search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224037"

    • பள்ளி, கல்லூரிக்கு அருகில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.
    • நல்லூா் போலீசார் பா.ஜ.க.வினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

     திருப்பூர் :

    திருப்பூரை அடுத்த கோவில்வழி அருகே டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையானது பள்ளி, கல்லூரிக்கு அருகில் செயல்பட்டு வருவதாகவும், சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக கூறி பா.ஜ.க.வினர் சாலை மறியல் போராட்டத்துக்கு முயன்றனா்.

    இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த நல்லூா் போலீசார் பா.ஜ.க.வினருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் காவலரை அமா்த்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து பா.ஜ.க.வினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

    • இரு வாரங்களுக்கு ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டிக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து விற்றதும் தெரியவந்தது.
    • இரு சக்கர வாகனத்தையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட எஸ்.பி. ரவளிப்பிரியா உத்தரவின்படி, இன்ஸ்பெ க்டர் ராஜேஷ்குமார் மற்றும் ஏட்டுக்கள் உமாசங்கர், ராஜேஷ், போலீசார் அருள்மொழி நவீன், அழகு, சுஜித் அடங்கிய தனிப்படையினர்பட்டுக்கோட்டை மற்றும் அதிராம்பட்டினம் சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா விற்பனையை கண்காணித்து வந்தனர்.

    இதில் பட்டுக்கோட்டை அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த ரிஷிகுமார் (வயது23) என்பவர் 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததால் அவரை கைது செய்தனர்.

    மேலும், இவர் இரு வாரங்களுக்கு ஒரு முறை இரு சக்கர வாகனத்தில் உசிலம்பட்டிக்கு சென்று கஞ்சா வாங்கி வந்து விற்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து இரு சக்கர வாகனத்தையும், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பட்டுக்கோட்டை புறவழி ச்சாலை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பேருந்து நிலையம உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்து வருவது கண்டு பெற்றோர்கள் பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

    கஞ்சா விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார்.
    • இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார்.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பி. யாக மகாலட்சுமி சமீபத்தில் பொறுப்பேற்றார். இவர் நேற்று குமாரபாளையம் போலீஸ் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமாரபாளையம் பகுதியில் போதை பொருட்கள் விற்பனையை முழுவதுமாக தடுக்க நடவடிக்கை எடுப்பேன். விசைத்தறி, கைத்தறி கூலி தொழிலாளர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைப்பேன்.

    பொதுமக்கள் உங்கள் பிரச்சினைகளை, சமூக விரோத செயல்கள் குறித்த தகவல்களை என்னிடம் நேரடியாக புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர்.
    • கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்ற 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாநகரத்தில் குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கைது செய்யப்படும் நபர்களின் கடைகளை பூட்டி சீல் வைக்கும் பணியையும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    கடந்த ஒரு மாதத்தில் குட்கா விற்ற 60-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்த கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 கடைகளுக்கு சீல் வைக்க பட்டியல் தாயரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கடை களின் உரிமத்தை ரத்து செய்யவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை விற்ற 234 கடைகளுக்கு ரூ.11.70 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை கடத்தி வந்து, பெட்டி கடைகளில் விற்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில் கடைகளில் சோதனை நடத்தப்படுகிறது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டால், அவர்கள் மீது பணி இடை நீக்கம் நடவடிக்கை பாயும். கடை உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்றார்.

    • சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது.
    • இந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 34 லட்சத்து16ஆயிரத்து177-க்கு விற்பனை ஆனது.

     பரமத்தி வேலூர்:

    சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்தி வேலூர் பகுதியில் உள்ள விவசாயிகள் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

    அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரி கள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 18.36 1/2குவிண்டால் எடை கொண்ட 4ஆயிரத்து 973தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.24.65-க்கும், குறைந்த விலையாக ரூ.21.89-க்கும், சராசரி விலையாக ரூ.23.69-க்கும் என ரூ. 42ஆயிரத்து 869-க்கு விற்பனை ஆனது.

    அதேபோல் 321.72 1/2குவிண்டால் எடை கொண்ட 660மூட்டை தேங்காய் பருப்பு விற்ப னைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ85.06-க்கும், குறைந்த விலையாக ரூ81.16-க்கும் சராசரி விலையாக ரூ84.39-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.83.06-க்கும், குறைந்த விலையாக ரூ.67.29-க்கும், சராசரி விலையாக ரூ.79.99-க்கும் என ரூ.26லட்சத்து 10ஆயிரத்து 816-க்கு விற்பனை ஆனது.

    113.97 1/2 குவிண்டால் எடை கொண்ட 346 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. இதில் ஒரு கிலோ நிலக்கடலை காய் அதிக விலையாக ரூ.70 .20-க்கும், குறைந்த விலையாக ரூ.64.16-க்கும் சராசரி விலையாக ரூ.67 .30 -க்கும்என ரூ.7 லட்சத்து 62 ஆயிரத்து 492-க்கு விற்பனையானது. இந்த வாரம் சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ. 34 லட்சத்து16ஆயிரத்து177-க்கு விற்பனை ஆனது.

    • ஒரு லட்சம் பார்வையாளர்கள் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் என்பது விற்பனை இலக்காகும்.
    • பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு வந்து புத்தகத் திருவிழாவினை பார்வையிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 2-வது புத்தக திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது.

    மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் புத்தக திருவிழா நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் முன்னிலையில், தமிழ்நாடு அரசின் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் முனைவர்.ஜெ.ஜெயரஞ்சன் கண்காட்சி தொடங்கி வைக்கிறார்.

    ஒரு லட்சம் பார்வையாளர்கள் மற்றும் 50 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் என்பது விற்பனை இலக்காகும்.

    முதல் விற்பனையை டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ தொடங்கி வைக்க, மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சேதுராமன் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் நூல்களை வாங்கி விற்பனையை ஆரம்பிக்கின்றனர். 45 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி பதிப்பகங்களும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

    நாளை மாலை 6 மணிக்கு திட்டக்குழு துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன், டி.ஆர்.பி ராஜா எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, மன்னார்குடி நகர்ம ன்றத்தலைவர் சோழராஜன், துணைத் தலைவர் கைலாசம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

    தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்களின் அறம் கிளை சார்பாக "கீழடி நம் தாய்மடி" என்ற கண்காட்சி தொடங்கி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில பொதுச் செயலாளர் எஸ். சுப்பிரமணி, மாவட்ட நூலக அலுவலர் ஆர்.ஆண்டாள், முதன்மைக் கல்வி அலுவலர் ஆ. தியாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    அன்றையதினம் மாலை 3 மணிக்கு புத்தகத் திருவிழா முன்னோட்டமாக மன்னார்குடி புதிய பஸ் நிலையத்திலிருந்து மாட்டு வண்டி நூலகம், நூலகர்.எஸ்.வி.கனகசபை பிள்ளை நினைவாக தொடங்கப்பட்டு தேசிய மேல்நிலைப் பள்ளியில் முடிவடைகிறது. மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கே.கே.பாலச்சந்தர் பேரணியை தொடக்கி வைக்கிறார்.

    வருகிற 22 முதல் 26 வரை உள்ள பள்ளி வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பள்ளி மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது. மற்ற நாட்களில் எல்லா நேரங்களிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம்.

    மன்னார்குடி மாவட்டக் கல்வி அலுவலரால் ஒரே நேரத்தில் மாணவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க எந்தெந்த வட்டார பள்ளிகளின் மாணவர்கள் எந்தெந்த நாளில் பங்கேற்க வேண்டும் என்கிற கால அட்டவணை தயாரிக்கப்பட்டு சுற்றறிக்கையாக அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்படுகிறது.பள்ளி விடுமுறை நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு வந்து புத்தகத் திருவிழாவினை பார்வையிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    புத்தக கண்காட்சி காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும். தினசரி மாலை அரங்கத்தின் வாயிலில் மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை பிரபல பேச்சாளர்கள் சிந்தனையாளர்களின் உரை வீச்சு நடைபெறுகிறது.

    பங்கேற்கும் பேச்சாளர்கள் விபரம் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ்,கஜேந்திர பாபு, தொலைக்காட்சி நெறியாளர் கார்த்திகைச் செல்வன், யூ டியூபர் மதன் கௌரி, பேராசிரியர் பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் செல்வ. புவியரசன், கவிஞர். களப்பிரன், எழுத்தாளர் ஆசை, திரைப்பட வசனகர்த்தா பாஸ்கர்.

    சக்தி, சித்த மருத்துவர் கு. சிவராமன், குன்றக்குடி. பொன்னம்பல அடிகளார், முன்னாள் அமைச்சர்கள் இரா. காமராஜ், வைகைச் செல்வன், கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம், ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் தி.செ.ஞானவேல், எழுத்தாளர் சமஸ் போன்றோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

    மேலும் சிறப்பு விருந்தினர்களாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் மன்னை அனு, என்ஜாய் எஞ்ஞாமி பாடல் புகழ் தெருக்குரல் அறிவு ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தமிழ்நாடு அறிவியல் இயக்க கருத்தாளர்களால் எளிய முறை அறிவியல் பரிசோதனைகள், மந்திரமா தந்திரமா, போன்ற செயல்பாடுகள் அரங்கத்தில் ஒவ்வொரு நாளும் நடைபெறும். மன்னார்குடி நகராட்சி, போக்குவரத்து காவல்துறை, மன்னார்குடி பள்ளி கல்வித்துறை ஆகியோர் ஒத்துழைப்புடன் விழா குழு அடிப்படை வசதிக்கான கழிவறை, குடிநீர், போக்குவரத்து நெறிப்படுத்தும் பணி ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது.

    குழந்தைகளை அழைத்து வந்து குடும்பமாக பங்கேற்று பயன்பெற தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளைத்தலைவர் எஸ். அன்பரசு, செயலாளர் ஐ. இம்மானுவேல் மாவட்டத் தலைவர் யு.எஸ்.பொன்முடி, துணைத்தலைவர் ப.ரமேஷ் மற்றும் மிட் டவுன் ரோட்டரி சங்கத்தின் தலைவர் டி.ரெங்கையன்.

    2nd book festival in Mannargudi starts tomorrowமன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி அறக்கட்டளை தலைவர் டாக்டர் வி.பாலகிரு–ஷ்ணன் ஆகியோர் சார்பாக இத்தகவலை புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர் இரா. ஏசுதாஸ் தெரிவித்தார்.

    • 90 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.
    • 50 மாடுகள் மொத்தம் ரூ.18 லட்சத்துக்கு விற்பனையாயின.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் அருகே நத்தக்காடையூா்-பழையகோட்டையில் காங்கேயம் இன மாடுகளுக்கான பிரத்யேக சந்தை ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சந்தையில் மாடுகள், காளைகள், இளங்கன்றுகள் என 90 மாடுகள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருந்தன.இதில் 50 மாடுகள் மொத்தம் ரூ.18 லட்சத்துக்கு விற்பனையாயின.இந்த சந்தையில் அதிகபட்சமாக ரூ.70 ஆயிரத்துக்கு கன்றுக்குட்டியுடன் காங்கேயம் இன மயிலை வகைப் பசு விற்பனையானது.

    • தரமான விதைகளை வழங்கும் நோக்கில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை செயல்படுகிறது.
    • தரமான விதைகளை கொள்முதல் செய்து உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்ய வேண்டும்.

    உடுமலை :

    விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை சார்பில் விதை விற்பனையாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி உடுமலையில் நடந்தது. உடுமலை, பொள்ளாச்சி பகுதி விதை விற்பனையாளர்கள், விதை ஆய்வாளர்கள் பங்கேற்றனர். இதில் விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் பேசியதாவது:- விவசாயிகளுக்கு தரமான விதைகளை வழங்கும் நோக்கில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றுத்துறை செயல்படுகிறது. தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் விவசாயிகள் சாகுபடி செய்ய தரமான விதைகளை வினியோகம் செய்ய வேண்டும்.விவசாயிகள் பயிரிடும் ரகத்திற்கு ஏற்ப, தரமான விதைகளை கொள்முதல் செய்து உரிய ஆவணங்களுடன் விற்பனை செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிர் ரகத்திற்கும் கண்டிப்பாக பதிவெண் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

    காலாவதி நிலையிலுள்ள பதிவெண் சான்றிதழ்கள் புதுப்பித்த பிறகே விற்பனை செய்வதோடு அனைத்து விதைக்குவியல்களுக்கும் தனித்தனியாக முளைப்புத்திறன் அறிக்கை பெற்றிருக்க வேண்டும்.விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் விற்பனை நிலையத்தில் வாங்குவதற்கு ஏதுவாக உழவர் செயலியில் விதை விபரங்கள், ஸ்பேக்ஸ் மென்பொருள் இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால் விற்பனையாளர்கள் விதை இருப்பு, விற்பனை விபரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.விதைச்சட்டத்தின் கீழ் பயிர், ரகம், குவியல் எண், காலாவதி தேதி, பயிர் செய்யும் பருவம் உள்ளிட்ட 14 வகையான விபரங்கள் அச்சிடப்பட்ட விதை பாக்கெட்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.

    விதை விற்பனை பதிவேடு, கொள்முதல் பட்டியல் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம் பராமரிக்க வேண்டும்.விவசாயிகள், விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே விதை வாங்க வேண்டும். அப்போது தகுந்த பருவத்திற்கு ஏற்றதா, என்பதை உறுதி செய்தும், விற்பனை ரசீதில் கையெழுத்து இட்டு வாங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

    • தொடர்ந்து குட்கா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்றதாக போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட முள்ளு–குறிச்சியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது34). இவர் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவர் அந்தப் பகுதியில் தொடர்ந்து குட்கா விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 45 கிலோ குட்கா மற்றும் பான்மசாலா விற்றதாக பேளுகுறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் மற்றும் ஆயில்பட்டி போலீசார் அவரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் போதை பொருள் ஒழிப்பு சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவுக்கிணங்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய் சரண் தேஜஸ்வி பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஸ்ரேயா சிங் சதீஷ்குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதை தொடர்ந்து சதீஷ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 

    • தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருக்கின்றனர்.
    • தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

    நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பெய்துள்ள மழையை பயன்படுத்தி பருத்தி, மக்காச்சோளம், நெல், கம்பு போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்டு இருக்கின்றனர்.

    இதனையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியார் உரக்கடைகளில் யூரியா 1382 மெட்ரிக் டன், டி.ஏ.பி 937 மெட்ரிக் டன், பொட்டாஷ் 979 மெட்ரிக் டன், சூப்பர் பாஸ்பேட் 334 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 4165 மெட்ரிக் டன், அளவுக்கு உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாய பயன்பாட்டுக்காக விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    தனியார் உர விற்பனையாளர்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும். ரசாயன உரங்களின் இருப்பு மற்றும் விலைப்பட்டியல் விவரங்கள் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகளின் விருப்பத்திற்கு மாறாக மானிய விலை உரங்களுடன் இணை இடுபொருட்களை வாங்க அவர்களை கட்டயாயப்படுத்த கூடாது. "ஓ" படிவம் அனுமதி இன்றி உர விற்பனை செய்தல் கூடாது.

    உர விற்பனையாளர்கள் உரங்களை விற்பனை செய்யும் போது விற்பனை பட்டியலை உடன் வழங்கிட வேண்டும். உரக்கட்டுப்பாட்டு சட்ட விதிகளை மீறும் உர விற்பனையாளர்கள் மீது உரக்கட்டுப்பாட்டு சட்டம் 1985-ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உர விற்பனை நிலையத்தின் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.
    • இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தையில் காங்கயம் இன மாடுகள் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது.இதில் இடைத்தரகர் இல்லாத சந்தை என்பதால் விவசாயிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. மாட்டுச்சந்தையில் மாடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. வாரச்சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து விற்பனைக்காக விவசாயிகள் மாடுகளை கொண்டு வருகின்றனர்.

    தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து மாடுகளை வாங்க விவசாயிகள் வருகின்றனர். மாடுகளை விற்கும் விவசாயிகளும் வாங்கும் விவசாயியும் நேரடியாக விலை நிர்ணயித்து கொள்வது இந்த சந்தையின் தனி சிறப்பு. நேற்று முன்தினம் நடைபெற்ற சந்தையில் 84 கால்நடைகள் வந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக 67 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.35 வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ40 ஆயிரம் வரை விற்க்கப்பட்டது.

    இன்று நடைபெற்ற சந்தையில் 54 கால்நடைகள் ரூ.17 லட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது என சந்தை மேற்பார்வையாளர்கள் தெரிவித்தனர். தற்போது நாட்டு மாடுகள் குறித்த விழிப்புணர்வு அதிகம் ஏற்பட்டு வரும் நிலையில் இந்த சந்தையில் மாடுகள் அதிக அளவில் விற்பனையாகி வருவது மாடுகள் விற்பனை அதிகரித்துள்ளதை காட்டுகிறது.

    • ஆடித்திருவிழாவையொட்டி சேலம் வ .உ .சி . மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக விற்பனையும் விறுவிறுப்பாக அதிகரித்துள்ளது.
    • தற்போது கிலோவுக்கு ரூ.700 குறைந்து தற்சமயம் ரூ.500 என விற்கப்பட்டு வருகிறது.

    அன்னதானப்பட்டி:

    ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதனால் ஆடி மாதத்தில் சேலத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் திருவிழா களை கட்டும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சேலம் கோட்டை மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நாளை மறுநாள் (புதன்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி கோவிலில் அம்மனுக்கு பூஜை செய்தல் உள்ளிட்ட பல்வேறு தேவைகளால் சேலம் வ .உ .சி . மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்து உள்ளது. அதன் காரணமாக விற்பனையும் விறுவிறுப்பாக அதிகரித்துள்ளது .

    கடந்த சில நாட்களாக 1 கிலோ மல்லிகை பூ ரூ.1200 வரை என விற்கப்பட்டு வந்தது. தற்போது கிலோவுக்கு ரூ.700 குறைந்து தற்சமயம் ரூ.500 என விற்கப்பட்டு வருகிறது.

    சேலம் வ.ஊ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்கள் விலை நிலவரம் ( 1 கிலோ கணக்கில்)

    வருமாறு :

    மல்லிகை பூ ரூ.500, முல்லை ரூ.360, ஜாதி மல்லி ரூ.240, காக்கட்டான் ரூ.360, கலர் காக்கட்டான் ரூ.320, சி.நந்தியா வட்டம் ரூ. 160, சம்மங்கி ரூ.130, சாதா சம்மங்கி ரூ.130, அரளி ரூ.160, வெள்ளை அரளி ரூ.160, மஞ்சள் அரளி ரூ.160, செவ்வரளி ரூ.180, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியா வட்டம் ரூ.160.

    பூக்க்கள் விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆடி மாதம் திருவிழா மாதம், அதனைத் தொடர்ந்து ஆவணி மாத முகூர்த்த தினங்கள் வருவதால் பூக்களின் வரத்து அதிகரித்து விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ×