search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224519"

    • இடி தாக்கி பெண் இறந்தார்.
    • ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சண்முகசுந்தராபுரத்தை சேர்ந்தவர் சங்கீதா (வயது23). இவரது தாய் பொன்னுத்தாய் (50). இவர் பட்டாசு ஆலையில் வேலை பார்க்கிறார். நேற்று அந்தப்பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது வேலைக்கு சென்ற தனது தாயை அழைத்து வருவதற்காக சங்கீதா சென்றார். பின்னர் பொன்னுத்தாய் மற்றும் அவருடன் வேலை பார்த்து வருபவர்களும் சேர்ந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை இடி தாக்கியது. இதில் படுகாயமடைந்த பொன்னுத்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவருடன் வந்த சமுத்திரகனி(15), கிருஷ்ணவேணி(19), முத்துமாரி(37) மற்றும் சங்கீதா ஆகியோரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிள்ளையார் நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் போஸ்குமார் (43). இவர் மழை பெய்தபோது தனது வீட்டு மாட்டு தொழுவத்தில் வைத்து பால் கறந்து கொண்டிருந்தார். அப்போது இடி தாக்கியதில் பசு மாடு இறந்தது. காயமடைந்த போஸ்குமாரை அந்தப்பகுதி மக்கள் மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    • விருதுநகர் அருகே சுமை தூக்கும் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இது குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவை சேர்ந்தவர் உலகநாதன் (வயது55), சுமை தூக்கும் தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர்.

    கடந்த சில ஆண்டுகளாக உலகநாதன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சங்கரன்கோவில் முக்குரோடு பகுதியில் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து உலகநாதனின் மகன் முத்துவேல் ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • காப்பகத்தில் விக்டோரியா (வயது 13) என்ற சிறுமி, குழந்தை முதலே தங்கி இருந்து பள்ளியில் படித்து வந்தார்.
    • உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த 20-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    சேலம்:

    சேலம் கன்னங் குறிச்சியில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் விக்டோரியா (வயது 13) என்ற சிறுமி, குழந்தை முதலே தங்கி இருந்து பள்ளியில் படித்து வந்தார்.

    இந்த நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி, கடந்த 20-ந் தேதி சேலம் அரசு ஆஸ்பத்திரி சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார், வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சோழசிரா மணியில் இருந்து சத்திபாளை யம் செல்லும் சாலையில், சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் மயங்கி விழுந்தார்.

    அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி முதியவர் உயிரிழந்தார்.

    இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்துபோன முதியவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், எங்கிருந்து இந்த பகுதிக்கு வந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சரவணன் (வயது 48).இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
    • தூக்க கலக்கத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார்.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி ஒன்றியம் வி. சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 48).இவர் முண்டியம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.   இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பி இரவு உணவை அருந்தினார். பின்னர், இவர் சொந்தமாக கட்டிவரும் வீட்டில், கைப்பிடி இல்லாத மொட்டை மாடியில் படுத்து தூங்கி விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தூக்கம் கலைந்து எழுந்தவர், தூக்க கலக்கத்தில் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து விட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை  அளித்தும், சிகிச்சை பலனின்றி சரவணன் இறந்து விட்டார்.இது தொடர்பாக அவரது மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இறந்த சரவணனுக்கு நிரல்யா, தூசிகா என்ற 2 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டான பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
    • திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரையில் உட்கார்ந்தார்.

    சேலம்:

    சேலம் தாதம்பட்டி எஸ்.கே.டவுன்ஷிப் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 44). தொழிலாளியான இவர், இன்று காலை சேலம் ஏ.வி.ஆர் ரவுண்டான பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தரையில் உட்கார்ந்தார்.

    உடனே அந்த பகுதியினர் அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற ஆம்புலன்ஸ் குழுவினர், அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்ந்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, சிறிது நேரத்தில் சரவணன் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவரது உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லாரிக்கு அடியில் படுத்து தூங்கிய கிளீனர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.
    • லாரியை டிரைவர் நிறுத்தி இறங்கியபோது அவருக்கு நடந்த சம்பவத்தின் விபரீதம் புரிந்தது.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள பர்னிச்சர் கடைக்கு இன்று அதிகாலை சரக்குகளை ஏற்றிக்கொண்டு ராஜஸ்தா னில் இருந்து கண்டெய்னர் லாரி வந்தது. கடை 10 மணிக்கு திறக்கப்படும் என்பதால் லாரியை திருமங்கலம் நகரின் வெளியே சாலையோரத்தில் டிரைவர் ஜபார் (வயது 27) நிறுத்தி உள்ளார்.

    பின்னர் அவரும், கிளீன ரும் லாரிக்குள் தூங்கினர். இதனிடையே அங்கு வந்த 52 வயது மதிக்கத்தக்க ஒருவர் லாரியின் அடியில் தூங்கியதாக தெரிகிறது.

    காலை 10 மணிக்கு பிறகு எழுந்த டிரைவர் ஜபார் லாரியில் உள்ள சரக்குகளை கடைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் லாரியை இயக்கினார். அப்போது லாரியின் அடியில் படுத்திருந்த நபரின் தலையில் பின்னால் உள்ள டயர் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர் கூச்ச லிட்டனர். இதையடுத்து லாரியை டிரைவர் நிறுத்தி இறங்கியபோது அவருக்கு நடந்த சம்பவத்தின் விபரீதம் புரிந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருமங்கலம் டவுன் போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தி னர். அப்போது லாரியின் டயரில் சிக்கி இறந்த நபர் தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளியை சேர்ந்த பால்ராஜ் (52) என தெரிய வந்தது.

    லாரி கிளீனராக பணி யாற்றி வந்த இவர், அஜாக்கிரதையாக லாரியின் அடியில் தூங்கியதால் டயரில் சிக்கி இறந்ததும் தெரியவந்தது.

    • சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிக்கு நடுவானில் மாரடைப்பு
    • உயிரிழந்த நிலையில் திருச்சி விமான நிலையம் வந்த பயணி உடல்

    கேகே நகர்

    திருச்சி விமான நிலையத்திலிருந்து பல்வேறு வெளிநாடுகளான மலேசியா சிங்கப்பூர் மஸ்கட் ஓமன் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது அதில் குறிப்பாக சிங்கப்பூர் மலேசியா துபாய் சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக அளவில் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த விமானங்களை ஸ்கூட் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் இண்டிகோ மலிண்டோ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து ஸ்கூட் விமானம் திருச்சி வந்தது இந்த விமானம் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்த உடன் விமானத்தில் இருந்த பயணிகள் இறங்குவதற்கு முற்பட்டபோது இந்த விமானத்தில் பயணம் செய்த விருதுநகரை சேர்ந்த பரமசிவம் முனியசாமி 36 சேர்ந்தஎன்ற பயணி நான் இருக்கையில் இருந்து வெளியில் வராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த விமான பணியாளர்கள் உடனடியாக விமான நிலையத்திலிருந்து மருத்துவக் குழுவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தொடர்ந்து மருத்துவ குழுவினர் விமானத்திற்குள் சென்று அவரை சோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது இதனை தொடர்ந்து அவரது உடலை விமானத்தில் இருந்து இறக்கி அவரது மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • இன்னொரு குழந்தைக்கு தீவிர சிகிச்சை
    • குடிபோதையால் குடும்பமே சீரழிந்த அவலம்

    கன்னியாகுமரி:

    இரணியல் அருகே பரசேரி ராஜகோபால் தெருவை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 48) எலக்ட்ரீசியன். இவரது மனைவி அனிதா (35) இவர்களுக்கு தன்ஷிகா (11), அஸ்மிதா (9) என்ற மகள்கள் உள்ளனர். இருவரும் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.

    நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக் காததால் அனிதா அந்த பகுதியில் உள்ள பேக்கரியில் வேலைக்கு சென்று வந்தார். ஆனால் அனிதா வேலைக்கு செல்வது நாகராஜனுக்கு பிடிக்கவில்லை. நேற்று வீட்டிலிருந்த அனிதாவை வேலைக்கு செல்ல வேண் டாம் என்று நாகராஜன் கூறினார். ஆனால் அனிதா வேலைக்கு சென்று விட்டார்.

    இதையடுத்து நாகராஜன் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகள் கள் தன்ஷிகா, அஸ்மிதா இருவர் மீதும் தீ வைத்தார்.அவரும் உடலில் மண்எண் ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் நாகராஜன் சம்பவ இடத்திலேயே பலியானார். உடல் கருகிய 2 குழந்தைகளையும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலியான நாகராஜன் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நேற்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்பத்திரி யில் சிகிச்சை பெற்று வந்த மகள் தன்சிகா பரிதாபமாக இறந்தார்.

    அஸ்மிதாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரி வித்தனர். இருப்பினும் 24 மணி நேரமும் அவரை கண்காணித்து வருகிறார்கள். பலியான தன்ஷிகாவின் உடல் பிரேத பரிசோ தனைக்கு பிறகு இன்று உறவினரிடம் ஒப்படைக்கப் படுகிறது.

    தந்தையின் உடல் அடக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று மகளின் உடலையும் அடக்கம் செய்ய உறவினர்கள் ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து இரணி யல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் விசாரணை யில் தற்கொலை செய்து கொண்ட நாகராஜன் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். மேலும் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகரா றில் ஈடுபட்டதுடன் வீட்டில் இருந்த பொருட்களை விற்று குடிப்பதை வாடிக்கை யாக வைத்துள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே பிரச் சினை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் தான் அனிதா குடும்ப செலவு களை சமாளிக்க பக்கத்தில் உள்ள பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்றுள்ளார். சம்பவத்தன்று அனிதா வேலைக்கு சென்று இருந்த நேரத்தில் குழந்தைகள் மீது நாகராஜன் தீவைத்துவிட்டு தற்கொலை செய்துள்ளார்.

    குடிபோதையில் நிதானம் இழந்து நாகராஜன் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். மதுபோதையால் ஒரு குடும்பமே சீரழிந்து நிற்கதி யாகி உள்ளது அந்த பகுதி யில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பாம்பு கடித்த பதட்டத்தில் ஓடிய விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்
    • தவறி விழுந்ததில் தலையில் அடிபட்டது

    திருச்சி:

    முசிறி அருகே உள்ள மாவலிபட்டி மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 35). இவர் வழக்கம் போல் அங்குள்ள தனது விவசாய தோட்டத்திற்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது காலில் பாம்பு கடித்து விட்டது. அதிர்ச்சி அடைந்த அவர் மருத்துவமனைக்கு செல்லும் பதட்டத்தில் அங்கிருந்து வீட்டுக்கு ஓட்டம் பிடித்தார்.

    இதில் சற்று தூரத்தில் அவர் தடுமாறி கீழே விழுந்தார். இதில் கிருஷ்ண மூர்த்தியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சேர்க்க ப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்த போதிலும் கிருஷ்ணமூர்த்தி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.

    இதுகுறித்து ஜம்புராதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் தரப்பில் கூறும் போது, பாம்பு கடித்த உடன் வேகமாக ஓடிய காரணத்தால் விஷம் உடல் முழுவதும் பரவி விட்டது. இதற்கிடையே கீழே விழுந்ததில் மூளை வரை விஷம் ஏறி காப்பாற்ற முடியாமல் போய்விட்டதாக டாக்டர்கள் கூறியதாக தெரிவித்தனர்.

    • வாகனம் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்தது.
    • சாலைைய கடக்க முயன்றது

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை, ஆலங்குடி, வம்பன், திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் புள்ளிமான்கள் இரை தேடியும், தண்ணீர் குடிப்பதற்கும் தைல மரக்காட்டில் சுற்றி வருகிறது. இந்தநிலையில், ஆலங்குடி அருகே வம்பனில் சாலையை புள்ளிமான் ஒன்று கடக்க முயன்றது. அப்போது அந்த வழியாக ெசன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி புள்ளிமான் பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு தீபக் ரஜினி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன் ஆகியோர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு புதுக்கோட்டை மச்சுவாடிக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

    • ருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
    • அந்த வழியாகச் சென்ற பயணிகள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் எருமபட்டி ஒன்றியம் வடவத்தூர் எல்லை கல் பஸ் நிறுத்தத்தில் உள்ள பயணிகள் நிழல் கூடத்தில் நேற்று திருநங்கை ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அந்த வழியாகச் சென்ற பயணிகள் இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் தகவல் தெரிவித்தனர்.

    அவர் எருமப்பட்டி போலீசில் கொடுத்த புகார் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திருநங்கையின் பிணத்தை மீட்டு பிரேத பரி சோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    விசாரணையில் பிணமாக கிடந்த திருநங்கை சேந்தமங்கலத்தை அடுத்த பழைய பாளையத்தைச் சேர்ந்த ராஜூ மகன் ஸ்ரினிகா(வயது 26) என்பது தெரிய வந்தது. அவரது முழங்காலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் அவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டாரா? அல்லது உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தாரா? என்ற கோணத்தில் போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருநங்கை சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது.

    அவர் இறப்பதற்கு முன்பாக யாருடனும் செல்போனில் பேசினாரா? அவர் யாருடனாவது வாக னத்தில் சென்றாரா? அது தொடர்பான காட்சிகள் கண்காணிப்பு காமிராக்க ளில் பதிவாகி உள்ளதா? என போலீசார் தீவிர விசா ரணை நடத்தி வருகிறார்கள்.எருமபட்டி அருகே

    திருநங்கை சாவில் மர்மம் நீடிப்பு 

    ×