search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225386"

    • மத்திய மந்திரியிடம் விஜய்வசந்த் எம்.பி. கோரிக்கை
    • ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும்‌

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளு மன்ற உறுப்பினர் விஜய் வசந்த், டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தார்.

    அதில், காரோடு முதல் கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலை பணிகள் நடை பெற்று வந்த நிலையில், கல், மண் தட்டுப்பாடு காரணமாக பணிகள் நிறுத்தப்பட்டன. பணி முடங்கிய காரணத் தால் ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டது.

    பின்னர் மாநில அரசு அண்டை மாவட்டத்நிதின் கட்கரியை சந்தித்து ஒரு மனு அளித்தில் இருந்து மண் எடுப்பதற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து மீண்டும் இந்த பணிக்கான ஒப்பந்தத்திற்கு மறு டெண்டர் கடந்த டிசம்பர் மாதம் முதல் வாரம் விடப்பட்டது.

    இந்த டெண்டர் வருகிற 19-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்நாள் வரை டெண்டர் முடிவு செய்யப் படாமல் உள்ளது. பல்வேறு காரணங்களால் முடங்கி கிடக்கும் 4 வழிச் சாலை பணிகள் மீண்டும் தொடங்க தாமதமானால் இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது.

    எனவே இதை கருத்தில் கொண்டு தாங்கள் அலுவலகம் வாயிலாக நெடுஞ்சாலை துறையிடம் உடனடியாக 4 வழி சாலை பணிக்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என தெரிவித்து உள்ளார்.

    • ரூ.20 கோடி செலவில் வணிக வளாகம் கட்டுமான பணி
    • நிதி காலாவதியாகும் முன்பாக திட்டத்தை செயல்படுத்த முடியுமா? என்பது சந்தேகம்.

    திருச்சி,

    திருச்சி புத்தூரில் முற்றி–லும் குளிரூட்டப்பட்ட வணிக வளாகம் கட்டும் பணி நடந்து வருகிறது. மாநக–ராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.20 கோடி செலவில் கடந்த 2019-ல் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன. இருப்பி–னும் முக்கிய பணிகள் 2020 அக்டோபரில்தான் தொடங் கப்பட்டது.இந்த கட்டுமான பணி–களை கடந்த டிசம்பரில் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோ–னா பெருந்தொற்று காலத் தில் இரும்புக்கம்பி உள் ளிட்ட மூலப்பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடி ஆகியவை தாம–தத்திற்கு காரணமாகக் கூறப்பட்டது. தற்போது வரை 70 சதவீத கட்டுமானப் பணிகள் மட்டுமே நிறைவ–டைந்துள்ளனஇது தொடர்பாக மாநக–ராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, மொத்த–முள்ள 3 தளங்களில் முதல் தளத்தில் மட்டுமே கட்டுமானப் பணிகள் நிறை–வடைந்துள்ளன. மேலும் இரண்டு தளங்களின் கட்டு–மானப்பணிகள் நடை–பெற்று வருகின்றன. மீத–முள்ள பணிகளின் முன் னேற்றத்தை நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.மேலும் இரண்டு மாதங்க–ளுக்குள் நிலுவையில் உள்ள பணிகளை விரை–வுப்படுத்துமாறு ஒப்பந்த–தாரர்களை கேட்டுக் கொண் டுள்ளோம் என்றார். 10,250 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டதாக வடிவமைக் கப்பட்டுள்ள இந்த வணிக வளாகத்தில், 106 கார்கள் மற்றும் 162 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், தரைத்தளத்துடன் 3 தளங்கள் அமைக்கப்பட உள்ளது.இந்த வளாகம் முழுமை–யாக குளிரூட்டப்பட்டதாக இருக்கும். மேலும் தரை தளம் மற்றும் முதல் தளத்தில் சில்லறை விற்பனை நிலை–யங்கள் இருக்கும். 2-வது மற்றும் 3-வது தளங்க–ளில அலுவலக இடம் மற்றும் பல்நோக்கு மாநாட்டு அரங்கங்கள் இடம்பெறு–கிறது. தற்போதைய நிலை–யில் வருகிற மார்ச் மாதத் திற்குள் கட்டுமான பணி–களை பூர்த்தி செய்ய மாநக–ராட்சி நிர்வாகம் முயற்சி மேற்கொண்டுள்ளது.இருப்பினும் நிதி காலா–வதியாகும் முன்பாக திட் டத்தை செயல்ப–டுத்த முடி–யுமா? என்பது குறித்து சந் தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

    • பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் கீழ் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன.
    • 5 ஆண்டுகள் ஆகியும் மின் அலுவலகம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.


    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூரை அடுத்த திருவள்ளுவர் நகர் பகுதியில் மின்வாரிய அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை அமைக்க வில்லை. இதனால் மின்கட்டணம் செலுத்த அந்தப்பகுதி மக்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொல்லிகாளிபாளையம் செல்ல வேண்டியுள்ளதாக தெரிவித்தனர்.

    இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் கீழ் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இதனை நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்தின் மேற்கு பகுதிகளான காளிநாதம்பாளையம். அக்கணம்பாளையம், பொன்நகர், குப்புச்சிபாளையம், அல்லாளபுரம், பாரியூர்அம்மன் நகர், அவரப்பாளையம், நொச்சிப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் உள்ள சுமார் 2ஆயிரத்துக்கு மேற்பட்ட மின்இணைப்புகளை பிரித்து திருவள்ளுவர் நகர் பகுதியில் மின் அலுவலகம் அமைக்க திட்டமிடப்பட்டது.

    மின்கட்டணம் செலுத்த 5 கிலோ மீட்டர் தூரம் செல்வதால் நொச்சிபாளையம் திருவள்ளூவர் நகரில் மின்வாரிய அலுவலகம் அமைப்பது என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். ஆனால் 5 ஆண்டுகள் ஆகியும் மின் அலுவலகம் அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட மின் ஊழியர்கள் அனைவரும் பொல்லிகாளிபாளையம் மின் அலுவலகத்திலேயே பணிகளை தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சோழவந்தான் அருகே சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட சர்வே பணி தொடங்கப்பட்டது.
    • சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட அளவீடு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் அருகே வைகை ஆற்றுக்கு மேற்கு பகுதியில் செல்லும் மேலக்கால் பேரணை சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முள்ளிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மார்நாட்டான் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கை அடுத்து இது தொடர்பாக முள்ளிப்பள்ளம் கிராமத்தில் வருவாய்துறையினர் முதல் கட்ட சர்வே பணி முடித்து அறிக்கையை கோர்ட்டில் சமர்பித்தனர். இதைத்தொடர்ந்து வாடிப்பட்டி தாசில்தார் வீரபத்திரன் ஆலோசனையின் பேரில் வருவாய் ஆய்வாளர் சதீஷ் முன்னிலையில் பிர்கா சர்வேயர் சந்திரா, கிராம நிர்வாக அலுவலர் முபாரக் ஆகியோர் சித்தாயிபுரம் கோவில், குருவித்துறை, அய்யப்பநாயக்கன்பட்டி, மன்னாடிமங்கலம் பகுதிகளில் உள்ள சாலை ஆக்கிரமிப்பு குறித்து 2-ம் கட்ட அளவீடு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    • 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்–தடத் திட்டத்தின் கீழ், ஓமலூரில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
    • இப்பணிகளை சென்னை –- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமைப் பொறியாளர் செல்வன், திருச்செங்கோடு புறவழிச் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    சங்ககிரி:

    சங்ககிரி அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில், ஆசிய வளர்ச்சி வங்கியின் 50 சதவீத நிதி உதவியுடன் சென்னை- கன்னியாகுமரி தொழிற்–தடத் திட்டத்தின் கீழ், ஓமலூரில் இருந்து சங்ககிரி, திருச்செங்கோடு, பரமத்தி வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.

    இப்பணிகளை சென்னை –- கன்னியாகுமரி தொழிற்தடத் திட்டம் தலைமைப் பொறியாளர் செல்வன், திருச்செங்கோடு புறவழிச் சாலையின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

    ஆய்வின்போது கோட்டப் பொறியாளர் சசிகுமார் மற்றும் உதவி கோட்டப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள், சாலைப்பணியின் ஒப்பந்த–தாரர்கள், மேற்பார்வை ஆலோசகர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரெயில்வே மேம்பாலத்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பஸ் நிலைய புதுப்பிக்கும் பணியை தொடங்கக்கூடாது.
    • மீறி செயல்படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மக்களை திரட்டி போராடும்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் மாரியப்பன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் நகராட்சி பழைய பஸ்நிலையத்தில் மேம்படுத்தும் பணி தொடங்க இருப்பதாகவும், அதற்காக இன்று (20-ந் தேதி) முதல் பழைய பஸ் நிலையம் செயல்படாது எனவும், மாற்று வழி த்தடங்கள் குறித்து நகராட்சி ஆணையரும், காவல்துறையும் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

    ராஜபாளையம் நகராட்சி ரெயில்வே மேம்பால பணி, பாதாள சாக்கடைத்திட்ட பணி, தாமிரபரணி குடிநீர் திட்ட பணி ஆகிய திட்டங்களால் கடந்த 5 ஆண்டுகளாக மக்கள் மிகுந்த துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். ரெயில்வே மேம்பால பணிகள் கடந்த 5 ஆண்டுகளாக நிறைவு பெறாமல் இருப்பதையொட்டி தென்காசி சாலையில் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கிறது.

    இந்த நிலையில் நகராட்சி ஆணையாளரின் அறிவிப்பும், காவல்துறை யின் அறிவி ப்பும் பொருத்த மற்றதாக இருப்பதோடு மக்களை மேலும் துன்பப்படுத்துவதாக உள்ளது.

    எனவே சத்திரப்பட்டி சாலையில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பால த்திற்கு அருகே சர்வீஸ் சாலை அமைக்கும் வரை பழைய பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணியை தொடங்கக்கூடாது. மீறி செயல்படுத்தும் பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மக்களை திரட்டி போராடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கலெக்டர் அரவிந்த் ஆலோசனை
    • நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தின விழா நிகழ்ச்சிகள் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடக்கிறது. விழாவில் கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி வைக்கிறார்.

    குடியரசு தின விழா விற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கலெக்டர் அரவிந்த் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற் கொண்டார். இந்த நிலையில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று ஆர்.டி.ஓ. சேது ராமலிங்கம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உடன் இருந்தார்.

    • கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள்
    • குடியரசு தினவிழா நிகழ்ச்சி அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந்தேதி அன்று நடைபெறவுள்ளது

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில், கலெக்டர் அரவிந்த் தலைமையில், 74-வது குடியரசு தினவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் குடியரசு தினவிழா நிகழ்ச்சி கடந்த ஆண்டை போல் இவ்வாண்டும் நாகர்கோவில், அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் வருகிற 26-ந்தேதி அன்று நடைபெற வுள்ளது. இவ்விழாவிற்கு வருகை தரும் முக்கிய விருந்தினர்களுக்கு போதிய அளவு இருக்கைகள் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    நாகர்கோவில் மாநக ராட்சி மூலம் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திட வேண்டும். விழாவில் விபத்துக்கள் ஏற்படாத வகையில், தீய ணைப்புத்துறை மூலம் தீயணைப்புக்கருவிகளை தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத் துறையினர் சிகிச்சை உபகரணங்கள் மற்றும் ஆபத்துக்கால வாகனங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    வருவாய்த்துறை, சுகா தாரத்துறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறை களில் சிறப்பாக பணி யாற்றிய அலுவலர்கள், பணி யாளர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை துறை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும்.

    குடியரசு தினவிழா விற்கான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் அனைத்து அலுவ லர்களையும் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு அலுவலர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். மேலும், இவ்விழா சிறப்பாக நடைபெற அனைத்துத்துறைகளை சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நாகர்கோவில் மாநக ராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வன அலுவலர் இளையராஜா, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாபு, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் உள்பட அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

    • பொங்கல் பண்டிகையையொட்டி வழங்கப்பட்டது
    • விழாவில் மேயர் மகேஷ் கலந்து கொண்டு வழங்கினார்

    நாகர்கோவில்:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி அர்ச்சகர்களுக்கு புத்தாடை களும் பணியாளர்களுக்கு சீருடைகளும் வழங்கப்படுகிறது.

    குமரி மாவட்டத்தை பொருத்த மட்டில் 490 கோவில் களில் பணிபுரியும் அர்ச்ச கர்களுக்கு புத்தாடை களும் பணியாளர்களுக்கு சீருடைகளும் வழங்குவ தற்கான தொடக்க விழா நாகர்கோவில் நாகராஜா கோவில் வளாகத்தில் இன்று நடந்தது. விழாவிற்கு இணை ஆணையர் ஞானசேகர் தலைமை தாங்கினார்.

    விழாவில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மேயருமான மகேஷ் கலந்து கொண்டு அர்ச்சகர்களுக்கு புத்தாடை களையும் பணியாளர்களுக்கு சீருடைகளையும் வழங்கினார். அப்போது மேயர் மகேஷ் பேசியதாவது:-

    தி.மு.க. அரசு பொறுப் பேற்றதும் கோவில்கள் மேம்பாட்டிற்கு தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள கோவில்கள் கும்பாபிஷே கத்திற்காக ரூ.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வரு கிறது.

    தி.மு.க. அரசு பொறுப் பேற்ற பிறகு கோவில் பணி யாளர்களுக்கான சம்ப ளத்தை உயர்த்தி உள்ளது. குமரி மாவட்டத்தில் 100 கோவில்களை புனர மைக்க ரூ.5 கோடியே 87 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது கோவில்களில் புனரமைப்பு பணி நடை பெற்று வருகிறது. பறக்கைப் பகுதியில் கூருடைகண்டன் சாஸ்தா கோவில் இயற்கை எழில் கொஞ்சும் வயல் பகுதியில் உள்ளது.வயல் வரப்பு வழியாக சென்று தான் அந்த கோவிலில் பூஜைகள் செய்ய வேண்டும்.

    இந்த கோவிலில் வயல் அறுவடை மற்றும் நடவு பணியின்போது மட்டுமே பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த கோவிலை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த கோவிலை நான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தேன். வாரம் 2 நாட்கள் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோவில் அர்ச்சகர்களும் பணியாளர்களும் அதிகம் பயன்பெறும் வகையில் ஒரு அரசு செயல்படுகிறது என்றால் அந்த அரசு தி.மு.க. அரசாகத்தான் இருக்க முடியும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோவில் பணியாளர்கள் மீது தனி கவனம் செலுத்தி நடவ டிக்கை எடுத்து வருகிறார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர்கள் அகஸ்டினா கோகிலவாணி, ஜவகர் கவுன்சிலர்கள் கலா ராணி, ரோசிட்டா மராமத்து பொறியாளர் அய்யப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மக்கள் சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    • மண் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரோடு மட்டம் வரை தரமான ஜல்லிகள் போட வேண்டும்.

    கன்னியாகுமரி:

    குலசேகரத்தில் உள்ள நாகக்கோடு சந்திப்பில் இருந்து திருவரம்பு வரை உள்ள சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை மூலமாக ரூ.3.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சாலை பணிகள் தொடங்கின.

    இதற்காக திருவரம்பு பகுதியில் சாலையை அகலப்படுத்த சுமார் 2½ அடி ஆழத்தில் ரோட்டோரம் மண் அப்புறப்படுத்தப்பட்டது. மண் அகற்றப்பட்ட இடத்தில் இருந்து ரோடு மட்டம் வரை தரமான ஜல்லிகள் போட வேண்டும்.

    ஆனால் அதனை செய்யாமல் ஜல்லிக்கு பதிலாக குறைந்த கழிவுகள் நிறைந்த பாறைப்பொடிகள் கொண்டு வந்து சாலையில் குவித்துள்ளனர்.

    இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பொது மக்களும், இளைஞர்களும் ஆத்திரமடைந்து மோசமான பாறைப்பொடியை இங்கே ஏன் கொட்டுகிறீர்கள்? தரமான ஜல்லியை தான் முதலில் போட வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.இது தொடர்பாக நெடுஞ்சாலை த்துறை உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து நெடுஞ் சாலைதுறை அதிகாரிகள், கழிவு கலந்த பாறைப்பொடிகளை உடனே அப்புறப் படுத்தச் சொன்னதாக தெரிகிறது. இதையடுத்து ஜே.சி.பி. எந்திரம் மூலமாக பாறைப் பொடிகள் டெம்போவில் ஏற்றி அப்புறப்படுத்தப்பட்டன.

    ஏற்கனவே இந்த சாலை பணியால் திருவரம்பு முதல் நாகக்கோடு வழி யாக சென்று வரும் பஸ்கள் மாற்று பாதையில் இயங்கி வருகிறது. இதனால் பள்ளி குழந்தைகள், மாணவ-மாணவியர், மருத்துவமனைக்கு செல்லும் வயதானவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு மிகவும் சிரம மான நிலை ஏற்படுகிறது.

    போக்குவரத்து மாற்று பாதையில் இயக்கப்படு வதால் சுற்று வட்டார மக்கள் சுமார் 6 முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை சுற்றி பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே நெடுஞ்சாலைத் துறையினர் போதிய அதிகாரி கள் மற்றும் அலுவலர்கள் முன்னிலையில் சாலைப் பணியை தரமாக விரைந்து முடித்து போக்குவரத்து வசதி மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு வந்தது
    • வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது

    கோத்தகிரி,

    கோத்தகிரி மேல்தட்டப்பள்ளம் பகுதியில் அமைக்கப்பட்ட வேகத்தடை பணிகள் 3 மாதங்களுக்கு மேல் நிறைவு செய்யப்படாமல் இருந்து வந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதுகுறித்த செய்தி கடந்த 30-ந் தேதி அன்று மாலை மலரில் வெளியானது. இதனையடுத்து தட்டப்பள்ளம் பகுதியில் போடப்பட்ட வேகத்தடைக்கான பணி முழுவதுமாக முடிக்கபட்டு வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் வாகன ஓட்டிகள் மாலை மலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.

    • திருமுல்லைவாசல் ஊராட்சியிலும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.
    • கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணி ஆய்வு.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆரப்பள்ளம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, நெற்களம் அமைக்கும் பணி, பள்ளிகளில் கழிவறை கட்டிடம் கட்டும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பணிகளை தரமாகவும், விரைந்து முடித்திடவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்–தினார். தொடர்ந்து திருமுல்லைவாசல் ஊராட்சியிலும் சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார்.

    அதே போல் கூரை வீடுகள் கணக்கெடுக்கும் பணியையும், 15-வது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளையும் ஸ்ரீலேகா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் ரெஜினா ராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழி, ஒன்றிய பொறியாளர்கள் தாரா, பலராமன் ஓவர்சியர் அமலா ராணி, ஆரப்பள்ளம் ஊராட்சி தலைவர் வனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×