search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேங்காய்"

    • வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 8,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு நீண்டகால பலன் தரும் தென்னை பயரிடப்பட்டுள்ளது.
    • வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில், 60 சதவீதத்திற்கு மேல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேஷம், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம், வாழப்பாடி, பெத்த நாயக்கன்பாளையம், பேளூர், ஏத்தாப்பூர், அயோத்தியாப்பட்டணம் பகுதி கிராமங்களில், மரத்தோப்புகள் அமைத்தும், கிணற்று மேடுகளிலும், வயல்களில் வரப்பு ஓரங்களிலும், 8,000 ஹெக்டேர் பரப்பளவிற்கு நீண்டகால பலன் தரும் தென்னை பயரிடப்பட்டுள்ளது.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் மொத்த உற்பத்தியில், 60 சதவீதத்திற்கு மேல், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்திரபிரதேஷம், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. எஞ்சிய 40 சதவீதம், உள்ளூர் விற்பனை, கொப்பரைத் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

    வாழப்பாடி பகுதியில் மட்டும் தேங்காய் உற்பத்தி, அறுவடை மற்றும் வர்த்தகத்தில், தென்னை விவசாயிகள், வியாபாரிகள், தரகர்கள், தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், கொப்பரை பதப்படுத்துவோர் உட்பட 50ஆயிரம் பேர் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாழப்பாடி பகுதியில் இருந்து பிற மாநிலங்களைச் சேர்ந்த வியாபாரிகளின் ஆர்டருக்கு ஏற்ப, பருமனுக்கு ஏற்ப ஒரு மூட்டையில் 80 முதல் 120 தேங்காய் கொண்ட 300 மூட்டைகளில் ஏறக்குறைய 30ஆயிரம் தேங்காய் வரை ஒரு லாரியில் ஏற்றி எண்ணிக்கை அடிப்படையில் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    தேங்காய் உற்பத்தி தருணத்தில் வாழப்பாடி பகுதியிலுள்ள தனியார் தேங்காய் மண்டிகளில் இருந்து நாளொன்றுக்கு ஏறக்குறைய 30 லாரிகளில் 9 லட்சம் தேங்காய்கள் வரை பிற மாநில வியாபாரிகளுக்கு அனுப்பப்படுகிறது ஒரு லாரி தேங்காய் விற்பனையில், லாரி வாடகை, தொழிலாளர் கூலி, வரி உள்பட ரூ.4 லட்சத்துக்கு வர்த்தகம் நடைபெறுகிறது.

    வாழப்பாடி பகுதியில் தேங்காய் அறுவடை தொடங்கிய நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவும் நெருங்கியுள்ளதால், தேங்காய் வர்த்தகம் சுறுசுறுப்பு அடைந்துள்ளது. வட மாநிலங்களில் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதால், விவசாயிகளிடம் தேங்காய்களை கொள்முதல் செய்து, தொழிலாளர்களை கொண்டு மட்டை உரித்து, மூட்டைகளில் தைத்து லாரியில் ஏற்றி அனுப்பும் பணியில் வாழப்பாடி பகுதி தேங்காய் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் ரூ.7,000 வரை விலை போன 1,000 தேங்காய்க்கு தற்போது ரூ. 10,000 வரை விலை கிடைத்து வருவதால், வாழப்பாடி பகுதியில் தென்னை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தேங்காய் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
    • கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

    மதுரை

    வாடிப்பட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் நடைபெற்றது. சில மாதமாக மட்டை தேங்காய் சந்தை விலை குறைவாக இருந்தது. தற்போது மறைமுக ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு தேங்காய் ரூ.10.65-க்கும் குறைந்தபட்சமாக ரூ.6.10-க்கும் விலைபோனது. கொப்பரை ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.74.50-க்கும் குறைந்த பட்சமாக ரூ.56.30- க்கும் விலைபோனது.

    மறைமுக ஏலத்தில் 20 வியாபாரிகள் போட்டி முறையில் பங்கேற்றனர். விவசாயிகள் தங்கள் விளைபொருளுக்கு நல்ல விலை கிடைத்தது என மகிழ்ச்சி தெரிவித்தனர்.

    மேலும் மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு விவசாயிகள் கொப்பரை எடுத்து வந்தததை மதுரை விற்ப னைக்குழு செயலாளர் மெர்சி ஜெயராணி ஆய்வு செய்தார். மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டம் செப்டம்பர் வரை மட்டுமே உள்ளதால், தென்னை விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து தங்களின் தேங்காய்களை கொப்ப ரையாக மதிப்பு கூட்டி முதல் தர கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொண்டார்.

    • சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.
    • தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் - ஓமலூர் பிரதான சாலையில் உள்ள அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் பருப்புக்கான பொது ஏலம் நடைபெற்றது.

    இதில் சுமார் 152 குவிண்டால் எடையுள்ள 303 மூட்டை தேங்காய் பருப்புகளை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முதல் தர தேங்காய் பருப்புகள் குறைந்தபட்ச விலையாக குவிண்டால் ஒன்று ரூ.7,556 முதல் ரூ.7,810 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் பருப்புகள் குவிண்டால் ஒன்று ரூ.6,175 முதல் ரூ.7,475 வரை விலை போனது. இதன்படி மொத்தம் ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்து 771-க்கு தேங்காய் பருப்புகள் விற்பனையானது.

    தற்போது வழக்கத்தைவிட கூடுதலான விலை கிடைத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • கொடுமுடி , எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் தேங்காய், கொப்பரை ஏலம் நடைபெற்றது.
    • மொத்தம் ரூ.87 லட்சத்து 90 ஆயிரத்துக்கு விற்பனையாகின.

    ஈரோடு:

    கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது.

    இதில் 10 ஆயிரத்து 267 எண்ணிக்கையிலான 3 ஆயிரத்து 711 கிலோ எடை கொண்ட தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

    இவை கிலோ ஒன்று க்கு குறைந்தபட்ச விலையாக ரூ.19.19 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.23.65 காசுகள், சராசரி விலையாக ரூ.22.70 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் 82 ஆயிரத்து 601 ரூபாய்க்கு விற்பனையாகின.

    இதனை யடுத்து நடந்த தேங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலத்தில் 835 மூட்டைகள் கொண்ட 40 ஆயிரத்து 340 கிலோ எடைகொண்ட தேங்காய் பருப்பு விற்பனையானது.

    விற்பனையான பருப்பில் முதல்தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட் சவிலையாக ரூ.77.95 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.78.98 காசுகள், சராசரி விலையாக ரூ.78.70 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60, அதிகபட்ச விலையாக ரூ.76.49 காசுகள், சராசரி விலையாக ரூ.74.39 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.30 லட்சத்து 19 ஆயிரத்து 114 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம் தேங்காய் மற்றும் தேங்காய்பருப்பு சேர்த்து ரூ.31 லட்சத்து 1 ஆயிரத்து 715-க்கு விற்பனையாகின.

    இதேபோல எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூ டத்தில்74 ஆயிரத்து 398 கிலோ எடையுள்ள தே ங்காய் பருப்பு விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    விற்பனையான பருப்பில் முதல் தர பருப்பு கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.78.85 காசு கள், அதிகபட்ச விலையாக ரூ.81, சராசரி விலையாக ரூ.79.99 காசுகள் என்ற விலைகளிலும்,

    2-ம் தர பருப்பு குறைந்த பட்ச விலையாக ரூ.60.15 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.74.66 காசுகள், சராசரி விலையாக ரூ.73.36 காசுகள் என்ற விலைகளில் மொத்தம் ரூ.56 லட்சத்து 88 ஆயிரத்து 779-க்கு விற்பனையானது.

    மொத்தம் கொடுமுடி , எழுமாத்தூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் ரூ.87 லட்சத்து 90 ஆயிரத்துக்கு தேங்காய், கொப்பரை விற்பனையாகின.

    • முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.
    • ரூ.2.92 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரை ஆகியவை விற்பனையாயின.

    வெள்ளகோவில்

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்து வருகின்றனா்.

    இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 4.9 டன் தேங்காய், 3.7 டன் கொப்பரை ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் தேங்காய் கிலோ ரூ.17.65 முதல் ரூ. 22.70 வரையிலும், கொப்பரை கிலோ ரூ.59.00 முதல் ரூ.75.35 வரைக்கும் விற்பனையானது.

    ஏலத்தில் மொத்தமாக ரூ.2.92 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரை ஆகியவை விற்பனையாயின.

    • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
    • அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்:

    மைதா- ஒரு கப்

    முட்டை- 1

    உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை

    ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

    பால்- அரை கப்

    தேங்காய் பால்- ஒரு கப்

    தேங்காய் துருவல் ஒரு கப்

    நெய்- தேவையான அளவு

    செய்முறை:-

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்து கலக்க வேண்டும். மாவுக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக அடித்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    இந்த மாவுக்கலவையை தோசை தவாவில் நெய் தடவி ஊற்றி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் துருவிய தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்து தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

    இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். கேரளா ஸ்டைலில் சுவையான சுருளப்பம் தயார். இதனுடன் சூடான லெமன் டீ, அல்லது புதினா டீ நல்ல காமினேஷனாக இருக்கும்.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். காலை உணவாக எடுத்துக்கொள்ள ஏற்றது. எளிய முறையில் தயார் செய்துகொள்ளலாம். அலுவலகம் செல்வோர் மிகவும் ஈஸியாக இந்த டிஸ்சை செய்யலாம். நேரமும் மிச்சமாகும்.

    • அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடந்தது.
    • ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 682-க்கு தேங்காய் மற்றும் எள் விற்பனையாகின.

    ஈரோடு:

    அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் தேங்காய்கள் விற்பனைக்கான ஏலம் நடந்தது.

    இதில் அவல்பூந்து றை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 35 ஆயிரத்து 532 எண்ணி க்கையிலான தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இவை கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ20.21 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ 24.60 காசு கள், சராசரி விலையாக 22.69 காசுகள் என்ற விலை களில் மொத்தம் 14 ஆயிர த்து 873 கிலோ எடையுள்ள தேங்காய்கள் ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 502-க்கு விற்பனையாகின.

    இதேபோல சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடைபெற்ற எள் விற்பனைக்கான ஏலத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 702 கிலோ எள் விற்பனை செய்யப்பட்டது.

    விற்பனையான எள்ளில் கருப்பு ரக எள் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ100.29 காசு கள், அதிகபட்ச விலையாக ரூ171.42 காசுகள், சராசரி விலையாக 135.85 காசுகள் என்ற விலைகளிலும்,

    சிவப்பு ரக எள் குறைந்த பட்ச விலையாக ரூ112.9 காசுகள், அதிகபட்ச விலையாக ரூ.183.49 காசுகள், சராசரி விலையாக ரூ135.85 காசுகள் என்ற விலைகளில் விற்ப னையாகின.

    மொத்தம் கரு ப்பு மற்றும் சிவப்புரக எள் ரூ.8 லட்சத்து 36 ஆயிரத்து 180-க்கு விற்பனையாகின.

    மொத்தம் 2 விற்பனை க்கூடங்களிலும் சேர்த்து ரூ.11 லட்சத்து 65 ஆயிரத்து 682-க்கு தேங்காய் மற்றும் எள் விற்பனையாகின.

    • பேருந்து நிலையம் முன்பு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.
    • விவசாயிகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    தேங்காய்க்கு உரிய விலை கேட்டு பல்லடம் அருகே உள்ள நாதகவுண்டம்பாளையத்தில் பேருந்து நிலையம் முன்பு சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க மாநிலத் தலைவர்சண்முகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாநிலகொள்கை பரப்பு செயலாளர் குண்டடம் ராசு, மாநில பொருளாளர் தங்கராஜ்,மாநில அவைத் தலைவர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில பிரச்சார குழுத் தலைவர் பூரண்டாம்பாளையம் மணி மற்றும் திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் மற்றும் திருப்பூர் ,கோயம்புத்தூர்,கரூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி, மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் 200 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் என்.எஸ்.பி.நந்தகுமார் நன்றி கூறினார்.19-ம் நாளாக தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏறுமுகத்தில் தேங்காய் விலை உள்ளது.
    • விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 8778981501 என்ற எண்ணிலும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளரை (பொ) 9442784684 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல் பட்டுவரும் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரைக்கான மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.

    நேற்று (8-ந்தேதி) நடை பெற்ற மறைமுக ஏலத்தில் ஒரு தேங்காய்க்கான அதிக பட்ச விலையாக ரூ.11.65ம் ஒரு கிலோ கொப்பரை தேங்காய்க்கான அதிகபட்ச விலையாக ரூ.77.25 வியாபாரிகளால் நிர்ணயம் செய்யப்பட்டது.

    மொத்தம் 13 விவசாயிக ளின் 40,938 எண்ணிக்கை யிலான தேங்காய்கள் ரூ.2,80,109-க்கும் 19 விவசாயிகளின் 2.40 டன் அளவிலான கொப்பரை ரூ.1,63,152-க்கும் விவசாயிகளால் மறைமுக ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த சில மாதங்களாக தேங்காயின் விலை வீழ்ச்சி அடைந்து ரூ.10-க்கும் குறைவாகவே விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தேங்காய் விலை ரூ.10-ஜ கடந்தது விவசாயி களுக்கு புதிய நம்பிக்கை யினை ஏற்படுத்தியுள்ளது.

    பண்டிகை மற்றும் திருவிழா காலங்கள் நெருங்கியுள்ளதால் தேங்காய் விலை எழுச்சி யடைய தொடங்கியுள்ளது. ஆகவே மதுரை மாவட்ட விவசாயிகள் வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்று வரும் தேங்காய் மற்றும் கொப்பரை மறைமுக ஏலத்தில் பங்கேற்று தங்கள் விளைபொருளுக்கு லாபா கரமான விலையினைப் பெற்றிடுமாறு வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மத்திய அரசின் விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையிலான கொப்பரைக் கொள்முதல் வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் கால உச்சவரம்பான செப்டம்பர் மாதம் (30-ந்தேதிவரை) மட்டுமே மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே கொப்பரை தேங்காயினை வாடிப்பட்டி மற்றும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூடங்களில் விற்பனை செய்து தரமான எவ்வித இடைத்தரகுமின்றி குறைந்தபட்ச ஆதரவு விலையினைப் பெற்றுப் பயனடையுமாறு மதுரை விற்பனைக்குழு செயலா ளர் மெர்சி ஜெயராணி தெரிவித்தார்.

    மேலும் விபரங்களுக்கு வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 8778981501 என்ற எண்ணிலும் மேலூர் ஒழுங்கு முறை விற்பனை கூட மேற்பார்வையாளரை (பொ) 9442784684 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    • தேங்காய் கிலோ ரூ.17 முதல் ரூ.23 வரைக்கும் விற்பனையானது.
    • ஏலத்துக்கு 5.7 டன் அளவுள்ள தேங்காய் மற்றும் கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

    வெள்ளகோவில்:

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தினசரி மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 5.7 டன் அளவுள்ள தேங்காய் மற்றும் கொப்பரைகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.

    இதில் கொப்பரை கிலோ ரூ.58 முதல் ரூ.78 வரைக்கும், தேங்காய் கிலோ ரூ.17 முதல் ரூ.23 வரைக்கும் விற்பனையானது.ஏலத்தில் மொத்தமாக ரூ.2.37 லட்சம் மதிப்பிலான தேங்காய், கொப்பரைகள் விற்பனையானதாக வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா். 

    • ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும்
    • பச்சை தேங்காய் கிலோ ரூ.50 க்கு கொள்முதல் செய்ய வேண்டும்

    பல்லடம்:

    பல்லடம் அருகே தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது.கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் சார்பில் நடைபெற்ற போராட்டத்திற்கு துரைசாமி தலைமை தாங்கினார். ஏர்முனை இளைஞர் அணி மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி , பொங்கலூர் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ஆர்.பி.பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநிலத் துணைத் தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட தலைவர் ஈஸ்வரன், மாநகர் மாவட்ட தலைவர் ரவி, மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியம், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேல், பல்லடம் ஒன்றிய தலைவர் வேலுமணி, பல்லடம் நகர தலைவர் மைனர் தங்கவேல், பொங்கலூர் ஒன்றிய துணைத் தலைவர் சண்முகம், காங்கேயம் ஒன்றிய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, ராசுமணி, உத்தமராசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின்போது பிரதான கோரிக்கையான தேங்காய்க்கு விலை வேண்டும், கொப்பரை தேங்காய் ஒன்றுக்கு ரூ.140 வழங்க வேண்டும், 35 ஆண்டு காலமாக தொடர்ந்து கொண்டிருக்கிற கள்ளுக்கான தடையை நீக்கி அனுமதி தர வேண்டும், பச்சை தேங்காய் கிலோ ரூ.50 க்கு கொள்முதல் செய்ய வேண்டும்,ரேஷன் கடைகளில் பாமாயிலை தடை செய்துவிட்டு தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    சத்துணவு கூடத்திலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது. உடனடியாக அரசு பரிசிலித்து இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஆகஸ்ட் 31-ம் தேதி வரை இந்த தொடர் போராட்டம் நடைபெறும். தொடர் போராட்டத்திற்கு பின்பு சென்னை சென்று தலைமைச் செயலகத்தின் முன்பு பெருந்திரளான விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடைபெறும். அங்கேயும் தேங்காய் உடைத்து அரசு கவனத்தை ஈர்க்கின்ற வகையில் இந்த போராட்டம் அமையும் என தெரிவித்தனர். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வாவிபாளையம் சுரேஷ்குமார் செய்திருந்தார்.

    • ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
    • அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே அவினாசிபாளையத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடந்த 5- ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் தொடர் காத்திருப்பு போராட்டம் 26 வது நாளாக நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும்விதமாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று விவசாயிகளின் இந்த காத்திருப்பு போராட்டம் நிறைவு பெறுகிறது.

    இது குறித்து அவர்கள் கூறியதாவது:- அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் அடுத்த கட்டமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றைய போராட்டத்திற்கு பேபி ராமசாமி தலைமை தாங்கினார். கவிதா முத்துக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி, நொய்யல் பாதுகாப்பு இயக்கத்தின் திருஞானசம்பந்தன், களஞ்சியம் பொன்னுசாமி, நஞ்ச ராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தேங்காய்க்கு விலை வேண்டும் என்று தேங்காய்க்கு பூஜை செய்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    ×