search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார்.
    • சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அவினாசி :

    அவினாசி அருகே குப்பாண்டம்பாளையம் கிராமம் புது ஊஞ்ச பாளையம் பஸ் ஸ்டாப் அருகே 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்து வந்தார்.

    இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவரை பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது பெயர் ஊர் விவரம் பற்றி தகவல் தெரிந்தால் அவினாசி காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவினாசி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • இவர், காலை திடீரென மாயமானதாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திக்குட்பட்ட பகோடு பனம்பழஞ்சி விளையை சேர்ந்தவர் வல்சலா (வயது 68) மகன் வீட்டில் வசித்து வந்த இவர், காலை திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்த போது ஞாறான்விளை பகுதி ரெயில்வே லைன் அருகில் உள்ள வாய்க்காலில் மூழ்கி வல்சலா இறந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அவரது மகன் கிரீஸ் மார்த்தாண்டம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபு ரத்தைச் சேர்ந்தவர் ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விஷம் குடித்து பலியானார்.
    • இதில் 75 ஆயிரம் ரூபாயை இழந்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் தலைவாசல் சதாசிவபு ரத்தைச் சேர்ந்தவர் சீனிவா சன். இவரது மகன் சூரிய பிரகாஷ் (வயது 20). இவர் தேவியாகுறிச்சியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 6-ம் தேதி ஆன்லைன் மூலம் பணம் கட்டி ரம்மி விளையாடினார்.இதில் 75 ஆயிரம் ரூபாயை இழந்தார்.வங்கி கணக்கில் பணம் இல்லாத கண்டு அவரது பெற்றோர் கேட்டுள்ளனர். அதில் மணமடைந்த மாணவர் கடந்த 7-ந் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் அவரை மீட்டு ஆத்தூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தினார்.

    மேல் சிச்சைக்காக கோவை தனியார் ஆஸ்பத்திரியில் அனும திக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
    • நின்றிருந்த வாகனத்தை கவணிக்காமல் மோதி விபத்து

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள கல்குறிச்சி மஞ்சனாவிளை பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் ஆசீர் மனு வேல் (வயது33), பிளம்பர். இவருக்கு இன்னும் திருமண மாகவில்லை.

    கடந்த 11-ந் தேதி ஆசீர் மனுவேல் மோட்டார் சைக்கிளில் வேலைக்குச் சென்றார். இரவில் வேலை முடிந்து வீட்டுக்கு புறப்பட்ட அவர், முத்தளக்குறிச்சியில் வரும் போது கல்லுரி வாகனம் நின்றிருந்ததை கவனிக்கவில்லை.

    இதனால் எதிர்பாராத விதமாக அந்த வாகனத்தின் பின்புறம் ஆசீர்மனுவேல் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில்தூக்கி வீசப்பட்ட அவர் படுகாய மடைந்தார்.அவரைஅருகில் உள்ளவர்கள் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர் ஆசீர்மனுவேல் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரியில் சேர்க்கப்ப ட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பல னின்றி இன்று அதிகாலை ஆசீர்மனுவேல் பரிதாபமாக இறந்தார். விபத்து தொடர்பாக அவரது தாய் லில்லி பாய் தக்கலை போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா மணப்பள்ளி அருகே தீர்த்தாம்பாளையம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
    • இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் மோகனூர் தாலுகா மணப்பள்ளி அருகே தீர்த்தாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம் (வயது 50 ). இவரது மனைவி ராதாமணி( 47). இவர்கள் இருவரும் சோழசிராமணி அருகே உள்ள தேவம் பாளையத்தில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

    சதாசிவம் மோட்டார் பைக்கை ஓட்டி வந்தார். ராதாமணி பைக்கில் பின்னால் அமர்ந்திருந்தார். கபிலர்மலை -ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மோட்டர் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்த நாய் ஒன்று திடீரென சாலையின் குறுக்கே ஓடியது.

    இதில் நிலை தடுமாறிய சதாசிவம் மனைவியுடன் தவறி கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் மீட்டு அவர்களை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக ராதாமணியை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசில் புகார் செய்தனர் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொண்டியில் குடும்பத்தை பிரிந்த முதியவர் இறந்தார்.
    • முதியவருக்கு குடும்பத்தினர் இருந்தும் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு உடல் அடக்கம் செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே பனஞ்சாயல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜன் (68). இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து தொண்டி பகுதியில் கடைகளில் பிச்சை எடுத்து சாப்பிட்டு பஸ் நிலையத்தில் உறங்கி வந்தார். இந்த நிலையில் முதியவர் கோவிந்தராஜன் பஸ் நிலையத்திலேயே இறந்தார். இதுகுறித்து பேரூராட்சி தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், கிராம உதவியாளர் அந்தோணிசேகருக்கு தகவல் தெரிவித்தார். தொண்டி போலீஸ் நிலையம் மற்றும் வருவாய்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இறந்தவரின் குடும்பத்திருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இறந்தவரின் குடும்பத்தினர் முதியவர் உடலை அடக்கம் செய்ய முன் வராமல், தகவல் கொடுத்தவர்களிடம் நீங்களே அடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்களாம். இதையடுத்து பேரூராட்சி தலைவர், பணியாளர்களைக் கொண்டு தொண்டி பொது மயானத்தில் இந்து முறைப்படி முதியவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. முதியவருக்கு குடும்பத்தினர் இருந்தும் பேரூராட்சி பணியாளர்களைக் கொண்டு உடல் அடக்கம் செய்யப்பட்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்
    • மயங்கி கீழே விழுந்தார்

    திருச்சி:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அள்ளூர் பகுதியை சேர்ந்தவர் அன்னக்காமு(வயது58). இவரது தந்தை செல்லமுத்து(80) கடந்த 6ம் தேதி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்துள்ளார். அங்கு வந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இது குறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சேலம் அன்னதானப்பட்டி பந்தல் காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த மூதாட்டி தவறி விழுந்து பாலியானர்.
    • இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி பந்தல் காளியம்மன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து. இவரது மனைவி பாக்கியம் ( வயது 65). கடந்த மாதம் 29-ந் தேதி திங்கட்கிழமை இரவு வீட்டின் 3-வது மாடியில் இருந்து இறங்கி கீழே வந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி மாடிப்படியில் இருந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

    இதில் தலை பின் பக்கம் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி பாக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் கார் மோதி 2 காவலாளிகள் இறந்தனர்.
    • ஆஸ்டின்பட்டி மற்றும் நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    திருமங்கலம், சோழவந்தான் ரோட்டை சேர்ந்தவர் பாலவீரன் (வயது 40). திருப்பரங்குன்றம் கல்லூரியில் இவர் வாட்ச்மேனாக வேலை பார்த்தார். நேற்று இரவு கூத்தியார்குண்டு-கரடிக்கல் ரோட்டில் நடந்து சென்றார். அகதிகள் முகாம் அருகே, வேகமாக வந்த கார் பாலவீரன் மீது மோதியது. படுகாயம் அடைந்த பாலவீரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    மேலக்கால் தெற்கு தெருவை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 48). மதுரை அரசினர் மருத்துவமனையில், வாட்ச்மேனாக வேலை பார்த்தார். சம்பவத்தன்று இரவு இவர் நண்பர் வேல்முருகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். மதுரை- மேலக்கால் ரோட்டில், வேகமாக வந்த கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துராமன் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    • பஸ்-மோட்டார் சைக்கிள் மோதி புது மாப்பிள்ளை பரிதாப இறந்தார்.
    • திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்

    சாத்தூர் அருேக உள்ள வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்தவர் சங்கரேஸ்வரன் (வயது 23). இவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள நடுவக்கோட்டையைச் சேர்ந்த ஜான்சிராணி என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இந்த நிலையில் சங்கரேஸ்வரன் புதிதாக மோட்டார் சைக்கிளை வாங்கினார். அதில் தனது மனைவியுடன் நடுவக்கோட்டையில் உள்ள மாமனார் வீட்டுக்கு சங்கரேஸ்வரன் சென்றார்.

    நேற்று கணவன்-மனைவி இருவரும் புதிய மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர். சாத்தூர் அருகே உள்ள இனாம்ரெட்டியபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது சென்னையில் இருந்து நாகர்கோவில் சென்ற தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சங்கரேஸ்வரன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த ஜான்சிராணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    விபத்து தொடர்பாக சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் செங்கல்பட்டு மாவட்டம், காமராஜபுரத்தைச் சேர்ந்த இளையபெருமாள் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 3 மாதத்தில் புது மாப்பிள்ளை விபத்தில் சிக்கி இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே சிதறால் திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 29) கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சஜின் அடிக்கடி குடித்துவிட்டு வந்துள்ளார்‌. நேற்று சஜின் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சஜின் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த சஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • கொல்லி மாடசாமி மீது கொலை, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.
    • போலீசார் கொல்லி மாடசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கடையநல்லூர்:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலக்கடையநல்லூர் இந்திரா நகர் பகுதியில் உள்ள கொல்லி மாடசாமி என்பவர் கடந்த 2020 -ம் ஆண்டு இடப்பிரச்சனை காலமாக அதே பகுதியை சேர்ந்த செல்லத்துரை என்பவரை கூட்டாளியுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தார். இவர் மீது கடையநல்லூர் காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    இவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்து குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் நேற்று இரவு படுத்திருந்த அவர் நள்ளிரவில் திடீரென மலம் கழிப்பதற்காக வெளியில் சென்றார்.

    அதன் பின்னர் அவர் வீடு திரும்பி வராததால் காலையில் உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடினர். அப்பொழுது அருகில் உள்ள மரம் அருகே இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே இது குறித்து கடையநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையநல்லூர் போலீசார் கொல்லி மாடசாமியின் உடலை கைப்பற்றி கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையா? அல்லது இயற்கை மரணம் அடைந்தாரா? என விசாரணை நடத்தி வருகின்றனர் 

    ×