search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராதாகிருஷ்ணன்"

    • ரேஷன் கடைகளிலும், வெளி விற்பனை நிலையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனைசெய்யப்பட்டு வருகின்றன.
    • ரேஷன் கடைகளில் கோதுமை வினியோகத்தில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தமிழ்நாடு கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள ஒழுங்குமுறை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

    அதன்பின் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பொதுவாக கூட்டுறவு ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளின் உற்பத்தி பொருள்களான மஞ்சள், எள், பருத்தி உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. அத்துடன் இங்கு மங்களம் எனும் பிராண்ட் பெயரில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், சாம்பார் தூள், ரசப்பொடி உள்பட 14 வகையான மசாலா பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

    மேலும் ரேஷன் கடைகளிலும், வெளி விற்பனை நிலையங்களிலும், ஆன்லைன் மூலமாகவும் விற்பனைசெய்யப்பட்டு வருகின்றன. இதன் மூலமாக வரும் லாபம் விவசாயிகளையே சென்று சேருகிறது.

    அதிகப்படியான விற்பனை வாய்ப்பு இருப்பதால் இதன் உற்பத்தி மற்றும் வினியோகத்தை நவீன படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மஞ்சள் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரித்து உலக அளவில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    உலகத்தரம் வாய்ந்த அளவிற்கு தனியார் நிறுவனங்களுக்கு இணையான மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். சந்தையில் பல தனியார் நிறுவனங்கள்பிரபலமாக இருந்தாலும் இது அரசு நிறுவனம் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

    ரேஷன் கடைகளில் கோதுமை வினியோகத்தில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றை களைய நடவடிக்கை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க டி.ஜி.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டஅளவில் போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை ரேஷன் அரிசி கடைசியில் ஈடுபட்ட 400-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் பொது மக்களும் அது குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களுக்கு தேவையான அளவில் மட்டுமே பொருள்களை வாங்கி கடத்தலை தடுக்க ஒத்துழைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோவையில் இருந்து கேரளாவிற்கு அடிக்கடி ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.
    • கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 40 ஆயிரம் குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கோவை:

    தமிழக உணவு, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ரேஷன் கெடை மற்றும் ரெயில் நிலையம் பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஆய்வு மேற்கொண்டார்.

    இதையடுத்து தமிழக-கேரளா எல்லையான வாளையாறு சோதனை சாவடியில் இரவு திடீரென ஆய்வு மேற்கொண்டார். கோவையில் இருந்து கேரளாவிற்கு அடிக்கடி ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. ரேசன் அரிசியை அங்கு பாலீஸ் செய்து அதிக விலைக்கு விற்கப்படுவதாக எழுந்த புகாரை அடுத்த எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டது.

    இந்தநிலையில் முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன், குடிமைப்பொருள் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு பாலாஜியுடன் வாளையாறு சோதனைச் சாவடியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் வாகன தனிக்கை எவ்வாறு மேற்கொள்ளபடுகிறது, சோதனை செய்யும் போது பாதுகாப்பான முறையில் எப்படி சோதனை செய்வது என்பது குறித்து விளக்கம் அளித்தார். ரேசன் அரிசி கடத்தலை முற்றிலுமாக தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து போலீசாருடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர் ராதாகிருஷ்ணன் நிருபர்களி டம் கூறும்போது, கடந்த மே மாதத்தில் இருந்து இதுவரை சுமார் 40 ஆயிரம் குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 901 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 46 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரேசன் அரிசி கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, சுகாதாரத்துறை செயலாளர் பதவியில் இருந்து ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்றை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இதனால், தமிழக சுகாதாரத் துறையின் புதிய செயலாளராக செந்தில்குமார் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

    நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள்துறை முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    வணிகவரித்துறை முதன்மைச் செயலாளராக தீரஜ்குமர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    வருவய் நிர்வாக ஆணையராக அல்லது கூடுதல் தலைமைச் செயலாளராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறது.
    • 3 நாட்களாக சாதாரண காய்ச்சல், சளி இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும்.

    சென்னை:

    சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தடுப்பூசியை சிலர் போட்டுக்கொள்ளாமல் இருப்பது நமக்கு சவாலாக உள்ளது. 3 நாட்களாக சாதாரண காய்ச்சல், சளி இருந்தால் உடனே பரிசோதனை செய்ய வேண்டும்.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் தொற்று அதிகரிக்கிறது. இந்த ஆண்டு அதிநவீன கரு உருவாக்கும் வசதி கொண்ட பெர்டிலிட்டி சென்டர் அரசு சார்பில் ஏற்படுத்தப்பட உள்ளது.

    ஆண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் மையத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மிக விரைவில் கரு உருவாக்க சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முதல்-அமைச்சர் தினந்தோறும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
    • லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி இளைஞர் மேம்பாட்டு மையத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில மாணவ- மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

    இங்குள்ள சில மாணவர்களுக்கு கொரோனா தொற்று அறிகுறி காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து சுகாதாரத்துறையினர் இந்த மையத்தில் படிக்கும் 235 மாணவ-மாணவிகளுக்கு பரிசோதனை செய்தனர்.

    இதில் 2 மாணவர்களுக்கு முதலில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதற்கிடையே மேலும் 29 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தனியார் மற்றும் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 16 மாணவர்கள் அந்த மைய வளாகத்திலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மாணவர்களின் உடல் நிலை மற்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்.

    அப்போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த ஒரு ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்களில் 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மருத்துவ வல்லுனர்கள் கூறுகையில் தடுப்பூசி செலுத்தி கொண்ட நபர்களுக்கு தற்போது உள்ள உருமாறிய வைரசால் பாதிப்பு பெரிய அளவில் இருக்காது என்று தெரிவித்து உள்ளனர்.

    தற்போது தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் பிற மாநில மாணவர்கள் என்பதும் குறிப்பாக கேரளா பகுதிகளில் இருந்து வந்த மாணவர்களுக்கு இந்த தொற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் தொற்று பரவாமல் இருக்க ஏற்கனவே நாம் கடைபிடித்த முகக்கவசம், தனிமனித இடைவெளி, கூட்டங்களை தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளை தொடர்ச்சியாக கடைபி டித்தால் ஆரோக்கியமான உடல் நலம் காக்கப்படும்.

    முதல்-அமைச்சர் தினந்தோறும் கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.

    தற்போது முற்றிலும் கொரோனாவை தமிழ்நாட்டில் இருந்து முடிவுக்கு கொண்டு வரும் நேரத்தில் பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. கொரோனாவை முடிவுக்கு கொண்டு வந்து கரை ஒதுங்கும் நேரத்தில் தமிழக மக்கள் கவனக் குறைவாக இருந்து மூழ்கும் நிலைக்கு போகக் கூடாது.

    மேலும் பொதுமக்கள் லேசான தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக காலம் தாழ்த்தாமல் உரிய மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் பிரிய ராஜ் உடன் இருந்தனர்.

    ×