search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிவகங்கை"

    • சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • அமைச்சர் செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. , முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன், குணசேகரன், நகர செயலாளர்கள் ராஜா, மெய்யப்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பொன்மணி பாஸ்கர், ஒன்றிய செயலாளர்கள் கருணாகரன், செல்வமணி, சேவியர்தாஸ், அருள் ஸ்டீபன், கோபி, சிவ சிவ ஸ்ரீதர், சிவாஜி, சோனைரவி, ஜெகதீஸ்வரன் பாரதிராஜன், பாசறை மாவட்ட செயலாளர் பிரபு மாவட்ட மகளிரணி வெண்ணிலாசசிகுமார் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலா ஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளில் அதிக விலை கேட்டால் அ.தி.மு.க.வினர் தட்டிக்கேட்க வேண்டும் என்றார்.

    ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்ட ர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு-கண்காணிப்புக்குழு கூட்டம் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமையில் நடந்தது.
    • மத்திய-மாநில அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் நடந்தது. கார்த்தி சிதம்பரம் எம்.பி. தலைமை தாங்கினார். கலெக்டர் ஆஷா அஜித், காரைக்குடி சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தில் தேசிய சமூக உதவித்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், உதய் திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஊரக குடிநீர் வழங்கல் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலை கள் மேம்பாட்டு திட்டம் மற்றும் மத்திய-மாநில அரசின் பல்வேறு திட்டங் கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    மேலும் அதன் பயன்கள், நிதிநிலை, மற்றும் செலவி னங்கள் ஆகியன குறித்தும், நடைபெற்று வரும் பணி களை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் துறை சார்ந்த அலுவலர்களுடன் விவாதிக்கப்பட்டது.

    இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், செயற்பொறியாளர் வெண்ணிலா, அனைத்து ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர்கள், நகராட்சி ஆணையாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்திற்கு சட்ட பேரவை உறுதிமொழிக்குழு நாளை வருகை தருகிறது.
    • அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெறும்.

    சிவகங்கை

    தமிழ்நாடு சட்ட பேரவையின் 2023-24-ம் ஆண்டிற்கான அரசு உறுதிமொழி குழுத்தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில், குழு உறுப்பினர்களான எம்.எல்.ஏ.க்கள் அண்ணாதுரை, அருள், கருணாநிதி, சக்கரபாணி , பழனியாண்டி , மணி , மனோகரன், மோகன் , ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார் ஆகியோருடன் வருகிற நாளை (22-ந்தேதி) சிவகங்கை மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

    அதனைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறை அரசு முதல்நிலை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டமும் நடைபெறும். இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தெரிவித்துள்ளார்.

    • சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா தொடங்கியது.
    • ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானசசஞ்சரே எனபாடி இறைவன் அம்பிகையை எந்த நேரமும் வழிபாடு செய்து ஆண்-பெண் தோற்றத்துடன் கூடிய மகான் சதசிவ பிரம்மேந்திராள். இவரது ஜீவசமாதி கரூர் அருகே நெரூரிலும், மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலிலும் உள்ளது. இவருக்கு தனி சன்னதியும் உள்ளது. ஆண்டு தோறும் சதாசிவ பிரம்மேந்திராள் இசைஆராதனை விழா மானாமதுரையில் 2 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா இன்று காலை தொடங்கியது. இதில் இந்தியா முழுவதும் உள்ள கர்நாடக இசை கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்த உள்ளனர். கர்நாடக இசைக் கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் நினைவை போற்றும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது.

    முதல் நாள் விழா மானாமதுரை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள திருமண மகாலில் காலை முதல் வேதபாராயணம், உஞ்சவ்விருத்தி, தீபாராதனை மற்றும் வாய்ப்பாட்டு, பூஜைகள், புல்லாங்குழல், பாட்டு நடந்தது. வீணை, வயலின் போன்ற இசை கச்சேரிகளை கர்நாடக இசைக் கலைஞர்கள் நடத்தினர். மாலையில் இசைக் கலைஞர்களுக்கு ஆராதனை கமிட்டி சார்பில் பாராட்டு விழா நடைபெற உள்ளது. மறுநாள் (30-ந் தேதி) ஆனந்த வல்லி அம்மன் கோவிலில் உள்ள சதாசிவ பிரம்மேந்திராள் சன்னதியில் பூஜை, விருத்தி, குரு உஞ்சவ் விருத்தி, அஞ்சலி, கோஷ்டி கானம், விக்னேசுவர பூஜை, வடுக பூஜை உள்ளிட்டவை நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

    • சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடக்கிறது.
    • கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத்தில் நடக்கிறது.

    காரைக்குடி

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயலாளரும், கூட்டுறவுத்துறை அமைச்சரு மான கேஆர்.பெரிய கருப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    சிவகங்கை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நாளை (27-ந்தேதி) மாலை 4 மணிக்கு காரைக்குடியில் உள்ள கலைஞர் பவளவிழா மாளிகையில் பசும்பொன் தா.கிருட்டிணன் அரங்கத் தில் நடக்கிறது.

    மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பாரா ளுமன்ற தேர்தலுக்கான சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள். வி.பி.ராஜன் (திருப்பத்தூர்), ந.செந்தில் (காரைக்குடி), மருத்துவர் யாழினி (சிவ கங்கை). எஸ்.தினேஷ் (மானாமதுரை) ஆகியோர் கலந்து கொண்டு பாராளு மன்ற தேர்தல் பணிகள் செய்வது குறித்து ஆலோ சனை வழங்குகின்றனர்.

    மேலும் கூட்டத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா நடத்துவது குறித்தும், சென்னையில் நடைபெற்ற தி.மு.க. செயலாளர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

    எனவே கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • மதுரை, விருதுநகர், சிவகங்கை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
    • 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் 81 வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    இதில் விருதுநகர் மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும் சிவக்குமார் மதுரை டி.கல்லுப்பட்டி மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் உதவி இயக்குநர் மற்றும் விரிவுரை யாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இதேபோல் விருதுநகரில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் சாந்தி மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி உதவி திட்ட இயக்குநராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் ராஜ்மோகன் மதுரை கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமிக்கப் பட்டுள்ளார்.

    மதுரை மாவட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவல ராக பணியாற்றி வரும் கார்த்திகேயன் தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலு வலராகவும், வட்டார வளர்ச்சி அலுவலராக பணி யாற்றி வரும் இளங்கோவன் சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடு மற்றும் சுகாதாரம்) நியமிக்கப்பட்டுள்ளார்.

    • சிவகங்கையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
    • அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம், அ.திருவுடை யார்புரம் உள்வட்டம், முள்ளிரேந்தல் குரூப், அ.நெடுங்குளம் கிராமத்தில், வருகிற 14-ந் தேதி (புதன்கிழமை) காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

    மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு, பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கி நடத்தப்பட உள்ளன.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் 2021- 22-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க, சிவகங்கை மாவட்டத்தில் ஜவகர்லால் நேரு அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்டத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் (பதின்மப் பள்ளிகள் உள்பட) படித்து வரும் மாணவர்களுக்கும் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு முடிய), அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) படித்து வரும் மாணவர்களுக்கும் வருகிற 14-ந் தேதி (திங்கட்கிழமையன்று) சிவகங்கை மருது பாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக அரங்கில், மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளன.

    இந்த போட்டிகளில்் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.3ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும்் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

    அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணாவர்கள் இருவரை தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2ஆயிரம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்் வழங்கப்பட உள்ளன.

    பள்ளி மாணவர்களு க்கான பேச்சுப் போட்டிகள் 14-ந் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கியும்், கல்லூரி மாணவர்களுக்்்கான பேச்சு போட்டிகள் 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு தொடங்கியும் நடத்தப்பட உள்ளன.

    இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து தலைமையாசிரியா், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும்் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம்.

    கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ (04575-241487, 99522 80198) தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டில் சிசிடிவி கேமராவுக்காக பொருத்தப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க்கை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர்
    • வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் தலைமை ஆசிரியையைக் கொன்று, 20 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பத்தூர் கான்பாநகரில் வசித்து வந்த ரஞ்சிதம், தென்மாபட்டு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். காலை 9 மணி ஆகியும், ரஞ்சிதம் பள்ளிக்கு வராததால், உடன் பணியாற்றும் ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது, வீட்டின் முன்பக்கம் பூட்டப்பட்டிருந்ததால், வீட்டின் பின்பக்கம் வழியாக சென்று பார்த்தனர்.

    அங்கு, ரஞ்சிதம் வலதுகை நரம்பு, குதிகால் நரம்புகள் அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார், ஆய்வு செய்ததில், வீட்டில் சிசிடிவி கேமராவுக்காக பொருத்தப்பட்டிருந்த ஹார்டு டிஸ்க்கை மர்ம நபர்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது. ரஞ்சிதம் அணிந்திருந்த 20 பவுன் நகைகளும் காணவில்லை என்பதால் பணத்துக்காக கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகிக்கப்படுகிறது. இதில், வட மாநில கொள்ளையர்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் ஒழுக்க விதிமுறைமற்றும் ஒழுக்கத்துடன் நடப்பது பற்றி விரிவாக பேசினார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகரில் செயல்பட்டு வரும் நேஷனல் அகாடமி கல்லூரியில் புதிதாக சேர்ந்த மாணவர், மாணவிகளுக்கு உற்சாக வரவேற்பு விழா நடந்தது. ஆரத்தி எடுத்து கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் வரவேற்பு அளித்தனர்.

    விழாவில் கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் ஒழுக்க விதிமுறைமற்றும் ஒழுக்கத்துடன் நடப்பது பற்றி விரிவாக பேசினார். நர்சிங் மாணவிகள் முதல் உதவி சிகிச்சை முறைகளை விளக்கி செயல் விளக்கம் அளித்தனர். கேட்டரிங் மாணவர்கள் சமையல் செய்யும் இடம் தகுந்த பாதுகாப்புடன், உடை சுத்தம், உடல் சுத்தம் பற்றி பேசினார்கள்.

    ஏசி சர்வீஸ் பற்றி பயிலும் மாணவர்கள் எவ்வாறு ஏசியை பராமரித்தல் மற்றும் பாதுகாப்புடன் சர்வீஸ் செய்யும் முறைபற்றியும் விரிவாக விளக்கம் அளித்தனர்கள். எலெக்ட்ரிக், பேசன் துறையை சேர்ந்த மாணவர்கள் தங்களின் படிப்பு மற்றும் தொழில் முறைகள் குறித்து பேசினர்.நிகழ்ச்சி ஏற்பாடு ஆசிரியர்கள் மது மோனிஷா, பூவிழி, கனிமொழி, தன வேந்தன், செல்வா, பொன்னுசாமி, ஷாஜகான் செய்திருந்தனர்.ஆசிரியர் சதக்கத்துல்லா நன்றி கூறினார்கள்.

    • தேசிய வருவாய் வழி திறன் பயிற்சி நடந்தது.
    • சமூகஅறிவியல் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் பயிற்சி நடந்தது.

    ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் லெமாயு தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் லட்சுமிதேவி, மேற்பார்வையாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் நாகேந்திரன் வரவேற்றார். முதன்மை கருத்தாளராக ராமநாதபுரம் மாவட்ட ஆசிரியர் மோகன் கலந்து கொண்டு திறன் பயிற்சி அளித்தார். ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் ராஜ்குமார், செல்வம் செயல்பட்டனர். பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர் ஜோசப், முன்னாள் மாணவர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஊரக திரனாய்வு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், சஜன், ஹரிஹரன் ஆகியோர் பாராட்டப்பட்டனர். சமூகஅறிவியல் ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் நன்றி கூறினார்.

    • சாகிர்உசேன் கல்லூரியில் முப்பெரும் விழா நடந்தது.
    • கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்வியியல் கல்லூரியில் ஆய்வக திறப்பு, கல்லூரி ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது. முதல்வர் முஹம்மது முஸ்தபா வரவேற்று ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார்.

    கல்லூரி செயலர் ஜபருல்லாஹ் கான் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முஹம்மது உசைன் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பேசினார்.

    ஆட்சிக்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்திக், டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி ஆகியோர் பேசினர். உடற்கல்வி துறை ஆண்டறிக்கையை உடற்கல்வி இயக்குனர் கோகுல் சமர்ப்பித்தார். கல்லூரி சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் ஷபினுல்லாஹ் கான் உள்ளிட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    பொருள் அறிவியல் உதவிப்பேராசிரியர் சுரேஷ் குமார் நன்றி கூறினார். கணித பேராசிரியை கல்பனா பிரியா தொகுத்து வழங்கினார்.

    ×