search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • கடந்த 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.
    • குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே ஈஞ்சகோடு பகுதியை சேர்ந்தவர் அஜிகுமார். கட்டிட தொழிலாளி. இவரது வீட்டில் கட்டிட வேலை நடந்து வந்தது.

    ஆணையடி செங்கோடி பகுதியை சேர்ந்த மோசஸ் (வயது 33) என்பவர் இங்கு கட்டிட வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவர் கட்டிடத்தின் மேல் பகுதியில் நின்று வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தவறி விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு கடந்த 2 நாட்களாக மோசஸ் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.

    இதுபற்றி குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாரைக்கிணறு பிரிவு ரோட்டில் உள்ள சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
    • இந்த நிலையில் திடீரென அவர் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள புதுச்சத்திரம் ஒன்றியம் ராஜா கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 70). கூலித் தொழிலாளி.

    இவர் தற்போது நாமகிரிப்பேட்டை அருகே உள்ள காமராஜ் நகர் நாரைக்கிணறு பிரிவு ரோடு பகுதியைச் சேர்ந்த அவரது தம்பி முருகேசன் (60) என்பவரது வீட்டில் கடந்த மூன்று மாதங்களாக தங்கி இருந்து வந்துள்ளார்.

    இவர் நேற்று மாலையில் நாரைக்கிணறு பிரிவு ரோட்டில் உள்ள சிறிய பாலத்தின் மீது உட்கார்ந்து கொண்டு இருந்துள்ளார். அவர் அப்போது குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் திடீரென அவர் நிலை தடுமாறி பாலத்தில் இருந்து 15 அடி ஆழம் உள்ள பள்ளத்தில் விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வரதராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். இறந்த வரதராஜனுக்கு சின்னப்பாப்பு என்ற மனைவியும், மணிகண்டன் மற்றும் சங்கர் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து வரதராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்தி–ரிக்கு அனுப்பி வைத்தனர். 

    • ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உயிர் பிரிந்தது
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணத்தை அடுத்த நாரணமங்கலம் அருந்ததி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிட்டிபாபு (வயது 42). பெயிண்டர்.

    இவருக்கு நேற்று முன்தி னம் நள்ளிரவுதிடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனே அருகில் இருந்தவர்கள் சிட்டி பாபுவை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிட்டிபாபு ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து வந்த அரக்கோணம் தாலுகா போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்
    • கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் இன்று காலை 10 மணிக்கு சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியோர் ஒருவர் பஸ்சில்இருந்து கீழே இறங்கினார். அப்போது அவர் "திடீர்"என்று மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் நெல்லை மாவட்டம் பழவூரைச்சேர்ந்த நடராஜன் (வயது60) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து போலீ சார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பலி எண்ணிக்கை 3 ஆனது
    • விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் அருகே உள்ள பொன்மனை காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ரா ஜசேகர் (வயது 40).

    பொன்மனை ஈஞ்சக் கோடு பகுதியைச் சேர்ந்த ராஜன் (34). இருவரும் முள்வேலி அமைக்கும் பணி செய்து வருகின்றனர். இருவரும் முட்டத்தில் முள்வேலி அமைக்கும் பணியை முடித்துவிட்டு மதியம் வீடு திரும்பினர். பைக்கை ராஜசேகர் ஓட்டி னார்.

    இருவரும் இரணியலில் இருந்து தக்கலை நோக்கி செல்லும் போது, எதிரே நெய்யூர் ஆத்திவிளை காமராஜர்தெருவை சேர்ந்த பிரதீஷ் (28) பைக்கில் வந்தார். அவரது பின்னால் நெய்யூர் பால் தெருவை சேர்ந்த ரெஜு (38) அமர்ந்திருந்தார். இரணியல்கோணம் ரயில்வே மேம்பாலம் அருகில் வந்தபோது எதிர்பாராதவிதமாக இரண்டு பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பிரதீஷ், ராஜ சேகர் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு ரெஜுவை சுங்கான் கடையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், ராஜனை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    இதில் ராஜன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    • சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த விருதாசம்பட்டி வெள்ளை கரடு பகுதியில் கல்லூரி மாணவர் பாலியானார்.
    • தற்கொலைக்கு தூண்டியதாக தாய்-மகன் மீது வழக்கு

    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் நங்கவள்ளியை அடுத்த விருதாசம்பட்டி வெள்ளை கரடு பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). இவர், அதே பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவரிடம்,5 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனின் மருத்துவச் செலவுக்காக ரூ.65 ஆயிரம் கடன் வாங்கி இருந்தார்.

    இதில், வட்டியுடன் சேர்த்து 2 ஆண்டுகளுக்கு முன்பு, 50 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்து விட்டார். மீதித்தொகை, 15 ஆயிரம் ரூபாயை திருப்பித் தராமல் காலதாமதம் செய்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் சுதாகர், அவருடைய தாயார் சரஸ்வதி ஆகிய இருவரும் ஆனந்தன் வீட்டிற்கு சென்று, பாக்கித் தொகையை திருப்பி கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

    மேலும், ஆனந்தன் மகனான கல்லூரி மாணவர் நிர்மல் ராஜ் வளர்த்து வந்த ஆட்டுக்குட்டியை, கடனுக்காக பிடிக்க சென்றுள்ளனர். எனது அப்பா வாங்கிய கடனுக்காக, நான் வளர்க்கும் ஆட்டுக்குட்டியை எதற்கு பிடிக்க செல்கிறீர்கள் என நிர்மல் ராஜ் கேட்டுள்ளார்.

    வாங்கிய கடனை திருப்பித் தர துப்பில்லை, நீங்கள் எல்லாம் எதுக்குடா உயிரோடு இருக்கிறீங்க, போய் சாவுங்கடா என, சுதாகர் அவரது தாயார் சரஸ்வதி இருவரும் சேர்ந்து, நிர்மல் ராஜ் மற்றும் அவரது பெற்றோரை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நிர்மல் ராஜ் தனது வீட்டிற்குள் சென்று அங்கிருந்த மின்விசிறியில், சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நங்கவள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக நங்கவள்ளி போலீசார் விசாரித்தனர். விசாரணை யில் சுதாகர் மற்றும் சரஸ்வதி திட்டியதால் நிர்மல்ராஜ் தற்கொலை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து சுதாகர், சரஸ்வதி மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் சுதாகரை போலீசார் கைது செய்தனர். ‌ தலைமறைவாக உள்ள சரஸ்வதியை போலீ சார் தேடி வருகின்றனர்.

    • விபத்தில் படுகாயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்ைச பெற்று வந்தார்.
    • நேற்று மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஸ் (வயது26). இவர் விபத்தில் படுகாயம் அடைந்து தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சதீஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரவு 10.15 மணியளவில் அவருடைய மனைவியிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.
    • உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை

    கன்னியாகுமரி:

    தெங்கம்புதூர் அருகே உள்ள குளத்துவிளையை சேர்ந்தவர் அலெக்சாண்டர் (வயது 34).

    இவர் கூடங்குளம் அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு நண்பருடைய திருமணத்தில் கலந்து விட்டு அலெக்சாண்டர் வீட்டிற்கு வந்து தூங்க சென்றார். இரவு 10.15 மணியளவில் அவருடைய மனைவியிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார்.

    உடனே அவரது தந்தை ஜார்ஜ்மெய்யேல் ஒரு ஆட்டோவை பிடித்து நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார்.

    அங்கு அலெக்சாண்டரை பரிசோதித்த டாக்டர்கள் அவர், இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஜார்ஜ் மெய்யேல் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ் பெக்டர் ஆஷாஜெபகர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து அலெக்சாண்டரின் உடலை பிரேத பரிசோத னைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார்.
    • இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    கடலூர் மாவட்டம், புவனகிரியை அடுத்த மஞ்சக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் மணிவேல் (26). இவர் சென்னிமலையை அடுத்துள்ள ஈங்கூர் அருகே தங்கி அங்குள்ள ஒரு கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் கறி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் திடீரென இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சென்னிமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பெருந்துறை ஐ.ஆர்.டி.டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கருப்பசாமி சம்பவத்தன்று மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.
    • இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

    கோவை:

    கோவை மதுக்கரை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு நடந்து சென்றார்.

    அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியிலேயே கருப்பசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரே நிழற்குடையில் முதியவர் பிணமாக கிடந்தார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுகா அலுவலகம் எதிரில் உள்ள பஸ் நிழல் குடையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்த நிலையில் கிடந்தார். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னக்கொடி, சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் இதுகுறித்து பொதுமக்களிடம் விசாரணை செய்தபோது இவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதனையடுத்து உடலை கைப்பற்றி போலீசார் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இவர் குறித்து விவரம் தெரிந்தால் திட்டக்குடி போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொள்ளவும் அவர் கட்டம் போட்ட சட்டை, கட்டம் போட்ட கைலி, முகத்தில் அதிக அளவு தாடியுடன் உள்ளார்.

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மூலைபிள்ளையார் கோவில் நரசிம்மர் செட்டித்தெரு பிள்ளை யார் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சீனிவாசன் (வயது 31)கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×