என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 225776"
- வெயிலில் வெளியே செல்பவர்களின் சருமம் இவ்வாறு கருத்துப் போக நேரிடும்.
- இரு வேளையும் குளிர்ந்த நீரில் குளித்துவந்தால் சருமம் புத்துணர்வு பெறும்.
சூரிய ஒளி உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்றாலும், நீண்ட நேரம் வெயிலில் இருப்பது சருமத்துக்கு கெடுதலை உண்டாக்கும். சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்கள் 'மெலனின்' எனும் நிறமியின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும். இதனால் சருமத்தின் நிறம் மாறி கருமை அடையும். தவிர்க்க முடியாத காரணங்களால், வெயிலில் வெளியே செல்பவர்களின் சருமம் இவ்வாறு கருத்துப் போக நேரிடும்.
முதிர்ந்த சரும செல்கள் சிதைந்து புதிய செல்கள் உருவாகும்போது, இந்த கருமை தானாகவே மறைந்து சருமம் மீண்டும் பழைய நிலையை அடையும். இதற்கு 27 முதல் 30 நாட்கள் வரை ஆகும். அதேசமயம் சூரிய ஒளியால் எவ்வளவு ஆழமாக சருமம் பாதிக்கப்பட்டு கருமை அடைந்திருக்கிறது என்பதை பொறுத்து இந்த செயல்பாடு தாமதமாகலாம். இயற்கையான முறையில் கருமையை போக்கி, சருமத்தை மீண்டும் பொலிவாக்குவதற்கு உதவும் குறிப்புகள் இங்கே…
வெயில் காலங்களில் காலை, மாலை என இரு வேளையும் குளிர்ந்த நீரில் குளித்துவந்தால் சருமம் புத்துணர்வு பெறும். வெயிலில், வெளியில் சென்று வந்த பின்னர் முகம், கழுத்து, கை மற்றும் கால்களை குளிர்ந்த நீரில் கழுவலாம். அதன் மூலம் வெயிலால் ஏற்படும் அரிப்பு மற்றும் எரிச்சல் குறையும்.
காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்கலாம். தவிர்க்க முடியாத சூழலில் வெளியே செல்ல நேர்ந்தால் வெளிர் நிற குடைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அடர் நிறங்கள் வெப்பத்தைக் கவர்ந்திழுக்கும். ஆகவே, கோடை காலங்களில் வெளிர் நிற ஆடைகளை அணிவது நல்லது.
எலுமிச்சம்பழச் சாறு மற்றும் தேன் இரண்டையும் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவினால், வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும். கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் தூள் இரண்டையும் ரோஜா பன்னீர் சேர்த்து நன்றாகக் கலந்து முகத்தில் தடவவும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். தக்காளி சாற்றை, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்தால் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கும்.
சந்தனம், தயிர் இவை இரண்டையும் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவவும். அவ்வாறு செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கி சருமம் ஜொலிக்கும். தேங்காய்ப்பாலுடன் சந்தனம் கலந்து முகத்தில் மென்மையாக தேய்த்தால் கருமை நீங்கி சருமம் பளிச்சிடும். சற்றே புளித்த தயிரை சிறிதளவு எடுத்து, முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் பூசவும்.
சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவினால் சருமம் மீண்டும் பொலிவடையும். எலுமிச்சம்பழச் சாறு சிறிதளவு எடுத்து அதனுடன் சமபங்கு தேன் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவலாம். நன்றாக பழுத்த பப்பாளி பழத்துடன், சிறிதளவு தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசவும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவவும். இந்தக் கலவை வெயிலால் ஏற்பட்ட கருமையை நீக்கி சருமத்தை பளிச்சிட செய்யும்.
- பெண்களின் கூந்தல் பராமரிப்பு முறையை எளிமையாக்கிய தொழில்நுட்பங்களில் ஹேர் டிரையரும் ஒன்று.
- சிறந்த சில ஹேர் டிரையர்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
ஹேர் டிரையர்' மின்சார சக்தி மூலம் இயங்கக் கூடியது. இது இன்றைய காலத்தில் தலைமுடி பராமரிப்புக்காக பலரும் வைத்திருக்கக்கூடிய முக்கியமான கருவியாகும். பெண்களின் கூந்தல் பராமரிப்பு முறையை எளிமையாக்கிய தொழில்நுட்பங்களில் ஹேர் டிரையரும் ஒன்று. தினமும் தலைக்குக் குளித்து, சரியாகக் கூந்தலை உலர வைக்காததால் உண்டாகும் சைனஸ், ஜலதோஷம், காய்ச்சல் போன்ற உடல்நலக் கோளாறுகளைத் தவிர்ப்பதற்கு ஹேர் டிரையர் உதவும். அதேசமயம், இதைப் பாதுகாப்பாக உபயோகிப்பதும் முக்கியம்.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காவிட்டால் தலைமுடி சேதம் அடையக்கூடும். ஹேர் டிரையர், அதன் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களின் அடிப்படையில் பல வகைப்படும். டுவர்மலின், செராமிக், இன்பிரா-ரெட், வாட்டேஜ், பிரஷ்-லெஸ் மோட்டார், அயானிக் போன்றவை அவற்றில் சில வகைகளாகும். சிறந்த சில ஹேர் டிரையர்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.
டுவர்மலின்: ரத்தினக் கல்லை சிறு சிறு துகள்களாகப் பொடி செய்து, அதைக்கொண்டு இந்த ஹேர் டிரையரின் காயில் (Coil) உருவாக்கப்பட்டிருக்கும். இந்தக் காயில் வெப்பமடைவது, குளிர்ச்சியடைவது அல்லது அழுத்தத்துக்கு உட்படுத்தப்படுவது போன்ற காரணங்களால் நெகட்டிவ் அயான்கள் மற்றும் பார் இன்பிரா-ரெட் அலைகளை வெளிப்படுத்தும். இவை இரண்டும் தலைமுடியைப் பாதுகாப்பாக உலர வைத்து, சிக்கு உண்டாவதைத் தடுக்கும்.
செராமிக்: டுவர்மலின் ஹேர் டிரையரைப் போலவே, இதன் காயிலும் செராமிக் துகள்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. செராமிக் பொருட்களுக்கு இயல்பாகவே விரைவில் வெப்பமடையும் தன்மை மற்றும் சீராக வெப்பத்தைப் பரப்பும் தன்மை உண்டு. எனவே இந்த ஹேர் டிரையர் உபயோகிக்கும்போது, விரைவாக கூந்தல் உலரும். தலைமுடி சேதமடைவது குறைவாக இருக்கும்.
அயானிக்: பாசிடிவ் அயான்கள், தலைமுடிக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் என்பது அறிவியல் உண்மை. தலைமுடி ஈரமாக இருக்கும்போது அதில் இருக்கும் தண்ணீர் துளிகளில் பாசிடிவ் அயான்கள் அதிகமாக இருக்கும். இந்த அயானிக் ஹேர் டிரையரை பயன்படுத்தும்போது அதில் உருவாகும் நெகட்டிவ் அயான்கள், தலைமுடியில் இருக்கும் பாசிட்டிவ் அயான்களைச் சமன் செய்யும். இதன் மூலம் அதிக வெப்பத்திற்கு உட்படாமல் விரைவாகத் தலைமுடி உலரும். ஹேர் டிரையர்கள் வாங்கும்போது, குறைந்த வெப்பம் கொண்ட காற்றை வெளியிடுபவற்றை தேர்ந்தெடுப்பது நல்லது.
குளிர்ந்த காற்றை வெளியிடும் ஹேர் டிரையர்கள், தலைமுடிக்கு பாதிப்பை உண்டாக்காது. இவற்றை பயன்படுத்தும்போது தலைமுடி வறட்சி அடையாது. தலைமுடியின் தன்மையைப் பொறுத்தும் ஹேர் டிரையரைத் தேர்வு செய்வது அவசியம். அடர்ந்த கூந்தல் உள்ளவர்களுக்கு அதிக வாட்டேஜ் கொண்ட ஹேர் டிரையர் மற்றும் டுவர்மலின் ஹேர் டிரையர் ஏற்றதாக இருக்கும். மெலிதான கூந்தல் உள்ளவர்களுக்கு செராமிக் ஹேர் டிரையர்களும், சுருண்ட தலைமுடி கொண்டவர்களுக்கு 'டிப்யூசர்' அம்சம் கொண்ட அயானிக் ஹேர் டிரையர்களும் சிறந்த தேர்வாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும்.
- வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி மசாஜ் செய்தால் நல்லது.
முகத்தை அழகுப்படுத்த நாம் நிறைய பேசியல் செய்கிறோம். அப்படி பேசியல் செய்யும் போது ஐஸ் கட்டிகளும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது பல பேருக்குத் தெரியாது. பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜ் செய்தால், முகமானது பார்க்க பிரகாசமாக, முகச்சுருக்கம் இல்லாமல் இளமையாக இருப்பது போல் இருக்கும் என்று அழகியல் நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் வீட்டில் பேசியல் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை வைத்து மசாஜை எந்த நேரத்திலும் செய்யலாம் என்றும், எவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றனர்.
1. முதலில் முகத்திற்கு ஏற்ற பேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து முகத்தில் தடவ வேண்டும். பேஸ் பேக்கானது இயற்கையானதாக இருக்க வேண்டும். வேண்டுமென்றால் கடலை மாவுடன், முட்டையின் மஞ்சள் கரு, ரோஸ் வாட்டர், எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஐஸ் கிரீமை போட்டு கலக்கி முகத்தில் தடவலாம். ஐந்து நிமிடத்திற்குப் பிறகு ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யும் போது நெற்றியில் இருந்து தொடங்க வேண்டும். பின் மெதுவாக கண்ணுக்கு அருகில் செய்ய வேண்டும். முக்கியமாக கண்ணுக்கு அருகில் பண்ணும் போது கவனமாக செய்ய வேண்டும். பின் அதனை ஈரமான துணியால் துடைத்து எடுத்து விடவும்.
2. மற்றொன்று சிறிது ரோஸ்மேரி ஆயில், ஆலிவ் ஆயில் மற்றும் ரோஸ் வாட்டரை ஒரு பௌலில் விட்டு, பின் ஒரு ஐஸ் கட்டியை அதில் நினைத்து முகத்தில் துடைக்க வேண்டும். இப்படி செய்தால் முகமானது மென்மையாக இருக்கும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் முகத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
மேலும் எந்த பேஸ் பேக்கை முகத்திற்கு போட்டாலும், இறுதியில் ஐஸ் கட்டியை வைத்து மசாஜ் செய்யுங்கள். முகமானது பொலிவுடன் அழகாக இருக்கும்.
மறக்கக்கூடாதவை
1. மசாஜ் செய்தால் குறைந்தது 2-4 நிமிடமாவது செய்து, பின் சுத்தமான நீரால் கழுவ வேண்டும். ஐஸ் கட்டி போட்டு முகம் எரிவது போல் இருந்தாலும், சிவப்பு நிறத்தில் மாறினாலும், ஐஸ் கட்டி போடுவதை நிறுத்தவும்.
2. ஐஸ் கட்டிகள் மிகவும் குளிர்ச்சியானவை, அதை போட்டு முகத்தில் எரிச்சலோ அல்லது முகம் சிவப்பு நிறத்தில் மாறினாலோ 30-45 நிமிடத்தில் போக வேண்டும். இல்லையென்றால் அது அலர்ஜி என்று அர்த்தம். பின் அதனை செய்ய வேண்டாம்.
3. ஐஸ் கட்டி பயன்படுத்த கஷ்டப்படுபவர்கள் ஐஸ் பேக் அல்லது ஒரு சுத்தமான துணியை முகத்தில் போர்த்தி அதன் மேல் ஐஸ் கட்டியை வைத்து துடைக்கவும். துணியானது சுத்தமாகவும், மென்மையாகவும் இருக்க வேண்டும்.
4. ஐஸ் கட்டியானது முகத்திற்கு சிறந்த ஒன்று. ஐஸ் கட்டியை வைத்து முகத்தில் மசாஜ் செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் போய்விடும். மேலும் வெளியில் சென்று வீட்டிற்கு வந்ததும் முகத்தில் ஐஸ் கட்டி வைத்து மசாஜ் செய்தால் நல்லது.
- விதவித வண்ணங்களில் டாட்டூஸ் வரைவது தற்போது பேஷனாகி விட்டது.
- டாட்டூ மோகம் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
டாட்டூ. இந்த சொல் இன்றைய இளைஞர்களின் மந்திர சொல்லாக மாறி வருகிறது. ஆன்ட்ராய்டு போன் இல்லாத இளைஞர் ஒருவரை கூட காண முடியாது என்ற ரீதியில் தான் இன்றைய டாட்டூ மோகமும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
நமது தாத்தா, பாட்டி போன்ற மூதாதையர்கள் காலத்தில் பச்சை குத்திக்கொள்வது என்பது நம் நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக அந்த காலத்து பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறக்கூடாது என்பதற்காக அதை கைகளில் பச்சை குத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். யாராவது கணவர் பெயரை கேட்டால் கையை காட்டும் அந்த கால பெண்கள் கையை காட்டுவார்கள்.
இது மாற்றம் பெற்று அடுத்து வந்த காலக்கட்டங்களில் கணவர் பெயரை பச்சை குத்தும் நடைமுறை சடங்கு, சம்பிரதாயமாக மாறி போய் இருந்தது. பின்னர் படிப்பறிவு, நாகரிக வளர்ச்சியால் பழங்கால பச்சை குத்தும் மரபு குறைய தொடங்கியது. பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறுவதற்கு தயக்கம் காட்டும் நிலை கடந்து போனது. இவ்வாறு பழங்கால பச்சை குத்தும் நடைமுறை குறைந்து போன அதேவேளையில், அது இன்றைக்கு கால மாற்றத்தில் மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் டாட்டூவாக புது வடிவம் பெற்று விட்டது.
நடிகர், நடிகைகள்
இந்தியாவில் பிரபலமாக பல பாலிவுட் பிரபல நடிகர், நடிகைகள் தங்கள் காதலர்கள் பெயரை டாட்டூவாக குத்திக்கொண்டது டாட்டூவின் மீது இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கியது என கூறலாம். இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்று பலரும் டாட்டூ குத்திக்கொண்டு டாட்டா காட்டுவது ஒரு ஸ்டைலாக தான் மாறி விட்டது.
குறிப்பாக இளம்பெண்கள் தங்கள் அழகுக்கு அழகு சேர்க்க மெகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நாகரிகத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். முதலில் பெயரை மட்டுமே டாட்டூஸ் குத்திய இளைஞர்கள், இளம்பெண்கள் தற்போது கை, கால் தொடங்கி உடலில் பல்வேறு இடங்களில் விதவித வண்ணங்களில் டாட்டூஸ் வரைவது தற்போது பேஷனாகி விட்டது.
அழகானதா? ஆபத்தானதா?
இந்த டாட்டூ குத்துவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக்ஷன் போன்ற பல விதமான தோல் நோய்கள் இந்த டாட்டூவால் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இளைஞர்களின் டாட்டூஸ் மோகம் அழகானதா? அல்லது ஆபத்தானதா? என்று இளைஞர்கள், டாக்டர்கள் கூறிய கருத்துளை காண்போம்.
பக்க விளைவுகள்
பென்னாகரத்தை சேர்ந்த தோல் சிகிச்சை நிபுணா் டாக்டர் முனுசாமி:-
உடலில் டாட்டூ வரைந்து கொள்ளும் ஆசை தற்போது இளைஞர்களிடையே பரவலாக ஏற்பட்டு வருகிறது. இந்த டாட்டூவை உடலில் வரைவதற்கு பயன்படுத்தும் கருவிகள் மூலம் உடலில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. டாட்டூ போடும்போது அதிக வலி ஏற்படும். அந்த வலி சில வாரங்கள் வரை கூட தொடரும். குறிப்பாக பல்வேறு கலர்கள் மற்றும் ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட டாட்டூவை வரைந்து கொள்ளும்போது தோலில் ஒவ்வாமை உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். டாட்டூ வரைந்து கொண்டவர்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு டாட்டூ போட்டு கொண்டவர்களில் பலர் தோல் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறும் நிலை ஏற்படுகிறது. அழகு, நாகரிகம் ஆகியவற்றை விட உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதை இளைஞர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். டாட்டூ போட்டு கொள்வது அவசியமா? என்பது குறித்து சிந்தித்து செயல்பட வேண்டும்.
அழிப்பது எப்படி?
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த டாட்டூ வரையும் கலைஞர் மகேஷ்குமார்:-
பி.சி.ஏ. முடித்துள்ள நான் கடந்த ஓராண்டுக்கு மேலாக டாட்டூஸ் குத்தும் கடை நடத்தி வருகிறேன். இதற்காக பயிற்சி மையத்துக்கு சென்று முறையாக பயிற்சி பெற்றுள்ளேன். டாட்டூஸ் மோகம் பலரிடம் அதிகரித்து தான் வருகிறது. மற்றவர்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்தி தனித்துவமானவர்கள் என்பதை காட்டிக்கொள்வதற்கும், ஒரு செய்தியை வெளிப்படுத்தும் விதமாகவும், மன அமைதிக்காகவும் பலர் டாட்டூஸ் குத்தி கொள்கின்றனர். ஏராளமானவர்கள் தங்களது தாய், தந்தை மற்றும் பிடித்தமானவர்களின் பெயர்களை கைகளில் டாட்டூஸ் குத்தி கொள்கின்றனர். ஒரு சிலர் அவர்களுடைய முகத்தை தனது மார்பு பகுதியில் குத்திக்கொள்கின்றனர். டாட்டூ குத்தும் போது ஒவ்வொரு தோலின் தன்மைக்கு ஏற்றவாறு கலர்களை பயன்படுத்தி வருகிறோம்.
முக்கியமாக ஒவ்வொருவருக்கும் புதிய ஊசியை தான் பயன்படுத்துகிறோம். ஒரு அங்குலம் டாட்டூ குத்துவதற்கு ரூ.600 வரை வாங்கப்படுகிறது. முகம் உள்ளிட்ட பெரிய டாட்டூஸ் வரைவதற்கு சுமார் 4 மணி நேரம் வரை ஆகும். குத்தும் போது லேசாக வலி இருக்க தான் செய்யும். அதன்பிறகு வலி குறைய தொடங்கி விடும். இன்றைய காலக்கட்டத்தில் பிரேக்கப்பிற்கு பிறகு காதலன் அல்லது காதலின் பெயர் உள்ள டாட்டூவை அழிக்க வேண்டும் என்றால் லேசர் உள்ளிட்ட பலவகையான சிகிச்சை முறைகள் உள்ளன. இதனால் பலர் எவ்வித பயமோ, தயக்கமோ இன்றி உடலில் தாங்கள் விரும்பும் இடங்களில் பிடித்தமான டிசைன்களில் டாட்டூ குத்தி கொள்கின்றனர். மேலும் அவற்றை அழிப்பதற்கு பதிலாக அதிலேயே வேறு ஒரு டிசைனை வரைந்து அதை மறைக்க முடியும். முறையாக பயிற்சி பெற்றவர்களிடம் டாட்டூஸ் குத்தினால் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
புதிய ஊசி
சேலம் 5 ரோடு பகுதியை சேர்ந்த மோகன் ராமு:-
இன்றைய உலகில் அனைவரும் சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக கையில் அனைத்து மதத்தையும் குறிக்கும் வகையில் டாட்டூஸ் வரைந்துள்ளேன். மேலும் கழுத்து பகுதியிலும் டாட்டூ வரைந்துள்ளேன். இதன் மூலம் எனக்கு ஒரு மன நிம்மதி இருக்கிறது. தற்போது பெண்கள், இளைஞர்கள் உள்பட பலர் டாட்டூஸ் வரையும் கலாசாரத்தை பின்பற்றி வருகின்றனர். வருங்காலங்களில் டாட்டூ கலாசாரம் மேலோங்கி தான் இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை.
டாட்டூ குத்தும் ஒரு வாரத்திற்கு முன்பே நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். முக்கியமாக டாட்டூ வரையும் கலைஞர்கள் புதிய ஊசியை தான் பயன்படுத்துகிறாரா? என்பதை உறுதி செய்ய வேண்டும். ஏனென்றால் வேறு யாருக்காவது பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தினால் அது தீவிரமான வைரஸ் தொற்றுக்களை உண்டாக்க வாய்ப்புள்ளது. எனவே டாட்டூ குத்தும் போது மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
ஜல்லிக்கட்டு காளை
எருமப்பட்டி பழனிநகரை சேர்ந்த ரஞ்சித்:-
நான் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வருகிறேன். சிறுவயதில் இருந்தே ஜல்லிக்கட்டு காளைகள் மீது எனக்கு பாசம் அதிகம். எனவே நான் ஜல்லிக்கட்டு காளை ஒன்றை வளர்த்து வருகிறேன். எனது காளை நாமக்கல், சேலம், ஈரோடு மாவட்டங்களில் பல்வேறு பரிசுகளை எனக்கு பெற்று தந்து உள்ளது. கடந்த மாதம் சேந்தமங்கலத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் எனது காளைக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக கிடைத்தது. நானும் ஆங்காங்கே நடைபெறும் ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரராகவும் கலந்து கொள்வேன்.
ஜல்லிக்கட்டு காளை மீது அளவுக்கு அதிகமான பாசம் இருந்ததால், எனது காளையையே கையில் டாட்டூ குத்தி கொண்டேன். காளையின் புகைப்படத்தை பார்த்து 4 மணி நேரம் பச்சை குத்தப்பட்டது. அதற்கு கீழ் எனது பெயரையும் எழுதி கொண்டேன். சுமார் 7 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அழியவில்லை. இது எனக்கு மகிழ்ச்சி தருவதாக உள்ளது.
பாதுகாப்பானது
பரமத்திவேலூரில் டாட்டூ கடை நடத்தி வரும் கோபி:-
டாட்டூ மீதான மோகம் இன்றைய இளம் பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. வண்ண, வண்ண டாட்டூக்களை குத்துவது இளம் தலைமுறையினரிடம் புதிய பேஷனாக மாறிவிட்டது. டாட்டூ குத்தினால் அழிக்க முடியாது என பயம் வேண்டாம். கருப்பு மையால் வரையப்பட்ட டாட்டூவை அழிப்பது சுலபம். கலர், கலரான டாட்டூக்களை அழிப்பது கடினமானாலும் தற்போது லேசர் மூலம் டாட்டூக்களை எளிதாக அழிக்க முடியும். பச்சை குத்தி கொள்வதில் நம்மில் பலர் அச்சம் அடைந்து உள்ளோம்.
ஆனால் பச்சை குத்தி கொள்வது நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. பொதுவாக பிடித்தமான பெயர்கள் மற்றும் உருவங்களை பச்சை குத்தி கொள்கின்றனர். தங்களது உணர்வுகளை அவரவர் விரும்பும் விதத்தில் டாட்டூவாக போட விரும்புகின்றனர். டாட்டூ குத்துவது என்பது பச்சை குத்துவதை விட பாதுகாப்பானது. முந்தைய காலங்களில் கூர்மையான ஊசி மூலம் பெயர் மற்றும் உருவங்களை உடலில் விரும்பும் இடங்களில் வரைந்து பின்பு பச்சிலைகளை அரைத்து திரவம் போல் கரைத்து வரையப்பட்ட இடங்களில் ஏற்றப்படும். இந்த பச்சிலை திரவம் வாழ்நாள் முழுவதும் மறையாமல் இருக்கும். ஆனால் இன்றைய தலைமுறையினர் டாட்டூவையே விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம்.
- ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிக்க முடியும்.
அழகிய மற்றும் ஆரோக்கியமான நகங்கள், விரல்களுக்கு கிரீடங்களாக விளங்குகின்றன. நகங்களை நீளமாக வளர்த்து, தங்களுக்கு விருப்பமான வண்ணத்தில் நகப்பூச்சு பூசி அலங்கரிப்பது இளம் பெண்கள் பலருக்கு பிடிக்கும். அதேசமயம், நீண்ட நகங்கள் வளர்ப்பது அனைவராலும் இயலாத காரியம். ஆசையாக வளர்க்கும் நகங்கள் சீக்கிரமாகவே உடைந்து விடுவதால் வருத்தம் கொள்வார்கள். ஒரு சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் நீளமான நகங்களை எளிதாக பராமரிக்க முடியும். அது குறித்து தெரிந்துகொள்வோம்.
* நகங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியம். இதற்காக வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து கொள்ளுங்கள். அதில் நகங்களை 5 நிமிடம் மூழ்க வையுங்கள். பின்பு, பிரஷ் வைத்து மென்மையாகத் தேய்த்தால், நகங்களில் உள்ள அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்கும்.
* அன்றாட சமையலில் பயன்படுத்தும் பூண்டு, நகங்களை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. ஒரு பூண்டுப் பல்லை எடுத்து மேல் தோலை நீக்கி, முனையை சிறிதாக நறுக்கிக் கொள்ளவும். பிசுபிசுப்பாக இருக்கும் அந்தப் பக்கத்தைக் கொண்டு நகங்களின் மேல் நன்றாக தேய்த்து மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து கைகளைக் கழுவவும். இதனைத் தொடர்ந்து செய்து வந்தால் நகங்கள் உடையாமல் உறுதியாக இருக்கும்.
* ஆலிவ் எண்ணெய் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், நகங்களின் வேர்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் நகங்கள் சீராக வளரும்.
* நகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் எலுமிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. நகக்கண்களில் ஏற்படும் 'நகச்சுற்று' போன்ற பிரச்சினைகளையும் இது குணப்படுத்தும். எலுமிச்சையை சிறு துண்டுகளாக நறுக்கி அதைக் கொண்டு நகங்களை மசாஜ் செய்து, 10 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவவும்.
* 'கியூட்டிக்கிள்' எனப்படும் நகங்களின் வேர்ப்பகுதியை காக்க, அதனை வறட்சி அடையாமல் பராமரிப்பது அவசியம். இதற்காக நகங்களைச் சுற்றிலும் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் தடவி வரலாம்.
* புரதம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நகங்கள் வலிமை பெறும். இதற்காக காலை உணவில் பால், முட்டை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
* ரசாயனம் நிறைந்த நெயில் பாலீஷ் ரிமூவர்கள் நகங்களின் வளர்ச்சியை குறைப்பதோடு, அவற்றை வலிமை இழக்கச் செய்து எளிதில் உடைவதற்கு காரணமாகிவிடும். இயற்கையான முறையில் நகப்பூச்சை நீக்குவது நகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
- பெண்களின் அழகை கெடுக்கும் முக்கிய பிரச்சனை கண்களை சுற்றி கருவளையம் வருவது.
- கருவளையத்தை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம்.
நம்மில் பலருக்கு அழகு பற்றிய கவலை அதிகமாவே இருக்கிறது. அதிலும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலர் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானதாக இருக்கிறது.
பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவிடும். எனவே இதனை ஆரம்பத்திலே போக்குவது நல்லதாகும். அந்தவகையில் தற்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம்.
கற்றாழை ஜெல்லை விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவினால் போதும் கருவளையம் உடனடியாக நீங்கும்
விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து குளித்து வர கருவளையம் சரி ஆகும்.
விளக்கெண்ணெய் மற்றும் பாலை நன்றாக கலக்கி கண்களில் உள்ள கருவளையங்களில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் போதும் ஒரு வாரத்தில் கருவளையம் மறையும்.
விளக்கெண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கின் சாறு சேர்த்து தடவினால் கருவளையம் வெகு விரைவில் குணமாகும்.
இரவு தூங்குவதற்கு முன் விளக்கெண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து தடவ வேண்டும். காலையில் மீண்டும் குளித்து வர கருவளையம் மறையும்.
- நக பராமரிப்பில், அறிமுகமாகியிருக்கும் நவீன அழகியல் இது.
- கைவிரல் நகம் மற்றும் கால் விரல் நகம் இவ்விரண்டிலும் இதை செய்ய முடியும்.
பேஷன் உலகில் அன்றாடம் புதுமைகள் புகுந்துக்கொண்டே இருக்கின்றன. உடலையும், முகத்தையும் அழகுபடுத்துவது என்பதை தாண்டி... உடலின் ஒவ்வொரு பாகங்களையும் அழகுபடுத்தும் புதுப்புது அழகுக்கலைகள் அறிமுகமாகி கொண்டே இருக்கின்றன. அந்தவகையில், 'நெயில் எக்ஸ்டென்ஷன்' எனப்படும், செயற்கை நக உருவாக்கமும் அழகுக்கலை பிரிவில், புதிதாக இணைந்திருக்கிறது.
அது என்ன அழகுக்கலை, எப்படி செய்யப்படுகிறது... போன்ற கேள்விகளுடன், சென்னை வடபழனியை சேர்ந்த விஜயலட்சுமியை சந்தித்தோம். 'நெயில் எக்ஸ்டென்ஷன்' எக்ஸ்பெர்ட்டான இவர், அந்த கலைப்பற்றிய பல விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.
* 'நெயில் எக்ஸ்டென்ஷன்' என்றால் என்ன?
பொதுவாக நகத்தை அழகுபடுத்துவதும், அலங்கரிப்பதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் நெயில் எக்ஸ்டென்ஷன் என்பது, அழகான தோற்றத்திற்காக, செயற்கை நகங்களை உருவாக்குவது. பெண்களின் தேவைக்கு ஏற்றார்போன்ற அளவுகளில், செயற்கை நகங்களை உருவாக்கி, அதை அவர்களுக்கு பிடித்த முறையில் அழகுபடுத்த முடியும். நக பராமரிப்பில், அறிமுகமாகியிருக்கும் நவீன அழகியல் இது.
* நெயில் எக்ஸ்டென்ஷன் பற்றிய புரிதல் டீன்-ஏஜ் பெண்கள் மத்தியில் இருக்கிறதா?
அதிகமாகவே இருக்கிறது. அவ்வப்போது டிரெண்டிங்கில் இருக்கும் அழகுக்கலைகளை டீன்-ஏஜ் பெண்கள் முயன்று பார்க்க ஆவலாக இருக்கிறார்கள். அந்தவகையில், நெயில் எக்ஸ்டென்ஷன் கல்லூரி மாணவிகள் தொடங்கி அலுவலகம் செல்லும் பெண்கள் வரை எல்லோரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நிறைய சின்னத்திரை-வெள்ளித்திரை நடிகைகள் நெயில் எக்ஸ்டென்ஷன் செய்திருக்கிறார்கள். நானே, பல நட்சத்திரங்களுக்கு புதுமையான டிசைன்களை செய்து கொடுத்திருக்கிறேன்.
* நெயில் எக்ஸ்டென்ஷன் எப்படி செய்கிறீர்கள்?
கைவிரல் நகம் மற்றும் கால் விரல் நகம் இவ்விரண்டிலும் இதை செய்ய முடியும். செயற்கையாக நகம் உருவாக்கி, அதை புதுப்புது வழிகளில் அழகுபடுத்த முடியும். அதாவது இயல்பான நகப்பூச்சு அலங்காரமும் செய்யலாம். அழகழகான டிசைன்களை கொண்டு, வண்ணம் அல்லது ஓவியம் வரையவும் முடியும். இல்லையென்றால், போட்டோக்களை கூட செயற்கை நகங்களாக மாற்றி அழகாக்க முடியும்.
* செயற்கை நகம் என்பதால் உறுதிதன்மை எப்படி இருக்கும்?
நகத்தின் அடிப்பாகத்தில் இருந்தே செயற்கை நக உருவாக்க பணிகள் நடைபெறும் என்பதால், உறுதியாகவே இருக்கும். மேலும் செயற்கை நகத்தையும், நக பகுதியையும் பசை கொண்டே ஒட்டுவதால், நீண்ட நாட்களுக்கு அழகாக இருக்கும்.
* என்னென்ன விசேஷங்களில் இதை விரும்பி செய்கிறார்கள்?
திருமணம், வளைகாப்பு, நிச்சயதார்த்தம் போன்ற விசேஷங்களில் இவை அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும் மணமகள் என்பதை தாண்டி மணமகள் தோழிகள், உறவினர்கள் என அனைவருமே, இந்த அழகுக்கலையை விரும்புகிறார்கள்.
* இவை எதிர்காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்குமா?
ஆம்..! நிச்சயமாகவே மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கும். ஏனெனில், நெயில் எக்ஸ்டென்ஷன் என்பது, இப்போது டிரெண்டிங்கில் இருக்கிறது. இதுபற்றிய தேடல் இளம் பெண்கள் மத்தியில் உருவாகி இருப்பதால், இதை முயன்று பார்க்கவும், பயிலவும் நிறைய பெண்கள் ஆசைப்படுவார்கள்.
* உங்களுக்கு கிடைத்த விருது, கவுரவங்களை பற்றி கூறுங்கள்?
ஒருசில விருது வாய்ப்புகள் வந்தபோதும், வெளியூர்களில் இருந்ததால் அவற்றை தவறவிட்டிருக்கிறேன். என்றபோதும், அதைவிட நான் நக அழகு செய்து, அதன் மூலம் நிறைய இளம் பெண்கள் மனம் பூரித்ததை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.
- தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.
- கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
கோடை காலத்தில் வெயிலின் நேரடித்தாக்கம் அதிகமாக இருப்பதால், முதலில் மனிதர்களுக்கு சருமத்தை அதாவது தோல்களை தான் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே தோல்களை முதலில் பராமரிப்பது அவசியம்.
தினமும் இரண்டு முறை குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். அடிக்கடி சுத்தமான நீரினால் முகத்தை கழுவ வேண்டும். பருத்தி ஆடைகள் உடல் முழுவதும் மூடிக்கொள்ளும் வகையில் உடுத்திக்கொள்ள வேண்டும். அதிக வாசனை உள்ள சோப், திரவியங்கள், பவுடர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
காலை 10 மணி முதல் மாலை 3 மணிக்குள் வெளியே வெயிலில் செல்ல நேரிட்டால் தொப்பி, குடை போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். கோடை வெயில் சிறுவர், சிறுமிகளை அதிகமாக பாதிக்கக்கூடும், எனவே அவர்களை பாதுகாக்க வேண்டும். கோடை காலத்திற்கு ஏற்ற உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்.
அதாவது கீரை, இளநீர், நுங்கு, மோர் மற்றும் இதர பழச்சாறுகள், நீர் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். கார உணவு வகைகள் மற்றும் மதுபானங்களை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அல்லது குறைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கோடை காலத்தில் ஏற்படும் சரும நோய்களை தவிர்க்கலாம்.
மேற்கண்ட தகவலை தோல் சிகிச்சை சிறப்பு நிபுணர் தேவ்ஆனந்த் தெரிவித்துள்ளார்.
- சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது
- கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தை குறைக்கிறது.
நமது சருமத்தை சுத்தமாகவும், அழகாகவும் காட்டுவதற்கு நாம் பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் கடைகளில் கிடைக்கும் தயாரிப்புகளும் நமது சருமத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
சருமத்தை அழகாக பராமரிக்க, இன்று ரோஜா பூவால் செய்யப்பட்ட ஒரு ஸ்க்ரப் பற்றி பார்க்கவிருக்கிறோம், இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி நல்ல பளபளப்பைக் கொடுக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
ரோஜா பூ - 1 கப்(உலர்ந்தது )
பொடித்த சர்க்கரை- 1 டீஸ்பூன்
தேன் - 2 டீஸ்பூன்
ரோஸ் வாட்டர் - 3 டீஸ்பூன்
தண்ணீர் - 1 டீஸ்பூன்
முதலில் உலர்ந்த ரோஜா இதழ்களை மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ரோஜா, பொடித்த சர்க்கரை, தேன், ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் நன்றாக தேய்த்து பின் முகத்தில் 10 நிமிடம் விடவும்.
10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். உங்கள் முகம் அழகிய பூ போல மலந்திருப்பதை பார்க்க முடியும்.
ரோஸ் வாட்டர் அனைத்து சரும வகைகளுக்கும் நன்மை பயக்கும். இது நமது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, சுருக்கங்களைக் குறைக்கிறது மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தையும் குறைக்கிறது. தினமும் இரவில் தூங்கும் முன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்திற்குப் புதிய பொலிவைத் தரும்.
- இது மிகவும் பொதுவான பிரச்சனையாகும்.
- சில பழக்கவழக்கங்கள் நம் உதடுகளை கருமை மாற்றும்.
பிக்மென்டேஷன் என்பது தோல் தொடர்பான பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். இதில், நமது சருமம் கருமையாகி புள்ளிகள் ஏற்படும் அல்லது கருமையான திட்டுகள் வரும்.
தோல் பிக்மென்டேஷன் போலவே, உதடு பிக்மென்டேஷனும் (lip pigmentation) மிகவும் பொதுவான பிரச்சனையாகும், மேலும் ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இதில் பாதிக்கப்படலாம். ஹெல்த்லைன் படி, உதடுகள் கருமையாக இருப்பது ஹைப்பர் பிக்மென்டேஷனின் விளைவாக இருக்கலாம். இது மெலனின் அதிகமாக இருப்பதால் ஏற்படும் பொதுவாக பாதிப்பில்லாத நிலை.
மாசு, சூரியக் கதிர்கள் போன்ற பல காரணங்களால் உதடுகள் நிறம் மாறலாம். சில பழக்கவழக்கங்கள் நம் உதடுகளை கருமையாக மாற்றினாலும், பிக்மென்டேஷனை மாற்றுவதற்கான வழிகள் இன்னும் உள்ளன.
லிப் பிக்மென்டேஷன் மிகவும் பொதுவானது, சரியான சிகிச்சைகளைப் பயன்படுத்தி இதை எளிதில் மாற்றியமைக்க முடியும்.
* பகலில் வெளியே செல்லும் முன் உதடுகளில் சன்ஸ்கிரீன் போடவும்.
* உங்கள் உதடுகளை கடிக்கவோ அல்லது நக்கவோ கூடாது, ஏனெனில் இது வீக்கத்தால் தூண்டப்பட்ட ஹைப்பர் பிக்மென்டேஷனை ஏற்படுத்தும்.
* வாரத்திற்கு இரண்டு முறை கெமிக்கல் பீல் பயன்படுத்தவும்.
* வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை லேசான எக்ஸ்ஃபோலியேட்டர் பயன்படுத்தவும்.
எந்தவொரு க்ரீம் அல்லது சீரம் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யவும், எந்த சிகிச்சையையும் தொடங்கும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
- இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது.
- கற்றாழை ஜெல் சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது.
கற்றாழையில் முடி வளர்ச்சியை தூண்டும் என்சைம்கள் உள்ளன.கற்றாழை நமக்கு இயற்கை தந்த மாமருந்து. அவை தலையில் உள்ள இறந்த செல்களை அழித்து புது செல்களை வளர செய்கின்றன. எப்போதும் தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது.
கூந்தல் உதிர்வு, பொடுகு, இளநரை, கூந்தல் வளர்ச்சி, வறண்ட கூந்தல் போன்ற பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்வு தரும் தாவரம் கற்றாழை. கற்றாழையில் கூந்தலுக்கு அத்தியாவசியமான 100 விதமான போஷாக்குகள் அடங்கியுள்ளன. கற்றாழை ஜெல்லில் உள்ள புரோட்டியோலைட்டிக் என்சைம், புரோட்டீன், விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கூந்தலுக்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து மயிர்கால்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
இயற்கையாகக் கிடைக்கக்கூடிய கற்றாழையில் இருந்து எடுத்த கற்றாலை ஜெல் மிக நல்லது. தலையில் இருக்கும் சிறு புண்களை ஆற்றவும் வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது. தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
தலையில் அதிகப்படியான எண்ணெயை அகற்றி தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது. ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை குறைக்க கற்றாழை பயன்படுகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் பூசுவதன் மூலம் சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது.
கற்றாழை ஜெல் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மையை கொண்டது. அதனால் அதை தலையில் தடவும் போது வெப்பத்தை குறைத்து முடி உதிர்வதைத் தடுக்கிறது. முடியை மென்மையாக்கவும் வலிமையாக்கவும் கற்றாழை பயன்படுகிறது. தலையில் அதிக எண்ணெய் சுரத்தல் அல்லது வறட்சியாக இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு கற்றாழை ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.
முடி உதிர்தலை தடுப்பதோடு மட்டுமல்லாமல் முடிக்கு அழகையும் ஆரோக்கியத்தையும் கற்றாழை தந்து, முடியை பாதுகாக்கிறது. இது தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு போஷாக்கு கொடுத்து கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது. கற்றாழை தலை முடிக்கு ஒரு இயற்கையான கண்டிஷனராக பயன்படுகிறது. எனவே கூந்தலை சிக்கல் இல்லாமல் பராமரிக்க எளிதாகும். இது கூந்தல் உதிர்வை குறைத்து கூந்தல் அடர்த்தியாக வளர பயன்படுகிறது.
வாரத்தில் ஒரு நாள் வீதம் பத்து முறை இந்த ஹேர் பேக்கை போட்டு விட்டு உங்களுடைய தலைமுடியில் ஏற்படும் நல்ல மாற்றத்தை தெரிந்து கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் இதை இரண்டையும் நன்றாக கலந்து மெதுவாக தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும். பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பட்டு போன்ற கூந்தலைப் பெறலாம். இது கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரிக்கும்.
ஒரு சிறிய கிண்ணத்தில் கற்றாலை ஜெல் உங்களுக்கு தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு 1/4 கப் கற்றாலை ஜெல் இருந்தால் அதில், 2 ஸ்பூன் விளக்கெண்ணெய் (Castro-oil) சேர்த்து நன்றாக கலந்து இந்த ஜெல்லை உங்களுடைய தலையின் மண்டையோட்டில் படும்படி, நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
அதாவது மயிர்க்கால்களில் இந்த கற்றாலை ஜெல் நன்றாக படவேண்டும். அதன் பின்பு முடிக்கு மேல் பக்கம் மேலிருந்து கீழ் பக்கம் வரை முடி முழுவதும் இந்த ஜெல்லை பூசிக் செய்து கொள்ளவும். 30 நிமிடத்திலிருந்து 1 மணி நேரம் வரை இந்த ஜெல் உங்களுடைய தலையில் ஊறலாம். அதன் பின்பு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு தலைக்கு குளிக்கவும். இப்படி வாரத்தில் ஒருநாள் செய்தாலே போதும். மாதத்தில் 4 நாட்கள் கணக்கு வரும். மொத்தமாக 3 மாதத்தில் உங்களுடைய தலைமுடியில் வித்தியாசத்தை காண முடியும். விளக்கெண்ணெய்க்கு பதிலாக தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெய் அல்லது முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கொள்ளலாம்.
ஹேர் பேக்கை பூசி கொள்வதற்கு முன்பாக தலையில் இருக்கும் சிக்கு அனைத்தையும் எடுத்து விட வேண்டும். தலையில் கட்டாயமாக நீங்கள் எப்போதும் தலைக்கு பயன்படுத்தும் எண்ணெயை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் பின்புதான் ஹேர் பேக் அப்ளை செய்ய வேண்டும்.
- ஆரஞ்சுதோலில் சருமத்தை பாதுகாக்கும் பல்வேறு சத்துக்கள் உள்ளது.
- இன்று ஆரஞ்சுதோலை சருமத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.
ஆரஞ்சு பழத்தோலை கழுவி சுத்தமாக காய வைத்து, அதனை பவுடராக அரைத்துக் கொள்ளவும்.இதனை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.இதனை பயன்படுத்தி பல முறைகளில் முகத்திற்கு பயன்படுத்தி முகத்தை அழகாக்கலாம்.
ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 2 மே.கரண்டி , 1 மே.கரண்டி தேன் ,1 மே.கரண்டி தேங்காய் எண்ணெய் மூன்றையும் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின்னர் முகத்தை இளஞ்சூடான நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர ,பொலிவான முக அழகு கிடைக்கும்.
ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 1 மே.கரண்டி , தயிர் 2 மே.கரண்டி இரண்டையும் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் அப்படியே இருந்து விட்டு , முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி , அழகான தெளிவான முக அழகு கிடைக்கும்.
ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 2 மே.கரண்டி, பால் 1 மே.கரண்டி , 1 மே.கரண்டி தேங்காய் எண்ணெய் மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர முகத்திற்கு அழகான நிறம் கிடைப்பதோடு சருமத்தில் உள்ள மருக்கள்,கரும்புள்ளிகள், நீங்கி விடும்.
2 மே.கரண்டி பாலில் 5 பாதாம் பருப்புகளை சேர்த்து அரைத்து அதனுடன் 1 மே.கரண்டி அளவு ஆரஞ்சு பழத்தோல் பவுடரையும் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 15 -20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். சருமத்துக்கு ஆரோக்கியம் கொடுப்பதோடு , இது முகத்தை பளிச்சிட வைக்கும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்