search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • சின்னசேலம் அருகே மனநலம் பாதித்த வாலிபர் திடீரென இறந்தார்.
    • ஆண் நபர் வலது கையில் ஊசி போடும் வெண்பிளான் இருந்த நிலையில் சுற்றித்திரிந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் மனநல பாதிக்கப்பட்ட ஆண் நபர் வலது கையில் ஊசி போடும் வெண்பிளான் இருந்த நிலையில் சுற்றித்திரிந்துள்ளார். கடந்த 17-ந் தேதி அன்று கனியாமூரில் நடந்த கலவரத்தால் அப்பகுதியில் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் கலவரம் நடந்த அன்று முதல் இந்த ஆண் நபர் வலது கையில் ஊசி போடும் வென்பிலானுடன் அப்பகுதியில் 4 நாட்களாக சுற்றி திரிந்துள்ளார். இவருக்கு உடல்நிலை மோசம் அடைந்ததால் சாலை ஓரத்திலே படுத்து கிடந்துள்ளார். இவரைப் பற்றி தகவல் தெரியாததால் அருகில் இருந்தவர்கள் சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சின்னசேலம் போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட நபரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பின்பு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இவர் இறந்து போனார். இவரைப் பற்றி தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    • இந்த நிலையில், நேற்று காலை ராம்சர்தார் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    மேற்கு வங்க மா நிலம், பர்கானாஸ் பகுதியைச் சேர்ந்தவர் திலீப்முண்டா (31). இவரது தங்கை கணவர் ராம்சர்தார் (27). இருவரும், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் சிமெண்ட் கற்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

    இந்த நிலையில், நேற்று காலை ராம்சர்தார் திடீரென வாந்தி எடுத்து, மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்து, ராம்சர்தாரை பரிசோதனை செய்த ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர், அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, திலீப்முண்டா அளித்த புகாரின்பேரில் மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
    • அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள மங்கானூரைச் சேர்ந்தவர் சண்முகம் (54). லாரி டிரைவர். இவரது மனைவி ராணி (45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது.

    இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி ஆந்திர மாநிலத்தில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றிக் கொண்டு சண்முகம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வந்துள்ளார்.

    நேற்று அவர் பெருந்துறை அருகே சீனாபுரத்தில் உள்ள கான்கிரீட் கல் தயாரிக்கும் நிறுவனத்தில் சிமெண்ட் பாரம் இறக்கி விட்டு மீண்டும் கிளம்ப முயன்றபோது திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே சண்முகம் இறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.

    இதுகுறித்த புகாரின்பேரில், பெருந்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரத்த காயங்களுடன் கிடந்த பெண் இறந்தார்.
    • இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளியை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இன்று காலை இவர் வீட்டில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    வீட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த சரஸ்வதியை யாராவது தாக்கி கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடலூர் அருகே பெண் திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டு இறந்தார்.
    • ஜெகதீசன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளார்.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மனைவி வினோதினி (வயது 28). இவர்களுக்கு திருமணமாகி 6 வருடம் ஆகியுள்ள நிலையில் ஒரு பெண் குழந்தை இருந்து வருகிறது. ஜெகதீசன் கடந்த 2 வருடத்திற்கு முன்பு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று உள்ளார். இந்த நிலையில் வினோதினிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட காரணத்தினால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று மாலை திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டதால் கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பின்னர் புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வினோதினி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பிளஸ்-2 மாணவன் பலியானார்.
    • இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    ராசிபுரம்:

    ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி காலனி பகுதியைச் சேர்ந்தவர் சின்ராஜ். இவரது மகன் ஹரி பாஸ்கர் (வயது 18). பிளஸ் 2 முடித்துள்ளார். நேற்று இரவு ஹரி பாஸ்கர் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் கோடீஸ்வரன் (19) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் பட்டணம் வழியாக ராசிபரத்துக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ஹரிபாஸ்கர் ஓட்டிச் சென்றார்.

    அவருக்கு பின்னால் கோடீஸ்வரன் உட்கார்ந்து சென்றார். பட்டணம் சக்தி நகர் அருகே சென்றபோது ராசிபுரத்தில் இருந்து பட்டணத்தை நோக்கிச் சென்ற செல்வராஜ் (65) என்பவரது மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன. இதில் பலத்த காயமடைந்த ஹரி பாஸ்கர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதில் கோடீஸ்வரனும், செல்வராஜும் காயமடைந்தனர். இருவரும் ராசிபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    காயமடைந்த செல்வராஜ் பட்டணம் பள்ளிக்கூடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மது போதையில் கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்
    • சகோதரி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார்

    திருச்சி:

    திருச்சி கல்லுக்குழி ரயில்வே காலனி பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 60) . கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆன மூன்று மாதத்தில் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதை அடுத்து மதுவுக்கு அடிமையானார். இந்நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு இவர் மது போதையில் ஜங்ஷனில் உள்ள ரயில்வே திருமண மண்டபம் பாதசாரிகள் நடந்து செல்லும் பாதையில் விழுந்து கிடந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து லோகநாதனின் சகோதரி ராஜலட்சுமி கன்டோன்மென்ட் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    • ரெயில் மோதி வாலிபர் இறந்தார்.
    • அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

    மதுரை

    மதுரை கூடல்நகர்-சமயநல்லூர் இடையே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சம்பவத்தன்று நள்ளிரவு தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து திண்டுக்கல் மார்க்க மாக சென்ற ெரயில் மோதியது. இதில் அந்த நபர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அவர் சிகப்பு, நீல கலர் கோடு போட்ட முழுக்கை சட்டை, வெள்ளை கலர் முண்டா பனியன், சிமெண்ட் கலர் பேண்ட் அணிந்திருந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக விளாங்குடி கிராம நிர்வாக அலுவலர் நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் ெரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பலியான நபர் பற்றி யாருக்கேனும் அடையாளம் தெரிந்தால் மதுரை இருப்பு பாதை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது.
    • ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நடேசன் நகர் பகுதியை சேர்ந்த பொன்னையன் மகன் ரமேஷ் (வயது40) . இவர் தனியார் வறுகடலை மில்லில் வேலை செய்து வந்தார்.

    நேற்று தூத்துக்குடியில் இருந்து வெள்ளகோவில், ராமலிங்கபுரத்திற்கு பொட்டுக்கடலை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அந்த லாரியில் இருந்து நேற்று காலையில் மூட்டையை இறக்கி கொண்டிருந்தார். அப்போது மூட்டையை இறக்கி குடோனுக்கு எடுத்து சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அதில் தலையின் பின் பகுதியில்காயம் ஏற்பட்டது. இதனை கண்டவர்கள் உடனே ரமேசை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்து பார்த்துவிட்டு அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் சப் இன்ஸ்பெக்டர் கே. ராஜு ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இறந்து போன ரமேசுக்கு மாதவி (32) என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

    • சேலத்தில் வெவ்வேறு விபத்துகளில் 4 பேர் பலியனார்.
    • இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் அயோத்தியா பட்டணம் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியை சேர்ந்தவர் ராஜாமணி இவரது மகன் சேகர் (வயது 38). இவர் நேற்று மோட்டார் சைக்கிளில் வீராணம் அருகே உள்ள சின்னனூர் மதுரைவீரன் கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த வீராணம் பள்ளி ப்பட்டி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் சசிகுமார் (வயது 34) மோட்டார்சைக்கிள் மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த சேகரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.சசிகுமாருக்கு காலில் முறிவு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சேலம் கொண்டலாம்பட்டி பெரியபுதூர் செட்டி காடு பகுதியை சேர்ந்தவர் அசோக்குமார் (32). இவர் பெரிய புதூர் ஏரியில் நேற்று மீன்பிடித்துக் கொண்டிருந்த போது தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.இதுகுறித்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம் பள்ளப்பட்டி சாமிநாதபுரம் மருதநாயகம் தெரு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் இவரது மகன் வினோத் குமார் ( 32). இவருக்கு திருமணமாகி உமாமகேஸ்வரி வயது 27 என்ற மனைவி உள்ளார்.வினோத்குமார் மது அதிகமாக குடித்து வந்துள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்த வினோத்குமார் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார்,உடனடியாக இவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மது அருந்திய நிலையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.
    • திருவட்டார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் வலியவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜாண்சன் (வயது 61), தொழிலாளி.

    இவர், தினமும் மது அருந்தி விட்டு உப்புக்குளம் பகுதியில் உள்ள கிணற்று அருகே அமர்ந்திருப்பது வழக்கம்.

    கடந்த 2 நாட்களாக இவர் திடீரென மாயமானார். உறவினர்கள் தேடியபோது கிணற்றுக்குள் ஜாண்சன் பிணமாக மிதப்பது தெரிய வந்தது.

    அவர், மது அருந்தியநிலையில் கிணற்றுக்குள் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

    திருவட்டார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சூலூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் கன்னடாவில் வேலை செய்து வருகிறார்.
    • கவிதா தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்து கிணற்றில் குதித்து அவரை மீட்டனர்.

    கோவை:

    கோவை சூலூர் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). இவர் கன்னடாவில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    சம்பவத்தன்று கவிதா தனது தாயாருடன் அருகில் உள்ள தோட்டத்துக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அைழத்து சென்றார். அப்போது ஒரு ஆடு மட்டும் கூட்டத்தில் இருந்து பிரிந்து சென்றது.

    அந்த ஆடு அங்கிருந்த கிணறு அருகே சென்றது. இதனை பார்த்த கவிதா ஆடு கிணற்றில் தவறி விழாமல் இருக்க ஓடி சென்று ஆட்டை பிடித்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென கவிதா தவறி கிணற்றில் விழுந்தார்.

    இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தாயார் சத்தம் போட்டார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் கவிதா தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்து கிணற்றில் குதித்து அவரை மீட்டனர்.

    பின்னர் அவரை சூலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இதுகுறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்ட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கவிதாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×