என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்ஜினீயர் பலி"

    • கம்ப்ரஸரை வினியோகித்த நிறுவனத்துக்கு மில் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • கோமதிசங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சூலூர்:

    சூலூர் அருகே முதலிபாளையம் பகுதியில் தனியார் நூற்பாலை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று மாலை நூற்பாலையில் உள்ள கம்ப்ரஸர் பழுதானது. இதனால் கம்ப்ரஸரை வினியோகித்த நிறுவனத்துக்கு மில் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

    பழுதை சரிசெய்வதற்காக கம்ப்ரஸர் நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த என்ஜினீயரான கோமதி சங்கர் (வயது 41) மற்றும் அவரது உதவியாளர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

    கோமதிசங்கர் கம்ப்ரஸர் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக கம்ப்ரஸர் வெடித்து சிதறியது. இதில் கோமதி சங்கர் சிக்கி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுபற்றி சூலூர் போலீஸ்நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மாதையன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கோமதிசங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    • சரவணணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது
    • எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியது. காரின் முன்பகுதி முழுவதும் ேசதம் அடைந்தது.

    சூலூர்,

    சூலூர் அருகே இருகூரை சேர்ந்தவர் தங்கராஜ்(வயது43). என்ஜினீயர். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். மேலும் இருகூர் பா.ஜ.க முன்னாள் இளைஞரணி தலைவராகவும் பதவி வகித்துள்ளார். இயற்கை அறக்கட்டளை அறங்காவலராகவும் பதவி வகித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று தங்கராஜ் தனது நண்பரான சரவணன்(40) என்பவருடன் காரில் இருகூர் நோக்கி வந்தார். சரவணன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இருகூர் மயானம் அருகே கார் வந்த போது எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியது. காரின் முன்பகுதி முழுவதும் ேசதம் அடைந்தது.

    இதில் காரில் இருந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சரவணன் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினார்.இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உடனடியாக சூலூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த தங்கராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த சரவணணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிரேன் டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலைப்பொங்கலை கொண்டாடுவதற்காக மகாராஜன் தனது மனைவியுடன் மாமனாரின் ஊரான நொச்சிகுளத்துக்கு சென்றார்.
    • ளத்தின் ஆழமான பகுதியில் மகாராஜன் மூழ்கியதில் மனைவி கண் எதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் தலையால்நடந்தான்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மகாராஜன் (வயது28). என்ஜினீயரான இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் வேலை செய்து வந்தார்.

    இவருக்கும், நொச்சிகுளத்தைச் சேர்ந்த சத்தியபிரபாவுக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தலைப்பொங்கலை கொண்டாடுவதற்காக மகாராஜன் தனது மனைவியுடன் மாமனாரின் ஊரான நொச்சிகுளத்துக்கு நேற்று சென்றார். பின்னர் மாலையில் அவர்கள் அங்குள்ள குளத்தில் குளித்தனர். அப்போது குளத்தின் ஆழமான பகுதியில் மகாராஜன் மூழ்கியதில் மனைவி கண் எதிரிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    • ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார்.
    • விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் காங்கேயத்தான் (வயது 22). பொறியியல் படித்துள்ளார். இவர் நேற்று பகல், தனது நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) ஆகியோருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சேலம்-விருத்தாசலம் ரெயில் பாதை அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அந்த வழியாக காரைக்காலிருந்து பெங்களுரு செல்லும் ரெயில் வந்தது. இதைப்பார்த்த காங்கேயத்தான் ஓடும் ரெயில் முன்பாக சென்று செல்பி எடுக்க முயன்றார்.

    இதனிடையே வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி காங்கேயத்தான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார். அவர் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான காங்கேயத்தான் அடிக்கடி அப்பகுதிக்கு வந்து மது அருந்துவதும், ரெயில் அருகே சென்று செல்பி எடுத்து நண்பர்களுக்கு பகிர்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

    இந்த வழக்கம் விபரீதித்தில் முடிந்துள்ளதாக அப்பகுதியினர் சோகத்துடன் தெரிவித்தனர்.

    • குடும்பத்துடன் காரில் சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆம்பூர்:

    அரக்கோணம் அடுத்த வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் ராவணையா (வயது 33). இவர் ஓசூரில் சாப்ட்வேர் கம்பெனியில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி புஷ்பா, இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

    நேற்று முன்தினம் அரக்கோணத்தில் இருந்து குடும்பத்துடன் காரில் ஓசூருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக கார் மோதி விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு ராவணையாவை அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ராவணையா பரிதாபமாக உயிரிழந்தார்.

    காயம் அடைந்த ராவணையாவின் மனைவி மற்றும் 3 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாதவன் குரோம்பேட்டை பகுதியில் தங்கியுள்ள தனது நண்பர்களை பார்ப்பதற்காக வந்து அங்கு தங்கி வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.
    • நேற்று மாலை காய்ந்த துணிகளை எடுப்பதற்காக மாடிக்கு அவர் சென்றனர்.

    சென்னை:

    திருவாரூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (23). இவர் பி.இ. மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு கடந்த வாரம் சென்னை, குரோம்பேட்டை பகுதியில் தங்கியுள்ள தனது நண்பர்களை பார்ப்பதற்காக வந்து அங்கு தங்கி வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

    நேற்று மாலை காய்ந்த துணிகளை எடுப்பதற்காக மாடிக்கு அவர் சென்றனர். அப்போது அவரது பனியன் வீட்டின் அருகே செல்லும் மின்சார கம்பியில் விழுந்திருந்தது அதை எடுப்பதற்காக மாதவன் 5 அடி நீளம் கொண்ட இரும்பு கம்பியால் முயற்சித்தபோது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டார். அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    • கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது.
    • விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    போரூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரிஷி கவுதம் (வயது24). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் சென்னையில் தங்கி தரமணியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    இவர் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டு இன்று அதிகாலை 5மணி அளவில் பஸ் மூலம் சென்னை திரும்பினார். அசோக் நகர் அடுத்த ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் சிக்னல் அருகே பஸ்சில் இருந்து கீழே இறங்கிய ரிஷி கவுதம் பின்னர் 100 அடி சாலையை கடக்க முயன்றார்.

    அப்போது அவ்வழியே கும்பகோணத்தில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த அரசு விரைவு பஸ் எதிர்பாராதவிதமாக ரிஷி கவுதம் மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய ரிஷிகவுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவல் அறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் ரிஷிகவுதமின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விபத்து ஏற்படுத்திய பஸ் டிரைவரான ரட்சக ராஜன் (58) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    • ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.
    • விபத்து தொடர்பாக கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் தேவராஜன் மகன் பிரசாந்த் (வயது 28). என்ஜினீயரான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில் நேற்று தனது சொந்த ஊருக்கு வந்த பிரசாந்த் வேலை நிமர்த்தமாக இன்று காலை ஈரோட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது கருங்கல்பாளையம் அடுத்துள்ள கிருஷ்ணம்பாளையம் சின்னப்பா லே அவுட் அருகே ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக பிரசாந்த் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது.

    இதில் படுகாயமடைந்த பிரசாந்த் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்து குறித்து தகவலறிந்து வந்த கருங்கல்பாளையம் போலீசார் பிராசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் சதீஷ் (வயது 22). மரைன் என்ஜினீயரிங் படித்துள்ளார். இவர் ஓசூரில் உள்ள கெமிக்கல் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருந்த சதீஷ் தனது நண்பர்களை பார்ப்பதற்காக மோட்டார்சைக்கிளில் சேலத்துக்கு சென்று விட்டு அங்கிருந்து நேற்று மாலையில் வீடு திரும்பினார்.

    சேலம் -நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டகலூர் கேட் அருகே உள்ள வெற்றி நகர் பகுதியில் சதீஷ் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் நிலைதடுமாறி சதீஷ் மோட்டார்சைக்கிளுடன் சாலையோரம் உள்ள கல் மீது விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இந்த சம்பவம் குறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர்.
    • விபத்து தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர்:

    மணலி பல்ஜிபாளையம் சின்ன சேக்காடு அருகே மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறைக்கு சொந்தமான இடம் உள்ளது.

    இங்கு சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொண்டு வரப்படும் மக்கும் குப்பைகள் மூலம் பயோ கியாஸ் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை தனியார் நிறுவனம் நடத்தி வருகிறது. இங்குநாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த என்ஜினீயரான சரவணகுமார் (வயது 25) பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் தொழிற்சாலையின் கண்காணிப்பு அறையில் சரவணகுமாரும், பொன்னேரியைச் சேர்ந்த லாரி டிரைவரான பாஸ்கரும் (35) பணியில் இருந்தனர்.

    அவர்கள் பணி முடிந்து வீட்டுக்கு செல்ல பயோ கியாஸ் எந்திரத்தை நிறுத்தினர். அப்போது எந்திரத்தில் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக பாய்லரில் இருந்த பயோ கியாஸ் பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

    இதில் அறையின் சுவர் முழுவதும் இடிந்து தரை மட்டமானது.

    இதில் என்ஜினீயர் சரவணகுமாரும், டிரைவர் பாஸ்கரும் சிக்கிக்கொண்டனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த மற்ற ஊழியர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கி இருந்த லாரி டிரைவர் பாஸ்கரை படுகாயத்துடன் மீட்டனர். ஆனால் என்ஜினீயர் சரவணகுமார் மீது கட்டிட இடிபாடுகள் பெரிய அளவில் இருந்ததால் உடனே அவரை மீட்க முடியவில்லை.

    தகவல் அறிந்ததும் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 2 மணி நேரம் போராடி என்ஜினீயர் சரவணகுமாரை பிணமாக மீட்டனர்.

    பாய்லர் கியாஸ் வெடித்த சத்தம் கேட்டதும் அருகே குடியிருந்தவர்கள் ஏதோ பெரிய விபத்து ஏற்பட்டது என நினைத்து வீட்டை விட்டு அலறி அடித்து வெளியே வந்தனர். அவர்களுக்கு சற்று மூச்சுத் திணறலும் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மணலி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் பயோ கியாஸ் வெடித்த போது குடியிருப்பு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களும் அதிர்ந்து குலுங்கின. இந்த கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சி தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    விபத்து ஏற்பட்ட பகுதியை மாநகராட்சி அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் திருவொற்றியூர் எம்.எல்.ஏ.கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் ஏ.வி ஆறுமுகம், கவுன்சிலர் தீர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர். இந்த விபத்து காரணமாக நள்ளிரவு 2 மணி வரை அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. குடியிருப்புக்கு அருகே உள்ள பயோ கியாஸ் தொழிற்சாலையை அகற்ற வேண்டும் என்று கூறி பொதுமக்கள் அதிகாரிகளி டம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    கியாஸ் வெடித்த போது தீ அருகில் உள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் பரவி இருந்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கும். மேலும் இரவு நேரம் என்பதால் அதிக அளவிலான தொழிலாளர்கள் அங்கு தொழிற்சாலையில் இல்லை. இந்த விபத்து தொடர்பாக அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துறையூர் அருகே நீர்வீழ்ச்சியில் குளித்தபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி என்ஜினீயர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    துறையூர்:

    பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தை சேர்ந்தவர் ஹசன்கான் மகன் ஷாஜகான் (வயது 21). அதே ஊரை சேர்ந்தவர் நசீர் மகன் ஷாஜித்கான் (21).

    இவர்கள் இருவரும் தங்களது நண்பரான மண்ணச்சநல்லூர் கிராமத்தை சேர்ந்த கப்பல் துறையில் என்ஜினீயராக பணிபுரிந்து வந்த முகுந்தன் (37) என்பவருடன் துறையூர் அருகே உள்ள வண்ணாடு ஊராட்சிக்குட்பட்ட கோரையாறு பகுதிக்கு நேற்று மாலை சென்று அங்குள்ள அருவியில் குளித்துள்ளனர்.

    அப்பொழுது அந்தப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததால், கோரையாற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் உடனடியாக ஆற்றை விட்டு வெளியேற முடியாத மூன்று பேரும் வெள்ளப்பெருக்கில் சிக்கினர். பாறைகளை பிடித்து வெளியே வர முயன்றும் முடியவில்லை.

    கரை புரண்ட வெள்ளத்தில் அவர்கள் அடித்து செல்லப்பட்டனர். இதில் அதிர்ஷ்டவசமாக ஷாஜகான் மற்றும் ஷாஜித்கான் இருவரும் வெள்ளப்போக்கின் வழியிலேயே தடுப்புகளை பிடித்துக்கொண்டு கரை சேர்ந்தனர். ஆனால் முகுந்தன் வெள்ளத்தின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதனையடுத்து முகுந்தனின் நண்பர்கள் இருவரும், அப்பகுதி பொதுமக்களும் துறையூர் தீயணைப்பு நிலையம் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார், தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை ஆகியோரின் கூட்டு முயற்சியால் முகுந்தனின் உடலை நள்ளிரவு 12 மணிக்கு மீட்டனர்.

    பாறை இடுக்கில் சிக்கியிருந்த முகுந்தனின் உடல் பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக துறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த என்ஜினீயர் முகுந்தனுக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • காரைக்கால் பாரதியார் சாலையை கடக்க முயன்ற என்ஜினீயர் விபத்தில் பலியானார்.
    • இவர் நூற்பாலை வேலை விசயமாக காரைக்கால் சென்றார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த நெடுங்காடு தனியார் நூற்பாலையில், எலக்ட்ரிக் என்ஜினியராக வேலை செய்து வந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது49). இவர் அதே பகுதியில், தனியார் நூற்பாலை குடியிருப்பில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். சம்பவத்தன்று இவர் நூற்பாலை வேலை விசயமாக காரைக்கால் சென்றார். காரைக்கால் ரெயில் நிலையம் அருகே பாரதியார் சாலையை கடந்து சென்றார். அப்போது, மோட்டார் சைக்களில் வேகமாக வந்த காரைக்கால் ராஜாத்தி நகரைச்சேர்ந்த கஜனி (26) என்பவர் மோதியது.

    இதில், கோபால கிருஷ்ணனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. தொடர்ந்து, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சக்காக சேர்த்தனர். மேல் சிகிச்சைகாக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கோபாலகிருஷ்ணன் இறந்து போனார். இது குறித்து, கோபாலகிருஷ்ணனின் நண்பர் அய்யப்பன் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து, கஜனியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×