search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரி மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 573 பவுன் நகைகள் மீட்பு - கந்து வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    X

    குமரி மாவட்டத்தில் ஒரு வருடத்தில் 573 பவுன் நகைகள் மீட்பு - கந்து வட்டி வசூலித்தால் கடும் நடவடிக்கை - மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

    • கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கஞ்சா புழக்கம் குறைந்து உள்ளது.
    • சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் இன்று நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-

    குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் தற்போது கஞ்சா புழக்கம் குறைந்து உள்ளது. சிறிய அளவில் மட்டுமே கஞ்சா புழக்கம் இருந்து வருகிறது. அதை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    கன்னியாகுமரிக்கு நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். எனவே கன்னியாகுமரி நுழைவு வாயில் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். குமரி வரும் வாகனங்களின் பதிவு எண்ணை சேமித்து வைக்கும் வகையில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது.

    நாகர்கோவில் மாநகர பகுதிகளில் புதிதாக கட்டப்ப டும் வணிக நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளோம். ஏற்கனவே வணிக நிறு வனங்களில் கேமராக்கள் இருப்பதால் குற்றங்கள் தற்போது குறைந்து உள்ளது. நகை பறிப்பு சம்பவங்களும் குறைந்து உள்ளன.

    கோவிலில் உண்டியல் திருட்டு, வீடு புகுந்து திருட்டு ஆகிய சம்பவங்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். நேசமணிநகர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 2 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

    குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 30 வழக்குகளில் 150 பவுன் நகை மீட்கப்பட்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 573 பவுன் நகை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்டியல் மற்றும் வீடு புகுந்து திருட்டுகள் தொடர்பான வழக்குகளில் 150 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே தனிப் படைகள் அமைத்து அந்த வழக்குகளை முடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.

    சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில் கன்னியாகுமரிக்கு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள். எனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளியூரில் இருந்து ஒரு பட்டாலியன் போலீசை பாதுகாப்பு பணிக்காக கேட்டு உள்ளோம்.

    கந்துவட்டி தொடர்பான புகார்கள் இருந்தால் நாகர் கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுக்கலாம். கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    குமரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்குகள் உள்ளன. அந்த பெட்ரோல் பங்க் உரிமை யாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தி உள்ளோம். அங்கு அமைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் முழுவதையும் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து கண்காணிக்கும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது.

    நித்திரவிளை அருகே மாணவி அபிதா பலியானது தொடர்பாக நடந்த பிரேத பரிசோதனையில் மாணவி விஷம் குடித்ததற்கான அறிகுறி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.

    களியக்காவிளையை அடுத்த பாறசாலையில் மாணவர் ஷாரோன் கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அவருடைய காதலி கிரீஷ்மா கைது செய்யப்பட்டு கேரளா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அவரை குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கை குமரி மாவட்டத்திற்கு மாற்றுவது தொடர்பாக எந்த தகவலும் இது வரை வரவில்லை.

    சுசீந்திரம் அருகே மேல கிருஷ்ணன்புதூரில் ரோட்டோரத்தில் ராஜதுரை என்பவர் மர்மமான முறையில் கொலை செய்ய ப்பட்டு கிடந்தார். இந்த வழக்கில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    மாவட்டத்தில் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் படி அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 1,851 ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    Next Story
    ×