என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224091"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
    • வேம்பனூர், சுசீந்திரம், தேரூர் குளங்களுக்கு ராம்சர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் பிற்படு த்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உல மாக்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடந்தது. கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் தனபதி வரவேற்று பேசினார்.

    அமைச்சர் மனோ தங்கராஜ் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு உலமாக்களுக்கு சைக்கிள் வழங்கினார். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சிறப்பாக பணிபுரிந்த 7 பேருக்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    மேலும் நீர் நிறை குமரி இணைய தளத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.பின்னர் அவர் பேசியதாவது:-

    தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஏற்கனவே அறிவித்த திட்டங்கள் மட்டுமின்றி அறிவிக்காத திட்டங்களை யும் செயல்படுத்தி வருகிறது.

    தி.மு.க. தலைவர் மு. க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த 70 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது.மீதமுள்ள திட்டங்கள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.குப்பை இல்லா மாவட்டமாக குமரி மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். தற்போது நாகர்கோவில் மாநகரப் பகுதியில் வீடுகளில் இருந்து வாங்கப்படும் குப்பைகள் மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வாங்கப்பட்டு வருகிறது.

    குளங்கள், ஆறுகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.அரசின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மக்களின் பிரச்சினை களுக்கு தீர்வு காணும் வகையில் ஒவ்வொரு பகுதியாக சென்று மனுக்களை பெற்று அந்த மனுக்க ளுக்கு உடனடி தீர்மான நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற வும் முயற்சிகள் மேற்கொள்ள ப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பறவைகள் வந்து செல்கின்றன.வேம்பனூர், சுசீந்திரம் தேரூர் குளங்க ளுக்கு அதிகளவு பறவைகள் வருகின்றன. பறவைகளை பாதுகாக்க நாம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இந்த மூன்று குளங்களுக்கும் ராம்சர் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், வன அதிகாரி இளையராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • செட்டேரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது.
    • இதன் காரணமாக சுமார் 60 ஆண்டுகள் தண்ணீர் வராமல் வறண்டு காணப்பட்டது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெரியேரிப்பட்டி ஊராட்சி வேடப்பட்டியில் ஏரி அமைந்துள்ளது செட்டேரி சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த ஏரிக்கு வரும் நீர் வழிப்பாதைகள் அனைத்தும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது இதன் காரணமாக சுமார் 60 ஆண்டுகள் தண்ணீர் வராமல் வறண்டு காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது ஓமலூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக 60 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி உள்ளது நீண்ட காலமாக தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்த இந்த பகுதியில் தற்போது ஏறி நிரம்பி தண்ணீர் வெளியேறி வருவதால் அந்த பகுதி பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர் தொடர்ந்து பட்டாசு வெடித்தும் ஆட்டு கிடா பலியிட்டும் வணங்கி கொண்டாடி வருகின்றனர். இந்த ஏரி நிரம்பியதன் காரணமாக அறுபது ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்யாமல் இருந்த மக்கள் தற்போது நெல் நடவு தொடங்கியுள்ளனர். இதனால் இந்த பகுதி சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் தொடர்ந்து இதே போன்று வருடா வருடம் ஏரி நிரம்ப அதிகாரிகள் நீர் வழி பாதையின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் வர ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சங்கராபுரம் பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்தனர்.
    • போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்று ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் வைத்து பயன்படுத்தி வந்தனர். இதனால் பயணிகள் பெரும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் செயல் அலுவலர் சம்பத்குமார் தலைமையில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி மற்றும் போலீசார் பஸ் நிலையத்திற்கு சென்று ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றினர். மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் வாகனங்களையும் அப்புறப்படுத்தினர்.

    • பாலமேடு அருகே நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.
    • மலைப்பகுதியில் இருந்து வரும் நீர்நிலைகள், ஓடை வழியாக நேரடியாக நீர் செல்வதற்கு ஏதுவாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வலையபட்டி ஊராட்சியில் நீதிமன்ற உத்தரவின்படி மஞ்சமலை ஆற்று ஓடைப்பகுதியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.

    நீர்நிலைகள் செல்லும் ஓடைக்கரை பகுதியில் இருந்த விவசாய ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

    வட்டார வளர்ச்சி அலுவலர் கதிரவன், பிரே மா, ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி இதயசந்திரன், துணை தலைவர் புஷ்பலதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா மற்றும் வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் முன்னிலையில் நில அளவீடு செய்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.

    மலைப்பகுதியில் இருந்து வரும் நீர்நிலைகள், ஆக்கிரமிப்புகளின்றி ஓடை வழியாக நேரடியாக நீர் செல்வதற்கு ஏதுவாக அங்கு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

    மேலும் ஊராட்சியில் உள்ள பல இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அனைத்தும் படிப்படியாக அகற்றுவதற்கான நடவடிக் கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மஞ்சமலை ஓடை பகுதி யில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டு வருகிறது.

    • அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
    • பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பஸ்கள் இயக்க உத்தரவிடப்படும்.

    கடலூர்:

    புவனகிரி பகுதியில் போக்குவரத்து நெரிச்சலால் மாணவ -மாணவிகளுக்கு பள்ளிக்கு செல்ல முடியாமலும் வாகன ஓட்டிகள் சரியாக வாகனத்தை ஓட்டி செல்ல முடியாமலும் பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் சமூக ஆர்வலரான கனகராஜ் தலைமையில் புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அங்கு வந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தாங்கள் கூறியது போல் அதன் அடிப்படையில் நாங்கள் அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் விரைந்து நோட்டீஸ் அனுப்பி வைக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். அதன் அடிப்படையில் அனைத்து வர்த்தக வியாபாரிகளுக்கும் ஒரு முன்னெச்சரிக்கை துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. அதில் கூறியதாவது:-

    அனைத்து வர்த்தக வியாபாரிகளும் அவரவர்கள் கடைக்கு முன்பு செய்துள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக செப்டம்பர் 23 க்குள் பிரித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் செப்டம்பர் 24 ஆம் தேதி நாங்கள் இயந்திரம் மூலம் அகற்றி விடுவோம் அதற்குரிய செலவின தொகையை தங்களிடமிருந்து வசூலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இதனால் வரை எந்த ஒரு நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஒரு சிலர் மட்டும் தன்னுடைய கடைகளில் ஆக்கிரம்புகளை அகற்றி உள்ளார். தற்பொழுது வரும் தீபாவளி பண்டிகை தமிழக அரசு பல்வேறு ஊர்களுக்கு செல்வதற்காக ஏராளமான பஸ்கள் இயக்க உத்தரவிடப்படும்.

    இதனை ஒட்டி ஏராளமான போக்குவரத்துகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மூலம் வெளியூரிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பி வருவார்கள் ஆகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். மேலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்களது பிள்ளைகளை மற்றும் உறவினர்களை அழைத்துக் கொண்டு வந்து மளிகை பொருட்கள் புது ஆடைகள் பட்டாசுகள் வாங்குவதற்கு இரு சக்கர வாகனங்களில் வந்து வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் சாலை ஓரத்தில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை நேரிடும். அந்தப் பகுதியில் சாலையில் இருசக்கர வாகனம் கூட செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தமிழக அரசு அதிரடியாக ஏராளமான ஊர்களில் பெரிய அளவிற்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் கூட இடித்து அப்புறப்படுத்தி வருகிறது. ஆனால் புவனகிரி பகுதியில் மட்டும் ஏன் ஆக்கிரம்புகள் அகற்றப்படவில்லை என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
    • போலீசார் பாதுகாப்பு

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட 2-வது வார்டு சுண்ணாம்புகாளை பகுதியில் உள்ள தெருக்களில் நக ராட்சி நிர்வாகம் சாலை வச திக்காக ஒதுக்கிய பகுதிகளில் சிலர் சாலைகளை ஆக்கிர மித்து குடியிருப்புகள் கட்டியி ருந்தனர். இதனால் சாலை போட முடியாத நிலை ஏற்பட்டது.

    இது குறித்து அதே பகு தியை சேர்ந்த தனி நபர் ஒரு வர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடுத்திருந்தார். அதனை விசாரித்த ஐகோர்ட்டு ஆக்கிரமிப்பு களை அகற்ற கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் கலெக்டருக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஆக்கிரமிப் பாளர்கள் அவர்களாகவே அதனை அகற்றிக்கொள்ள காலக்கெடு விதித்து நோட் டீஸ் வழங்கப்பட்டது.

    ஆனால் சம்பந்தப்பட்டவர் -கள் அதனை அகற்றவில்லை . தொடர்ந்து அதனை கடந்த 3 மாதங்களுக்கு முன் பும்துறை அதிகாரிகள் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு கடிதம் வழங்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நபர் கள் ஆக்கிரமிப்புகளை அகற்றி கொள்ளவில்லை.

    இந்த நிலையில் ஆக்கிரமிப் புகளை அகற்ற கலெக்டர் அமர் குஷ்வாஹா உத்தரவிட் டார். அதன்பேரில் ஜோலார் பேட்டை நகராட்சி ஆணை யர் கோ.பழனி தலைமையில் நேற்று சுண்ணாம்புகாளை பகுதியில் சாலை ஆக்கிரமிப் புகளை பொக்லைன் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது.

    3 தெருக்களில் அவ்வாறு ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்பு உரிமையாளர்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக ஜோலார் பேட்டை போலீஸ் இன்ஸ் பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் சுமார் 20-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது நகரமைப்பு ஆய் வாளர் நளினா தேவி, நக ராட்சி நில அளவையர் முரு கன் , கிராம நிர்வாக அலுவ லர் சிவக்குமார் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்த குடியிருப்பு உரிமையாளர்களிடம் உரிய ஆவணங்களுடன் எடுத்துக் கூறி விளக்கம் அளித்தனர். இதனால் வாக்குவாதத் தில் ஈடுபட்ட நபர்கள் கலைந்து சென்றனர். அதன் பிறகு பொக்லைன் எந்திரம் மூலம் தெருக்களின் சாலைப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர்.

    • பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை
    • ஏராளமான போலீசார் குவிப்பு

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு அருகே பகவதி அம்மாள்புரம் உள்ளது. இந்த பகுதியில் ஆறு, குளங்களை ஆக்கிரமித்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் இன்று காலை பொதுப்பணித்துறையினர் இந்த பகுதியில் உள்ள ஆறு, குளங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த வீடுகளை இடித்து அகற்ற அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

    அதன் அடிப்படையில் இந்த பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த 7 வீடுகள் ராட்சத ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மூலம் இன்று காலை இடித்து அகற்றப்பட்டன. இதற்கு அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. அங்கு ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • திருப்பத்தூர் அருகே ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.
    • சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்படுகிறது.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியம் இளங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட கருகுடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் நேசம் ஜோசப், சிறுவர் பூங்கா அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். சுமார் 2 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ள சாந்தி மூக்கையா என்பவருக்கு ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்ளும்படி வருவாய் துறை மூலம் கால அவகாசத்துடன் தகவல் அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட நபர் நடவடிக்கையும் எடுக்காததால் வட்டாட்சியர் வெங்கடேசன் தலைமையில் ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடு மற்றும் ஏனைய பகுதிகளை அகற்றினர். மேலும் சம்பந்தப்பட்ட நபருக்கு தகுதி அடிப்படையில் அதே பகுதியில் வசிப்பதற்கு வேறொரு இடமளிக்க பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர் அழகுமீனாள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கணேசன், திருப்பத்தூர் நகர் காவல் ஆய்வாளர் சுந்தர மகாலிங்கம், நாச்சியாபுரம் சார்பு ஆய்வாளர் சுரேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர் முத்துக்கிளி மற்றும் வருவாய் துறையினர், காவல் துறையினர் உடன் இருந்தனர்.

    • கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.
    • கோவிலுக்கு சொந்தமான 1.21 ஏக்கர் தென்னைதோப்பை ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் வசம் மீட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர்அடுத்த ஆலங்குடி நெடாரில்பிரம்ம புரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி தஞ்சாவூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நாகையா, ஆலய நிலங்கள் வட்டாட்சியர் சங்கர்,

    கோயில் செயல் அலுவலர் தனலட்சுமி மற்றும் பணியாளர்கள் கோவிலுக்கு சொந்தமான 1.21 ஏக்கர் தென்னைதோப்பை ஆக்கிரமிப்பிலிருந்து கோவில் வசம் மீட்டனர் .

    தொடர்ந்து தோப்பு மீட்கப்பட்டு அதே இடத்தில் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

    அதில் தென்னந்தோப்பு கோவிலுக்கு சொந்தமானது ஆகும்.

    இங்கு யாரும் அத்துமீறி நுழையக்கூடாது. ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது.

    மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு 15 லட்சம் ஆகும்.

    • பேருந்து நிறுத்தமும், ஊரின் நுழைவுவாயிலாகவும் அந்த இடம் இருக்கின்றது.
    • கழிவுநீர் அடைக்காமல் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 56-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலர் காடேஸ்வரா தங்கராஜ் தலைமையில் அப்பகுதி மக்கள் திருப்பூர் மாநகராட்சி கமிஷனரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    56-வது வார்டுக்கு உட்பட்ட சந்திராபுரம் மெயின் ரோட்டில், அம்மா உணவகம் எதிர்புறம் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில், சாக்கடைகால்வாயை ஆக்கிரமித்தும் நல்ல தண்ணீர் வரும் தொட்டிகளை அடைத்தும்ஒரு மிகப்பெரிய அளவில் செட் ஒன்றை உணவகம் நடத்துவதற்காக, ஒருவர் அமைத்துள்ளார். அந்த இடத்தில் பேருந்து நிறுத்தமும், ஊரின்நுழைவுவாயிலாகவும் அந்த இடம் இருக்கின்றது. பொதுமக்கள் பயன்பாட்டில்உள்ள அந்த இடத்தில் ஆக்கிரமிப்பை அகற்றி தண்ணீர் விநியோகம் சீராகநடைபெறவும் வடிகாலில் கழிவுநீர் அடைக்காமல் செல்லவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 

    • போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது.
    • சனிக்கிழமைதோறும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக சனிக்கிழமைதோறும் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று திருப்பூர் பெருமாநல்லூர் ரோடு ,பிச்சம்பாளையம்,பி.என்.ரோட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில் பணியாளர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையோரம் கடைகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • சாலையில் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் தகர சீட்டுகளை அகற்றினார்கள்.
    • ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ஓடையின் மேல் கட்டப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மேயர் மகேஷ் உத்தரவிட்டுள்ளார்.இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் மாநகர் முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    வடசேரி பகுதியில் இன்று 4-வது நாளாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி. எந்திரம் மூலமாக ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    வடசேரி முதல் வெட்டூர்ணி மடம் வரை உள்ள சாலையில் ஓடையின் மேல் கட்டப்பட்டிருந்த படிக்கட்டுகள் தகர சீட்டுகளை ஜே.சி.பி. எந்திரம் மூலமாக அகற்றினார்கள். ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டதையடுத்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×