search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடையூறு"

    • வட மாநிலத்தவர்கள் புகுந்ததால் ரிசர்வேஷன் பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை.
    • முன்பதிவு செய்யாமல் செய்த பயணிகளை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கின்றனர்.

    சென்னை:

    வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களிலும், தமிழகத்தில் தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளை முன்பதிவு செய்யாத பயணிகள் ஆக்கிரமித்து கொள்வதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

    கடந்த வாரம் சென்னையில் இருந்து ஹவுரா சென்ற ரெயிலில் முன்பதிவு செய்யாத வட மாநிலத்தவர்கள் முன்பதிவு பெட்டிகளில் புகுந்ததால் ரிசர்வேஷன் செய்த பயணிகள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

    வட மாநிலத்திற்கு செல்லும் இளைஞர்கள் அத்துமீறி ரெயில் பெட்டிகளை ஆக்கிரமித்து கொள்ளும் சம்பவத்தை சமூக ஆர்வலர்கள் கண்டித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தெற்கு ரெயில்வே அதிகாரிகள் முன்பதிவு செய்த பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் பயணிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தனர்.

    அதன் அடிப்படையில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பதிவு பெட்டிகளில் மற்ற பயணிகள் ஏறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிற மாநிலங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள், தமிழகத்திற்கு உள்ளே ஓடக்கூடிய ரெயில்களில் டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ஆர்.பி.எப். போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அறி வுறுத்தப்பட்டது.

    அதன்படி வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் குறிப்பாக அதிக பயணிகள் பயணிக்கும் ரெயில்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் முன்பதிவு ரெயில் பெட்டிகளில் சுற்றித்திரியும் நபர்களிடம் டிக்கெட்டை கேட்டு விசாரித்து முன்பதிவு டிக்கெட் இல்லாதவர்களை அடுத்த ரெயில் நிலையத்தில் கீழே இறக்கி பொதுப் பெட்டிக்கு மாறி செல்ல அறிவுறுத்துகின்றனர்.

    பரிசோதகர்களும் விரைவாக டிக்கெட்டை ஆய்வு செய்து சாதாரண டிக்கெட்டுடன் யாரும் பயணிக்கிறார்களா? என்பதை கண்காணித்து வெளியேற்றுகிறார்கள்.

    சென்ட்ரல், எழும்பூரில் இருந்து புறப்படும் எல்லா ரெயில்களிலும் போலீசார் பயணம் செய்து முன்பதிவு செய்யாமல் செய்த பயணிகளை கண்டுபிடித்து அபராதமும் விதிக்கின்றனர்.

    ரிசர்வேஷன் செய்த பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் ரெயில்வே போலீசாரும் டிக்கெட் பரிசோதகரும் பாதுகாப்பு அளித்திட தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ள தெற்கு ரெயில்வே அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

    • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக விருத்தாசலம் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
    • பொருட்கள் அனைத்தையும் லாரியில் ஏற்றி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் வைத்தனர்.

    கடலூர்:

    விருத்தாசலத்தில் உள்ள மணிமுத்தாறு பாலத்தின் நடைபாதையில் ஆக்கிரமித்து 30-க்கும் மேற்பட்டோர் கடைகள் வைத்திருந்தனர். இக்கடைகள் பாலத்தின் மீது நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளதாக விருத்தாசலம் நகராட்சிக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்நிலையில் இன்று காலை அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள் அங்கிருந்த பழக்கடை, காய்கறி கடை மற்றும் பேன்சி கடைகளை அகற்றினர். மேலும், பொருட்கள் அனைத்தையும் லாரியில் ஏற்றி விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • அமைச்சர் துறை சார்ந்த அலுவலர்களுக்கு பல்வேறு ஆலோ னைகளை வழங்கினார்.
    • நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சி பகுதிகளில் முக்கிய சாலை சந்திப்புகளில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் மூலம் நடைபெற்று வரும் விரிவாக்க பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். கடலூர் மாநகராட்சி நுழைவாயிலான ஆல் பேட்டை சாலை சந்திப்பில் பொது போக்குவரத்திற்கு இடையூறின்றி ஒழுங்குபடுத்தும் விதமாகவும், விபத்து தடுப்பு நடவடிக்கையாகவும், இச்சாலை சந்திப்பை ரூ. 7 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதையும், கடலூர், கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அண்ணா பாலத்துக்கு மாற்றாக பழைய இரும்பு பாலத்தை அகற்றி புதிய பாலம் கட்டுவது தொடர்பாகவும் மற்றும் உழவர் சந்தை அருகே உள்ள சாலை சந்திப்பை மேம்படுத்துவது குறித்தும் மாண்புமிகு வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டு, போக்குவரத்திற்கு இடையூறின்றி இப்பணிக ளை துரிதமாக மேற்கொ ள்வது குறித்து துறை சார்ந்த அலுவலர் களுக்கு பல்வேறு ஆலோ சனைகளை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகர தி.மு.க. செயலாளர் ராஜா மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் , உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதி கள் உள்ளனர்.

    • திண்டி வனம் நுகர்பொருள் வாணிப கிடங்கு குடோனுக்கு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.
    • லாரியில் உள்ள அரிசி மூட்டைகளை வேறு லாரியில் மாற்றினர்

    கடலூர்: 

    கடலூர் அடுத்த செம்மங்குப் பத்தில் உள்ள அரசு அரிசி ஆலையில் இருந்து மூட்டைகளை ஏற்றிக்கொண்டு திண்டி வனம் நுகர் பொருள் வாணிப கிடங்கு குடோனுக்கு லாரி ஒன்று நேற்று இரவு புறப்பட்டது.

    இந்த லாரி அண்ணா கிராமம் சாலையில் சென்று கொண்டி ருந்த போது, சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்த பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று லாரியில் உள்ள அரிசி மூட்டைகளை வேறு லாரியில் மாற்றினர். சாலை யின் நடுவே போக்கு வரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்த லாரியை கிரேன் மூலம் அப்புறப்படுத்தி னர்.

    • முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.
    • 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மக்கள் நலக்கழகம் செயலாளர் பக்கிரி சாமி, இது குறித்து, மாவட்ட கலெக்டர் குலோத்துங்க னுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 'ஸ்வதேஷ் தர்ஷன்' ஆலோசனை க்கூட்டத்தில், காரைக்கால் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இத்திட்டத்தில், முதற்கட்டமாக ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அறிந்தோம்.

    குறிப்பாக இத்திட்ட த்தில் காரைக்கால் வணிகம் பெருகுவதற்கும், காரைக்கால் நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வெளியூர் மக்கள் எளிதில் வந்து செல்வதற்கு வசதியாக, வாகன நிறுத்துமிடம் அமைப்பது குறித்தும், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் குறிப்பிடப்படவில்லை. மேற்கண்ட 3 திட்டங்களும் மிக அவசியமான ஒன்றாகும். குறிப்பாக, காரைக்கால் நகர் பகுதிக்கு வரும் பலர், தங்கள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல், மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பலர், மக்கள் நடமாடும் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி செல்வதால், போக்கு வரத்துக்கு இடையூறும், விபத்துகளும் ஏற்படுகின்றது. இதை தவிர்க்க, காரைக்கால் பழைய பஸ் நிலையம் பகுதி, கடந்த பல ஆண்டுகளாக உபயோகம் இன்றி இருப்பதால், அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் இத்திட்டத்தின் கீழ் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுபோல், காரைக்கால் நகரப்பகுதியில் கழிப்பிடம் மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

    • தேவகோட்டை புதிய பஸ் நிலையத்தில் அத்துமீறி நுழையும் ஆட்டோக்களால் அரசு பஸ்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
    • பெரிய விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சுற்றி யுள்ள சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவை களுக்காக தேவகோட்டை நகருக்கு பஸ் மூலமாக அதிக அளவில் வந்து செல் கின்றனர். பேருந்து நிலையத் தில் போக்குவரத்து நெரிசல் களை குறைப்ப தற்காக கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டது. குறிப்பிட்ட நகர பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதிய பேருந்து நிலைய நுழைவாயிலில் கடந்த சில மாதங்களாகவே ஆட்டோக் கள் அதிகளவில் நிறுத்தி போக்குவரத்துக்கு இடை யூறாகவே செய்து வருகின்ற னர். புதிய பேருந்து நிறுத்தத் தில் நிறுத்தப்படும் நகரப் பேருந்துகள் இதனால் அருகில் உள்ள பேருந்து நிலையம் நுழைவாயில் வழி யாக செல்லும் நிலை ஏற்பட் டது. இதனால் காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

    புதிய பேருந்து நிலையத் தில் நிறுத்தப்படும் ஆட் டோக்களால் போக்கு வரத்து நெரிசல் அதிக அள வில் ஏற்பட்டு வருகிறது. இதனால் பெரிய விபத்துக் கள் ஏற்பட வாய்ப்புகள் உள் ளது.

    காவல்துறையினர் அவ் வப்போது இந்த ஆட்டோக் களுக்கு அபராதம் விதிக்கப் பட்டும் மீண்டும் மீண்டும் இதே தவறுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் செய்து வரு கின்றனர். அத்துமீறி பஸ் நிலையத்தில் நுழையும் ஆட் டோக்கல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தேரோட்ட பாதைகளுக்கு இடையூறு இன்றி அமைக்க வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

    மதுரை

    முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    மதுரையில் தற்போது ரூ. 8 ஆயிரத்து 500 கோடியில் செயல்படுத்தப்படும் மெட்ரோ ெரயில் திட்டத்திற்கு 20 சதவீதம் மத்திய அரசு பங்கும், 20 சதவீதம் மாநில அரசு பங்கும், 60 சதவீத நிதி உதவியுடன் நடைபெறுவ தாக கூறப்பட்டுள்ளது.இதற்காக பல்வேறு இடங்களில் மண் பரிசோ தனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

    திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கிலோமீட்டர் அமைக்கப்பட உள்ளதாகவும், இதில் 21 நிறுத்தங்கள் நிலத்திலும், 6 நிறுத்தங்கள் பூமிக்கடியில் அமைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.

    இதில் மூன்று பெட்டிகள் பொருத்தப் பட்டு 750 முதல் 900 வரை மக்கள் பயணம் செய்யும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது.

    இந்த மெட்ரோ ெரயில் திட்டத்தில் பூமிக்கு அடியில் அமைக்கும் போது பல்வேறு பழமையான கட்டிடங்கள் உள்ளது. அதையெல்லாம் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக யானைக்கல் முதல் பெரியார்நிலையம் பகுதி வரை உயர் மட்ட பாலங்கள் அமைக்கப்பட உள்ளது. அதே இடத்தில் தான் மெட்ரோ திட்டமும் வருகிறது. ஒரே இடத்தில் இரு வழித்தடங்களால் குழப்பம் ஏற்படுகிறது இதற்கு உரிய விளக்கத்தை அரசு வழங்க வேண்டும்.

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே திட்டம் வருகிறது என்று கூறுகி றார்கள். மதுரையில் பாரம்பரியமிக்க மாசி வீதிகளில் தேர் வரும் இடத்தில் பூமிக்கு அடியில் அமைக்கும் போது எந்த இடையூறும் இல்லாமல் அமைக்கப்பட வேண்டும்.

    தேரோட்டத்திற்கு எந்த இடையூறு இல்லாமல் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக உரிய பாது காப்பை பார்க்க வேண்டும்.

    மேலும் பூமிக்கு அடியில் அமைக்கும் பொழுது ஏற்கனவே குடிநீர் திட்டப்பணிகள், மின்சார கேபிள் உள்ளிட்ட இணைப்புகளை சரி பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தோப்புத்துறை சின்னபள்ளிவாசல் தெருவில் பள்ளிவாசலுக்கு பின்புறம் டிரான்ஸ்பார்மர் அமைந்துள்ளது.
    • டிரான்ஸ்பார்மர் நெருக்கடியான தெருவில் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் இடையூறாக உள்ளது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை சின்னபள்ளிவாசல் தெருவில் பள்ளிவாசலுக்கு அருகில் மின்கம்பமும், அதே பள்ளிவாசலுக்கு பின்புறம் டிரான்ஸ்பார்மரும் அமைந்துள்ளது.

    இந்த மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மர் நெருக்கடியான தெருவில் உள்ளதால் வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் இடையூறாக உள்ளது.

    இதனால் அப்பகுதி அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    இதுகுறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, அசம்பாவி தத்தை தடுக்கும் பொருட்டு மின்கம்பம் மற்றும் டிரான்ஸ்பார்மரை மாற்று இடத்தில் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • குடியிருப்பு வாரியம் அருகில் தனி நபருக்கு சொத்தமான நிலம் உள்ளது‌‌.
    • நடவடிக்கை எடுத்து மீண்டும் சுற்று சுவரை கட்டி தர வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கரகதஹள்ளி பஞ்சாயத்தில் கடைமடை என்னும் இடத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது.

    குடியிருப்பு கடந்த 2001-ம் வருடம் பஞ்சாயத்தி டம் சாலைகள், கழிவுநீர் கா ல்வாய்கள், சிறு பாலங்கள், குடிநீர், தெரு விளக்கு மற்றும் பராமரிப்பு பணி காரணமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த குடியிருப்பை சுற்றிலும் சுற்று சுவர் வீட்டு வசதி வாரியம் சார்பில் கட்டி தரப்பட்டுள்ளது.குடியிருப்பு வாரியம் அருகில் தனி நபருக்கு சொத்தமான நிலம் உள்ளது.

    இந்த நிலத்திற்கு வழி வகை செய்ய தனி நபரான ஒருவர் சுற்று சுவரை இடித்து உள்ளார்.இது சம்மந்தமாக பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு காவல் துறையினர் முன்னிலையில் மீண்டும் சுற்று சுவரை கட்டி தருவதாக அவர் கூறி சென்று உள்ளார்.

    ஆனால் சுற்று சுவரை கட்டி தராமல் 21-11-2022 அன்று மீண்டும் டிராக்டர் கொண்டு இடிக்க வந்துள்ளனர். இதனை சீனிவாசன் என்பவர் தடுக்க செல்லும் போது அவர் மீது டிராக்டர் ஏற்றி கொலை முயற்சி செய்துள்ளனர்.

    இந்த பஞ்சாயத்து தலைவியும் இதற்கு உடைந்தையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் அப்பகுதியில் அடியாட்கள் கொண்டு மிரட்டுவது அங்கேயே மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

    இதனால் அப்பகுதி பெண்கள் மற்றும் குழந்தைகள் மாலை 6 மணிக்கு மேல் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில் உள்ளனர்.

    எனவே தங்கள் பகுதி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும்,சுற்று சுவரை இடித்தவர் மீது நடவடிக்கை எடுத்து மீண்டும் சுற்று சுவரை கட்டி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

    • மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல்
    • 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் சாங்கோ மெடிக்கல் பின்புறம் சிறிய நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிக நெருக்கடியாக இருக்கும். அப்பகுதியில் ஏராளமான கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் மோட்டர் சைக்கிளும் செல்கிறது.ஆகையால் காலை மற்றும் மாலை நேரங்களில் இப்பகுதி மிகுந்த நெருக்கடியாக இருக்கும்.

    இந்த நெருக்கடியான நடைபாதையில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த வாகனம் அருகில் ஏதேனும் வீட்டில் உள்ளவர்களுக்கு சொந்தமானதா? இல்லை பழுதானதால் அங்கு நிறுத்தி சென்று விட்டார்களா? இல்லை திருட்டு வாகனமா என்பது தெரியவில்லை.

    போக்குவரத்துக்கு இடையூறாக சில மாதங்களாக அதே இடத்தில் நின்றதால் இது பற்றி அருகில் உள்ளவர்கள் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.ஆனால் 1 மாதம் ஆகியும் போலீசார் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த மோட்டார் சைக்கிளால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், இருசக்கர வாகனத்தில் செல்வதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

    • வேளிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.
    • நாகர்கோவில் புளியூர் குறிச்சி மற்றும் உதயகிரி கோட்டை பகுதி பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நடவடிக்கை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் புளியூர் குறிச்சி மற்றும் உதயகிரி கோட்டை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு திரளான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி வனப்பகுதிக்கு அருகில் உள்ளதால் அவ்வப்போது வன விலங்குகள் ஊருக்குள் சென்று பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. அதனை தடுக்க பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில் ஏராளமான குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். குரங்குகளை பிடிக்க அப்பகுதியினர் வனத்துறையினரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    கோரிக்கையை ஏற்று வேளிமலை வனசரகத் திற்குட்பட்ட வடக்கு பீட் வனத்துறை அதிகாரிகள் குரங்குகளை பிடிக்க முடிவு செய்து கூண்டு வைத்தனர். தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அதில் நேற்று 32 குரங்குகள் சிக்கியுள்ளன. அதனை வனத்துறை அதிகாரிகள் பிடித்து வேளிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அடர்ந்த காட்டில் கொண்டு பாதுகாப்பாக விட்டனர்.

    • திருச்சி தீரன் நகரில் தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை.
    • மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.

    திருச்சி

    திருச்சி-திண்டுக்கல் சாலையில் அமைந்துள்ள வளர்ந்து வரும் பகுதி தீரன் நகர். அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, வாரச்சந்தை என எப்போதும் மக்கள் நடமாட்டம் மிகுந்த அந்த பகுதியில் மெயின் ரோட்டில் பொழுது சாய்ந்ததும் வெளியில் மேய்ந்து வரும் மாடுகள் ரோட்டுக்கு வந்து விடுகின்றன.

    இங்கு தினமும் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் சுற்றித் திரிவதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியவில்லை. பாதசாரிகளும் மாடுகளுக்கு பயந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த பகுதிகளில் ஏராளமான கடைகளும் உள்ளன.

    கடைகளுக்கு வருபவர்களும், குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் வார சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி போன்ற பொருட்களை வாங்கிச் செல்ல முடியவில்லை. மாணவ-மாணவிகள், முதியவர்கள் மாடுகளுக்கு பயந்து வேறு வழியே சுற்றி செல்லும் பரிதாப நிலை உள்ளது.

    மாநகராட்சி பகுதிகளில் மாடுகள் வெளியே சுற்றி திரிந்தால் அவற்றை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அதனை யாரும் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. இங்கு அபராதம் விதிக்கப்படாவிட்டாலும் மாட்டின் உரிமையாளர்களை அழைத்து அவர்களுக்கு விதிமுறைகளை எடுத்துக் கூறி மாடுகளை வீடுகள் அருகிலேயே கட்டி அல்லது தொழுவத்தில் கட்டி பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து நிர்வாகத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.

    மாடுகள் முட்டி பெரிய அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பாக இந்த நடவடிக்கையை எடுத்தால் சிறப்பாக இருக்கும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×