என் மலர்
நீங்கள் தேடியது "slug 225361"
- மாணவ, மாணவிகளின் தனித்திறன் கண்காட்சி நடந்தது.
- ஏற்பாடுகளை பள்ளி தலை மை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்த னர்.
திருமங்கலம்
திருமங்கலம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 50-வது பொன்விழா ஆண்டை முன்னிட்டு தமிழ் ஆங்கிலம், அறிவியல், கணிதம், சமூக அறிவியல் ஆகிய பாடங்களின் கீழ் மாணவ மாணவியர்களின் தனித்திறன் கண்காட்சி நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவி கள் பல்வேறு தனித்திறன் மாணவர்களின் கற்றல் திறன் இந்த கண்காட்சி யில் இடம் பெற்றி ருந்தது.
பள்ளியின் முதல்வர் ஜான்கென்னடி கண்காட்சி யை தொடங்கி வைத்தார். பள்ளி தாளாளர் பீட்டர் துரை, செயலாளர் ஆனந்த சேவியர் முன்னி லை வகித்தார்.
தனித்திறன் கண்காட்சியை பெற்றோர் கள், பொது மக்கள் அதிக ளவில் கண்டு களித்தனர். சிறப்பாக படங்களை வரைந்த, செயல்வடிவங் களை செய்திருந்த மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்க ப்பட்டன. ஏற்பாடுகளை பள்ளி தலை மை ஆசிரியை மற்றும் ஆசிரி யர்கள் செய்திருந்தனர்.
- குண்டடம் மரபு வழி உழவா் உற்பத்தியாளா் சங்கத்தலைவா் சசிகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
- மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்ட வேளாண்மை உழவா் நலத் துறை சாா்பில் பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக உணவு தினத்தை ஒட்டி மரபுசாா் ஒருங்கிணைப்பு கண்காட்சி மற்றும் பயிா் சாகுபடி தொழில்நுட்ப விளக்க கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டது.
இதில் சிறுதானியங்கள், நெல், மக்காச்சோளம், பயறு வகைகளின் பாரம்பரிய ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டது. வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை சாா்பில் உழவா் உற்பத்தியாளா் குழுவால் உற்பத்தி செய்யப்பட்ட நீரா பானம், மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சின்னசாமி, வேளாண்மை துணை இயக்குநா் சுருளியப்பன், பொங்கலூர் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் இளையராஜன், குண்டடம் மரபு வழி உழவா் உற்பத்தியாளா் சங்கத்தலைவா் சசிகுமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.
- மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்
- ஆயுர்வேத மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று சிகிச்சை
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மூலிகை கண்காட்சி இன்று தொடங்கியது. தொடர்ந்து வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. இந்த கண்காட்சியை மேயர் மகேஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி முதல்வர் கிளாரன்ஸ் டெவி, மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர், கவுன்சிலர்கள் அனந்த லட்சுமி, சொர்ணதாய், மாநகர செயலாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் ஜீவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்ட னர். இதை தொடர்ந்து மேயர் மகேஷ் மூலிகை கண்காட்சியை பார்வையிட்டார்.
மேலும் பள்ளி மாணவ- மாணவிகளும் கண்காட்சி யை பார்வையிட்டனர்.முன்னதாக நாகர்கோவில் மாநகராட்சி நான்காவது வார்டுக்குட்பட்ட பெருவிளை பகுதியில் ஆயுர்வேத மருத்துவ முகாம் நடந்தது. அந்த முகாமை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். ஆயுர்வேத மருத்துவக் குழுவினர் வீடு வீடாக சென்று சிகிச்சை மேற்கொண்டனர்.
- பராம்பரிய ரகங்களில் கண்டறிந்து பயன்படுத்தி கொள்ளவும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
- விவசாய பயனீட்டாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கல்லிடைக்குறிச்சி:
அம்பாசமுத்திரம் நெல் ஆராய்ச்சி நிலையத்தில் உலக உணவு தினத்தை முன்னிட்டு பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதிலும், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் பணிகளிலும் வேளாண்மை உழவர் நலத்துறை மூலமாக உயர்தர உள்ளூர் ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்துவதற்கும் வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அந்தந்த பகுதிக்கேற்றவாறு சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில் தேவையான அடிப்படை மரபணுக்களை பராம்பரிய ரகங்களில் கண்டறிந்து பயன்படுத்தி கொள்ளவும் சிறப்பு கண்காட்சி நடைபெற்றது.
வேளாண்மை துணை இயக்குநர் சுந்தர் டேனியல் பாலஸ் வரவேற்றார். நெல்லை வேளாண்மை இணை இயக்குநர்(பொறுப்பு) அசோக்குமார் கருத்துக்காட்சி, விழாவின் நோக்கம் குறித்து விளக்கினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ செல்லையா தலைமை உரை ஆற்றினார், அம்பை யூனியன் சேர்மன் பரணி சேகர், அம்பை நகர் மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன் ஆகியோர் வாழ்த்த்தி பேசினர். விழாவில் பாரம்பரிய நெல் விதைகள், விவசாயிகளின் காய்கறிகள், கிழங்குகள், பழங்கள், இயற்கை உணவு வகைகள், தின்பண்டங்கள் கண்காட்சியில் இடம் பெற்று இருந்தது. இதில் விவசாய பயனீட்டாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய பல்வேறு ஆலோசனைகளை வேளாண்மை துறை அதிகாரிகள் வழங்கினார்கள். விழாவில் அயன் சிங்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துகிருஷ்ணன், விவசாய சங்க நிர்வாகிகள் சொரிமுத்து, வக்கீல் பாபநாசம், இயற்கை விவசாயி லட்சுமி தேவி, சுற்று வட்டார விவசாயிகள் சிவந்திபுரம் ஸ்டான்லி, பாப்பான்குளம் ஆறுமுகம், கல்லிடை சுப்பிரமணியன், ராமையா, முக்கூடல் முருகன் ஆகியோர் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அம்பை வேளாண்மை துறை உதவி இயக்குநர் உமா மகேஸ்வரி நன்றி கூறினார்.
- விவசாயிகளின் நலன்கருதி, உள்ளூர் மற்றும் பாரம்பரிய விதைகள் விற்பனை அரங்கு அமைக்கப்பட உள்ளது.
- சான்றளிப்பு துறை அலுவலர், வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பங்கேற்பு நிகழ்ச்சி நடக்கும்.
திருப்பூர்:
மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின்படி பொங்கலூர் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில், உலக உணவு தின மரபுசார் ஒருங்கிணைப்பு கண்காட்சி நாளை 17ந் தேதி நடக்கிறது.
உள்ளூர் மற்றும் பாரம்பரிய ரகங்கள், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகள் கலந்துரையாடல், வேளாண்துறை, தோட்டக்கலை, சான்றளிப்பு துறை அலுவலர், வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பங்கேற்பு நிகழ்ச்சி நடக்கும்.பாரம்பரிய மற்றும் உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்படும். பாரம்பரிய உணவுகள் கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கும்.விவசாயிகளின் நலன்கருதி, உள்ளூர் மற்றும் பாரம்பரிய விதைகள் விற்பனை அரங்கு அமைக்கப்பட உள்ளது.
திருப்பூர் மாவட்ட விவசாயிகள், கண்காட்சியை பார்வையிட்டு பயன்பெறலாம் என வேளாண்துறையும், மாவட்ட நிர்வாகமும் அழைப்புவிடுத்துள்ளன.
- சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான கண்காட்சி நடந்தது.
- மாணவர்களின் வளர்ச்சிக்கு வகுப்பறை கல்வியுடன் ஆய்வு சார்ந்த கல்வியும் தேவை என்றும் கூறினார்.
சிவகாசி
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் உயிர்த்தொழில்நுட்பவியல் ஆகிய துறைகள் இணைந்து ''காளீஸ் எக்ஸ்போ'' என்ற தலைப்பில் 3 நாள் கண்காட்சியை நடத்துகிறது.
கல்லூரி கலையரங்கில் நடைெபறும் இந்த கண்காட்சி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலர்
அ.பா. செல்வராசன் தலைமை தாங்கினார்.
முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, சிவகாசி உதவி கலெக்டர் பிருதிவிராஜ், விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஆகியோர் பேசினர். விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தொடக்கவுரையாற்றினார்.
அவர் பேசுகையில், கல்வி சார்ந்த கண்காட்சி மூலம் மாணவர்கள் அடையும் பலன்கள் மற்றும் இது போன்ற கண்காட்சிகள் மாணவர்கள் முன்னேற்றத்திற்கான அடிகல்லாக அமையும் என்றார். மாணவர்களின் வளர்ச்சிக்கு வகுப்பறை கல்வியுடன் ஆய்வு சார்ந்த கல்வியும் தேவை என்றும் கூறினார்.
மாணவர்கள் அறிவியல், கணிதம் மற்றும் கலை ஆகிய அனைத்து துறைகளையும் பொருத்தி கற்க வேண்டும். மாணவர்கள் தவறில் இருந்து கற்றல், கேள்வி ஞானம் மூலம் தம்மை செம்மைபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கலெக்டர் கூறினார்.
துணை முதல்வர் பாலமுருகன் வரவேற்றார். துணை முதல்வர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.
- உழவர் நலத்துறை சார்பில் உள்ளூர் பயிர் ரகங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.
- உணவு மேளா, விவசாயிகள் பயிற்சி மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற உள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்ளூர் ரகம் மற்றும் பதிக்கேற்ற சிறந்த ரகங்களை உருவாக்கும் நோக்கத்தில் மாவட்டந்தோறும் ஆண்டுக்கு 3 முறை உள்ளூர் பயிர் ரகங்களுக்கான கண்காட்சியினை விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடத்திட தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பையூரில் உள்ள தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் வருகிற 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் உள்ளூர் பயிர் ரகங்களுக்கான கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியில் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் பகுதி பாரம்பரிய உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்தலாம்.
இதில் வேளாண்மை பல்கலைக் கழகத்தில் வெளியிடப்பட்ட பயிர் ரகங்களும் காட்சிப்படுத்தப்படும். மேலும், இந்த கண்காட்சியில் விவசாயி கள்-விஞ்ஞானிகள் கலந்துரையாடல், பாரம்பரிய உணவு மேளா, விவசாயிகள் பயிற்சி மற்றும் செயல் விளக்கங்கள் நடைபெற உள்ளது.
எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட விவசாய பெருமக்கள் தங்களிடம் உள்ள உள்ளூர் ரகங்களை காட்சிப்படுத்தலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது
- பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலுர் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியம், தொண்டப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலையூரில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களை விளக்கும் வகையில் புகைப்பட கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் தமிழக முதல்-அமைச்சர், அமைச்சர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் அமைச்சர், கலெக்டர், எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கிய புகைப்படங்கள் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன. இந்த புகைப்படக் கண்காட்சி யினை 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். அவர்களுக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது."
- கண்காட்சியில் 250 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
- கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது.
திருப்பூர் :
திருப்பூரை சேர்ந்த ஸ்மைலி ட்ரிப்ஸ் அண்ட் ஈவண்ட்ஸ் நிறுவனம் சார்பில் 'ஸ்மைலி எக்ஸ்போ' என்ற பெயரில் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கண்காட்சி திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள லட்சுமி திருமண மண்டபத்தில் தொடங்கியது.
இந்த கண்காட்சியை கே.எம்.நிட் வேர் நிர்வாக இயக்குனர் கே.எம்.சுப்பிரமணியன், துணை மேயர் பாலசுப்பிரமணியம், ஸ்ரீசக்தி சினிமாஸ் நிறுவனர் சுப்பிரமணியம், கிட்ஸ் கிளப் நிறுவன தலைவர் மோகன் கார்த்திக் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
எம்.எஸ்.ஆர். ஆயில் மில்ஸ் நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், எம்.எஸ்.ஆர்.கிளினிக் டாக்டர் ராஜா, விருக்ஷம் பிரகனன்சி கேர் நிறுவனர் அனுபமா குமார் விஜயானந்த், லக்கி கேர்ள் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் விஜி, ஹே தயா ஆர்ட் கேலரி நிறுவனர் ரமா ராஜேஷ், ஸ்டைல் ஓஷன் மற்றும் லைம்லைட் நிறுவனர் வைஷ்ணவி, குயினோவா நிறுவனர் சாமு ஜெயஸ்ரீ, லைம்லைட் நிறுவனர்கள் குஷ்பு, ரேவதி, தீபா ஆகியோர் குத்துவிளக்கேற்றினார்கள். திறப்பு விழாவுக்கு வந்தவர்களை ஸ்மைலி ஈவண்ட்ஸ் நிர்வாக இயக்குனர் அருண் வரவேற்றார்.
கண்காட்சியில் பர்னிச்சர்கள், எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள், நகைகள், டெக்ஸ்டைல் பொருட்கள், அலங்கார பொருட்கள், உணவு தயாரிப்பு மூலப்பொருட்கள், அலுவலகங்களுக்கு தேவையான பொருட்கள், விளையாட்டு பொருட்கள், மின்சாதன பொருட்கள், கட்டிட பொருட்கள், மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் உள்ளடக்கிய 250 அரங்குகள் இடம்பெற்றுள்ளன.
சிறுவர்களுக்கான விளையாட்டு கூடங்கள், குடும்பத்தோடு உண்டு மகிழ உணவு கூடங்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு வாடிக்கையாளர்களை குதுகலப்படுத்த விஜய் டி.வி. புகழ் அறந்தாங்கி நிஷா இன்றும் (வெள்ளிக்கிழமை), ராமர் நாளையும் (சனிக்கிழமை) கலந்து கொள்கிறார்கள். கண்காட்சி நேரத்தில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கு ஒருமுறையும், திறமையான வாடிக்கையாளரை தேர்வு செய்து எல்.ஈ.டி. டி.வி. இலவச பரிசாக வழங்கப்படுகிறது. மாலை நேரங்களில் இசை நிகழ்ச்சிகள், பலகுரல், நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தினமும் சிறப்பு விருந்தினர்கள் பங்கேற்கிறார்கள். ரோட்டரி உறுப்பினர்கள், பி.என்.ஐ. அமைப்பு உறுப்பினர்கள், ஜெ.சி.ஐ. உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த கண்காட்சி வருகிற 18-ந் தேதி வரை நடக்கிறது.
- அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
- கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.
வாழப்பாடி:
பேளூர் அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வட்டார ஊட்டச்சத்து திட்ட மேற்பாற்வையாளர்கள் பத்மாவதி, பத்மா, திட்ட ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகாதேவி ஆகியோர், ஊட்டச்சத்து கண்காட்சிக்கான ஏற்பாடுகளை செய்து முன்னிலை வகித்தனர்.
டாக்டர் கார்த்திகா, சமுதாய சுகாதார செவிலியர் ராணி, மணிமாலா ஆகியோர் ஊட்டச்சத்து முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கருத்துரை வழங்கினர்.
கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.
அங்கன்வாடி பணியாளர்களின் ஊட்டச்சத்து கண்காட்சி, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பயனுள்ள வகையில் அமைந்ததாக தெரிவித்தனர். முடிவில், வட்டார சுகாதார மேற்பாற்வையாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
- ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.
- அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் ரத்த சோகை விழிப்புணர்வு பிரசார வாகனம் தொடக்க விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கலந்து கொண்டு ரத்த சோகை விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து அவர் தேசிய ஊட்டச்சத்து மாத திருவிழாவை முன்னிட்டு "ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்" என்ற கருப்பொருளை மையமாக கொண்ட கையெழுத்து இயக்கத்தினை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். மேலும் அவர் பெண்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய சத்தான உணவு வகைகள் குறித்து அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து மிக்க பொருட்கள் அடங்கிய கண்காட்சியினை பார்வையிட்டார்.
அப்போது கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா கூறுகையில், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு ரத்த சோகை விழிப்புணர்வு பிரசார வாகனம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கும் குழந்தை வளர்ச்சி திட்ட பணியாளர்கள், களப்பணியாளர்கள் நேரில் சென்று கணக்கெடுத்து ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பெண்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கி ஊட்டச்சத்து மிக்க பொருட்களை வழங்குவார்கள். ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை உள்ளிட்ட பல்வேறு சத்து குறைபாடுகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தெருக்கூத்து, பொம்மலாட்டம் போன்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார். இதில் மாவட்ட திட்ட அலுவலர் சுகந்தி, ஒருங்கிணைப்பாளர் சவுந்தரவள்ளி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- சிவகங்கையில் எரிவாயு பயன்பாடு விழிப்புணர்வு கண்காட்சியை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன்-கலெக்டர் பங்கேற்றார்.
- சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13 எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள் உள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை நகராட்சிக்கு உட்பட்ட கலைஞர் மாளிகையில் எல்.பி.ஜி. வினியோகிஸ்தர்கள் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் கண்காட்சி நடந்தது. அதனை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தொடங்கி வைத்து கூறியதாவது:-
தமிழகத்தை பொறுத்த வரையில் எரிவாயு பயன்பாடு என்பது கடந்த 2006-ம் ஆண்டு, 2011-ம் ஆண்டுகளில் கருணாநிதியின் ஆட்சி காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டமாகும்.எரிவாயு பயன்பாடு மற்றும் அதனை எளிதில் பெறு வதற்கான முறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டும் இதுபோன்று விழிப்புணர்வு கண்காட்சிகள் நடத்த ப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 13 எரிவாயு நிறுவன விநியோகஸ்தர்கள் உள்ளனர். ஒவ்வொரு வினியோகஸ்தர்களும் தங்களது பகுதிகளில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும். இதனை பொதுமக்களாகிய வாடிக்கையாளர்கள் இதன் முக்கியத்துவத்தினை உணர்ந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் எரிவாயு நிறுவனங்களின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியினை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பார்வையிட்டு, வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு பயன்படுத்தப்படும் முறைகள் குறித்து எடுத்துரை ப்பதை கேட்டறிந்து, வாடிக்கையாளர்களுக்கு புதிய எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்புக்களை வழங்கினார்.
இதில் சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், மண்டல துணை பொது மேலாளர் ரவிக்குமார், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்றத்தலைவர் மணிமுத்து, சிவகங்கை நகர்மன்ற உறுப்பினர்கள் அயுப்கான், ராஜேஸ்வரி ராமதாஸ், கீதாகார்த்திகேயன், சண்முகராஜன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் விற்பனை மேலாளர் மிருதுபாஷினி, சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.