search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 224799"

    • ராதா கிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 10 நாட்களும் சமய மாநாடு நடக்கிறது
    • 1 மணிக்கு உச்சகால பூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் மாசி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமை திருவிழா நிறைவுபெறும் வகையில் 10 நாட்கள் விழா நடக்கிறது.

    இந்த வருடத் திருவிழா மார்ச் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 14-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவை முன்னிட்டு ராதா கிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 10 நாட்களும் சமய மாநாடு நடக்கிறது. ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் நடக்கும் 86-வது இந்து சமய மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியிடப்பட்டுள்ளது.

    அதில் காலை 4.30 மணிக்கு கோவிலில் திருநடை திறக்கப்பட்டு 5 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு உஷ பூஜை, 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு கருமன்கூடல் தொழிலதிபர் கல்யாண சுந்தரத்தின் இல்லத்தில் இருந்து அம்மனுக்கு சீர் கொண்டு வருதல், 1 மணிக்கு உச்சகால பூஜை, தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு தங்கத்தேர் உலா வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    மாநாட்டு பந்தலில் காலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு பஜனை, 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம், தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திறந்து வைத்து உரையாற்றுகிறார். தெலுங்கானா மாநில கவர்னர் தமிழிசை சவுந்தர் ராஜன் குத்துவிளக்கேற்றி உரையாற்றுகிறார். நாகர்கோவில் மாதா அமிர்தானந்தமயி மட மாவட்ட பொறுப்பாளர் நிலகண்டாம்ருத சைதன்யா, வெள்ளிமலை ஆஸ்ரமத் தலைவர் சைதன்யானந்த மகராஜ் சுவாமிகள் மற்றும் குமாரகோவில் சின்மயா மிஷன் சுவாமி நிஜானந்தா ஆகியோர் ஆசி வழங்குகின்றனர்.

    குமரி மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகர், பத்மனாபபுரம் தேவஸ்வம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்த், கோவில் ஸ்ரீகாரியம் செந்தில் குமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிந்துகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. வேலாயுதன், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் சிவகுமார், மண்டைக்காடு பேரூராட்சி தலைவர் ராணிஜெயந்தி ஆகியோர் வாழ்த்தி பேசுகின்றனர்.

    தமிழக இந்து அறநிலை யத்துறை மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி, தளவாய் சுந்தரம், இந்திய உணவு கழக இயக்குனர் தெய்வ பிரகாஷ், கேரள முன்னாள் அமைச்சர் சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரை யாற்றுகின்றனர்.

    6.30 மணிக்கு ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி பூஜையும், 9 ஆயிரம் திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பரத நாட்டியம், 2-ம் நாள் காலை 6 மணிக்கு லலிதா சகஸ்ர நாமம், விஷ்ணு சகஸ்ர நாமம், 10 மணிக்கு பெரிய புராண விளக்கவுரை, பிற்பகல் 3 மணிக்கு பஜனை, இரவு 8.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. 3-ம் நாள் காலை 8 மணிக்கு அகவல் பாராயணம், பிற்பகல் 3.30 மணிக்கு தேவார இன்னிசை, 4.30 மணிக்கு பாலப்பள்ளம் குருகுல மாணவர்களின் யோகா, மாலை 6 மணிக்கு குருகுல மாணவர்களின் யோகா, மாலை 6.30 மணிக்கு கர்நாடகா இன்னிசை, இரவு 9.30 மணிக்கு கதகளி நடக்கிறது. 4-ம் நாள் இரவு 8 மணிக்கு திரைப்பட பின்னணி பாடகர் மகதி குழுவினரின் கர்நாடகா மற்றும் பக்தி இன்னிசை, 11 மணிக்கு கதாகாலஷேபம் நடக்கிறது.

    5-ம் நாள் பிற்பகல் 2 மணிக்கு சிந்தனை சொல்ல ரங்கம், மாலை 4 மணிக்கு இசை சொற்பொழிவு, இரவு 10 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறுகிறது. 6-ம் நாள் காலை 9 மணிக்கு பஜனை போட்டி, மாலை 3.30 மணிக்கு திருமுறை பக்தி பண்ணிசை, 5.30 மணிக்கு ஆன்மீக உரை, இரவு 11 மணிக்கு ஈஷா யோகா நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு மேல் வலிய படுக்கை பூஜை, இரவு 8 மணிக்கு வீரமணி ராஜூ குழுவினரின் பக்தி இன்னிசை போன்றவை நடக்கிறது. 7-ம் நாள் மற்றும் 8-ம் நாள் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சொற்பொழிவு போட்டி, 7-ம் நாள் மாலை 4 மணிக்கு சங்க வருடாந்திர கூட்டம், 5 மணிக்கு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு மாதர் மாநாடு, 10.30 மணிக்கு புராண நாட்டிய நாடகம் நடைபெறுகிறது.

    8-ம் நாள் மாலை 4 மணிக்கு வாழும்கலை மைய சத்சங்கம், மாலை 5 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி, இரவு 9 மணிக்கு அய்யாவழி கலை நிகழ்ச்சி, 10.30க்கு பக்தி இன்னிசை நடக்கிறது. 9-ம் நாள் காலை 9 மணிக்கு சிவபுராண விளக்கவுரை, பிற்பகல் 3 மணிக்கு வில்லிசை, மாலை 6 மணிக்கு நடக்கும் சமய மாநாட்டில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை நலத்திட்ட உதவிகள் வழங்கி உரையாற்றுகிறார். இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளி பல்லக்கில் எழுந்தருளலும், பெரிய சக்கர தீவட்டி வீதி உலாவும் நடக்கிறது.

    10-ம் நாள் பிற்பகல் 2 மணிக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில்

    பிளஸ்-2 பொதுத்தேர்வில் 500 மதிப் பெண்ணும் அதற்கு மேலும், 10-ம் வகுப்பில் 400-ம் அதற்கு மேலும் மதிப்பெண் பெற்ற இந்து மாணவர்களையும், சொற்பொழிவு போட்டி யில் வெற்றி பெற்ற மாண வர்களையும் பாராட்டி பரிசு வழங்குதல், இரவு 9.30 மணிக்கு இன்னிசை நிகழ்ச்சி, 12 மணிக்கு ஒடுக்கு பூஜை பதார்த்தங்கள் திருக் கோவிலுக்கு கொண்டு வருதல், 12.30 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் நடக்கும் ஒடுக்கு பூஜையுடன் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெறுகிறது.

    ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை ஆதர வுடன் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வரு கின்றனர்.

    • அகரம்சீகூர் அருகே அபராதரட்சகர் கோவிலில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
    • நிகழ்ச்சியில் யாக பூஜையும், கணபதி பூஜையும், கடம் புறப்பாடும், அபிஷேகமும் நடைபெற்றது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்து சு.ஆடுதுறை கிராமத்தில் அபராதரட்சகர் கோவிலில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை அறங்காவலர் துறை பெரம்பலூர் மாவட்ட தலைவர் கலியபெருமாள் துவக்கி வைத்தார். இதையொட்டி விக்னேஷ்வரர் பூஜையும், கலச பூஜையும், யாகமும், கொடி படத்திற்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் யாக பூஜையும், கணபதி பூஜையும், கடம் புறப்பாடும், அபிஷேகமும் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கருணாகரன், கோவில் அர்ச்சகர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா கொடியேற்றம் நடந்தது.
    • வருகிற மார்ச் 5-ந் தேதி காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது

    அரியலூர் :

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலில் மாசி மக திருவிழா, 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. இதையொட்டி பிரகன்நாயகி அம்பாள் சமேத பிரகதீஸ்வரர் உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் பிரகாரத்தை சுற்றி வந்து, கொடிமரம் முன்பு எழுந்தருளினர்.

    இதையடுத்து கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, கொடி மரத்திற்கும், சாமி, அம்பாளுக்கும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பின்னர் கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற மார்ச் 5-ந் தேதி நடக்கிறது. அன்று காலை 10 மணிக்கு தேரோட்டம் தொடங்குகிறது. 6-ந் தேதி மாசி மகத்தையொட்டி மதியம் 12 மணியளவில் தீர்த்தவாரியும், மாலையில் சுவாமி வீதி உலாவும் நடக்கிறது.


    • கொடியேற்று விழா நிகழ்ச்சியின் போது சமா தான புறாக்கள் பறக்க விடப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருப்பலி, ஜெபமாலை புகழ் மாலை

    கன்னியாகுமரி :

    ஆரல்வாய்மொழி தேவச காயம் மவுண்டில் மறை சாட்சி புனித தேவசகாயம் ஆலயம், புனித வியாகுல அன்னை ஆலயம் ஆகிய இரட்டை திருத்தலங்கள் உள்ளன. இதில் புனித வியாகுல அன்னை ஆலய திரு விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணிக்கு திருப்பலியும், 11 மணிக்கு நவநாள் திருப்பலியும் நடை பெற்றது. இதில் கோட்டார் மறைவட்ட வட்டார முதல் வர் ஆனந்த் தலைமையில், கோட்டார் மறைமாவட்ட பள்ளிகளின் கண்காணிப் பாளர் பெனிட்டோ மறை யுரை ஆற்றினார். பிற்பகல் 3 மணிக்கு திருவிழா வர வேற்பு மேளம் முழங்கியது.

    அதனைத்தொடர்ந்து கொடி நேர்ச்சையும் ஜெபமா லையும், புகழ்மாலையும் நடைபெற்றது. தொடர்ந்து மேள தாளங்களுடன் ஊர் வலமாகவந்து கொடி யேற்றம் நடைபெற்றது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீ பன் தலை மையில் திருப்பலி நடந்தது. கொடியேற்ற நிகழ்ச் சியில் தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட், இணை பங்குதந்தை ரெக் வின், பங்கு பேரவை துணைத்தலைவர் சிலுவை தாசன், செயலாளர் தேவசகாய டேவிட், பொருளாளர் மற் றும் கவுன்சிலர் ஜெனட்சதீஷ் குமார், துணைச்செயலாளர் சகாய செலீன், கோட்டார் மறைமாவட்ட பேரவை உறுப்பினர் ஜேக்கப் மனோக ரன், முன்னாள் பங்கு பேரவை துணைத்தலைவர் கள் பயஸ் ராய், மிக்கேல், முன்னாள் கவுன்சிலர் சதீஷ் குமார், அருட் சகோதரிகள் மற்றும் பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    கொடியேற்று விழா நிகழ்ச்சியின் போது சமா தான புறாக்கள் பறக்க விடப்பட்டது. இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் திருப்பலி, ஜெபமாலை புகழ் மாலை, இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    8-ம் திருவிழாவன்று நற்க ருணை பவனி நடக்கிறது. 9-ம் திருவிழாவையொட்டி (சனிக்கிழமை) இரவு வாண வேடிக்கையும், அதனைத் தொடர்ந்து தேர்ப்பவனியும் நடக்கிறது. 10-ம் திருவிழாவன்று (ஞாயிற்றுக்கிழமை) திருப் பலி, மாலை தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வர லாற்று நாடகம் ஆகி யவை நடக்கிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடு களை தேவசகாயம் மவுண்ட் திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குதந்தை பிரைட் பங்கு மக்கள், பங்கு அருட் பணி பேரவையினர் மற்றும் அருட்சகோதரிகள் செய் துள்ளனர்.

    • கடந்த 7-ந்தேதி சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடக்கம்.
    • வானவேடிக்கையுடன் புறப்பட்டு முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்திற்கு வந்தடைந்தது.

    பாபநாசம்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் புனித அந்தோ ணியார் ஆலயம் உள்ளது.

    இந்த ஆலயத்தின் தேர் பவனி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தேர் பவனி திருவிழா கடந்த 7-ந்தேதி சிறப்பு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டு பாபநாசம் புனித செபஸ்தியார் திருத்தலத்தின் பங்குத்தந்தை கோஸ்மான் ஆரோக்கியராஜ் தலைமையில் தேர் பவனி திருவிழா சிறப்பு பாடல் திருப்பலியுடன் நடைபெற்றது.

    தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியார் வைக்கப்பட்டு ஆலயத்தில் இருந்து தேர் பவனி இன்னிசை நிகழ்ச்சி மற்றும் வானவேடிக்கையுடன் புறப்பட்டு பாபநாசம் முக்கிய வீதி வழியாக சென்று பின்னர் அதிகாலை ஆலயத்திற்கு வந்து அடைந்தது.

    நிகழ்ச்சியில் கபிஸ்தலம் பங்கு தந்தை அமல்ராஜ், புனித செபஸ்தியார் ஆலயத்தின் இணை பங்கு தந்தை தார்த்தீஸ், திருத்தொண்டர் வில்லியம் கவாஸ்கர், மற்றும் பாபநாசம் புனித அந்தோணியார் ஆலயத்தின் பங்குமக்களும், நாட்டாமையினரும், கிராமவாசிகளும், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அகத்தியருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம்.
    • இந்த ஆண்டு மாசிமக விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்திய முனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான காட்சி கொடுத்த தலம்.

    இது போல் பல்வேறு சிறப்புகளை உடைய இந்த திருக்கோயிலில் ஆண்டு தோறும் மாசிமக பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டு மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகர சுவாமி மகர தோர வாயிலில் கொடிமரத்து முன்பு எழுதருளி கொடியேற்றம் நடைபெற்றது.

    இதில் யாழ்பாணம் பரணி ஆதினம்செவ்வந்தி நாதா பண்டார சன்னதி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரி அறிவழகன், சலஸ்தார்கள் கையிலை மணி, வேதரத்தினம், கேடிலிஅப்பன் மற்றும் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கோவிலில் மார்ச் 3 ந்தேதிதேர்திருவிழா, மார்ச் 8ந் தேதி தெப்பதிருவிழா, பிப்-22 திருக்கதவு திறக்க அடைக்க பாடும் நிகழ்ச்சி என முக்கிய விழாக்கள் நடைபெற உள்ளது.

    • சிவராத்திரி அன்று சிவ குடத்தில் அழகு நிறுத்தும் காட்சி நடைபெறுகிறது.
    • பரிவார தெய்வங்களுக்கு தீபாராதனை காட்டி பூஜைகள் நடைபெற்றது.

    சிவகிரி:

    சிவகிரி அருகே விஸ்வநாதப்பேரியில் உலக மாதா அங்காள ஈஸ்வரி கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. சிவராத்திரி அன்று காலை சிவ குடத்தில் அழகு நிறுத்தும் காட்சி நடைபெறுகிறது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு நேற்று காலை கணபதி ஹோமம் நடத்தப்பட்டதை தொடர்ந்து அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் தீபாராதனை காட்டி பூஜைகள் நடைபெற்றது. கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    நிகழ்ச்சியில் சேனைத் தலைவர் சமூக பொது நிர்வாகிகள், துணைச் செயலாளர் பாலசுப்ர மணியன், பொருளாளர் ராமராஜ், சமூக நிர்வாகிகள், தலைவர் உலகநாதன், செயலாளர் இரணவீறு, பொருளாளர் குருசாமி, துணைத் தலைவர் உலகநாதன், துணைச் செயலாளர் முருகன், துணை பொருளாளர் அருணாசலம், இல்லத்துப் பிள்ளைமார் சமுதாயத் தலைவர் முருகதாசன், சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நேற்று இரவு விசேஷ பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து இன்று, நாளை, நாளை மறுநாள் (வெள்ளிக்கி ழமை) இரவுகளில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது. மகா சிவராத்திரி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்பாளின் சிவசக்தி குடம் சன்னதிக்கு கொண்டு வந்து பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு 8 மணிக்கு மேல் நான்கு கால பூஜையும், நள்ளிரவு 2 மணிக்கு மேல் பூ அலங்காரம், மின்மினி சப்பரத்தில் நடராஜர், சிவகாமி அம்மாள் உற்சவ மூர்த்தியாக அமர்ந்து வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான சிவ குடத்தில் அழகு நிறுத்தும் காட்சி அதிகாலை 4 மணிக்குள் நடைபெறுகிறது.

    ஞாயிற்றுக்கிழமை பல்வேறு பூஜைகள் நடைபெற்று ஸ்ரீநடராஜர், சிவகாமி அம்பாள் உற்சவ மூர்த்தியாக வீதிஉலா வந்து பாரிவேட்டை பூஜை நடைபெறுகிறது. திங்கள்கிழமை மஞ்சள் நீராடி, முளைப்பாரி எடுத்துச் செல்லப்படுகிறது. திருவிழாவில் நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, சென்னை, புதுச்சேரி உள்பட பல்வேறு மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

    • தைப்பூசவிழா கடந்த 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது.

    பட்டிஸ்வரம்:

    கும்பகோணம் அடுத்து ள்ள திருச்சேறை சாரநாதப் பெருமாள் கோவில் தைப்பூச திருத்தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது,

    மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 15 வது திவ்ய தேசமான

    இத்தலத்து மண் மிகவும் சத்து (சாரம்) நிறைந்தது. ஆதலால் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாள் சாரநாதப்பெருமாள் என அழைக்கப்படுகிறார்.தலத்தின் பெயரும் திருச்சாரம் என்று வழங்கப்பட்டது.

    காலப்போக்கில் மருவி திருச்சேறை ஆனது என்பது தலவரலாறாகும்.

    மேலும் கங்கை நதியை விட மேலான சிறப்படைய தவமிருந்த காவிரித் தாய்க்கு பெருமாள் மழலையாக எழுந்தருளி வரமருளிய தினம் இத் தைபூசத் தினமாகும்.

    இந்நிகழ்வை ஆண்டு தோறும்தைப்பூசப் பெரு விழாவாகதிருச்சேறை தலத்தில் அமையப்பெ ற்றுள்ள சாரநாதப் பெருமாள் கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெற்று வருவது கூடுதல் சிறப்பாகும்.

    இந்த ஆண்டுக்கான தைப்பூச விழாவானது கடந்த ஜன.28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது,

    இவ்விழாவின் ஒன்பதாம் திருநாளான இன்று அதிகாலை மங்கல இன்னிசை முழங்க, அருளும் சாரநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, மகாலட்சுமி, சாரநாயகி, நீலாதேவி என்ற ஐந்து தேவியருடன் (பஞ்ச லட்சுமிகளுடன்) திருத்தேரில் எழுந்தருள திருத்தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து தேர் வடம் பிடித்தார்கள்.

    இவ்விழாவினை தொடந்து இன்று இரவு 7- 30 மணிக்கு கோவில் திருக்குளமான சாரபுஷ்கரணியில் காவிரித்தாய்க்கு பெருமாள் காட்சியளிக்கும் நிகழ்வும், தீர்த்தவாரி விழாவும் நடைபெற உள்ளது இவ்விழா ஏற்பாடுகளை

    ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது.

    நாகப்பட்டினம் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் மாதா கோவிலின் உபகோவிலான பழமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் அமைந்துள்ளது. ஆலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி இன்று நடைபெற்றது. முன்னதாக ஆலயத்தில் வேளாங்கண்ணி பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி, கூட்டுப்பாடல் பிரார்த்தனை, உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    அதனை தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிகக்ப்பட்ட சப்பரத்தில் மைக்கல்ச ம்மனசு, புனித அந்தோனியார், செபஸ்தியார், எழுந்தருளிய தேரை புனித நீர் தெளிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

    அதனைதொடர்ந்து கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சியும், தப்பாட்டமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை முக்குலத்தோர் கத்தோலிக்க சமுதாயத்தினர் செய்திருந்தனர்.

    • நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
    • பிப்ரவரி 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா நடைபெறுகிறது.

    நெல்லை:

    நெல்லை நெல்லையப்பர்-காந்திமதியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    கொடியேற்றம்

    இதேபோல் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7.30 மணிக்கு கொடியேற்றத்து டன் தொடங்குகிறது.

    4-ம் நாளான 29-ந்தேதி நண்பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட திருவிழாவும், இரவு 8 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுடன் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறுகிறது.

    பிப்ரவரி 4-ந்தேதி தைப்பூச தீர்த்தவாரி திருவிழா வரலாற்று சிறப்புமிக்க கைலாசபுரத்தில் உள்ள தீர்த்தவாரி மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்காக சுவாமி நெல்லையப்பர், காந்திமதியம்மன், அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகள் 4-ந்தேதி நண்பகல் 12.30 மணிக்கு சுவாமி நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு, திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ்பாலம் வழியாக கைலாசபுரத்தை வந்தடைவர்.

    தாமிரபரணியில் தீர்த்தவாரி முடிந்து விஷேச தீபாராதனைக்கு பின்பு மாலை 6 மணிக்கு சுவாமிகள் மீண்டும் புறப்பட்டு எஸ்.என்.ஹைரோடு வழியாக பாரதியார் தெரு, தெற்கு புதுத்தெரு, ரத வீதி சுற்றி கோவிலுக்கு வந்தடைவார்.

    பிப்ரவரி 5-ந்தேதி சவுந்தர சபா மண்டபத்தில் பிருங்கி ரத முனி சிரேஷ்டர்களுக்கு திருநடனம் காட்டியருளும் சவுந்தர சபா நடராஜர் நடனக்காட்சி நடைபெறுகிறது. 6-ந்தேதி சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சந்திர புஷ்கரணி என்ற வெளித் தெப்பக்குளத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் இரவு 7 மணிக்கு தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர்சிவமணி மற்றும் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.

    • ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
    • கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறை மாவட்டம் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறை மாவட்டம் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார். முட்டைக்காடு பங்குதந்தை மனோகியம் சேவியர், ஆலன்விளை பங்குதந்தை பிரைட் சிம்ராஜ், மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குதந்தை செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்குஅருட்பணி பேரவை துணை தலைவர் எட்வின் சேவியர் செல்வின், செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், துணை செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் உள்பட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    • 466-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் உலக புகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. நாடு முழுவதுமுள்ள இஸ்லாமியர்களின் முக்கிய வழிபாட்டு தளமாக விளங்கும் நாகூர் தர்ஹாவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா நடப்பது வழக்கம்.

    அதன்படி 466 ஆம் ஆண்டு கந்தூரி விழா டிசம்பர் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக நாகூர் தர்காவின் மினாராக்கள் வண்ண விளக்குகளால் ஜொலிப்பதால் நாகூரே விழா கோலம் பூண்டுள்ளது.

    தர்காவில் 5 மினாராக்கள், அலங்கார வாசல், ஆண்டவர் கோபுரம், மண்டபம், உப்பு கிணறு, பக்தர்கள் அமரும் கூடம் உள்ளிட்ட இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது கண்டு பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.

    வண்ண மின் விளக்குகளால் ஜொலிக்கும் நாகூர் ஆண்டவர் தர்காவின் கழுகு பார்வை காட்சிகள் காண்பவர்களின் கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. வரும் 02 ஆம் தேதி நாகையிலிருந்து சந்தன கூடு ஊர்வலமும் 03ம் தேதி அதிகாலை பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்வும் நடைபெற உள்ளதால் நாகூர் தர்காவிற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    ×