search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைகள்"

    • கைவினை வேலைப்பாடு என்பதில் தனித்து விளங்குவது பிலிகிரி வேலைப்பாடு.
    • வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட பிலிகிரி நகைகள் ஆர்வத்தை தூண்டுகின்றன.

    பெண்கள் மனதை கவரும் வகையில் புதிய புதிய வடிவமைப்புடன் நகைகள் வெளிவரும் போது தான் அதனை வாங்குதில் அதிக ஆர்வம் கொள்கின்றனர். பார்த்தவுடன் இந்த நகை வடிவமைப்பு எவ்வளவு அழகாக உள்ளது, இதனை எப்படி செய்திருப்பார்கள் என்றவாறு பல கேள்விகளை எழுப்புவதில் தான் அதன் மதிப்பே உள்ளது. அந்த வகையில் பெண்கள் அணிகின்ற நகைகளின் ஓர் வடிவமைப்பு உக்தி (அ) உருவாக்கும் முறை தான் பிலிகிரி வேலைப்பாடு.

    அதி உன்னதமான மேம்பட்ட கைவினை வேலைப்பாடு என்பதில் தனித்து விளங்குவது பிலிகிரி வேலைப்பாடு. தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இந்த பிலிகிரி வேலைப்பாட்டில் உருவாகின்றன. பிலிகிரி வேலைப்பாடு மூலம் எந்தவிதமான உருவம், வடிவம், வித்தியாசமான வளைவுகள் போன்றவற்றை உருவாக்க முடியும். ஒரே மாதிரியான தங்க நகைகளை வாங்கி அணிபவர்களுக்கு வித்தியாசமான வடிவமைப்பு கொண்ட பிலிகிரி நகைகள் ஆர்வத்தை தூண்டுகின்றன.

    தற்போது பல நகை விற்பனை கூடங்களிலும் தனிப்பட்ட பிலிகிரி நகை பிரிவுகளையே காணலாம். அதில் அதிகபட்ச கலைநயம் மற்றும் ஜொலிக்கும் அமைப்புகள் கொண்டவாறு நகைகள் உருவாகின்றன. பொதுவாக பளிச்சிடும் மஞ்சள் வண்ண தங்க நகைகள் என்பது பிலிகிரி நகைகளாக வெளிவரும் போது மாறுபட்ட மஞ்சள், செம்மை, வெண்மை சாயலுடன் அதிக பளபளப்பு மற்றும் ஜொலிப்புடன் வருகின்றன. சல்லடை போன்ற அமைப்புடன் பெரிய பாந்தமான நகைகள் முதல் சிறிய அளவிலான நகைகளும் உலா வருகின்றன.

    பூக்கள் என்பது ஒவ்வொரு இதழ்களாக, அடுக்குகளாக விரிந்தவாறு உள்ள அமைப்புடன் நகைகளால் உருவாக்கப்படுகின்றன. பூக்கள் என்பதால் எடை அதிகரிக்காத வண்ணம் மெல்லிய கம்பிகள் கொண்டு இயந்திரம் மற்றும் கைவினை இணைந்தவாறு இதன் உருவாக்கம் உள்ளது.

    வித்தியாசமான கோணம் மற்றும் வளைவுகளுடன் கூடிய பிலிகிரி நெக்லஸ்கள் கழுத்தில் அணியும் போது புதிய ஓவியமாகவும், சிற்பமாகவும் ஜொலிக்கின்றன எனலாம். மற்ற நகைகள் போன்ற அழுத்தமான எம்போஸ் செய்யப்பட்ட வடிவமைப்புகள் காணாது. உயிரோட்டமான வடிவங்கள் கண்ணுக்கு விருந்தாகின்றன. பிலிகிரி நகைகளில் அழகிய பிரேஸ்லெட்கள், காதணிகள், நெக்லஸ்கள், சிறுசிறு மோதிரங்கள் போன்றவை நவீன உத்தியை பயன்படுத்தி மேம்பட்ட அழகுடன் உலா வருகின்றன. பார்த்தவுடன் பரவசமூட்டும் பிலிகிரி நகைகள் அதிக எடையில்லாத மெல்லிய நகைகள் என்பதுடன் பிரமாண்டமான நகை தோற்றத்தை தருவதால் பெண்கள் விரும்ப தொடங்கியுள்ளனர்.

    • வேலூர் காட்பாடியில் நடந்த உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றார்.
    • 16 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போய் இருந்தது.

    கோவை,

    கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள ஸ்ரீ கணபதி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி.

    கடந்த 8-ந் தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலூர் காட்பாடியில் நடந்த உறவினர் வீட்டு குடும்ப நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த ஆரம், செயின், கம்மல், மோதிரம், டாலர் உள்பட 16 பவுன் தங்க நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.30 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    நேற்று வீட்டிற்கு திரும்பிய செல்வராஜ் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது அறையில் பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளை போயிருப்பது கண்டார்.

    பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    • பெண்களுக்கு ஜிமிக்கி கம்மல் மிகவும் பிடிக்கும்.
    • ஜிமிக்கி கம்மல் செய்முறையை எளிய முறையில் தெரிந்து கொள்வோம்...

    தேவையான பொருட்கள்:

    ஜிமிக்கி மோல்டு

    விரும்பிய வண்ணத்தில் பட்டு இழைகள்

    தங்க நிற மணிகள்

    வெள்ளை நிற கற்கள்

    கேன்வாஸ் பேப்பர்

    கம்மல் தண்டு

    மெல்லிய கம்பி

    பசை

    செய்முறை:

    1. ஜிமிக்கி மோல்டில் இருக்கும் துளையில் பட்டு இழையை நுழைத்துக்கொள்ளவும்.

    2, 3 படத்தில் காட்டப்பட்டிருப்பது போல, பட்டு இழையை மோல்டில் இறுக்கமாக துளையில் நுழைத்து சுற்றிக்கொள்ளவும்.

    4. முழுவதும் சுற்றி முடித்ததும் பசை கொண்டு பட்டுநூலின் முனையை மோல்டோடு சேர்த்து நன்றாக ஒட்டிவிடவும். பின்னர் மீதமிருக்கும் பட்டு இழையைக் கத்தரித்து விடவும்.

    5. பட்டு இழை சுற்றி இருக்கும் மோல்டின் மீது பசை தடவி, படத்தில் காட்டியுள்ளதுபோல தங்கநிற மணிகளை முழுவதுமாகச் சுற்றி நன்றாக உலர வைக்கவும்.

    6. படத்தில் காட்டியுள்ளது போல ஜிமிக்கியின் மேல்பகுதியை, கேன்வாஸ் பேப்பரின் மீது தங்க நிற மணிகளையும், வெள்ளைக் கற்களையும் ஒட்டி உருவாக்கிக்கொள்ளவும். அது நன்றாக உலர்ந்த பிறகு தனியாகக் கத்தரித்து எடுக்கவும். அதன் பின்பகுதியில் கம்மல் தண்டை பசை கொண்டு நன்றாக ஒட்டவும்.

    7. இப்போது ஜிமிக்கியையும், அதன் மேல் பகுதியையும் மெல்லிய கம்பி கொண்டு இணைத்தால், அழகான 'பட்டு இழை ஜிமிக்கி கம்மல்' தயார்.

    • கூட்டத்தில் கும்பாபிஷேகத்தன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும்.
    • பெண்கள் அதிக நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும் மற்றும் தங்களது உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் சாய் தேசம் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோவில் அமை ந்துள்ளது.

    சாய்தேசம் ஸ்ரீஷீரடி சாய்பாபா கோவில் மகா கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ளது.

    ஸ்ரீஷீரடிசாய்பாபா கோவில் கும்பாபி ஷேகத்தை யொட்டி சிறப்பு முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டம் ஆர்வி கருணாநிதி அறக்கட்டளைதலைவர் தலைமையில் நடைபெற்றது.

    எல்.ராகவன் ஆடிட்டர் ஆர்வி ராஜே ந்திரன் செயலாளர் சிறப்புவிருந்தினர் செல்வி பாரதி அமைப்பாளர், டி.எ.ஸ்பி. சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர். வி.கே. ராம் பிரசாத், பொருளாளர் வி.துரை மற்றும் லயன் அங்கை ராஜேந்திரன் உள்பட பக்தர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் கும்பாபிஷேகத்தன்று கோவி லுக்கு வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    எனவே கும்பாபிஷே கத்துக்கு வரும் பெண்கள் அதிக நகைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் தங்கள் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    அனைவரும் முகக்கவசம் அணிந்து வருவது அவசியம்என அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் கூட்டம் நெரிசலை கட்டுப்படுத்த போதிய போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவது.

    முன்னேற்பாடு கருதி 108 ஆம்புலன்ஸ், தீயணை ப்பு வாகனங்களைதயார் நிலையில் வைத்திருப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    • காலை சொக்கலிங்கம் தலக்குளத்தில் உள்ள உறவினர் திருமண வீட்டிற்கு சென்று விட்டார்.
    • வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தனது தாயார் ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை அபேஸ் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அஜய்குமார் கணேஷ் அதிர்ச்சியடைந்தார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் சந்திப்பு அருகே தக்கலை ரோட்டை சேர்ந்தவர் அஜய்குமார் கணேஷ் (வயது 50). இவர் கன்னியாகுமரியில் துணிக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி கோவில்பட்டியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருவதால் 2 குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகிறார். அஜய் குமார் கணேஷ் தனது பெற்றோர் சொக்கலிங்கம் பிள்ளை- ராமலட்சுமி (77) ஆகியோருடன் இரணியலில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

    நேற்று காலை சொக்கலிங்கம் தலக்குளத்தில் உள்ள உறவினர் திருமண வீட்டிற்கு சென்று விட்டார். அஜய்குமார் கணேசும் வெளியே சென்றுவிட்டார். எனவே வீட்டில் ராமலட்சுமி மட்டும் தான் இருந்துள்ளார்.

    வெளியே சென்றிருந்த அஜய்குமார் கணேஷ் சிறிது நேரத்தில் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டி இருந்துள்ளது. வீட்டின் பின் பக்கம் சென்று பார்க்கும் போது அங்கு கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

    வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது தனது தாயார் ராமலட்சுமி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகை அபேஸ் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அஜய்குமார் கணேஷ் அதிர்ச்சியடைந்தார். மேலும் பீரோவை திறந்து பார்த்தபோது அங்கிருந்த 5 பவுன் எடை கொண்ட நகை, தலா ஒரு பவுன் எடை கொண்ட 5 தங்க வளையல்கள் மற்றும் ஒரு பவுன் எடை கொண்ட கைச்செயின் என மொத்தம் 18 பவுன் தங்க நகைகள்மாயமாகி இருந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து அஜய்குமார் கணேஷ் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதில்கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் என தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர் மூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    சம்பவ இடத்தில் இரணியல் பொறுப்பு இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, சப்-இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது யாரோ மர்ம நபர்கள் அஜய்குமார் கணேஷ் மற்றும் சொக்கலிங்க ம்பிள்ளை வீட்டில் இல்லா ததை நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றி ருப்பது தெரிய வந்தது.

    • எந்த ஒரு விழாவிற்கும் இந்த ஒரு நகையை மட்டும் அணிந்தால் போதும்..
    • கழுத்தணிகளை மிகவும் அழகான தோற்றத்துடன் வடிவமைக்கிறார்கள்.

    மிகவும் பிரம்மாண்டமான நகைகளை படங்களில் அணிந்து வருவதை பார்த்திருக்கிறோம். அதேபோல பிரம்மாண்ட தோற்றம் தரும் நகைகளை பல நகை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன. சாதாரணமாக பெண்கள் அணியும் ஹாரம் என்பது நீளமாக கழுத்திலிருந்து தொங்கி சிறிய அல்லது பெரிய டாலர்களுடன் இருப்பதை பார்த்து இருக்கிறோம். இப்பொழுது வந்திருக்கும் இந்த மணமகள் அணியக்கூடிய ஹாரங்கள் கழுத்திலிருந்து துவங்கி முழு மார்பையும் மறைத்து வயிறு வரை நீண்டு இருப்பது போல் மிகவும் பிரம்மாண்டமான தோற்றத்துடன் இருக்கின்றன..

    சிறிய மயில் உருவங்களை முதல் வரிசையாக வைத்து அதன் நடுவில் லட்சுமி உருவம் இருப்பது போன்றும், அடுத்த வரிசையில் வேறுவிதமான மயில் உருவங்களை வைத்தும், அதற்கு அடுத்த வரிசையில் அதே அளவில் இருக்கும் மயில் உருவங்களை வைத்து என்று மேலிருந்து கீழ்வரை எட்டு வரிசைகளும் அகலம் குறைந்து கொண்டே வருவது போல் வடிவமைத்து நடுவில் லட்சுமி உருவத்தை பெரியதாக இருப்பது போல் வடிவமைக்கிறார்கள்.இந்த ஹாரமானது யூ வடிவத்தில் பிரம்மாண்டமாக மிரட்டுகிறது என்று சொல்லலாம்.. ஹாரம் முழுவதும் ஓரங்களில் பீட்ஸ் தொங்குவது போன்று வடிவமைத்திருப்பது இந்த ஹாரத்திற்கு கூடுதல் அழகை சேர்க்கின்றது..

    இதற்கு ஏற்றார் போல் காதணிகளை வைத்து அதிலும் பீட்ஸ் தொங்குவது போல் வடிவமைத்திருப்பது நகைகளை விரும்பாதவர்களும்வாங்கி அணியத் தூண்டும் விதத்தில் இருக்கின்றது.. இந்த நகைகளுக்கு பழங்கால தோற்றத்தை தருவதற்காகவே இந்த நகைகளை டல் பாலிஷ் இருப்பதுபோல் வடிவமைக்கிறார்கள்.இந்த நகைகளில் ரூபி மற்றும் எமரால்டு கற்கள் பதித்திருப்பது இந்த நகைக்கு கூடுதல் அழகை தருகின்றது.

    எந்த ஒரு விழாவிற்கும் இந்த ஒரு நகையை மட்டும் அணிந்தால் போதும்.. இத்துடன் வேறு நகைகளை அணிய வேண்டிய அவசியமே ஏற்படாது என்று சொல்லும் அளவுக்கு கழுத்திலிருந்து துவங்கி மார்பு முழுவதையும் மறைத்து வயிறு வரை நீண்டு தொங்கும் விதத்தில் இந்த நகைகளை வடிவமைத்திருக்கிறார்கள்.யூ வடிவத்தில் வரும் இதுபோன்ற மார்பை மறைக்கக் கூடிய ஹாரங்கள் பல டிசைன்களில் விற்பனைக்கு வந்திருக்கின்றன..அன்னப்பட்சி, மாங்காய், இலை, சங்கு, வட்டம்,கும்பம் ,மீன் என பல வடிவங்களில் இருப்பது போன்று இந்த கழுத்தணிகளை மிகவும் அழகான தோற்றத்துடன் வடிவமைக்கிறார்கள்.

    ஜடை அலங்காரத்திற்கு தலையின் உச்சி முதல் முடிவுவரை குஞ்சலத்தோடு இணைக்கப்பட்டு வரும் ஜடை செட் இன்னும் அற்புதம் என்று சொல்லலாம்..தொடக்கத்தில் பெரிய லட்சுமி உருவம் அதன் கீழே இரண்டு மயில்கள் இணைந்திருப்பது போன்றும் அதற்கு அடுத்து வரும் லட்சுமி உருவம் அதைவிட சற்று சிறியதாகவும் அதற்கும் கீழே இரண்டு மயில்கள் இணைக்கப்பட்டு இருப்பது போன்றும் இதுபோன்று ஜடையின் முடிவுவரை லக்ஷ்மி உருவமானது சிறியதாகிக் கொண்டே சென்று அதன் முடிவில் குஞ்சலமானது இணைக்கப்பட்டிருக்கும்..

    ஒவ்வொரு லட்சுமி உருவத்திற்கும் இடையில் இரண்டு மயில்கள் இருப்பது போன்று இடைவெளியுடன் செய்யப்பட்டிருப்பது மிகவும் பாந்தமாக இருக்கின்றது.. அதேபோல் கழுத்து ஹாரத்தில் இருப்பது போன்றே இந்த ஜடை அலங்கார செட்டிலும் ரூபி மற்றும் எமரால்ட் கற்களை பதித்திருக்கிறார்கள்.. மயில்களுக்கு கீழே பீட்ஸ்கள் தொங்குவதும் அழகுக்கு அழகு சேர்க்கும் விதமாக இருக்கின்றது.. அதேபோல் கஜலட்சுமி உருவத்தையும் இந்த ஜடை அலங்காரத்தில் வருவதுபோல் வடிவமைத்திருப்பது மேலும் கூடுதல் சிறப்பாகும்..

    மணமகள் நகை என்றால் அதில் ஒட்டியாணம் இல்லாமல் இருக்குமா என்ன? ஒட்டியாணத்தின் மையப்பகுதியில் பெரிய அளவில் லட்சுமி உருவம் இருக்க பக்கவாட்டில் அதற்கு அடுத்தடுத்த அளவுகளில் லட்சுமி உருவங்கள் இருப்பது போன்று ஒட்டியாணம் முடிவடைகின்றது.. ஹாரத்தில் இருக்கும் அதே டிசைன்களையே இந்த ஒட்டியாணத்திலும் பிரதிபலித்திருப்பது கூடுதல் அழகாக இருக்கின்றது.

    திருமணத்திற்கு முன் அல்லது பின்பு நடைபெறும் நிச்சயதார்த்தம், சங்கீத் மற்றும் மெகந்தி பங்க்ஷன்களுக்கு அணிவது போன்று சிறிய நெக்லஸ்கள் மிகவும் கண் கவரும் விதத்தில் புதுமையான மாடல்களில் வந்திருக்கின்றன.. இந்த நெக்லஸ்களில் குறைந்த இடைவெளிகளில் பாதி ஜிமிக்கிகளை அதன் கீழே முத்துக்களை இணைத்து தொங்குவது போன்று வடிவமைத்திருப்பது மிகவும் அட்டகாசமாக இருக்கின்றது..அதேபோல் ஒரே அளவில் இருக்கும் லக்ஷ்மி உருவங்களை வைத்து செய்யப்படும் நெக்லஸ்களில் எமரால்டு மற்றும் ரூபி கற்களை தொங்கவிட்டு இருப்பதும் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கின்றது.

    மணப்பெண்களுக்கான காதணிகள் என்று எடுத்துக்கொண்டால் லட்சுமி உருவம் அதிலிருந்து இரண்டு பக்கமும் கிளைகள் போல பிரிந்து ஒவ்வொரு கிளையிலும் சிறிய அளவில் ஜிமிக்கிகள் தொங்க கிளையின் மத்தியிலிருந்து பெரிய ஜிமிக்கி தொங்குவதுபோல் வடிவமைத்திருப்பது வித்தியாசமாகவும் அழகாகவும் இருக்கின்றது..காது மடல்களை முழுவதும் மறைப்பது போல் டிசைன்கள் வர அதன் மேற்புறத்தில் சிறிய ஜிமிக்கி போன்ற டிசைன் தொங்குவது போன்றும் கீழ்ப்புறத்தில் பெரிய அளவிலான ஜிமிக்கி தொங்குவது போன்றும் வரும் காதணிகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம்.

    இந்தப் பிரம்மாண்டமான மணமகள் நகைகளுடன் வரும் வளையல்கள் அந்த நகைகளுக்கு ஏற்றார்போல் மிகவும் பிரம்மாண்டமானதாகவே வடிவமைக்கப்படுகின்றன..நடுவில் பெரிய வளையலும் முன்னும் பின்னும் சிறிய வளையலும் சேர்த்து அணிவது போன்றும்,பட்டையாக பெரியதாக இருப்பது போன்றும், கடா மாடல்களில் அணிவது போன்றும் வளையல்கள் வடிவமைக்கப்படுகின்றன.. கழுத்தணியில் இருக்கும் அதே டிசைன்களை வளையலிலும் வருவது போன்று வடிவமைக்கிறார்கள்.

    வங்கிகள் என்று எடுத்துக் கொண்டால் ஹாரங்களில் வரும் அதே டிசைன்களை வங்கிகளில் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ வடிவமைக்கிறார்கள்.. ஹாரங்களில் தங்க,ரூபி மற்றும் எமரால்டு பீட்ஸ்கள் தொங்கினால் அதேபோன்று வங்கிகளிலும் தொங்குவது போன்று வடிவமைக்கிறார்கள்..

    இதுபோன்ற பிரம்மாண்ட நகைகளில் ஆன்டிக், செட்டிநாடு டிசைன்களை மிகக்குறைந்த தங்கத்திலும் வடிவமைத்து சில நகை நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன..

    கழுத்தணியில் வரும் அன்னப் பட்சி, மீன், சங்கு, வட்டம், மாங்காய், இலை போன்ற வடிவங்களையே அத்துடன் செட்டாக வரும் ஜடை அலங்கார நகை, ஒட்டியாணம், கம்மல் மற்றும் வளையல்களிலும் இருப்பதுபோல் வடிவமைக்கிறார்கள்..ஜோதா அக்பர் மற்றும் பாகுபலி போன்ற படங்களில் வரும் பிரம்மாண்டமான நகைகளை அசலாக வாங்கி அணிய விருப்பப்படுபவர்களுக்கு இதுபோன்ற நகைகள் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.

    • சோக்கர் என்பது மிகவும் பிரபலமான இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்பு ஆகும்.
    • சோக்கர் என்பது மிகவும் பிரபலமான இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்பு ஆகும்.

    பெரும்பாலும் எல்லா வீடுகளிலுமே அந்தந்த வீட்டிற்குரிய பாரம்பரிய நகைகளானது பல தலைமுறைகளைத் தாண்டி அந்த வீட்டில் உள்ளவர்களிடம் புழக்கத்தில் இருப்பதை பார்க்க முடியும்.இந்த பாரம்பரிய நகைகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகவும் நம்முடைய மூதாதையர்களை நினைவுபடுத்து பவையாகவும் இருக்கும். இதுபோன்ற பழங்கால பாரம்பரிய நகைகள் வடிவமைப்பு மற்றும் கைவினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நிகரற்றவையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

    தங்க சோக்கர் நெக்லஸ்

    சோக்கர் என்பது மிகவும் பிரபலமான இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்பு ஆகும். இது கழுத்தை இறுக்கிப் பிடித்து மார்பிற்கு மேல் இருப்பதுபோல் வடிவமைக்கப்படும் நகையாகும்.இந்தப் பாரம்பரிய நகையானது இன்றளவும் பெண்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அணிந்து கொள்ளக்கூடிய நகையாக வலம் வருகின்றது.சோக்கர் நெக்லஸ் விலையுயர்ந்த கற்கள், முத்துகள் மற்றும் போல்கியால் அலங்கரிக்கப்பட்டு வருவதைப் பார்க்க முடியும்.

    ராயல் தங்க மோதிரம்

    பழங்கால ராயல் தங்க மோதிரம் என்பது இந்திய தொன்மையை பறைசாற்றும் அழகான மற்றும் நேர்த்தியான மோதிரம் ஆகும். பழங்காலத்தில் பயன்படுத்திய அதேபோன்ற டிசைன் மற்றும் வடிவங்களில் இப்பொழுதும் தங்க மோதிரங்களை வடிவமைத்து விற்பனை செய்கிறார்கள்.பெரும்பாலும் இதுபோன்ற மோதிரங்களில் விலையுயர்ந்த பெரிய ஒற்றை கற்களைப் பதித்து மோதிரங்களை வடிவமைக்கிறார்கள். பெரிய ஒற்றை கல் மோதிரம் அதை அணிபவருக்கு கம்பீரமான தோற்றத்தைத் தருகின்றது.

    ரூபி நெக்லஸ்

    பழங்கால நகைகளில் ரூபி கற்களினால் செய்யப்பட்ட அட்டிகைகள் மற்றும் நெக்லஸ்கள் முக்கிய இடத்தை வகிப்பவையாக இருந்திருக்கின்றன.இன்றைய காலகட்டத்திலும் மணமகளுக்கு அணிவிக்கப்படும் உயர்ந்த தங்க நகைகளின் வரிசையில் இதுபோன்ற ரூபி நெக்லஸ்களும் இடம்பெறுவதைப் பார்க்க முடியும்.மாங்காய், அன்னப்பறவை, மயில் போன்ற டிசைன்களில் ரூபி கற்களைப் பதித்து செய்யப்பட்டு வந்த நெக்லஸ்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் புதுமையான டிசைன்களுடன் செய்யப்படுகின்றன.

    நாகர் பதக்கம்

    இந்திய பழங்கால தங்க நகை வடிவமைப்புகளில் மிகவும் பிரபலமானது என்று இந்த நாகர் பதக்கங்களை சொல்லலாம். இதில் ஐந்து தலை நாக வடிவானது சிவப்பு மற்றும் வெள்ளை கற்கள் பதிக்கப்பட்டு வருகின்றது.இந்தப் பழங்கால பதக்கமானது இன்றளவும் சில வீடுகளில் தலைமுறைகளைத் தாண்டி அணியப் படுவதைப் பார்க்க முடியும்.இந்து புராணங்களின்படி, ஐந்து தலை பாம்பு சத்தியத்தின் பாதுகாவலர் என்பதாலேயே நகை வடிவில் அணியப்பட்டு வந்திருக்கின்றது.இன்றும் இதுபோன்ற பதக்கங்கள் பெரும்பாலான நகைக் கடைகளில் பழமையான நகை பிரிவுகளில் விற்கப்படுகின்றன.

    ஜிமிக்கிகள்

    பழங்கால பெண்கள் அனைவராலும் அணியப்பட்ட நகை என்ற பெருமை இந்த ஜிமிக்கிகளுக்கு உண்டு..அதிலும் கற்கள் பதித்த ஜிமிக்கிகளையே பெண்கள் பெரிதும் விரும்பி அணிந்திருக்கிறார்கள். நாகரீக மாற்றத்தினால் தங்கத்தினால் மட்டுமே செய்யப்பட்ட ஜிமிக்கிகள் வந்துவிட்டன. ரூபி, எமரால்டு, முத்து மற்றும் வெள்ளை கற்கள் பதித்த ஜிமிக்கிகளைஇக்காலப் பெண்கள் பெரிதும் விரும்பி அணிகிறார்கள்.

    டெம்பிள் நெக்லஸ்

    மாங்காய், அன்னப்பறவை, மயில், நாகம், பூ வேலைப்பாடு இப்படி ஏதாவது ஒரு டிசைனில் நெக்லஸ் அமைந்திருக்க நெக்லஸின் மையத்தில் இருக்கும் பதக்கமானது இந்திய கோவில் சிற்பங்களை தத்ரூபமாக இருப்பதுபோல் வடிவமைத்திருக்கிறார்கள். இந்த வடிவமைப்புகள் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்பட்டிருப்பதை அதன் வேலைப்பாட்டில் இருந்து நாம் அறிந்து கொள்ள முடியும். இவ்வகை டெம்பிள் நெக்லஸ்கள் பெரும்பாலும் சிவப்புக்கல்,மரகதம், வெள்ளை கற்கள், போல்கி,முத்துக்கள், பல வண்ண கற்கள் பதிக்கப்பட்டு மயில், மலர் மற்றும் அம்மன் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.இந்தப் பழங்கால பாணியுடன் வரும் நகைகளின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் இந்த வடிவமைப்புகளில் சில மாற்றங்களுடன் சம காலத்திற்கு ஏற்றார் போல டெம்பிள் நகைகளை உருவாக்குகிறார்கள்.இதுபோன்ற நகைகளை விரும்பி வாங்குவதற்கு என்றே ஒரு சாரார் இருக்கின்றனர்..

    மாங்காய் மாலை, காசு மாலை

    ஆரம்ப காலகட்டங்களில் கற்கள் மட்டுமே பதித்து செய்யப்பட்ட இந்த மாலைகள் இப்பொழுது கற்கள் பதிக்காமல் தங்கத்தினால் மட்டுமே செய்தும் கிடைக்கின்றன.பழங்காலத்தில் மாங்காய் மாலை என்றாலே அது சிவப்பு கற்கள் பதித்து செய்யப்பட்டவையாகவே இருந்திருக்கின்றன.. பிறகு காலம் செல்லச் செல்ல இந்த மாங்காய் மாலையில் பல வண்ண கற்கள் பதித்தும்,கற்களே பதிக்காமலும் வரத் துவங்கிவிட்டன. அதேபோல் சிறிய மாங்காய் முதல் பெரிய மாங்காய் வரை பல்வேறு அளவுகளில் மாங்காய் மாலைகள் வரத் துவங்கிவிட்டன.பழங்காலத்தில் ஓரளவு வசதி படைத்தவர் வீடுகளில் கட்டாயம் ஒரு காசுமாலை இருந்திருக்கின்றது.அந்தக் காலத்து காசு மாலைகளில் ஒவ்வொரு காசும் அதிக தங்கத்தில் அழுத்தம் திருத்தமாக செய்யப்பட்டு இருந்திருக்கின்றன..இப்பொழுது வரும் காசு மாலைகள் குறைந்த தங்கத்திலும் பல்வேறு அளவுகளிலும் கிடைக்கின்றன.. காசு மலைகளில் கற்கள் பதித்து வருபவை கவர்ச்சிகரமாக இருக்கின்றன.

    முகப்பு

    ஒரு காலகட்டம் வரை முகப்பு வைத்து மட்டுமே செயின்கள் இருந்திருக்கின்றன என்றால் அதை மறுக்க முடியாது.. அதிலும் இரட்டை வடம், மூன்று வடம் என தங்கச் சரங்கள் அதிகமான செயின்களில் கற்கள் பதித்து செய்யப்பட்ட முகப்புகள் கட்டாயம் இருந்திருக்கின்றன. பிறகு ஒரு காலகட்டத்தில் முகப்புகள் இல்லாமல் செயின்கள் வரத் துவங்கின.அதன் பின்னர் மறுபடியும் பல்வேறு அளவுகளில்,கற்கள் பதித்தும் கற்கள் பதிக்காமலும் பல்வேறு டிசைன்களில் முகப்புகள் வரத் துவங்கிவிட்டன.ஒற்றை சரம் கொண்ட செயின்களுக்குக் கூட முகப்புகள் வைத்து அணிவது இப்பொழுது பிரபலமாகிவிட்டது.

    • கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 8 பவுன் தங்க செயினை திருடி தப்பிச் சென்றனர்.
    • கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    கோவை:

    கோவை கோவில்பாளையம் அருகே உள்ள வரதையன்பாளையத்தை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 33). நகைக்கடை விற்பனை பிரதிநிதி.இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.

    எனவே அவர் சிவானந்தா மில்லில் உள்ள தனது தாய் வீடடில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வினோத்குமார் வீட்ைட பூட்டி விட்டு மனைவியின் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 8 பவுன் தங்க செயினை திருடி தப்பிச் சென்றனர். இது குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • பீரோவை திறந்து கைச்செயின், செயின், மோதிரம், கம்மல் உள்பட 5½ பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
    • ைகரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    கோவை

    கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள காட்டாம்பட்டியை சேர்ந்தவர் விமல்குமார் (வயது27). என்ஜினீயர்.

    சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு காளப்பரையில் உள்ள உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார். அப்போது விமல்குமார் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர்.

    பின்னர் அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த கைச்செயின், செயின், மோதிரம், கம்மல் உள்பட 5½ பவுன் தங்க நகைகள், ஒரு லேப்டாப் ஆகியவற்றை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

    வீட்டிற்கு திரும்பிய விமல்குமார் கதவு உடைக்க ப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து அவர் நெகமம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் உடனடியாக சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் ைகரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாக இருந்த கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர்.

    இது குறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயர் வீட்டில் தங்க நகைகள் மற்றும் லேப்டாப்பை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். 

    • இந்தியாவில் கால்களில் ஆபரணங்கள் அணிவது ஆன்மிக ரீதியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது.
    • பழங்கால பெண்கள், தடிமனான தண்டை, கால் காப்பு போன்றவற்றை அணிந்திருந்தனர்.

    தண்டை, சலங்கை, கொலுசு போன்றவை கால்களின் கணுக்கால் பகுதியில் அணியப்படும் அணிகலன்கள் ஆகும். இவை அளவிலும் பயன்பாட்டிலும் சற்று மாறுபடும். தண்டை தடிமனாக இருக்கும். இது 'சிலம்பு' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த சிலம்பை மையமாக வைத்தே, 'சிலப்பதிகாரம்' எனும் தமிழ் இலக்கியம் உருவாக்கப்பட்டது.

    உலக அளவில் இதன் வரலாற்றை பார்க்கும் போது, மெசபடோமியாவில் வாழ்ந்த சுமேரியர்கள் சுமார் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே 'தண்டை' போன்ற அணிகலன்களை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. பழங்கால எகிப்தியர்களும், கணுக்காலில் ஆபரணங்கள் அணிந்திருந்ததாக குறிப்பு உள்ளது. செல்வந்தர்கள் தங்கள் செல்வ செழிப்பை காட்டுவதற்காக, தண்டையில் விலை உயர்ந்த கற்களைப் பதித்து அணிந்திருந்தார்களாம்.

    பழங்காலத்திலே, மத்திய கிழக்கு நாடுகளில் வசித்த பெண்கள், தங்கள் கால்கள் இரண்டிலும் அணிகலன்கள் அணிந்து, அதனை ஒரு சங்கிலியால் இணைத்துக் கொண்டு நடந்தார்களாம். கால்களை அகற்றி நடக்காமல், குறுகிய அடிகள் எடுத்து வைத்து நடப்பதற்கான பயிற்சியாக இது மேற்கொள்ளப்பட்டது.

    இந்தியாவில் கால்களில் ஆபரணங்கள் அணிவது ஆன்மிக ரீதியிலும் முக்கியமானதாக பார்க்கப்பட்டது. கால்களில் அணியும் அணிகலன்கள் வெள்ளியால் செய்யப்பட்டவை. வெள்ளி குளிர்ச்சி தரும் உலோகமாகும். இதனால் ஆயுள் விருத்தியாகும் என்கிறது ஆயுர்வேதம். பண்டைய காலத்தில் திருமணமான பெண்கள் மட்டுமே காலில் சலங்கை கொண்ட ஆபரணங்கள் அணிந்தனர். இதன்மூலம் ஒரு பெண் திருமணமானவரா, ஆகாதவரா என்பதை அணிகலன் எழுப்பும் சத்தத்திலே அறிந்து கொண்டனர்.

    தண்டையானது ஈயம் மற்றும் தாமிரத்தால் செய்யப்படுகிறது. ஈயம் மற்றும் தாமிரம் இரண்டையும் முறுக்கி செய்வதால் 'முறுக்கு தண்டாய்' எனவும் அழைக்கப்படுகிறது. தண்டை, குழந்தைகளின் கால் நரம்புகளை பலப்படுத்துகிறது. பழங்கால பெண்கள், தடிமனான தண்டை, கால் காப்பு போன்றவற்றை அணிந்திருந்தனர்.

    தண்டை அணியும் முறை மலைவாழ் மக்களின் கலாசாரத்தில் இன்றும் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் தண்டை அணிவதன் மூலம் கர்ப்பப்பை இறக்க பிரச்சினையை தீர்க்கலாம். மேலும் இது கல்லீரல், மண்ணீரல், பித்தப்பை, சிறுநீரகம் போன்ற முக்கிய உறுப்புகளின் செயல் திறனையும் தூண்டிவிடுகிறது.

    குதிகால் நரம்பினைத் தண்டை தொட்டுக் கொண்டிருப்பதால், இந்த நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சியை கட்டுப்படுத்துகிறது. இதனால் கோபம் மற்றும் உணர்ச்சி வசப்படுதலை குறைக்க முடியும்.

    • கவரிங் நகைகள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
    • கவரிங் நகைகளைத் தவிர்த்து பின்வரும் உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகளை அணியலாம்.

    நகைகளை விரும்பாத பெண்கள் இருக்க முடியாது. பலவகையான உலோகங்களால் ஆன நகைகளை அணிந்தாலும், தங்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பு பெண்களுக்கு இன்று வரை குறையவில்லை. விலை உயர்வு, பாதுகாப்பு போன்ற காரணங்களால், தங்கத்துக்கு மாற்றாக கவரிங் நகைகள் அணிவார்கள். ஆனால் இவ்வகை நகைகள், சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். சரும பாதிப்புகளை அதிகரிக்கும். இவர்கள் கவரிங் நகைகளைத் தவிர்த்து பின்வரும் உலோகங்களால் தயாரிக்கப்பட்ட நகைகளை அணியலாம்.

    வெள்ளி: தற்போது தங்க நகைகளுக்கு நிகராக, வெள்ளியால் தயாரிக்கப்பட்ட நகைகள் தங்க முலாம் பூசப்பட்டு சந்தையில் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு தங்கத்தைப் போலவே இருப்பதால் இவற்றுக்கு மவுசு அதிகம். வெள்ளி, தங்கத்தை விட விலை குறைவானது. வெள்ளியில், திருமணத்திற்கு அணிவதற்கு ஏற்ற பிரமாண்ட நகைகள் முதல் தினசரி அணியும் எளிய டிசைன் நகைகள் வரை கிடைக்கின்றன.

    முத்து: இயற்கையாக கிடைக்கும் முத்துக்கள் சற்றே விலை உயர்ந்தவை. இவற்றை போலவே தற்போது செயற்கை முத்துக்களும் கிடைக்கின்றன. இவற்றை அணிந்தால் பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், அனைத்து ஆடைகளுக்கும் பொருத்தமாகவும் இருக்கும்.

    கண்ணாடி நகைகள்: பழங்காலத்தில் இருந்தே அணிந்து வரும் நகைகளில் கண்ணாடியால் தயாரிக்கப்படும் நகைகளும் ஒன்று. வளையல்கள் மட்டுமில்லாமல் கழுத்து மற்றும் காதணி வகைகளும் தற்போது கண்ணாடியில் கிடைக்கின்றன. இவற்றை அணிவதிலும், பராமரிப்பதிலும் சற்றே கவனமாக இருக்க வேண்டும்.

    பேஸ் மெட்டல்: 'பேஸ் மெட்டல்' என்று சொல்லப்படும் பித்தளை, செம்பு, வெண்கலம் போன்ற உலோகங்களால் ஆன நகைகளை அணியலாம். இவற்றை தங்க முலாம் பூசியும், அவற்றின் அசல் நிறத்திலும் அணிவது நேர்த்தியாக இருக்கும். உலோகங்களின் அசல் நிறத்திலேயே நகைகளை அணியும்போது, வித்தியாசமாக காணப்படுவதோடு வெஸ்டர்ன் மற்றும் இந்தோ வெஸ்டர்ன் போன்ற ஆடை வகைகளுக்குப் பொருத்த மாகவும் இருக்கும்.

    டெரகோட்டா: தற்போது டிரெண்டில் இருப்பது டெரகோட்டா நகைகள்தான். இவை களிமண்ணில் தயாரிக்கப்படும் நகைகள். கைவினை கலைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மூலம் டெரகோட்டா நகைகள் தயாரித்து விற்கப்படுகின்றன. இவை மாடர்ன் ஆடைகள் முதல் சல்வார், புடவை என அனைத்து ஆடைகளுக்கும் பொருந்தும் வகையில் வடிவமைக்கப்படுகின்றன.

    குவில்லிங் நகைகள்: பல வண்ண காகித சுருள்கள் மூலம் தயாரிக்கப்படுபவை குவில்லிங் நகைகள். கல்லூரி மாணவிகள் முதல் அனைவராலும் அதிகம் விரும்பி அணியப்படும் நகைகளில் ஒன்றாக இவை உள்ளது. காகிதத்தால் செய்யப்படுவதால் விலையும் குறைவு.

    பொருள் வாங்குவது போல நடித்து பெட்டிக்கடையில் இருந்த மூதாட்டியிடம் நகைகள் பறிக்கப்பட்டன.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல் செல்லும் பை-பாஸ் சாலையில் உள்ள ‌தனியார் கல்லூரி அருகே பெட்டி கடை வைத்து நடத்தி வருபவர் பெருமாள்.இவரது மனைவி விஜயலட்சுமி (52). சம்பவத்தன்று விஜயலட்சுமி பெட்டிக்கடையில்‌ வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது பெட்டிக்கடைக்கு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். இருவரும் விஜயலட்சுமியிடம் பொருட்களை வாங்கிவிட்டு அதற்கான ரூ.500-ஐ கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர்.பணத்தை வாங்கிய அவர் கல்லாவில் இருந்து மீதி பணத்தை‌ கொடுப்பதற்கு பணத்தை கீழே குணிந்து எடுத்தபோது மர்ம நபர்கள் இருவரும் விஜயலட்சுமியின் கழுத்தில்‌ இருந்த ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌2பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் அதிர்ச்சி அடைந்த விஜயலட்சுமி சத்தம் போட்டு திருடன், திருடன் என அப்பகுயில் உள்ளவர்களை அழைத்துள்ளார். ஆனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து ‌‌‌‌‌‌‌‌‌‌‌ தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் பட்டப்பகலில் தங்கநகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×