத்தேர்வு நடைபெறும். விண்ணப்பத்துடன் செல்போன் எண், ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கு எண், வருமான சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இந்த திட்டம் தொடர்பான விவரங்களை http://socialjustice.gov.in/schemes/ என்ற இணைய தளத்தில் பார்வையிடலாம்.இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் மாதாந்திர உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.
    • இந்த தகவலை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    விருதுநகர்

    மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியினை பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கும் பதிவுதாரர்களுக்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி தொகை வழங்கப்படுகிறது.

    வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை காலாண்டு தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். வயது உச்சவரம்பின்றி 10 ஆண்டுகள் வரை மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை பெறலாம்.வேலைவாய்ப்பு அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றுகள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, ஆதார் அட்டை, ஸ்மார்ட் கார்டு மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குப்புத்தகம் ஆகியவற்றுடன் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை விண்ணப் பத்தை அலுவலக வேலை நாளில் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.

    உதவித் தொகை பெற்றால் வேலைவாய்ப்பு எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது.

    இந்த உதவித்தொகை மாதம் தோறும் கணக்கீடு செய்து நேரடியாக பயனாளிகளது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    ஏற்கனவே உதவித் தொகை பெற்றுள்ள பயனாளிகள் மீண்டும் விண்ணப்பிக்க தேவை யில்லை. வேலை வாய்ப்பற் றோர் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளி பயனாளிகள் தொடர்ச்சியாக உதவித் தொகை பெற சுய உறுதிமொழி ஆவணம் ஒவ்வொரு ஆண்டும் சமர்ப்பிக்க வேண்டும்.

    ஏற்கனவே சுய உறுதிமொழி ஆவணம் கொடுத்திருந்தால் அலுவலகம் வர தேவையில்லை.

    இவ்வாறு விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 5 வகையான மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விண்ணப்பங்கள் உள்ளது.
    • இ-சேவை மற்றும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளான கல்வி உதவித்தொகை விண்ணப்பம், உதவி உபகரணங்கள் பெறு வதற்கான விண்ணப்பங்கள், வங்கி கடன் மானிய விண்ணப்பங்கள், திருமண உதவித்தொகை விண்ணப்பம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட 5 வகை மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விண்ணப்பங்களை வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் அருகே உள்ள இ-சேவை மற்றும் https://tnesevai.in.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
    • வருகிற 31-ந் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகப்பட்டினம் மாவட்டம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005-ன் கீழ் பொதுப்பிரிவில் (முன்னுரிமையற்றவர்கள்) காலியாக உள்ள ஒரு கணினி இயக்குபவர் பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    இதற்கு மாவட்டத்தை சேர்ந்த தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும், விபரங்களை நாகப்பட்டினம் மாவட்ட இணையதளத்தில் www.nagapattinam.nic.in பதிவிறக்கம் செய்து தெரிந்து கொள்ளலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பதிவஞ்சலில் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், திட்ட செயலாக்க அலுவலக வளாகம், தரைத்தளம், புதிய கடற்கரை சாலை செல்லும் வழி, நாகப்பட்டினம்-611 001 என்ற முகவரிக்கு வருகிற 31-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விண்ணப்பங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும்.
    • பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படுகிறது.

    இதற்காக தமிழகத்தில் தகுதி வாய்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வழங்கும் பணி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் முதல் கட்டமாக கடந்த 20-ந் தேதி 850 ரேஷன் கடைகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களிடம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் தஞ்சை மாவட்டத்தில் இன்று 880 மையங்களில் தொடங்கியது.

    இந்த நிலையில் தஞ்சை தாலுகா அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் கட்டுப்பாட்டு அறையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சை தாலுகாவில் முகாம் எப்படி நடைபெற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை தாசில்தார் சக்திவேலுக்கு வழங்கினார்.

    தொடர்ந்து முகாம் நடைபெறும் இடத்தில் பணிபுரியும் அலுவலர்களின் விவரங்களை கேட்டறிந்தார். அப்போது அலுவலர்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்தே திடீரென போன் செய்தார். முகாமுக்கு சென்று விட்டீர்களா ? நீங்கள் பணிபுரியும் முகாமில் எத்தனை குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று விண்ணப்பம் பதிவு செய்யப்படும்? குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து விண்ணப்பங்கள் சரியான முறையில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதையடுத்து அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை மேலே வீதியில் விண்ணப்பம் பதிவு முகாம் நடைபெறும் இடத்தில் ஆய்வு செய்தார். முகாமில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார். பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    மாவட்டம் முழுவதும் இன்று தொடங்கியுள்ள முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாமில்

    குடும்ப அட்டைதாரர்களின் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது ,வங்கி பாஸ் புத்தகம் ஆகியவை சரிபார்க்கப்பட்டது. விரல் ரேகை பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து முகாம் நடந்து வருகிறது. அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக 333 ரேஷன் கடைகளில் உள்ள 3 லட்சத்து 39 ஆயிரத்து 264 குடும்ப அட்டைதா ரர்களிடமும் அடுத்த மாதம் 1-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை விண்ணப்பம் , டோக்கன் வினியோகம் செய்யப்படும். தொடர்ந்து இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் அடுத்த மாதம் 5-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெறும்.

    • தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கம் சார்பில் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க–வேண்டும்.

    மதுரை

    தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்க தலைவர் கே.செல்வராஜ் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தென் இந்திய வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் 32-ம் ஆண்டு விழாவையொட்டி, வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பில் தொடர்ந்து பள்ளியில் படித்துவரும் ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு கல்உதவித்தொகை வழங்கப்படுகிறது.

    இதகை ெபற விரும்பும் மாணவ, மாணவிகள் தங்களது மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்றிதழ், படிக்கும் பள்ளி–யின் தலைமை ஆசிரியர் சான்றிதழ், விண்ணப்பத்துடன் 2 புகைப்படங்கள் ஆகியவற்றை நேரில் வந்து சங்கத்தில் கொடுக்க வேண்டும்.

    மேலும் இலவச தையல் எந்திரம் பெறுவதற்கு தகுதியுடைய பெண்கள், குறிப்பாக விதவை பெண்கள், மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தாங்கள் படித்த தையல் கலை சான்றிதழ் நகல் மற்றும் 2 புகைப்படங்களுடன் விண்ணப்பம் எழுதி சங்கத்தில் நேரில் வந்து அதனை வருகிற 31-ந்தேதிக்குள் கொடுக்க–வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த அளவு நீராதாரத்தை கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
    • நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 625 எக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் குறைந்த அளவு நீராதாரத்தை கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள நுண்ணீர்பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விருப்பமுள்ள விவசாயிகள் தாங்களே கணினிமூலம் விண்ணப்பிக்க https://tnhorticulture.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம்.

    தோட்டக்கலைப்பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்ப்பயிர்கள், வாசனை திரவிய பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 35 ஆயிரத்து 855 வரையும், மற்ற விவசாயிகளுக்கு எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 530-ம் மானியம் பெறலாம்.

    இந்த திட்டத்துக்கான நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்து 625 எக்டர் பரப்பில் சொட்டுநீர் பாசனம் அமைக்க ரூ.20 கோடியே 71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களது நில ஆவணங்களை சிட்டா, இ அடங்கல், புகைப்படம், நில வரைபடம், கிணறு அல்லது ஆழ்குழாய் கிணறு உள்ளதற்கான சான்று, ரேஷன் கார்டு, ஆதார்கார்டு ஆகியவற்றை எடுத்து நேரில் பதிவு செய்யலாம்.

    தோட்டக்கலை பயிர்களுக்கு நுண்ணீர்பாசனம் அமைத்து சாகுபடி பரப்பை அதிகரித்து அதிக வருவாய் பெறலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    • தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.
    • பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கி வருகிறார்கள்.

    இதில் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அடுக்குமாடி வீடுகளில் வசிப்பவர்களுக்கு விண்ணப்பம் சென்றடைவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. காரணம் அடுக்குமாடி வீடுகளுக்கு ஏறி இறங்க முடியாமல் ரேஷன் கடை ஊழியர்கள் மூச்சு வாங்கி தவித்து வருகிறார்கள். சென்னையில் பெரும்பாக்கம், கண்ணகி நகர், கோடம்பாக்கம், கே.கே.நகர், வடபழனி, திருமங்கலம், முகப்பேர், வண்ணாரப் பேட்டை, அயனாவரம், கொரட்டூர், அம்பத்தூர், ஆலந்தூர், குரோம்பேட்டை, நொச்சிக் குப்பம், ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் அடுக்குமாடி வீடுகள் அதிகம் உள்ளன.

    இங்கு பல குடியிருப்புகளில் லிப்ட் வசதி இல்லாததால் படிஏறி விண்ணப்பம் கொடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அடுக்குமாடி வீட்டில் வசிப்பவர்களை கீழே வரச் சொல்லி விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

    இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர் கூறுகையில் தினமும் 300 விண்ணப்பம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் நிபந்தனை விதிக்கிறார்கள்.

    எங்களால் அடுக்குமாடி குடியிருப்புகளில் தொடர்ச்சியாக ஏறி இறங்க முடியவில்லை. மூச்சு வாங்குகிறது.

    இதனால் வீடுகளில் இருப்பவர்களை கீழே வரவழைத்து விண்ணப்பம் கொடுக்கிறோம். பூட்டி இருக்கிற வீடுகளில் கொடுக்க முடியவில்லை.

    காலை முதல் இரவு வரை விண்ணப்பம் கொடுக்கும் வேலையை பார்த்து வருகிறோம். ஆனாலும் இன்னும் முழுமையாக கொடுத்து முடிக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

    சென்னையில் 17 லட்சம் விண்ணப்பங்கள் கொடுக்க வேண்டி உள்ளதால் தன்னார்வலர்கள் உதவியு டன் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    • பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் ஆகஸ்ட் 15ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    பல்லடம்:

    குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமை திட்டம் என்ற பெயரில் மாதம் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது . இதன்படி மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பபடிவங்கள் தரும் நிகழ்வை பல்லடம் வடுகபாளையம் பகுதியில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் சீனிவாசன், மாவட்ட வழ்ங்கல் அலுவலர் ரவிச்சந்திரன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், தலைமையிடத்து துணை தாசில்தார் சுப்பிரமணியம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை செயல்படுத்துவதற்கு, மாவட்ட நிர்வாகம் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் 8,18,344 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 1135 ரேசன் கடைகள் உள்ள நிலையில் 1113 விண்ணப்ப பதிவு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற24 ந்தேதி முதல் ஆகஸ்ட் 4 ந்தேதி வரையிலும், 2-ம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் ஆகஸ்ட் 5 ந்தேதி முதல் ஆகஸ்ட் 15ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது.

    பொது மக்களின் வசதிக்காக அனைத்து முகாம்களும் ரேசன் கடைகளுக்கு அருகில் உள்ள அரசு பள்ளிகள் , சமுதாய நலக்கூடங்கள் அல்லது அரசு கட்டடங்களில் நடைபெறும். விண்ணப்ப பதிவு முகாம்களில் ரேசன் கடை பணியாளர்கள் , இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் , கிராம நிர்வாக அலுவலர்கள் , மகளிர் சுய உதவி குழுவினை சேர்ந்தவர்கள் என 7082 பேர் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்ட உள்ளனர். விண்ணப்பத்தினை பெற பொதுமக்கள் ரேசன் கடைகளுக்கு நேரில் வரவேண்டிய தேவை இல்லை .இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×