search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
    • தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தங்குமிடம், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதாரண்யம் தாலுகா கோடியக்க ரையில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    இக்காலத்தில் நாகை, காரைக்கால், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமேஸ்வரம், பாம்பன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் இங்கு வந்து தங்கி மீன் பிடித்து அண்டைய மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவுக்கு மினி வேன்களில் விற்பனைக்காக அனுப்பி வைப்பார்கள்.

    நாளொன்றுக்கு 5 முதல் 20 டன் வரையில் மீன்கள் பிடிக்கப்பட்டு இங்கிருந்து அனுப்பி வைக்கப்படும்.

    இந்த ஆண்டு முன்கூ ட்டியே மீன்பிடி சீசன் காலம் தொடங்கியதால் வானகிரி, சின்ன மேடு, பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, சாமாத்தான்பேட்டை, காரை க்கால், மடவாய்மேடு, அக்கம்பேட்டை ஆகிய ஊர்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட படகுகள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.

    மீனவர்கள் வருகையால் களை இழந்து காணப்பட்ட கோடியக்கரை மீன் பிடிதளம் தற்போது சுறுசுறுப்பாக காணப்படுகிறது.

    வெளியூ ரிலிருந்து வந்து தங்கி மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு தங்குமிடம், குடிதண்ணீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கோடி யக்கரை மீனவர்நல சங்க முன்னாள் செயலா ளர் சித்திரவேல் கூறியதாவது:-

    நடப்பாண்டு முன் கூட்டியே மீன்பிடி சீசன் தொடங்கியதால் அதிகளவில் வெளியூர் படகுகள் வந்துள்ளன.

    வெளியூரிலிருந்து வரும் மீனவ குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளும் கிராமத்தின் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

    இந்தாண்டு மீன்பிடி சீசன் நன்றாக இருக்கும் என்றும் சுமார் ரூ. 200 கோடிக்கு மீன் வர்த்தகம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2.18 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.
    • இந்த வாரம் 7,300 தேங்காய்கள் வரத்து இருந்தது.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் 5.20 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகின.இந்த விற்பனைக்கூடத்தில் சனிக்கிழமைதோறும் தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த வாரம் 7,300 தேங்காய்கள் வரத்து இருந்தது. இவற்றின் எடை 3,220 கிலோ. விலை கிலோ ரூ. 19.10 முதல் ரூ. 24.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 23.65.67 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. எடை 2,019 கிலோ. ஒரு கிலோ ரூ. 55.15 முதல் ரூ. 76.15 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 72.15. ஏலத்தில் மொத்தம் 81 விவசாயிகள், 8 வணிகா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 2.18 லட்சம் என விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • திருச்சியில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் வைப்பதற்கான காலி இடம் உள்ளது.
    • கடந்த 10 நாட்களில் 99 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி, 3.5 மெட்ரிக் டன் கோதுமை தனியார் மில்லில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை பிடித்தோம்.

    தஞ்சாவூர்:

    தமிழக அரசின் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சை விமானப்படை நிலையம் அருகே உள்ள பிள்ளையார்பட்டி நெல் சேமிப்பு கிடங்கிற்கு சென்று பார்வையிட்டார்.

    அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் சேமிப்பு கிடங்குகளையும், இருப்பு வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளையும், நெல் மூட்டைகள் லாரிகளில் இயக்கம் செய்வதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அதன் பின்னர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலளார் உமாமகேஸ்வரி, கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    பின்னர் உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடி 72 ஆயிரம் எக்டேரில் நடந்துள்ளது.

    மேட்டூர் அணையில் இருந்து முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளது.

    இதே போல கடந்த ஆண்டும் சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. கடந்த ஆண்டு 1.97 லட்சம் டன் குறுவையில் கொள்முதல் செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு 2.20 லட்சம் டன் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டெல்டா மாவட்டங்களில் 20 இடங்களில் 2.86 லட்சம் டன் சேமிக்கும் வகையில் குடோன்கள் கட்டப்பட்டு வருகிறது.

    வரும் அக்டோபர் இறுதிக்குள்ளாக இந்த பணிகள் முடிக்கப்பட உள்ளது.

    மத்திய அரசின் சேமிப்பு குடோன்களில் வைப்பதற்கும் அனுமதி கேட்டுள்ளோம்.

    அதன்படி திருச்சியில் 35 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு நெல் வைப்பதற்கான காலி இடம் உள்ளது.

    அதை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு ரேஷன் அரிசி கடத்தலை பிடித்து வருகிறோம்.

    கடந்த 10 நாட்களில் 99 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி, 3.5 மெட்ரிக் டன் கோதுமை தனியார் மில்லில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததை பிடித்தோம்.

    மேலும் இரண்டு தனியார் மில்லில் ஆய்வு செய்து மொத்தமாக 120 மெட்ரிக் டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் தனி நபர்கள் இறந்தவர்கள் என 2.45 லட்சம் பேரும், கூட்டு குடும்ப அட்டையில் இறந்த நபர்கள் என 14.26 லட்சம் பேரும் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க டி.ஜி.பி. ஆபாஷ்குமார் தலைமையில் 4 போலீஸ் சூப்பிரண்டுகள், 12 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 24 இன்ஸ்பெக்டர்கள், 87 சப் இன்ஸ்பெக்டர்கள் என பணியில் உள்ளனர்.

    அதே சமயம் அரிசியை வாங்கி தனியார் வியாபாரியிடம் விற்பனை செய்யாமல் இருக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பதை கடந்த இரண்டு மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் வருவதை தடுக்க, ஒன்றிய அளவில் கண்காணிப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நடப்பு பருவத்தில் 1 மாதத்திற்கு முன்னதாகவே தொடங்கியதால் 722 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 1 லட்சத்து 25 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்ய ப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொலுவிற்கு தேவையான பலவிதமான மண் பொம்மைகள், மர பொம்மைகளை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
    • நவராத்திரி நாட்களில் கோவில்களில் சாமி விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    சுவாமிமலை:

    முப்பெரும் தேவியரை போற்றி வணங்கும் நவராத்திரி விழாவினை முன்னிட்டு, வீடுகளில் வைக்கப்படும் கொலு பொம்மைகள் கடைகளில் விற்பனைக்கு தயார்.

    தமிழர்கள் கலை பண்பாடு, கலாச்சாரத்துடன் நாகரீகம், விருந்தோம்பல், பண்புகளை உள்ளடக்கி கொண்டாடி மகிழும் பண்டிகைகளில் ஒன்று 10 நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரிப் பெருவிழா.

    மும்பெரும் தேவியரையும் தலா மூன்று நாட்கள் வீதம் 9 நாட்களுக்கு கொண்டாடி நிறைவாக, பத்தாம் நாளை வெற்றி நாளாக கருதி, விஜயதசமி நாளான அன்று, கல்வி உள்ளிட்ட, சகல விதமான கலைகளை துவக்கவும், சிறந்த நாளாக கருதப்படுகிறது, வழக்கம்

    இவ்விழா, புரட்டாசி மாத அமாவாசையை தொடர்ந்து வரும் பிரதமை திதியில் இருந்து தசமி திதி வரை பத்து நாட்களுக்கு நடைபெறும்.

    இவ்வாண்டு விழா வருகிற 26ம் தேதி தொடங்கி, அக்டோபர்5ம் தேதி புதன்கிழமை வரை பத்து நாட்களுக்கு நடைபெறுகிறது.

    இந்நாட்களில், கோயி ல்களில் சுவாமிகளுக்கு விதவிதமான அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பர் அதே வேளையில், ஏராளமானோர் தங்கள் வீடுகளில் 5 படி, 7படி, 9படி, 11படி என பல்வேறு எண்ணிக்கையிலான படிகளில் விதவிதமான கொலு பொம்மைகளை வைத்து நவராத்திரி நாட்களில் பக்தி பாடல்கள் பாடி, அக்கம்பக்கத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரை வீட்டிற்கு கொலு பார்க்க அழைத்து அவர்களுக்கு மங்கல பொருட்களை வழங்கி மகிழ்வர்.

    இந்நிலையில் கும்பகோணம் அருகேயுள்ள பாபுராஜபுரத்தில் தினேஷ் என்பவர், இந்த நவராத்திரி கொலுவிற்கு தேவையான பலவிதமான மண் பொம்மைகள், மரபொம்மைகள், பேப்பர் பொம்மைகள், மிக சிறியது முதல் 3 இன்ஜ் முதல் 7 அடி உயரம் கொண்ட பலவிதமான உயரங்களில் ரூ. 10 முதல் ரூ. 7 ஆயிரம் மதிப்பிலானவை விற்பனைக்கு வைத்துள்ளார்

    இவை தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது/ இங்கு, 63 நாயன்மார்கள் செட், தசவதாரப்பெருமாள், நவக்கிரக பொம்மைகள், காஞ்சி மகாபெரியவர், கொல்கத்தாகிலே பொம்மைகள் சமயபுரம் மாரியம்மன், சிவபெருமான், கும்பகர்ணன், கிருஷ்ணர், ராதை, புத்தர், திருமண செட், ராமாயண செட், மகாபாரத செட், இசை கலைஞர்கள் செட், உள்பட பல்பவேறு வகை பொம்மைகளை விற்பனைக்காக வைத்துள்ளார்.

    இதனை பொது மக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்று வருகின்றனர்.

    • மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.
    • பட்டதாரி இளைஞர் கலாக்காயை சோதனை முறையில் சாகுபடி செய்து அதிக விளைச்சல் கண்டுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மலைப்பிரதேசங்களில் வளரக்கூடிய கலாக்காயை சோதனை முறையில் விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டும் நாகை விவசாயிமலையடிவார பகுதிகளில் வளரக்கூடிய மருத்துவ குணம் கொண்ட கலாக்காய் புளிப்பு, துவர்ப்பு, இனிப்பு சுவை கொண்டது.

    இவை ஊறுகாய் தயாரிப்ப தற்கும், பேக்கரி களிலும் அதிகமாக பயன்ப டுத்தப்படுகிறது.

    தற்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த தெற்குப்பொய்கை நல்லூரில் சந்திரபோஸ் என்ற பட்டதாரி இளைஞர் கலாக்காயை சோதனை முறையில் சாகுபடி செய்து தற்பொழுது கொத்து கொத்தாக அதிக விளைச்சல் கண்டுள்ளது.

    இதை பறித்து பரவை சந்தை நாகப்பட்டினம், காரைக்கால், திருவாரூர், மன்னார்குடி பகுதிகளில் விற்பனை செய்கின்றனர். தற்போது ஒரு கிலோ கலாக்காய் ரூ.100 முதல் 150 வரை விற்கப்படுகிறது.

    இதை பலரும் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

    இதனால் அதிக லாபம் தருவதாக விவசாயி சந்திரபோஸ் மகிழ்ச்சி தெரிவிக்கின்றார்.

    • மாணவரின் தந்தை ஒருவர் தலைமையாசிரியரிடம் கேட்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.
    • குட்கா, ஹான்ஸ் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது குறித்து அப்பள்ளியில் பயிலும் மாணவரின் தந்தை ஒருவர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கேட்பது போன்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியது.

    இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்க காவல்துறை அதிரடி சோதனை நடத்தி வருகின்றது.

    அதன்படி சீர்காழி காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்பில் சீர்காழி, வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகளில் தடை செய்யப்பட்ட போதை, புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

    சீர்காழி தாசில்தார் செந்தில்குமார், டி. எஸ். பி. பழனிசாமி, சீர்காழி இன்ஸ்பெக்டர் மணிமாறன் கொண்ட குழுவினர்.

    இவ்வாறு 50 கடைகளில் திடீர் ஆய்வு மேற்கண்டனர். அப்போது சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டு, புத்தூர் செங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தபோது அங்கு தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

    இதனை அடுத்து புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் அந்த நான்கு கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர்.

    • மீன் விலை குறைவால் காலை நேரத்தில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கிறது.
    • புரட்டாசி மாதம் நிறைவு பெறும் வரை வியாபாரம் சற்று குறைவாக தான் இருக்கும்.

    உடுமலை :

    தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளது. இம்மாதத்தில் இறைவனை வேண்டி விரதமிருக்கும் பலர் அசைவத்தை தவிர்ப்பர்.

    இந்நிலையில் உடுமலையில் வஞ்சிரம் கிலோ 450 ரூபாய், விளாமீன் 350, பாறை 300, அயிலை 120, சங்கரா 250, முறால் 300, கட்லா 150, ரோகு 130, ஜிலேபி 80 ரூபாய்க்கு விற்கிறது. முந்தைய வாரங்களோடு ஒப்பிடுகையில் மீன் விலை குறைவால் காலை நேரத்தில் வியாபாரம் சற்று சூடுபிடிக்கிறது.ஆனால் நேரம் செல்லசெல்ல கூட்டம் குறைவதால் மீன் விற்பனை குறைகிறது. புரட்டாசி மாதம் நிறைவு பெறும் வரை வியாபாரம் சற்று குறைவாக தான் இருக்கும். தற்போது வரத்து இயல்பாக இருப்பதால் வஞ்சிரம் உட்பட அனைத்து மீன்களின் விலையும் குறைத்தே விற்கப்படுகிறது என மீன் வியாபாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரை-ராமநாதபுரத்தில் மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்த கும்பல் சிக்கியது.
    • 2 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    மதுரை

    மதுரையில் போதை தரும் புகையிலை பொருட்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. பள்ளி மாணவர்களும் கஞ்சா, போதை மாத்திரை மற்றும் புகையிலை பொருட்களை பயன்படுத்தி வருவது சமீப காலமாக தெரிய வந்துள்ளது.

    இதைத்தொடர்ந்து போதைபொருட்களை விற்பனை செய்யும் கும்பலை கண்டறிந்து கைது செய்ய மதுரை தெற்குவாசல் போலீஸ் கமிஷனர் சண்முகம் ஆலோசனையின் பேரில் கீரைத்துறை போலீசார் இன்ஸ்பெக்டர் பெத்துராஜ், சப்-இன்ஸ்பெக்டர் சந்தான போஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் நேற்று இரவு வாழைத்தோப்பு ஜங்சன் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி அதிலிருந்த ஒரு வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர்.

    அப்போது சீட்டுக்கு அடியில் ஒரு பையில் 7 கிலோ 920 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. அதனை கைப்பற்றிய போலீசார் ஆட்டோவில் வந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று அதிரடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் ஆட்டோவில் புகையிலை பொருட்களை கடத்தியவர் சிந்தாமணி ராஜாமணி நகரை சேர்ந்த நல்லுசாமி மகன் விஜய் (23) என்பதும், அவர் அனுப்பானடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு காலனியை சேர்ந்த சூர்யா (23) என்பவருடன் சேர்ந்து புகையிலை பொருட்களை கடத்தி விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    இதுபற்றி போலீசார் கூறியதாவது:-

    மதுரையில் புகையிலை பொருட்களுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் அவற்றை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்து விற்பனை செய்து நல்ல வருமானம் பெற முடிவு செய்து விஜய் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    அவருக்கு சிந்தாமணியை சேர்ந்த சண்முகவேல் மனைவி மணிமேகலை (23), காமராஜபுரம் ஜோசப் நகர் சுப்பிரமணி மனைவி முனீஸ்வரி (53) என்பவரும் பெங்களூர் சென்று புகையிலை பொருட்களை வாங்கி வந்து கொடுத்து வந்தனர்.

    அவற்றை விஜயும், சூர்யாவும் மதுரை மாவட்டத்தில் விற்பனை செய்து வந்துள்ளனர். மேலும் ராமநாதபுரத்தை சேர்ந்த பட்டாகத்தி பாலாஜி என்பவருடன் சேர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திலும் விற்பனை செய்து வந்துள்ளனர். அவர்கள் ஆட்டோவில் புகையிலை பொருட்களை மறைத்து கொண்டு சென்று விற்பனை செய்து வந்துள்ளனர். இவர்கள் மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்து வந்துதள்ளனர்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

    புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக கீரைத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு விற்பனை செய்ததாக விஜய், சூர்யா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் யார்? யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 55 டன் வரத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 175 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
    • கருப்பட்டி, பருப்பு வகைகள், முறுக்கு, கடலை, எள்ளுருண்டை போன்ற பாரம்பரிய உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    வேளாண்மை உழவர் நலத்துறையின் அங்கமான வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண்மை வணிகத் துறையின் மூலமாக தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் இயங்கி வரும் தஞ்சாவூர் உழவர் சந்தையில் வேளாண்மை பொருட்கள் மற்றும் பாரம்பரிய திண்பண்டங்கள் அங்காடியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுக்கோட்டை, பாபநாசம் மற்றும் திருக்காட்டுப்பள்ளி ஆகிய 5 வட்டாரங்களில் உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 5 உழவர் சந்தைகளிலும் சேர்த்து நாளொன்றிற்கு சராசரியாக ரூ.21 லட்சம் மதிப்பு உள்ள 55 டன் வரத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 175 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தினசரி 8,000 முதல் 9,000 நுகர்வோர்கள் பயனடைகின்றனர்.

    தஞ்சாவூர் உழவர் சந்தையில் உள்ள 71 கடைகளின் மூலம் நாளொன்றிற்கு சராசரியாக ரூ.6 லட்சம் மதிப்பு உள்ள 15 டன் வரத்து கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் 65 விவசாயிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றனர்.

    தஞ்சாவூர் உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் சார்பாக தஞ்சாவூர் உழவர் சந்ததையில் சிறுதானியங்கள், பருப்பு வகைகள், தானியங்கள், எண்ணெய் வகைகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் மாலை நேரங்களில் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சோதனை அடிப்படையில் விற்பனை நடைப்பெற்றுவருகிறது.

    இதில் பாரம்பரிய கைக்குத்தல் அரிசி வகைகள், கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, பூங்கார் போன்ற அரிசி வகைகள், அவல், செக்கு எண்ணெய், நாட்டு சர்க்கரை, கருப்பட்டி, பருப்பு வகைகள், முறுக்கு, கடலை, எள்ளுருண்டை போன்ற பாரம்பரிய உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட உள்ளது.

    இயற்கை வேளாண்மை பொருட்கள் விளைவிக்கும் விவசாயிகளுக்கும், பாரம்பரிய திண்பண்டங்கள் தயார் செய்பவர்களுக்கும் வியாபாரம் செய்வதற்கு இது நல்ல வாய்ப்பாகும். உழவர் சந்தையில், இயற்கை வேளாண்மை பொருட்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்களை வாங்கி பயனடையுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா, தஞ்சை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஜஸ்டின், வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குனர் மரியரவி ெஜயக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் மாநிலத் திட்டங்கள் (பொ) சாருமதி, இயற்கை வேளாண்மை வல்லுனர் சித்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விழா ஏற்பாடுகளை உழவர் சந்தை வேளாண்மை அலுவலர் ஜெய்ஜிபால் ஜெபசிங் மற்றும் உழவர் சந்தை அலுவலர்கள் செய்திருந்தனர்,

    • விவசாயிகள் 585 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • 15 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர்

    மூலனூர் :

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில் திருப்பூர், கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் 585 பேர் பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    பருத்தியை கொள்முதல் செய்ய திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சேர்ந்த வணிகர்களும், மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர். வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.10,888-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.7,150-க்கும் சராசரி விலையாக ரூ.9,050-க்கும் விற்பனையானது.

    பருத்தியின் மொத்த அளவு 4,713 மூட்டைகள், 1534.61 குவிண்டால் மதிப்பு ரூ.1 கோடியே 37 லட்சத்து 23 ஆயிரத்து 772 ஆகும். 15 வியாபாரிகள் இந்த மறைமுக ஏலத்தில் பங்கேற்றனர் என்று திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலசந்திரன் தெரிவித்தார். 

    • நவராத்திரியின் 9 நாட்களிலும் வீட்டில் கொலு வைத்து வழிபடுவதை பின்பற்றி வருகின்றனர்.
    • மதுரையில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

    திருப்பூர் :

    அம்மன் அவதாரங்களை வழிபடும் நவராத்திரி திருவிழா நாடு முழுவதும் மற்றும் தமிழகத்தில், நவராத்திரியின் 9வது நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜையும் கொண்டாடப்படுகிறது. 10வது நாளில் விஜயதசமி பூஜை குதூகலமாக கொண்டாடப்படுகிறது.

    நவராத்திரியின் 9 நாட்களிலும் வீட்டில் கொலு வைத்து தினமும் ஒரு பதார்த்தம் படைத்து, பஜனையுடன் வழிபடுவதை பலரும் பின்பற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் புதிய கொலு பொம்மைகள் வாங்கி, வீட்டில் கொலு வைக்கின்றனர்.பல்வேறு கடைகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தமிழ்நாடு சர்வோதய சங்கம் சார்பில் மதுரையில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள சர்வோதய சங்க ேஷாரூமில், கொலு பொம்மை விற்பனை துவங்கியுள்ளது.விநாயகர், சிவன், விஷ்ணு, அம்பாள், முருகன் சுவாமி சிலைகள், இந்துக்களின் பண்டிகைகளை விவரிக்கும் குரூப் பொம்மைகள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொம்மைகள், குழந்தை கிருஷ்ணர் பொம்மை, திருமணம், வளைகாப்பு, காதணி விழா நிகழ்வு பொம்மைகள், காமதேனு, சிவன் - நந்தி, குழந்தைகள், குழந்தை விநாயகர் என பல்வேறு வகையான பொம்மைகளும் அணிவகுத்துள்ளன.

    சர்வோதய சங்க நிர்வாகிகள் கூறுகையில், நவராத்திரி விழாவையொட்டி மதுரையில் தயாரிக்கப்பட்ட கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. சிறிய சிலைகள், 25 ரூபாய் முதல் 7,700 ரூபாய் மதிப்புள்ள பெரிய சிலைகள் வரை விற்பனைக்கு வந்துள்ளன. நவராத்திரி விழாவை பாரம்பரிய முறைப்படி கொண்டாடி மகிழவும், கொலு வைக்கவும் தரமான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன என்றனர்.

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • குமரி மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து தான் அதிக அளவு கஞ்சா விற்பனைக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் குட்கா விற்ப னையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற் கொண்டு வருகிறார்கள். கஞ்சா விற்பனை தொடர் பாக பொதுமக்கள் தகவல் தெரிவிக்கும் வகையில் ஹெல்ப் லைன் செயல்படு கிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை

    7010363173 என்ற எண் ணுக்கு பொதுமக்கள் நேரடி யாகவும் போன் மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கள் மற்றும் கல்லூரி களிலும் இந்த ஹெல்ப் லைன் எண்ணை கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

    கஞ்சா புகையிலை பொருட்கள் விற்பனை தொடர்பாக மாணவ- மாணவி கள் இந்த தொலை பேசி எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். போலீசார் உடனடி நடவடிக்கை மேற் கொள்வார்கள். குமரி மாவட்டத்தில் போலீசார் கஞ்சா விற்பனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த ஆண்டு இதுவரை 891 கிலோ குட்கா புகையிலை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 516 பணம், 27 வாக னங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கை பொருத்தமட்டில் இதுவரை 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 287 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    144 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 97 பேரின் வங்கி கணக்குகள் முடக் கப்பட்டு உள்ளது. குமரி மாவட்டத்தில் இதுவரை 57 பேர் குண்டர் சட் டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 பேர் கஞ்சா வியாபாரிகள்ஆகும். குமரி மாவட்டத்தில் தற்போது கஞ்சா விற்பனை குறைந் துள்ளதால் அதன் விலை 4 மடங்கு உயர்ந்துள்ளது.

    குமரி மாவட்டத்திற்கு ஆந்திராவில் இருந்து தான் அதிக அளவு கஞ்சா விற்பனைக்கு வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    அதை தடுக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். கஞ்சாவை கண்காணிக்க 4 சப்-டிவிஷன்களிலும் 7 தனிப் படை அமைக்கப்பட்டு நடவ டிக்கை மேற் கொள்ளப்பட்டு வரு கிறது. கஞ்சா விற்ப னையை தடுக்க மாணவ- மாணவிகள் மற்றும் பொது மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×