search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிமன்றம்"

    • நீதிமன்ற அனைத்துப் பிரிவு ஊழியர்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களின் அவசர மருத்துவச் சேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
    • இந்த சேவை உங்கள் அனைவர்களோடு ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டுள்ளன. இதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்துப் பிரிவு வழக்கறிஞர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும்நீதிமன்ற ஊழியர்களின் பயன்பாட்டிற்காக இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டத் தொடக்க விழா இன்று நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி மதுசூதனன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் வேலுகார்த்திகேயன், அரசு குற்றவியல் சிறப்பு வழக்கறிஞர் விவியன் அசோக், தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் சிவசுப்பிரமணியன், தஞ்சை மாவட்ட வழக்கறிஞர் சங்கத் தலைவர் அமர்சிங்.

    தஞ்சை வடக்கு அஞ்சல் உட்கோட்ட உதவி கண்காணிப்பாளர் எஸ்.அருள்தாஸ் மற்றும் அலுவலர்கள் ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவை திட்டத்தை மாவட்ட நீதிபதி மதுசூதனன் கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசியதாவது:

    இங்கு 1 ஆம்புலன்ஸ் மற்றும் 1 இருசக்கர மொபைல் ஆம்புலன்ஸ் தொடங்கப்பட்டுள்ளன. இதனை நீதிமன்ற அனைத்துப் பிரிவு ஊழியர்கள் மற்றும் நீதிமன்றத்திற்கு வரும் பொது மக்களின் அவசர மருத்துவச் சேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ஒவ்வொரு மனிதனின் பாதுகாப்பிற்காக மட்டும்தான் இங்கு மருத்துவச் சேவை தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேவை உங்கள் அனைவர்களோடு ஒத்துழைப்போடு தொடங்கப்பட்டுள்ளன. இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    முடிவில் போக்சோ நீதிமன்ற நீதிபதி செளந்தர்ராஜன் நன்றி கூறினார்.

    • குடிநீர் குழாய் பதிப்பு, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதற்காக சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.
    • ஒரே சாலையில் எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட பல்வேறு பணிகளின் காரணமாக மாநகர பகுதிகளில் சாலைகள் அமைக்க, சாக்கடை கால்வாய் அமைக்க, குடிநீர் திட்ட பணிகளுக்காக குழாய் அமைக்க என பல்வேறு பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் பல பகுதிகளில் சரியான முறையில் திட்டமிடப்படாமல் மேற்கொள்வதால், பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அனுப்பர்பாளையத்தில் இருந்து 15 வேலம்பாளையம், சோழிபாளையம் செல்லும் பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிப்பு, சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்துவதற்காக சாலைகள் தோண்டப்பட்டு உள்ளன.

    இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு வழி சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் ஒரே சாலையில் எதிரும், புதிருமாக வாகனங்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக பெரிய வாகனங்கள் அந்த சாலையில் வரும் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், எதிரெதிரே வாகனங்கள் செல்வதால் வாகன ஓட்டிகளுக்கு இடையே அவ்வப்போது தகராறும் ஏற்படுகிறது. விபத்துகளும் நடந்து வருகின்றன.

    இதுபோல் அந்த பகுதிகளில் போக்குவரத்து போலீசாரும் இல்லாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். இதுபோல் மாநகராட்சி மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் சாலையில் செல்ல முடியாது என்பதை தெரிவிக்கும் வகையில் விளம்பர பதாகைகள் கூட வைக்கப்படவில்லை. இதனால் பலரும் சாலையில் சென்று விட்டு பாதை இல்லாததால் திரும்பி வரும் நிலையும் உள்ளது. திருப்பூருக்கு தமிழக முதல்-அமைச்சர் வரும் போது, அந்த பகுதியில் வேலை செய்யப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலரும் போராட்டங்களையும் நடத்தினர். இருப்பினும் இதற்கு தீர்வு இன்னமும் கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.

    • திமன்றங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • சிவகங்கை மாவட்ட வக்கீல் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    சிவகங்கை

    சிவகங்கையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் நெல்சன் ஜீவா வரவேற்புரையாற்றினார். மாவட்ட துணைசெயலாளர் இளையராஜா தொடக்க உரையாற்றினார்.

    சிவகங்கை வழக்கறி ஞர்கள் சங்க தலைவர் நாகேஸ்வரன், செயலாளர் சித்திரைச்சாமி' பொரு ளாளர் செல்வராஜ், இணை செயலாளர் மணிகண்டன், அரசு வழக்கறிஞர்கள் அழகர்சாமி, பிரபாகர், ஸ்ரீசாய் சுந்தர், துஷாந்த் பிரதீப்குமார், நிர்மலா, சேகர் ஆகியோர் பேசினர். மாவட்ட துணை தலைவர் அஜீதாகூர் குற்றவியல் விசாரணை பற்றி கருத்துரையாற்றினார்.

    மாநில பொதுச் செயலா ளர் முத்து அமுதநாதன் நிறைவுரை ஆற்றினார். மாநாட்டில் மாவட்ட தலைவராக ராஜசேகரன், மாவட்ட செயலாளராக மதி, மாவட்ட பொருளாளராக சொர்ணம், மாவட்ட துணை தலைவர்களாக கமலதயாளன், அஜூ தாகூர், மாவட்ட துணை செயலாளர்களாக நெல்சன் ஜீவா, இளைய ராஜா, மாவட்ட குழு உறுப்பினர்களாக சகாய சுதாகர், காளைஈஸ்வரன், நிருபன் சக்ரவர்த்தி, சரவணன், ஜேம்ஸ் ராஜா, தீபா, துரைபாண்டி, பூர்ணிமா, சுசீலா, செந்தில்வேல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    வழக்கறிஞர்கள் சேம நல நிதியை ரூ.15 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகங்மாகை வட்டத்தில் வாடகை கட்டிடத்தில் செயல்படும் நீதிமன்றங்களுக்கு சொந்தமாக நீதிமன்ற கட்டிடங்கள் கட்டி தர வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், சுத்தமான குடி தண்ணீர், சுகாதாரமான கழிப்பறை வசதிகள் செய்து தர வேண்டும். உயர் நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக்க சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் மாநாட்டில் நிறை வேற்றப்பட்டன.

    விருத்தாசலம் நீதிமன்றம் அருகே தூக்கில் பிணமாக வாலிபர் தொங்கினார்.

    கடலூர்:

    மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த செல்வராஜ்.அவரது மகன் அருள் செல்வன் (வயது20), இவர் பிளஸ்-2 வரை படித்துள்ளார்.

    கடந்த 11ஆம் தேதியன்று வீட்டில் இருந்து காணாமல் போன இவர் விருத்தாசலம் நீதிமன்றம் அருகே உள்ள இடத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். தகவலறிந்து அங்கு வந்த விருத்தாசலம் போலீசார் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விருத்தாசலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • 13-ந்தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது.
    • மாவட்ட நீதிபதி தகவல்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வரும் 13ஆம் தேதி தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் ஆணைப்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம்நடைபெற உள்ளது.

    மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது. மக்கள் நீதிமன்றத்தில் வழக்காடிகள் செலவின்றி விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்து தரப்படும், வழக்கில் வென்றவர் தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது, வழக்குகள் தீர்வு கண்டதும் உத்தரவு நகல் உடனே வழங்கப்படும்,

    முத்திரைத்தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்ப பெற வாய்ப்புள்ளது, நீதிமன்றத்தில் நிலுவையில் இல்லாத வேறு விதமான சட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றையும் மக்கள் நீதிமன்றம் விசாரித்து நிரந்தர தீர்வு காணப்படும்,

    அதனால் பொதுமக்கள் வழக்காடிகள் மேற்படி தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்பு தங்கள் வழக்குகளை சமரச வழிகள் மூலம் சமரசமாக நிரந்தர தீர்வு காணலாம், எனவும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும் மாவட்ட நீதிபதியுமான மகாலட்சுமி தெரிவித்துள்ளார்.

    • திருப்பத்தூரில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டது.
    • மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இங்கு உரிமையியல் (சிவில்) வழக்குகள் ஏராளமாக தாக்கலாகி வந்தது.

    சிவில் வழக்குகளை தனியாக விசாரிக்க நீதிமன்றம் மற்றும் கூடுதல் நீதிபதிகள் இல்லாததால் வழக்குகளின் விசாரணை தாமதமாவதாக பொதுமக்களும் வக்கீல்களும் கூறி வந்தனா். எனவே உரிமையியல் வழக்குகளை விசாரிக்க தனியாக நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசுக்கு வக்கீல் சங்கத்தின் தலைவர் கணேசன், செயலாளர் முருகேசன், மற்றும் வழக்கறிஞர்கள் சங்க உறுப்பினர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு, திருப்பத்தூரில் தனி நீதிபதியுடன் உரிமையியல் நீதிமன்றம் தொடங்க உத்தரவிட்டது.

    இதனையடுத்து திருப்பத்தூரில் உள்ள நீதிமன்ற வளாகத்தின் மேல் தளத்தில் புதிய உரிமையியல் நீதிமன்றம் திறக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி சத்யதாரா, திருப்பத்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் மும்தாஜ், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், வழக்கறிஞர் சங்கத் தலைவர் கணேசன், ரவி உள்ளிட்டோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

    வழக்கறிஞர்கள் சங்க தலைவர் கணேசன் வரவேற்றார். தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஜி.சுதாகர், காரைக்குடி, தேவகோட்டை, சிவகங்கை, இளையான்குடி குற்றவியல் நடுவர் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாபன், அரசு வழக்கறிஞர்கள், திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

    • தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின்பாதைகள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
    • இதேபோல் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள துணை மின் நிலையம் மற்றும் மின்பாதைகள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    எனவே அன்னை சத்யா விளையாட்டு மைதானம் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் மேம்பாலம், சிவாஜி நகர், சீதா நகர், சீனிவாசபுரம், ராஜன்சாலை, தென்றல் நகர், கிரி சாலை, காமராஜ் சாலை, ஆப்ரஹாம் பண்டிதர் நகர் ஆகிய இடங்களிலும், திலகர் திடல் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் மேலவீதி, தெற்கு வீதி, பெரியகோவில், செக்கடி சாலை, மேல அலங்கம் ஆகிய பகுதிகளிலும், வண்டிக்கார தெரு மின்பாதையில் மின்வினியோகம் பெறும் ரெயிலடி, சாந்தபிள்ளைகேட், மகர் நோம்புச்சாவடி, வண்டிக்கார தெரு, தொல்காப்பியர் சதுக்கம், வெள்ளைபிள்ளையார் கோவில், சேவியர் நகர், சோழன் நகர், ஆகிய இடங்களிலும், சர்க்யூட் ஹவுஸ் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் ஜி.ஏ.கெனல் சாலை, திவான் நகர், சின்னையாபாளையம், மிஷன் சர்ச் சாலை, ஜோதி நகர், ஆடக்காரத்தெரு, ராதாகிருஷ்ணன் நகர் ஆகிய பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இதேபோல் மார்க்கெட் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பர்மா பஜார், ஜுபிடர் தியேட்டர் சாலை, ஆட்டுமந்தை தெரு, கீழவாசல், எஸ்.என்.எம்.ரஹ்மான் நகர், அரிசிக்கார தெரு, கொள்ளுப்பேட்டை தெரு, வாடிவாசல் கடை தெரு ஆகிய பகுதிகளிலும், கீழவாசல் மின்பாதையில் பழைய மாரியம்மன் கோவில் சாலை, ராவுத்தாபாளையம், கரம்பை, சாலக்காரதெரு, பழைய பஸ் நிலையம், கொண்டிராஜ பாளையம் ஆகிய பகுதிகளிலும், வ.உ.சி.நகர் மின்பாதையில் இருந்து மின்வினியோகம் பெறும் இடங்களிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியாவின் நான்கு பகுதிகளில் உள்ள மக்களும் பயனடையும் வகையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கவேண்டும்.
    • நிலத்தடி நீரை பயன்படுத்தும் குடியிருப்போர் உள்ளிட்ட அனைவரும் 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும்.

    பேராவூரணி:

    தமிழ்நாடு மக்கள் விடுதலை இயக்கத்தின் கொள்கை அறிக்கை வெளியீட்டு விழா பேராவூரணியில் நடைபெற்றது.

    , தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தங்க. குமரவேல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் மருது. குமார் வரவேற்றார். தமிழ் வழிக் கல்வி இயக்கத் தலைவர் சின்னப்பத் தமிழர் கொள்கை அறிக்கையை வெளியிட கவிஞர் கான்முகமது பெற்றுக் கொண்டார். இயக்கத்தின் அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம் கொள்கை விளக்க உரையாற்றினார்.

    உச்சநீதிமன்றத்தின் கிளையை இந்தியாவின் நான்கு பகுதிகளில் உள்ள மக்களும் பயனடையும் வகையில் சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் தொடங்கவேண்டும், அதேபோல் இந்த நகரங்களிலும் துணை தலை நகரம் அமைக்க வேண்டும். மத்திய நிலத்தடி நீர் ஆணையம் அறிவித்துள்ள நிலத்தடி நீரை பயன்படுத்தும் குடியிருப்போர் உள்ளிட்ட அனைவரும் 10 ஆயிரம் கட்டணம் செலுத்தி அனுமதி பெறவேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு திரும்ப பெறவேண்டும், அக்னிபாத் திட்டத்தை கைவிடவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாலசுந்தரம், ராஜமாணிக்கம், ஜெயராஜ், தமிழ் வழிக் கல்வி இயக்கத்தை சேர்ந்த வெங்கடேசன், பழனிவேலு, திராவிடர் விடுதலைக் கழகம் மாவட்ட அமைப்பாளர் திருவேங்கடம், பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம் அனல் ரவீந்திரன், அறநெறி மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ஆயர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சேலம் அஸ்தம்பட்டியில்உ ள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கமர்சியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.
    • கமர்சியல் நீதிமன்றம் சென்னையில் திறக்கப்பட்டு உள்ளது. 2-வதாக சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சேலம்:

    சேலம் அஸ்தம்பட்டியில்உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் குடும்பநல நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. அதற்கு பின்பகுதியில் கமர்சியல் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று காலை நடந்தது.

    இதனை சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரனாத் பன்டாரி திறந்து வைத்தார். பின்னர் குத்து விளக்கேற்றி நீதிமன்றத்தை பார்வையிட்டார். அப்போது அங்கு நடந்த வழக்கு விசாரணை பார்வையிட்டார்.

    அவருடன் உயர் நீதிமன்ற நீதிபதிகள், சுந்தர், அனிதாசுமந்த், கார்த்திகேயன் சதீஷ்குமார், அப்துல்குத்தூஸ், இளந்திரையன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

    முன்னதாக நீதிபதி முனீஸ்வரனாத் பன்டாரியை சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி கலைமதி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். ஏற்கனவே கமர்சியல் நீதிமன்றம் சென்னையில் திறக்கப்பட்டு உள்ளது.

    2-வதாக சேலத்தில் திறக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கோவை, காஞ்சிபுரத்தில் கமர்சியல் நீதிமன்றம் திறக்கப்பட உள்ளது.

    • அமர்வுகளில் மொத்தம் 340 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
    • மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 60 ல் 57 முடித்து வைக்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் உடுமலை நீதிமன்றங்களில் மக்கள் நீதி மன்றம் (லோக் அதாலத்) 4 அமர்வுகளாக நடத்தப்பட்டது. இதில் முதல் அமர்வில் மாவட்ட கூடுதல் நீதிபதி முரளிதரன், வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான மணிகண்டன், பட்டியல் வழக்கறிஞர் பஷீர் அகமது, அரசு வழக்கறிஞர் சேதுராமன், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். 2 வது அமர்வில் மாவட்ட உரிமையியல் நீதிபதி பாலமுருகன், பட்டியல் வழக்கறிஞர் மகாலட்சுமி,அரசு தரப்பு வழக்கறிஞர் ரவிச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். 3 வது அமர்வில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி விஜயகுமார், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2 நீதிபதி மீனாட்சி மற்றும் வழக்கறிஞர்கள்,காப்பீட்டு அலுவலர்கள்,வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த அமர்வுகளில் மொத்தம் 340 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் 299 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. இதில் சொத்து சம்பந்தமான வழக்குகள் 18 ல் 10 க்கு தீர்வு காணப்பட்டது. மோட்டார் வாகன விபத்து வழக்குகள் 60 ல் 57 முடித்து வைக்கப்பட்டது. வங்கி வாராக்கடன் வழக்குகள் 25 ல் 2 க்கு தீர்வு கிடைத்தது. மேலும் சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள் 222 எடுத்துக் கொள்ளப்பட்டு அனைத்தும் முடித்து வைக்கப்பட்டது. ஜீவனாம்சம் மற்றும் விவாகரத்து வழக்குகள் 4 ல் 1 க்கு தீர்வு கிடைத்தது. செக் மோசடி வழக்குகள் 6 ல் 2 முடித்து வைக்கப்பட்டது.பிராமிஸரி நோட்டு வழக்குகள் 5 விசாரணைக்கு எடுக்கப்பட்டு 5 ம் முடித்து வைக்கப்பட்டது.ஆக மொத்தம் ரூ. 5 கோடியே 28 லட்சத்து 87 ஆயிரத்து 641 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது.

    கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மோட்டார் வாகன விபத்தில் சிவப்பிரகாசம் என்பவர் உயிரிழந்த வழக்கில் நஷ்ட ஈடு கேட்டு அவருடைய மனைவி ஜோதிலட்சுமி சார்பில் வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், ரமேஷ் பிரபு, மணிவாசகம் ,பிரபு ,ரேஷ்மா, கோகுல்ராஜ் ஆகியோர் ஆஜரானார்கள். தனியார் காப்பீட்டு நிறுவனம் சார்பில் கோவையை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் ஆஜரானார். இந்த வழக்கில் சமரச உடன்பாடு ஏற்பட்டு மனுதாரருக்கு ரூ .1 கோடி இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனம் ஒத்துக் கொண்டதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

    • தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை நடக்கிறது.
    • மேல்முறையீடு செய்ய முடியாது.

    அரியலூர்:

    தேசிய, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின்படி, அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும், ஜெயங்கொண்டம் வட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலம் ஜெயங்கொண்டம் சார்பு நீதிமன்ற வளாகத்திலும்

    மற்றும் செந்துறை நீதிமன்றத்திலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச முறையில் பேசி தீர்வு காணப்படவுள்ளது. தேசிய மக்கள் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய முடியாது.

    கடுமையான நடைமுறைகளின்றி ஏழை, எளிய மக்களுக்கு விரைவாக நீதி கிடைக்க உதவி புரிகிறது. வழக்காடிகள் செலுத்திய நீதிமன்ற கட்டணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும் வழி உள்ளது. அதனால் கட்டணமில்லா விரைவான நீதி, இருதரப்பினரின் விருப்பத்திற்கிணங்க தீர்வு பெற முடியும் என்பதால் இந்த வாய்ப்பினை மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    தேசிய மக்கள் நீதிமன்ற அமர்வு அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான மகாலட்சுமி தலைமையில், கூடுதல் மாவட்ட நீதிபதிகள் மற்றும் அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள், அரசு அதிகாரிகள், போலீசார் முன்னிலையில் நடைபெறும். எனவே, வழக்காடிகளும், பொதுமக்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இந்த தகவலை அரியலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
    • இந்த தகவலை மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி விஜயா கூறியதாவது:-

    ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் வருகிற 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

    நடப்பு ஆண்டின் 2-வது மக்கள் நீதிமன்றமாக இது நடைபெற உள்ளது. ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூா், கமுதி, திருவாடானை, ராமேசுவரம் ஆகிய நீதிமன்ற வளாகங்களில் 11 அமா்வுகளாக விசாரணை நடைபெறும். மொத்தம் 3 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வங்கிகளில் உள்ள வாராக்கடன் வழக்குகள், தொழிலாளா்கள் இழப்பீடு, சிறிய குற்ற வழக்குகள், குடும்ப வழக்குகள், சொத்து வழக்குகள் உள்ளிட்டவை நடத்தப்படுகின்றன. இதில் முடிக்கப்படும் வழக்குகளில் மேல்முறையீடு கிடையாது. இதனால் காலம், பணம் மிச்சப்படுகிறது.

    வழக்குகளுக்காக செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணம் முழுமையாகத் திரும்ப வழங்கப்படும். இரு தரப்பினருக்கும் வெற்றி, தோல்வியின்றி சமரசமாகவே வழக்குகள் முடிக்கப்படுகின்றன.

    இதை வழக்கறிஞர்கள், சம்பந்தப்பட்ட பொதுமக்களும் பயன்படுத்தி, வழக்குகளை முடித்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது, மாவட்ட சாா்பு-நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலருமான கதிரவன் உடனிருந்தார்.

    ×