search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காணவில்லை"

    • 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.
    • இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    மியுபோபா:

    நமது பக்கத்து நாடான வங்காள தேசத்தில் வசித்து வரும் ஏராளமான அகதிகள் கடல் வழியாக இந்தோனேஷியா, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு படகில் தப்பி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.

    இவர்கள் சட்டவிரோத மாக பாதுகாப்பு இல்லாமல் படகில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் உயிர் இழந்து வருகின்றனர். இந்நிலையில் வங்காள தேசத்தில் இருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் படகில் இந்தோனேஷியா சென்று கொண்டிருந்தனர். இந்தோனேஷியா வடக்கில் கோலா பூடான் கடற்கரையில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் படகு சென்று கொண்டிருந்த போது கடலில் திடீரென கவிழ்ந்தது.

    இதனால் படகில் பயணம் செய்த அகதிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இது பற்றி அறிந்ததும் இந்தோனேஷியா கடலோர படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் தத்தளித்த 60 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். மற்றவர்கள் கதி என்ன? என்று தெரியவில்லை.அவர்களை கடலோர படையினர் தேடி வருகின்றனர்.

    • தீயில் 2 நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது.
    • காட்டுத்தீயையொட்டி அங்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    சாண்டியாகோ:

    தென் அமெரிக்கா நாடான சிலியில் உள்ள கடற்கரை நகரமான வினாடெல்மர் மற்றும் வாலடரைகோ மலைபகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. தீ மளமளவென வனப்பகுதிக்குள் வேகமாக பரவியது.

    பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்ததால் ஏராளமானோர் சிக்கி தீயில் கருகி இறந்தனர். பலியானவர்கள் உடல்கள் ரோட்டில் கருகிய நிலையில் கிடந்தது. பலர் தீக்காயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

    இது பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டர்கள் மூலமும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது. ஆனாலும் தீ கட்டுக்குள் வரவில்லை. தெடர்ந்து தீயை அணைக்கும் பணி நடந்து வருகிறது.

    காட்டுத்தீயில் சிக்கி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் சாவு எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.

    காட்டுத்தீயில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. தீயில் 2 நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான வாகனங்கள் தீக்கிரையானது. தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடு மிகப்பெரிய சோகத்தை எதிர்கொண்டுள்ளது என சிலி அதிபர் கேப்ரியல் போரிஸ் தெரிவித்துள்ளார்.

    சிலிநாட்டில் கடந்த 2010-ம் ஆண்டு கடுமையான பூகம்பம் ஏற்பட்டு 500 பேர் இறந்தனர். அதற்கு பிறகு நடந்த மோசமான சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது. காட்டுத்தீயையொட்டி அங்கு வெப்பம் அதிகரிப்பதற்கான சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

    • சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
    • தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம்களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை ஆத்தூர் சாலை பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி தீபா (வயது 42) மாற்றுத்திறனாளியான இவர் பெரம்பலூர் வி. களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.

    பெரம்பலூர் குரும்பலூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (44). இவரும் அதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

    இவர்கள் 2 பேரையும் கடந்த 15-ந் தேதி முதல் காணவில்லை. மேலும் ஆசிரியை தீபா பயன்படுத்தி வந்த காரும் மாயமானது. அதைத்தொடர்ந்து மனைவியை காணவில்லை என தீபாவின் கணவர் பாலமுருகன் வி. களத்தூர் போலீஸ் நிலையத்திலும், கணவரை காணவில்லை என வெங்கடேசனின் மனைவி காயத்ரி பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி கோவை பி1 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெரிய கடைவீதி பகுதியில் மாயமான ஆசிரியை தீபாவின் கார் 2 நாட்களாக கேட்பாரற்று நின்று கொண்டிருப்பதாக வி. களத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    பின்னர் போலீசார் விரைந்து சென்று காரைத்திறந்து சோதனையிட்டனர். அப்போது அதில் ரத்தக் கறை படிந்த சுத்தியல், தீபா அணிந்திருந்த தாலி, கொலுசு, அவரின் ஏ.டி.எம். கார்டு வெங்கடேசனின் 2 செல்போன்கள் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.

    இதனிடையே ஆசிரியர் வெங்கடேசன் செல்போனில் இருந்து பாலியல் புரோக்கரான கோவை மதுக்கரை காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரை தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது.

    இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தீபா கதி என்ன என்பது குறித்து தனிப்படை கோவை, தேனி, நீலகிரி, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. கேரளாவிற்கும் தனிப்படை விரைந்துள்ளது.

    தனிப்படை போலீசார் விசாரணையில் ஆசிரியர் வெங்கடேசன் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. தீபா என்ன ஆனார் என்பது தொடர்ந்து மர்மமாக உள்ளது. இதனிடையே கோவை, மதுரை, தேனி ஆகிய இடங்களில் ஏ.டி.எம்க.ளில் வெங்கடேசன் பணம் எடுத்த போது அங்குள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளில் ஆசிரியர் வெங்கடேசன் மட்டுமே இருப்பது பதிவாகியுள்ளது.

    வெங்கடேசன் தொடர்பு கொண்டு பேசுபவர்களின் செல்போன் எண்களை விசாரிக்கும் போது, அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் என்பது தெரிய வந்தது.

    தலைமறைவான ஆசிரியர் வெங்கடேசன் ஏ.டி.எம் களில் பணம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருவதாக தெரிகிறது.

    மாயமான ஆசிரியர் வெங்கடேசன், தனது இருப்பிடத்தை போலீசர் அறிந்துவிடுவார்கள் என அவ்வப்போது சிம்கார்டுகளையும், தான் பதுங்கி இருக்கும் இடத்தையும் மாற்றி மாற்றி வருகிறார். இதனால் அவரை நெருங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    இதனால் தீபாவை வெங்கடேசன் கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    வெங்கடேசன் சிக்கினால் மட்டுமே ஆசிரியை தீபா பற்றிய நிலை தெரியவரும் என்பதால் அவரை பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

    • திண்டிவனம் அடுத்த இனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்
    • வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வரவில்லை.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இனமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் அருண் (24)ஸ்வீட் மாஸ்டர் . இவர் கடந்த மாதம் 30 -ந்தேதி வீட்டிலிருந்து வேலைக்கு செல்வதாக சென்ற அவர் வேலையை முடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வரவில்லை. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு போது செல் சுவிட்ச் ஆப் ஆகி இருந்ததது. இதனால் அவரது தந்தை அருண் வேலை செய்த இடம் மற்றும் பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் அவரை காணவில்லை என அவரது தந்தை மோசஸ் வெள்ளிமேடு பேட்டை போலீஸ் நிலையத்தில் கடந்த 30 -ந்தேதி இரவு புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்த நிலையில் திண்டிவனம் அருகே உள்ள விழுக்கம் ஏரிக்கரை வேப்ப மரத்தில் அழுகிய நிலையில் உடலில் பல்வேறு இடங்களில்ெவடடு காயங்களுடன் அருண் பிணமாக கிடந்தார். இது குறித்த தகவல் கிடைத்ததும் அங்கு சென்ற ரோசனை போலீசார் அருண் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அருண் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது முன் விரோதம் காரணமாக யாரேனும் அவரை அடித்து கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கவிட்டார்களா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
    • வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

    காங்டாக்:

    வடக்கு சிக்கிம் மாநிலம் லோனாக் ஏரி பகுதியில் கடந்த 4-ந்தேதி அதிகாலை மேகவெடிப்பால் வரலாறு காணாத வகையில் பலத்த மழை பெய்தது.

    இடைவிடாமல் கொட்டி தீர்த்த கன மழையால் அங்குள்ள தீஸ்தா ஆற்றில் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுங்தாங் பகுதியில் நீர் மின் திட்ட அணை உடைந்தது. இதன் காரணமாக மங்கன், கேங்டாக், நாம்லி,பாக்யாங் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. தீஸ்தா ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. வெள்ளத்துக்கு தாக்கு பிடிக்க முடியாமல் பல பாலங்கள் இடிந்தது.

    பர்டாங் என்ற இடத்தில் 23 ராணுவ வீரர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெள்ளத்தில் அடித்துசெல்லப்பட்டனர். ராணுவ வாகனங்கள் மற்றும் ஆயுதங்களும் வெள்ளத்தோடு வெள்ளமாக சென்றது. இதையடுத்து மீட்பு பணிகள் மேற் கொள்ளப்பட்டன. மாயமானவர்களை தேடும் பணி நடந்தது. இதில் பலர் சடலமாக மீட்கப்பட்டனர்.

    கடந்த 3 நாட்களில் சிக்கிமின் அண்டை மாநிலமான மேற்கு வங்காளம் தீஸ்தா ஆற்றில் இருந்து ராணுவ வீரர்கள் உள்பட 27 பேர் உடல்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் 7 பேர் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தம் வெள்ளத்தில் சிக்கி 53 பேர் இறந்துவிட்டதாக அம்மா நில அரசு தெரிவித்துள்ளது.

    இன்னும் 140 -க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்ன வென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருவதாக அம்மாநில முதல் - மந்திரி பிரேம் சிங் தமாங் தெரிவித்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

    இந்த மழைக்கு 1,173 வீடுகள் சேதம் அடைந்துவிட்டது. 6,875 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர், அவர்கள் அங்குள்ள 22 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    வெள்ளத்தில் சிக்கி தவித்த 2,413 பேரை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

    லாச்சென் மற்றும் லாச்சுங் பள்ளத்தாக்கு பகுதியில் சிக்கி தவிக்கும் 3 ஆயிரம் சுற்றுலா பயணிகளை மீட்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணியில் இந்திய விமான படையை சேர்ந்த ராணுவ ஹெலி காப்டர்கள் பயன்படுத்தபட்டு உள்ளன. தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    மங்கன் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் இன்னும் 5 நாட்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • நாமக்கல், ராமாவரம்புதூரை சேர்ந்தவர் நிசார் அகமது தனியார் நிறுவனத்தில் இரவு காவலராக பணியாற்றி வரும் இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.
    • நேற்று வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றுவிட்டு, இன்று காலை வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பிரிட்ஜில் அவர் வைத்திருந்த ரூ.3000 பணம் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    நாமக்கல்:

    நாமக்கல், ராமாவரம்புதூரை சேர்ந்தவர் நிசார் அகமது(53). தனியார் நிறுவனத்தில் இரவு காவலராக பணியாற்றி வரும் இவர் மனைவியை பிரிந்து தனியாக வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று வழக்கம் போல் இரவு பணிக்கு சென்றுவிட்டு, இன்று காலை வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் பிரிட்ஜில் அவர் வைத்திருந்த ரூ.3000 பணம் காணாமல் போயிருந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து நாமக்கல் போலீஸ் நிலையத்தில் நிசார் அகமது புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.
    • மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி மாயமாகி இருப்பது தெரிந்தது.

    திருவொற்றியூர்:

    மணலிபுதுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு 5-வது பிளாக்கில் வசித்து வருபவர் பெருமாள். இவருக்கு சொந்தமான இடம் மணலி 200அடி சாலையோரம் சி.பி.சி.எல். தொழிற்சாலை மதில் சுவரையொட்டி உள்ளது.

    அந்த இடத்தில் சுமார் 25 அடி ஆழத்தில் உறை கிணறு ஒன்று இருந்தது. கடந்த சில மாதங்களாக பெருமாளின் இடத்தையொட்டி மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த பணிகள் முடிந்த நிலையில் பெருமாள் தனது இடத்தை பார்க்க வந்தார்.

    அப்போது அங்கு இருந்த கிணற்றை காணவில்லை. மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியின் போது ராட்சத கிரேன் மூலம் கிணற்றுக்குள் மணல் கொட்டி மூடி தரையோடு தரையாக மாயமாகி இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து பெருமாள், மாயமான தனது கிணற்றை கண்டு பிடித்து, பயன்படுத்தும் வகையில் சீரமைத்து தரவேண்டும் என்று மாநகராட்சி மணலி மண்டல உதவி ஆணையரிடம் கோரிக்கை மனு அளித்தார். அதில் மழைநீர் வடிகால்வாய் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். தரையோடு தரையான கிணற்றை எப்படி மீட்பது என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை
    • போலீசார் தேடுகின்றனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி அம்மையப்பன் நகர் மூசல் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அருள். இவர் தனது மனைவி கற்பகம் (வயது 21). என்பவரை காணவில்லை என ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    அதில் கடந்த 10-ந் தேதி கற்பகம் வைத்திருந்த செல் போனை எடுத்துச் சென்றதால் என்னிடம் சண்டைபோட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்.

    உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல்போன தனது மனைவியை கண்டுபிடித்து தருமாறு அதில் கூறி உள்ளார்.

    அதன் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    • தாயார் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகளை காணவில்லை.
    • வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

    விழுப்புரம்:

    செஞ்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி பிளஸ்-2 வரை படித்துள்ளார். கடந்த 15 -ந் தேதி இவரது தாயார் 100 நாள் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மகளை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்க வில்லை. இது குறித்து சிறுமியின் தாயார் செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

    • இவரது 19 வயது மகள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார்.
    • சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே எஸ்.குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியன் . இவரது 19 வயது மகள் திருவண்ணாமலையில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்தார். இவரை கடந்த 18-ந் தேதி முதல் காணவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து முனியன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    • கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை
    • காவலாளி திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கடலூர்,

    கடலூர் ஆணைக்குப்பம் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 67). இவர் கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார் நேற்று இரவு சுப்பிரமணி வழக்கம் போல் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வேலைக்கு சென்றார். ஆனால் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி உறவினர்கள் இன்று காலை கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று நேரில் பார்த்தனர்.அப்போது சுப்பிரமணி காணவில்லை. மேலும் அவரது ஒரு செருப்பு மற்றும் அவரது செல்ஃபோன் மற்றும் கோட்டாட்சியர் அலுவலக வெளிபுறத்தில் இருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் சுப்பிரமணியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை.

    இதனை தொடர்ந்து கடலூர் புது நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் காவலாளி சுப்பிரமணி எங்கு சென்றார்? அவரது நிலை என்ன? என்பதனை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காவலாளி திடீர் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நேற்று முன்தினம் இரவு வீட்டிலிருந்து வெளியே சென்றவரை காணவில்லை என புகார்.
    • பல இடங்களில் உறவினர்கள் தேடியும் அனிதா கிடைக்க வில்லை.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே உள்ள ஆவாஜிப்பேட்டை கிராமத்தில், லட்சுமி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் அனிதா(வயது22. இவர் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டிலிருந்த குப்பைகளை வெளியே கொட்டி வைத்து வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து காணாமல் போன அனிதாவை பல்வேறு இடங்களில் உறவினர்கள் தேடியும் கிடைக்க வில்லை. இதனால் காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு இளம்பெண் அனிதாவின் தந்தை மாணிக்கம் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×