search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224121"

    • பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த நிலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.44 மணிக்கு தொடங்கி மறுநாள் 8-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4.48 மணிக்கு நிறைவடைகின்றது. இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • பவுர்ணமி நாளை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை நிறைவடைகிறது.
    • சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்ல மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

    கடந்த மாதம் பவுர்ணமியின் போது கிரிவலம் சென்ற பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரத்திற்கு மேலானதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (திங்கட்கிழமை) மாலை தொடங்கி நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாலை நிறைவடைகிறது.

    மேலும் இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாவான கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தீபத் திருவிழாவின் போது எவ்வாறு பக்தர்களை கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது, பக்தர்கள் வந்து செல்லும் வழி குறித்து வருகிற பவுர்ணமி நாட்களில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களை வைத்து ஒத்திகை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் நேற்று காலை கோவிலில் கலெக்டர் முருகேஷ் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் ராஜகோபுரத்தில் இருந்தும், அம்மணி அம்மன் கோபுரத்தில் இருந்தும் கோவிலில் சாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய செல்வதற்கு தேவையான ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

    மேலும் தீபத் திருவிழாவின் போது கோவிலில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.

    இதுகுறித்து கலெக்டரிடம் கேட்ட போது, பவுர்ணமி நாட்கள் மற்றும் தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் எந்தவித இடையூறு இன்றி சாமி தரிசனம் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

    • இது சுமார் 400 ஆண்டுகள் பழமையான கோவில்.
    • கிரிவலம் செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை.

    வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டுவில் கோட்டைப்பட்டி சென்றாய பெருமாள் மலைக்கோவில் உள்ளது. இங்கு திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த கோவிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடத்தப்படும்.

    அப்போது வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்பார்கள். சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால் அவர்கள் கிரிவலம் செல்வதற்கு முறையான பாதை வசதி இல்லை. இதனால் பக்தர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே கிரிவலம் செல்ல பாதை வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மலையையே சிவனாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.
    • நகரில் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    திருவண்ணாமலையில் நேற்று பவுர்ணமியையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்றதால் தரிசனத்துக்கு 4 மணி நேரம் வரை ஆனது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலின் பின்புறம் உள்ள மலை அண்ணாமலை என அழைக்கப்படுகிறது. மலையையே சிவனாக பக்தர்கள் வழிபடுகின்றனர்.

    பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் மலையை சுற்றி 14 கி.மீ. தொலைவு கொண்ட கிரிவலம் செல்கின்றனர். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று அதிகாலை 4.06 மணியளவில் தொடங்கியது. இதனால் நேற்று முன்தினம் இரவு முதலே பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    நகரில் காணும் இடமெங்கும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது. நள்ளிரவு முதலே அவர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர்.

    அதுமட்டுமின்றி கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்கள் மற்றும் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர். பொது தரிசன வழியில் பக்தர்கள் சாமி செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலானது.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    பவுர்ணமி இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரை இருந்ததை கருத்தில் கொண்டு பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    • சித்தர்களால் வழிபட்ட பெருமையுடையது தோரணமலை முருகன் ஆலயம்.
    • கிரிவலம் வந்த பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள தோரணமலை கோவில் அகத்தியர், தேரையர் போன்ற சித்தர்களால் வழிபட்ட பெருமையுடையது. மலைமீது குகையில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

    ஒவ்வொரு மாதம் பவுர்ணமி தோறும் தோரணமலையை சுற்றி கிரிவலம் நடந்து வருகிறது. இன்று புரட்டாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கிரிவலத்தில் திரளான பக்தர்கள் தோரணமலை முருகனுக்கு அரோகரா என சரண கோஷம் முழங்க பக்தி பஜனை பாடல்கள் பாடி சுமார் நான்கரை கிலோமீட்டர் சுற்றளவுள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தனர்.

    கிரிவலம் வந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்ன தானம் மற்றும் பிரசாதங்கள் வழங்க பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் கே.ஏ.செண்பகராமன் செய்திருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பவுர்ணமி அன்று திருவண்ணாமலையை சுற்றி கிரிவலம் வருவது சிறப்பானது.
    • புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் வரும் ஏராளமான பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

    இந்தநிலையில், பக்தர்களுக்கு புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வருகிற 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி 10-ந்தேதி (திங்கட்கிழமை) அதிகாலை 3.09 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விரல்விட்டு எண்ணும் அளவிற்கு பக்தர்கள் கிரிவலம் வந்து சென்றனர்.
    • திருவண்ணாமலைக்கு நிகராக திருப்பரங்குன்றம் பவுர்ணமி கிரிவலம் தனி முத்திரை பதித்து வருகிறது.

    திருப்பரங்குன்றம் மலையை வட திசையில் இருந்து பார்க்கும்போது கைலாய மலை போன்றும், கிழக்கில் இருந்து பார்க்கும்போது பெரும் பாறை போன்றும், தெற்கு திசையில் இருந்து பார்க்கும்போது பெரிய யானை படுத்து இருப்பது போன்றும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி பார்க்கும் போது சிவலிங்க வடிவமாகவும் காட்சி அளிக்கிறது. கோவிலின் கருவறை ஆனது மலையை குடைந்து அமைய பெற்று உள்ளது. இங்கு விமானம் கிடையாது. மலையே விமானமாக அமைந்து உள்ளது. மலையானது சிவலிங்க வடிவமாக இருப்பதாலும், முருகப்பெருமானின் திருக்கல்யாணத்திற்கு முப்பத்து முக்கோடி தேவர்களும் இங்கு வந்து சென்றுள்ளனர்.

    ஆகவே இந்த தலத்தில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் கிரிவலம் வந்தால் மலையாக காட்சி தரும் சிவபெருமானின் அருளும், முப்பத்து முக்கோடி தேவர்களின் அருளும் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை விரல்விட்டு எண்ணும் அளவிற்கு பக்தர்கள் கிரிவலம் வந்து சென்றனர்.

    ஆனால் சமீபகாலமாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து கிரிவலம் சென்று முருகப்பெருமானை தரிசனம் செய்துவருகிறார்கள். அதனால் கிரிவலமானது திருவிழாவாகவே மாறி வளம் பெற்று வருகிறது. திருவண்ணாமலைக்கு நிகராக திருப்பரங்குன்றமும் பவுர்ணமி கிரிவலத்தில் தனி முத்திரை பதித்து வருகிறது என்றால் மிகையாகாது. ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதில் கோவிலுக்குள் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ஒவ்வொரு பவுர்ணமி தோறும் கிரிவலம் வருவதற்கு உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிக்கவேண்டும். கார்த்திகை அன்று தங்கமயில்வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் முக்கிய ரதவீதிகளில் நகர்வலம் வருவதுபோல பவுணர்மி தோறும் தங்கமயில் வாகனத்தில் முருகப்பெருமான் தெய்வானையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.
    • அஷ்ட லிங்க கோவில்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்தவாறு கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 6.25 மணியளவில் தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    பவுர்ணமி நேற்று மாலை 4.35 மணி வரை இருந்தால் பக்தர்கள் இரவு வரை தொடர்ந்து கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் அவர்கள் சாமி தாிசனம் செய்தவாறு கிரிவலம் சென்றனர்.

    தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலை சுற்றியுள்ள ஒத்தவாடை தெருவை சுற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி வலம் வந்தனர்.
    • பவுணர்மியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவதாக படைவீடாக போற்றப்படும் கோவில் அமைந்துள்ளது. இங்குதான் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது என்பது புராண தகவல்.

    பழமை வாய்ந்த இந்த கோவில் மலையில் அமைந்துள்ளது. இந்த மலையை பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வலம் வருவது வழக்கத்தில் உள்ளது.

    ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி வலம் வந்தனர். அப்போது மலை ஒரு சிவலிங்கம் போலவும், அதன் சிகர பகுதியில் பவுர்ணமி நிலவு காட்சி அளித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    இதனை பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள் சிவபெருமான் பிறை நிலவை சூடி இருப்பார். ஆனால் திருப்பரங்குன்றத்தில் சிவபெருமான் முழு நிலவை சூடி இருப்பதுபோல் அதிசய காட்சியை கண்டு மெய்சிலிர்த்தோம் என்று தெரிவித்தனர்.

    பவுணர்மியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கிரிவல பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


    • திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை தொடங்குகிறது.

    திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை(வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 6.20 மணியளவில் தொடங்கி மறுநாள் மாலை 4.30 மணியளவில் நிறைவு பெறுகின்றது. பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    • பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
    • பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலையை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கியது. இதனால் நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று பகலில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பவுர்ணமி இன்று காலை 8 மணி வரை இருந்ததால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது சிறப்பானது.
    • திருவண்ணாமலை மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    ×