search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224333"

    • விநாயகர்கோவில் கும்பாபிஷேகத்தில் மதுரை ஆதீனம் பங்கேற்றனர்.
    • சமூக சேவகர் ராமராஜ் தலை மையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் மாப்பிள்ளை விநாயகர்கோவில் உள்ளது. இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவை முன்னிட்டு கடந்த 4-ந் தேதி விநாயகர் பூஜை, எந்திர ஸ்தாபனம், கலச ஸ்தாபனம் யாகசாலை பூஜை ஆகியவை நடந்தன.

    அதன்பின்னர் 3-ந் தேதி அதிகாலை 4 மணிக்கு யோகினியர் லலிதா மகிளா சமாஜம் சுவாமிகள் கணபதி ஹோமத்தை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மங்கல வாத்திய நிகழ்ச்சி மற்றும் விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, சுதர்சன பூஜை லட்சுமி ஹோமம், தீப வழிபாடு நடைபெற்றது.

    மாலை வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், முதல் கால யாக பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நேற்று காலை 2-ம் கால யாகபூஜை, மகாபூர்ண ஹூதி வழிபாட்டுடன் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    மதுரை ஆதீனம் ஞா னசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். ஆதி வழி விடு விநாயகர் கோவில் அர்ச்சகர் சோமசுந்தரம் பட்டர், கார்த்திக் சாஸ்திரிகள் கும்பாபிஷேக பூஜைகளை நடத்தினர்.

    பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் அழங்க ப்பட்டது. பின்னர் மாலையில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் கலந்து கொண்டு வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர்கோவில் நிர்வாகத்தினர், சமூக சேவகர் ராமராஜ் தலை மையில் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது.
    • 10, 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் நண்பர்கள் ரோட்டரி சங்க பதவியேற்பு விழா மாவட்ட ஆளுநர் முத்து தலைமையில் நடந்தது. தலைவராக அங்குராஜ், செயலாளராக பால்சாமி மற்றும் நிர்வாகிகள் பதவியேற்றனர்.

    மாவட்ட செயலாளர் குருசாமி, ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், உதவி ஆளுநர் குமரேசன் ஆகியோர் பதவி பிரமாணம் செய்து வைத்தனர்.

    10 மற்றும் 11-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 30 மாணவ, மாணவிகளுக்கு கேடயம் வழங்கப்பட்டது.

    நகராட்சி தூய்மை பணியாளர்கள் 11 பேருக்குபுத்தாடைகள் வழங்கப்பட்டது. 15 பயனாளிகளுக்கு தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டை பெற்று தரப்பட்டது.

    • மேலூர் அருகே மேலவளவில் கொலை செய்யப்பட்ட 7 பேர் நினைவிடத்தில் திருமாவளவன் மரியாதை செலுத்தினர்.
    • மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது மேலவளவு. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருந்த முருகேசன் உட்பட 7 பேர் கடந்த 1997ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ம் நாள் படுகொலை செய்யப்பட்டனர்.

    அதனை அடுத்து மேலவளவில் விடுதலை களம் அமைக்கப்பட்டு அங்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசனுக்கு சிலை மற்றும் அவருடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    இன்று அவர்களுடைய 25-வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. நேரில் வந்து நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இதில் மேலூர் தொகுதி செயலாளர் அய்யாவு, நிர்வாகி ஆற்றல் அரசு மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன், வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் மாதவன், மாவட்ட அமைப்பாளர் இ.எ.பாசறை, அரச. முத்துப்பாண்டியன், கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் மணிகண்டன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • பெரியபட்டினத்தில் மினிமாரத்தான் போட்டி நடந்தது.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் ஆகியவை மக்கள் சங்கமம் மாநாட்டில் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் நகர் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் சார்பில் மக்களாட்சியை பாதுகாப்போம் என்ற மக்கள் சங்கமம் மாநாடு வருகிற 30 மற்றும் ஜூலை 1-ந் தேதிகளில் பெரியபட்டினம் தர்கா திடலில் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக மினி மாரத்தான் போட்டி நடந்தது.

    போட்டியை மாநில செயலாளர் முகமது ரசின் தொடங்கி வைத்தார். பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி முத்துப்பேட்டை, சேதுநகர், மங்கம்மா சாலை வழியாக மீண்டும் பெரியபட்டினம் வரை 7 கிலோ மீட்டர் தூரம் இந்த மாரத்தான் போட்டி நடந்தது. இதில் முதல் இடத்தை ஆசிப், 2-வது இடத்தை யூசுப், 3-வது இடத்தை மைதீன் ஆகியோர் பெற்றனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் ஓட்டத்தை முழுமையாக நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ் ஆகியவை மக்கள் சங்கமம் மாநாட்டில் வழங்கப்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    • இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் பூம்புகார் சங்கர்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.
    • இறால் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்குள் விலைநிர்ணயம் செய்து இறால் விவசாயிகளுக்கு சரியான விலை தராமல், சந்தை மதிப்பை மறைத்து, குறைத்து விலை தருவதை கண்டிப்பது,

    சீர்காழி:

    சீர்காழியில் மயிலாடுதுறை மாவட்ட இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இறால் வளர்ப்பு விவசாயிகள் சங்க தலைவர் பூம்புகார் சங்கர்பிள்ளை தலைமை வகித்தார். செயலாளர் பேராசிரியர் ஜெயராமன் வரவேற்றார்.

    நிர்வாகிகள் அரவிந்தன், அரிகிருஷ்ணன், கோபால், ராஜ்குமார், சாமிநாதன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில், இறால் ஏற்றுமதியாளர்கள் ஒன்றிணைந்து அவர்களுக்குள் விலைநிர்ணயம் செய்து இறால் விவசாயிகளுக்கு சரியான விலை தராமல், சந்தை மதிப்பை மறைத்து, குறைத்து விலை தருவதை கண்டிப்பது,

    மத்திய, மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், உரிமம் வாங்குவது, புதுப்பிப்பதில் உள்ள தேவையற்ற காலதாமத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் நிர்வாகிகள் ஞானம், இளங்கோ, அக்பர், சுந்தர் பங்கேற்றனர். முடிவில் சரவணன் நன்றிக் கூறினார்.

    • குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
    • தேர்தலுக்கான இடம், நாள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும்.

    நாகர்கோவில்:

    குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும் மாநகராட்சி மேயருமான மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தி.மு.க. 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடைபெற்று வருகிறது. குமரி கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 9 ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனு வினியோகம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு நாகர்கோவில் ஒழு கினசேரியில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறுகிறது.

    தலைமை கழக பிரதிநிதி வக்கீல் அருள்தாசன் விண்ணப்ப படிவங்களை வழங்குகிறார். நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினர் காலை 10 மணிக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொண்டு, அன்று மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்து விண்ணப்ப படிவங்களை உரிய கட்டணத்துடன் மாவட்ட அலுவலகத்தில் தலைமை கழக பிரதிநிதியிடன் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    வேட்பு மனுவை பரி சீலனை செய்து போட்டி யிருக்கும் ஒன்றிய கழகத் தேர்தலை நாளை (செவ் வாய்க்கிழமை) முதல் 9-ந் தேதிக்குள் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயலாளர் தேர்தல் நடைபெறும். தேர்தலுக்கான இடம், நாள் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைபெறும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×