search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 225656"

    • கீழமணக்குடி முதல் சங்குத்துறை வரை கரை ஒதுங்கியது
    • வௌ மீன்கள் அதிகளவு சிக்கியது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    கடற்கரை கிராமங்களி லும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. கடற்கரை பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர் கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன் வளத்துறை அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இதை யடுத்து ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையுள்ள கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான மீனவர்கள் கடந்த சில நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை.

    மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீன்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஒரு சில கட்டுமரம் மீனவர்கள் மட்டும் மீன்பிடிக்க சென்ற னர். அவர்கள் வலையில் குறைந்த அளவு மீன்கள் மட்டுமே சிக்கியது. குறை வான அளவு மீன்கள் விற்ப னைக்கு வந்ததால் விலை அதிகமாக இருந்தது.

    குளச்சல் பகுதிகளில் மீன்கள் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் குமரி கடல் பகுதியில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக கடலுக்குள் இருந்த மீன்கள் கரை ஒதுங்கியது. கீழ மணக்குடி முதல் சங்குதுறை கடற்கரை வரை மீன்கள் கரை ஒதுங்குவதாக தகவல் பரவியது.

    இதையடுத்து அதன் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் கடந்த இரண்டு நாட்களாக கடற்கரை பகுதியில் குவிந்த வண்ணம் உள்ளனர். இத னால் அந்த பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று மாலையிலும் ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் கடற்கரை பகுதிகளில் குவிந்திருந்தனர். ராட்சத அலைகளில் மீன்கள் கரை பகுதிக்கு வருகிறது.

    பின்னர் அந்த அலை திரும்ப கடலுக்குள் செல்லும்போது மீன்களை வாலிபர்கள் கையால் பிடித்து வருகிறார்கள். வாலிபர்கள் கையில் ஏராளமான மீன்கள் சிக்கி வருகிறது. குறிப்பாக அதிக அளவு வெளமீன்கள் சிக்கி உள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக வாலிபர்கள் கையில் டன்கணக்கில் வெளமீன்கள் சிக்கி வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வாலிபர்கள் கையில் தினமும் டன் கணக்கில் மீன்கள் சிக்கிவரும் தகவல் அந்த பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து இன்று காலை யிலும் ஏராளமான வாலி பர்கள் கடற்கரையில் குவிந் திருந்தனர்.

    இது குறித்து வாலிபர்கள் கூறுகையில், கடற்கரையில் மீன்கள் கரை ஒதுங்குவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நாங்கள் இங்கு வந்தோம். அப்போது மீன்கள் கரை ஒதுங்குவதை பார்த்து ரசித்து கொண்டிருந்தோம்.அப்போது எங்களுக்கு மீன்களை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    இதையடுத்து கரைக்கு வந்த மீன்களை கையால் பிடித்தோம். அதிகளவு மீன்கள் எங்களிடம் சிக்கி உள்ளது. சிக்கிய மீன்களை வீட்டிற்கு கொண்டு சென்று சமைத்து சாப்பிடுவதுடன் நண்பர்கள் வீடுகளுக்கும் பகிர்ந்து கொடுக்க உள் ளோம். மீன்கள் கரை ஒதுங்குவதற்கான காரணம் எங்களுக்கு தெரியவில்லை என்றனர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடல் பகுதி யில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக கடலில் குளிர்ந்த தண்ணீர் ஏற்பட்ட தால் வெள மீன்கள் கரை ஒதுங்கி வருவதாக தெரிவித்தனர்.

    • இரண்டு பேரின் உடலுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
    • மதகு சாலையில் உள்ள மூன்று பேரின் வீடுகளுக்கு சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    கும்பகோணம்:

    பந்தநல்லூர் அருகே மதகு சாலையில் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 18-ம் தேதி இரவு மீன் பிடிக்க சென்ற மூன்று இளைஞர்கள் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவத்தில் மனோஜ் (24), ஆகாஷ் (24) ஆகிய இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ள அவர்களது உடல் திருப்பனந்தாள் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இரண்டு பேரின் உடலுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மதகு சாலையில் உள்ள மூன்று பேரின் வீடுகளுக்கு சென்று அவரது பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். அதனைத்தொட ர்ந்து கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் அரசு தலைமை கொறடா கோவி செழியன், திருப்பனந்தாள் ஒன்றிய குழு துணைத் தலைவர் அண்ணாதுரை, ஆர்.டி.ஓ லதா, தாசில்தார் சந்தனவேல், துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிவேந்தன் மற்றும் வருவாய்த்துறை, போலீ சார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
    • கடந்த 5 நாட்களாக ராட்சச அலைகள் எழுந்து மணல் பரப்பு முழுவதையும் மூழ்கடித்து உள்ளது

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், ஆகிய மாதங்களில் கடல் சீற்றமாக காணப்படுவது வழக்கம். குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது. இதனால் பலத்த காற்று வீசியதால் ராட்சத அலைகள் எழும்பின. இதனால் வள்ளம் கட்டுமரம் மீனவர் கள் அதிகமாக மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.

    குளச்சல் கடற்கரையில் பழைய பாலம் ஒன்று உள்ளது. இதனை கண்டு களிக்கவும், கடற்கரையின் அழகை ரசிக்கவும் சூரியன் மறையும் காட்சியையும் கண்டுகளிக்க சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    தற்போது குளச்சல் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடல் சீற்றம் காணப்படுவதால் கடல் அழகை ரசிக்க வரும் பொது மக்கள் கடற்கரையில் உட்கார முடியாமல் தவித்தனர். கடந்த 5 நாட்களாக ராட்சச அலைகள் எழுந்து மணல் பரப்பு முழுவதையும் மூழ்கடித்து உள்ளது இதனால். மாலை வேளை களில் பொழுதை கழிக்க கடற்கரைக்கு வரும் மக்கள் மணல் பரப்பில் அமர முடியாமல் திரும்பி சென்றனர்.

    குளச்சல் துறைமுக பாலம் அடி பகுதியில் கடல் அரிப் பால் மணல் இழுத்து செல்லபட்டு பாலத்தின் தூண்கள் அஸ்திவாரம் வெளியே தெரிந்த வண்ணம் காணப்படுகிறது. ராட்சத அலையால் கடற்கரையின் மணல் பரப்பு முழுவதையும் கடல்நீர் ஆக்கிரமித்துள்ளது.

    தொடர்ந்து கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதுபோல் கொட்டில் பாட்டிலும் கடலரிப்பு ஏற்பட்டு மணற்பரப்பில் கட்டப்பட்டிருந்த மீன் ஏலம் கூடம் கட்டிடம் சேதமடைந்து அஸ்திவாரத்தில் அடியில் மணல் பரப்பு அடித்து செல் லப்பட்டதால் அஸ்திவாரம், கான்கிரீட் உடைந்து கட்டிடம் கடலில் சரிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏல கூடத்தின் அஸ்தி வாரம் இடிந்து சரிந்து காணப்படுகிறது.

    ஆபத்தான நிலையில் உள்ள இந்த மீன் ஏல கூடத்தை இடித்து மாற்றம் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஒரே நாளில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தது அதிர்ச்சியளிக்கிறது.
    • குளத்தில் மீன் வளர்க்க ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும்.

    குடிமங்கலம் :

    குடிமங்கலம் ஒன்றியம் புதுப்பாளையம் கிராமத்தில் ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கிராம குளம் அமைந்துள்ளது.பருவமழை மற்றும் பி.ஏ.பி., பாசன உபரி நீரால் நிரம்பும் இக்குளம் சுற்றுப்பகுதி விளைநிலங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக உள்ளது.

    மேலும் ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களின் குடிநீர் போர்வெல்லும் குளத்தை நீராதாரமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் குளத்தில்ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து மிதந்தது. இதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சியடைந்து, குடிமங்கலம் ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    மேலும் கிராம மக்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில், குடிநீர் ஆதாரமாக உள்ள குளத்தில், ஒரே நாளில்ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்தது அதிர்ச்சியளிக்கிறது.இக்குளத்தில் நூற்றுக்கணக்கான கால்நடைகளும் தண்ணீர் அருந்தும். கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பதால் மக்களும் பாதிக்கும் அபாயம் உள்ளது.மீன்கள் இறப்புக்கான காரணத்தை கண்டறிய விசாரணைக்குழு அமைக்க வேண்டும். தண்ணீரில் மருந்து கலத்தல் உள்ளிட்ட சம்பவம் நடந்திருந்தால் தொடர்புடையவர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.முக்கிய நீராதாரமான குளத்தில் மீன் வளர்க்க ஏலம் விடுவதை தடை செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிராம மக்கள் புகார் அடிப்படையில், ஈரோடு மண்டல மீன் வளர்ச்சி கழக அதிகாரிகள், மீன்கள் இறப்புக்கான காரணத்தை கண்டறிய புதுப்பாளையம் குளத்தில் ஆய்வு நடத்தி சென்றுள்ளனர்.முக்கிய நீராதாரமான குளத்தில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து கிடந்தது அப்பகுதியில், பரபரப்பையும் மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    • தொண்டியில் மீன் வரத்து அதிகரித்துள்ளது.
    • மீன்கள் ஏலம் விடப்பட்டு தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோயில், சிவகங்கை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி மீன் மார்க்கெட்டில் மீன் வரத்து அதிகமானது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 15 வரை 60 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று கரை திரும்பினர். இதில் அரிய வகை மீன்களான மூட்டான், மஞ்சள் கீலி, கண்ணாடி பாறை ஆகிய மீன்கள் வலையில் சிக்கின.

    இது தவிர கொடுவா, பாறை, ஓரா, நகரை, செங்கனி, விலா மீன், தாழஞ்சுரா, திருக்கை, முரல், ஊடகம் மற்றும் ஆழ்கடலில் பிடிபடும் இறால், நண்டு, கனவாய் போன்ற மீன்களும் சிக்கியது. இவை தொண்டி மீன் மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்தது. இங்கிருந்து ஏலம் விடப்பட்டு, தேவகோட்டை, காரைக்குடி, காளையார்கோயில், சிவகங்கை பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் உள்ள அசைவப்பிரியர்களுக்கு எந்த மீன்களை வாங்கி சாப்பிடுவது என்ற நிலையில் போட்டி போட்டு மீன்களை வாங்கிச் சென்றனர்.

    • 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன
    • சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கடற்கரை வழியாக புதிய சாலை வசதி ஏற்படுத்த வேண்டும்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ளது சின்ன முட்டம். இங்கு மீன்பிடி துறைமுகம் அமைந்து உள்ளது. இந்தத் துறைமுகத்தைப் தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    மீன்பிடி தடைகாலம் காரணமாக கடந்த மாதங்க ளாக துறைமுகத்தில் ஓய்வெ டுத்து விசைப்படகுகள் மீன்பிடி தடை காலம் முடிவடைந்ததை தொடர்ந்து கடந்த 15-ந்தேதி அதிகாலை முதல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று வருகின்றன. இந்தவிசைப்படகுகள் அனைத்தும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பி டிக்கச் சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்பி வருகின்றன.

    தற்போது இந்தப் படகு களில் அதிக அளவில் மீன்கள் பிடித்து வரப்படு கின்றன. இதனால் இந்த மீன்களை ஏலம் எடுப்பதற்காக கேரளா போன்ற வெளி மாநி லங்களில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான டெம்போ, லாரி, டிரக்கர் போன்ற வாகனங்கள் சின்னமுட்டம் துறைமுகத்தை நோக்கி மாலை நேரங்களில் படை யெடுத்து வந்த வண்ணமாக உள்ளன.

    இதனால் கன்னியா குமரி-நெல்லை தேசிய நெடுஞ் சாலையில் உள்ள மாதவபுரம்சந்திப்பில் இருந்து சின்னமுட்டம் துறைமுகம் செல்லும் சாலை கடும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால் இந்த சாலை மாலையில் இருந்து நள்ளிரவு வரை பெரும் பரபரப்பாக காணப்படுகிறது. சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு இந்த வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன.

    இதனால் மாதவபுரம், கலைஞர் குடியிருப்பு ஒற்றையால் விளை, சின்னமுட்டம், ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமின்றி கன்னியா குமரி விவேகானந்தாபுரம் கடற்கரையில் அமைந்து உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி கோவி லுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    எனவே கன்னியாகுமரி- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சின்னமுட்டம் துறைமுகத்துக்கு செல்ல தனிசாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் கன்னியாகுமரியில் இருந்து சின்னமுட்டம் துறைமுகத்துக்கு கடற்கரை வழியாக புதிய சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகம் மீன்வளத்துறை ஆகியவை இணைந்து இதற்கு ஒரு நல்ல தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×