என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நகைகள்"
- பரிசு என்பது உங்கள் அன்பு மற்றும் பாசத்தின் காட்சி சின்னம்!
- ஒருவரின் பெயர் மற்றும் குடும்ப பெயர் பொறிக்கப்பட்ட நகைகளும் தனித்துவமானவை.
நமக்கு நெருக்கமானவர்களிடம் நம் அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த நாம் பயன்படுத்தும் மொழி பரிசு வழங்குவது.
ஒரு பரிசை சிந்தனையுடன் தேர்ந்தெடுத்து அதை வாங்க முயற்சி செய்வது, பரிசைப் பெறுபவருக்கு உங்கள் அன்பைக் காட்டுகிறது. ஒரு நல்ல பரிசு மறக்க முடியாததாகவும் பெறுபவரின் ஆர்வத்தின் பிரதிபலிப்பாகவும் இருக்க வேண்டும்.
நகைகள் விலைமதிப்பற்றவை மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் என்பதால், இது உலகளவில் மிகவும் பிரபலமான பரிசு யோசனைகளில் ஒன்றாகும். ஆண்களும் பெண்களும் அழகான நகைகளை பரிசாகப் பெற விரும்புகிறார்கள். இது ஒரு சிறந்த நினைவுச்சின்னமாகும்.
உங்கள் அன்புக்குரியவர்களுக்காக ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் ஒவ்வொரு விதமான ஸ்டைலுக்கும் அழகான நகைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்!
பரிசு என்பது உங்கள் அன்பு மற்றும் பாசத்தின் காட்சி சின்னம்! அதை தனித்துவமாகவும், மறக்கமுடியாததாகவும், காலமற்றதாகவும் மாற்றுவது உங்கள் கையில்தான் உள்ளது.. ஒரு அழகான நகையின் காலத்தால் அழியாத கவர்ச்சியை எதுவும் வெல்ல முடியாது! ஒரு நகை பல ஆண்டுகளாக அணிந்து, தலைமுறைகளுக்கு அனுப்பப்படும். உங்கள் அன்புக்குரியவர்களுக்கான பரிசைத் தேர்ந்தெடுப்பதற்கான உங்கள் முயற்சியை நகைகள் பிரதிபலிக்கின்றன.
பரிசளிப்பதற்காக மோதிரங்கள், வளையல்கள், சங்கிலிகள் மற்றும் நெக்லஸ்களின் பல வடிவமைப்புகளைக் கொண்ட நகைகளை தேர்வு செய்யலாம். ராசி பதக்கங்கள் மற்றும் ரத்தினப் பதக்கங்கள் போன்ற சிலவையும் தனித்துவமானவை. ஒருவரின் பெயர் மற்றும் குடும்ப பெயர் பொறிக்கப்பட்ட நகைகளும் தனித்துவமானவை.
இதை தவிர ஸ்டேட்மெண்ட் நகைகள் போன்ற நவீன ஆபரணங்கள் பலவும் தற்போது அதிகம் உள்ளன. குழந்தை பிறப்பு, பிறந்தநாள் மற்றும் திருமண நாள் மட்டுமல்லாமல் அனைத்து சமூக விழாக்களுக்கும் உறவுகளுக்கு நகை பரிசளிப்பது உங்களுக்கு அவர்களுடனான நெருக்கத்தையும் அன்பையும் காட்டுகிறது. பாலினம், உலோக நிறம், தயாரிப்பு வகை போன்றவற்றின் அடிப்படையில் முடிவுகளை வடிகட்டலாம். நீங்கள் பரிசளிக்கும் நபரின் பாணி மற்றும் விருப்பங்களுடன் பொருந்தக்கூடிய பரிசை ஆராய்ந்து தேர்வு செய்யலாம்.
- பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை தென்றல் நகரை சேர்ந்தவர் கார்த்திக். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரியங்கா ( வயது 31). சம்பவத்தன்று இரவு இவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார்.அப்போது நள்ளிரவில் வீட்டின் மேல் மாடி வழியாக புகுந்த மர்ம நபர்கள் பீரோவை திறந்து வளையல், மோதிரம், தோடு என 10 பவுன் தங்க நகைகளை திருடி கொண்டு தப்பி சென்றனர்.
இந்த நிலையில் காலையில் எழுந்த பிரியங்கா பீரோ திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் தான் வைத்திருந்த தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.
இது குறித்து அவர் தஞ்சை மருத்துவ கல்லூரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றனர்.
- 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ. 50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே உள்ள மேலசெங்கமேடு அண்ணாமலை நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி.
இவர் நாங்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கிளார்க்காக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி விஜயலட்சுமி சீர்காழி கருவூலத்தில் பணியாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பணிக்கு சென்றனர்.
இதனை கண்காணித்த மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் வைத்திருந்த 3 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளை யடித்துச் சென்றனர்.
இந்நிலையில் பணி முடித்து வீடு திரும்பிய முத்துக்குமாரசாமி வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மர்ம நபர்கள் பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்து அவர் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த மாரியம்மன் கோவில் மகேஸ்வரி நகரை சேர்ந்தவர் தெய்வேந்திரன்.
இவரது மனைவி கோமளவல்லி (வயது 48).
சம்பவத்தன்று காலையில் இவர் தனது பிள்ளையின் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக வீட்டைப் பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சி அடைந்த கோமளவல்லி உள்ளே சென்று பார்த்தார்.
பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த அவர் தஞ்சை தாலுக்கா போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரித்ததில் தாங்கள் 2 பவுன் மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
- லாவண்யா நகைகளை வீட்டில் தானே மறைத்து வைத்துக்கொண்டு நாடகம் ஆடியது தெரியவந்தது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டையில் மகாலட்சுமி நகரில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார்.
இவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி லாவண்யா (வயது 35).
இந்நிலையில் தனது மனைவி லாவன்யா, மகளுடன் கடந்த செப்டம்பர், 30 ம் தேதி செட்டி சத்திரம் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயாரை பார்க்க வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 75 பவுன் திருட்டு போனது.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் லாவண்யா கொடுத்த புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, பிரபாகரன், ராஜ்மோகன், முத்து ஆனந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட வர்களிடம் விசாரித்ததில் தாங்கள் 2 பவுன் மட்டுமே திருடியதாக ஒப்புக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் லாவண்யாவை நேரில் அழைத்து விசாரித்து எச்சரிக்கை செய்தனர்.
பின்னர் தனது வீட்டில் மற்றொரு பேக்கில் 73 பவுன் நகை இருந்ததாக கூறி காவல் காவல் நிலையத்தில் லாவன்யா ஒப்படைத்தார்.
அதனைத் தொடர்ந்து லாவண்யாவை தங்க நகையை வீட்டில் தானே மறைத்து வைத்துக் கொண்டு நாடகம் ஆடியதாகவும், பொய் புகார் அளித்ததாகவும் வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் நேற்று இரவு லாவன்யாவை கைது செய்தனர்.
- உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை கிராமம் மகாலட்சுமி நகரில் வசித்து வருபவர் அருணாச்சலம். (வயது 48). இவரது மனைவி லாவண்யா. இந்த தம்பதிக்கு மகன் உள்ளார். அருணாச்சலம் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் செட்டிசத்திரம் கிராமத்தில் வசித்து வரும் தனது தாயை பார்ப்பதற்காக வீட்டை பூட்டு விட்டு குடும்பத்துடன் சென்றுள்னார்.
மீண்டும் இரவு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 100 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் மன்னார்குடி போலீசுக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், திருவாரூரில் இருந்து தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
புகாரின் பேரில் மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- நகை வடிவமைப்பில் புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன.
- கலாசார ரீதியாக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பெண்களின் நகை வடிவமைப்பில் ஏராளமான புதுமைகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதிலும், ஆடையை அணிகலன்களுடன் இணைத்து வடிவமைப்பது கலாசார ரீதியாக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அந்த வரிசையில் துணிகளில் போடப்படும் விதவிதமான பாரம்பரிய எம்பிராய்டரி தையலை பயன்படுத்தி 'எம்பிராய்டரி நகைகள்' வடிவமைக்கப்படுகின்றன.
பாரம்பரிய தையல் கலையையும் புதுவித அணிகலள் தயாரிப்பையும் ஒருங்கிணைந்து எம்பிராய்டரி நகைகள் வடிவமைக்கப்பட்டாலும், இன்றைய இளசுகளை கவரும் வகையில் டிரெண்டில் உள்ள நகை அமைப்புகளை கொண்டு இருப்பதே இதன் சிறப்பம்சம் ஆகும்.
இந்த எம்பிராய்டரி நகைகள் பாரம்பரியம், மாடர்ன் மற்றும் டிரெண்டியான உடைகளுக்கும் பொருந்தும் வகையில் இருப்பதோடு இலகுவான எடையுடன் அணிவதற்கு சவுகரியமாக இருக்கும் வகையிலும் தயாரிக்கப்படுகின்றன.
- ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.
- கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டம் சிவாணா பகுதியை சேர்ந்தவர் அனுமந்தர் ராம் (வயது 45). இவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் தங்க நகைகளை வாங்கி, நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் உள்ள நகை கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
1½ கிலோ நகை கொள்ளை
இதற்காக அவர் நெல்லை சிந்துபூந்துறை செல்விநகர் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் கடந்த 10 ஆண்டுகளாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். தற்போது நெல்லையில் அவரது உறவினரான ராஜஸ்தானை சேர்ந்த மெஹரா ராம் என்பவர் தங்கியிருந்து கடைகளுக்கு நகைகளை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் அவர் தனது வீட்டின் பூஜை அறையில் ரூ.75 லட்சம் மதிப்புள்ள சுமார் 1½ கிலோ நகைகளை ஒரு பிளாஸ்டிக் டப்பாவில் வைத்துள்ளார். நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு உடன்குடி சென்ற நிலையில் மாலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவு உடைக்கப்பட்டு அங்கு 1½ கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
3 தனிப்படை
இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் கமிஷனர் சரவணகுமார், நெல்லை சந்திப்பு உதவி கமிஷனர் ராஜேஷ்வரன், இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து சந்திப்பு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை கும்பலை பிடிக்க துணை போலீஸ் கமிஷனர் சரவணக் குமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் நடந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்லும் நபர்கள் அதாவது மெஹரா ராமிற்கு நன்கு தெரிந்த நபர்கள் தான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இதனால் மெஹரா ராமுடன் தொழில் ரீதியாகவும், நட்பின் அடிப்படையிலும் பழக்கத்தில் உள்ள வடமாநில வியாபாரிகள், வடமாநில வாலிபர்களின் விபரங்களை போலீசார் சேகரித்து அவர்களிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் அப்பகுதியில் சந்திப்பு பஸ் நிலையம் வரையிலும் உள்ள கடைகள், வீடுகளில் பொருத்தப்ப ட்டுள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுரையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை நடந்தது.
- மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மதுரை
மதுரை தெப்பக்குளம் கொண்டிதொழு தெருவை சேர்ந்தவர் பீமல் ராய் (32), பள்ளி ஆசிரியர். இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 வயது குழந்தையும் உள்ளனர்.
நேற்று இரவு 8 மணியளவில் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் திரும்பி வந்தபோது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதை பார்த்து அதிர்ச்சி யடைந்த பீமல் ராய் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த 26 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம், ஒரு கைக்கடி காரம் ஆகியவை திருடப் பட்டிருந்தது. யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து தெப்பக்கு ளம் போலீசில் பீமல்ராய் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து வீடு புகுந்து நகை, பணம் திருடிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மதுரை தெற்கு வாசல் தெற்கு கிருஷ்ணன் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் ரத்தினகிரி (54). சம்பவத் தன்று அதிகாலை இவரது வீட்டில் புகுந்த மர்மநபர் பீரோவில் வைத்திருந்த 9 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்று விட்டார். இது குறித்து தெற்கு வாசல் போலீசில் ரத்தினகிரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- நான் உங்கள் ஊர் வழியாக தான் செல்கிறேன் என்றார்.
- தங்க நகைகளை அந்த நபர் எடுத்து கொண்டு தப்பி ஓடினார்.
திருவோணம்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 45) வயது இவர் நேற்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு பஸ்ஸில் திரும்பி ஊருக்கு வந்தார்.
அப்போது பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு மர்மநபர் அவரிடம் பேச்சு கொடுத்தார்.
இதைத் தொடர்ந்து தான் உங்கள் ஊர் வழியாக தான் செல்கிறேன். என்னுடன் மோட்டார் சைசக்கிளில் வாருங்கள் என்று கூறினார்.
இதை நம்பிய கனகராஜ் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தார்.
மோட்டார் சைக்கிளில் அலிவலம் என்ற இடத்தின் அருகே சென்ற போது இயற்கை உபாதை கழிப்பதற்காக இருவரும் இறங்கினர்.
அப்போது கனகராசிடம் இருந்த தங்க நகைகளை அந்த நபர் எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் இது குறித்து உடனடியாக ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு
பிரசன்னாவுக்கு தகவல் கொடுத்தார்.
அவரது உத்தரவின் பெயரில் பாப்பா நாட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ வன் தலைமையிலான குற்றப்பிரிவு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் குமாரவேல் மற்றும் அதிரடிப்படை ராஜா சின்னத்துரை ஜெகன் உள்ளிட்ட படையினர் அதிரடியாக செயல் பட்டு நகையை பறித்த கொள்ளையனை மடக்கி பிடத்தனர்.
விசாரணையில் அவர் வட்டாத்தி கோட்டை தோப்பநாயக்கத்தைச் சேர்ந்த சித்திரைவேல் (42) என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
துரிதமாக செயல் பட்ட குற்றபிரிவு போலீசாரை
போலீஸ் அதிகாரிகள் பாராட்டினார்கள்.
கொள்ளையடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் கொள்ளையனை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர்.
- மதுரையில் பெண் ஆடிட்டர் வீட்டில் 25 பவுன் நகைகள், ரூ2 லட்சம் திருட்டு சம்பந்தமாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மதுரை
மதுரை மதிச்சியம் காந்தி நகர் ஆசாத் தெருவை சேர்ந்தவர் கீதா. இவர் செராமிக்ஸ் கடையில் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் வைத்திருந்த 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் ஆகியவை திருட்டு போனது.
திருட்டு
நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது யார்? என்பது தெரியவில்லை. இந்த திருட்டு குறித்து ஆடிட்டர் கீதா மதிச்சியம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அவர் தனது புகாரில், தன்னுடைய வீட்டில் வேலை செய்யும் பெண் வேலையாள் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருட்டு போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.14 லட்சம் என்று கூறப்படுகிறது. திருட்டு சம்பவம் தொடர்பாக ஆடிட்டர் கீதா வீட்டில் பணிபுரியும் பெண் ஊழியர் மற்றும் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை புதூர் மண்மலைச் சாமி தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவர் செக்யூரிட்டி சர்வீஸ் மற்றும் ஈவன்ட் மேனேஜ்மென்ட் நடத்தி வருகிறார். இவருடைய அலுவலகம் திலகர்திடல் பகுதியில் உள்ளது. இவர் வெளியே சென்றிருந்தபோது அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம நபர், அங்கு வைக்கப் பட்டிருந்த
ரூ.36ஆயிரம் பணம் மற்றும் கம்ப்யூட்டர் மானிட்டர், சி.பி.யூ., கீபோர்டு, மவுஸ் முதலியவைகளையும் திருடிச் சென்றுவிட்டார்.
இந்த திருட்டு குறித்து திலகர்திடல் போலீசில் ஆனந்த் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் புகுந்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்மநபர் யார்? என்று துப்பு துலக்குகின்றனர்.
- கோயில்களில் கடவுளுக்கு படைக்கும் நகைகளில் வெள்ளியும் ஒன்று.
- பெண்கள் அணியும் கொலுசு, மெட்டி, மோதிரம், காதணி அனைத்திலும் வெள்ளி முக்கிய பங்கு வைக்கிறது.
வெள்ளி என்பது ஒரு வகை உலோகம். இது குளிர்ச்சியான உலோகம். நன்கு சுத்திகரிக்கப்பட்ட பின்பு தான் வெள்ளி தேவையான பொருள்களாக உருமாறுகிறது.
பண்டைய காலத்தில் குழந்தைகளுக்கு அதிகமாக உபயோகிக்கும் உலோகம் வெள்ளி. வெள்ளியில் கிண்ணம் ஸ்பூன் டம்ளர், ஸ்ட்ரா டம்ளர் கொலுசு, காப்பு, காதணிகள், கழுத்தில் அணியும் மாலைகள், பூஜை பொருட்கள், தட்டு என்று பலவித பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணம் ஸ்பூன் தட்டு என்று பயன்படுத்துகிறார்கள். இது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளியில் கால் தண்டை அணிவதும் மிகச் சிறப்பான ஒன்றாகும். வெள்ளி உலோகம் நச்சு தன்மையை அழித்து நன்மை அளிக்கிறது. வெள்ளி தூய்மையான உலோகம் என்று கருதப்படுகிறது. வெள்ளியில் உள்ள தாதுக்கள் பருவ மாற்றத்திற்கு ஏற்ப வரும் நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியை தருகிறது.
வெள்ளியில் கூஜா, செம்பு, பெரிய தட்டுக்கள், குங்குமச்சிமிழ், வெள்ளி விளக்கு என திருமணங்களில் பெண் வீட்டு சீர் வரிசையில் வெள்ளி பாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணப் பெண்ணுக்கு வெள்ளியில் மெட்டி அணிவதும் திருமணங்களில் மிக முக்கியமான விசேஷம் ஆகும்.
பூஜை பொருட்கள் வெள்ளியில் சூட தட்டு, சாம்பிராணி தட்டு, வெள்ளி விளக்கு, தட்டு, சந்தனக் கும்பா, குங்குமச்சிமிழ் என பல வகை உண்டு. திருமண வைபோகங்களில் வெள்ளியில் பரிசளிப்பது ஆதிகாலம் முதலே வழக்கமான ஒன்றாகும்.
சில வீடுகளில் பூஜை அறையில் வெள்ளியிலான விநாயகர் சிலை, அன்னபூரணி சிலை போன்ற பல கடவுளின் உருவச் சிலைகள் இருக்கும். வெள்ளி முலாம் பூசப்பட்ட சிலைகளும் உருவப் படங்களும் பிரசித்தி பெற்றவையாகும்.
கோயில்களில் கடவுளுக்கு படைக்கும் நகைகளில் வெள்ளியும் ஒன்று. வெள்ளி மூக்குத்தி, சூலாயுதம், வேல் என வெள்ளி அலங்கார பொருட்கள் என பலவகையான வெள்ளிப் பொருள்கள் கோயில்களில் பயன்படுத்தப்படுகிறது. கோயில் மற்றும் கோயிலில் நடக்கும் பூசையில் வெள்ளியின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. எல்லா விசேஷங்களிலும் வெள்ளி நாணயம் பரிசளிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. பெண்களுக்கு நிகராக ஆண்களும் இன்றைய காலங்களில் கைகளில் வெள்ளியில் காப்பு போன்று அணிகிறார்கள்.
மற்ற உலோகங்களை ஒப்பிடும் பொழுது வெள்ளி மலிவான விலையில் கிடைக்கிறது. ஆதலால் வெள்ளி அதிக அளவில் பயன்பாட்டில் உள்ளது.வெள்ளி வெப்பத்தை தணிக்கும் உலோகம் என்பதால் அன்றாட வாழ்க்கையில் அதிக பயன்பாட்டில் உள்ளது. பெண்கள் அணியும் கொலுசு, மெட்டி, மோதிரம், காதணி கழுத்து மாலை அனைத்திலும் வெள்ளி முக்கிய பங்கு வைக்கிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்