என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடைகாலம்"

    • புதுவையில் 400-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன.
    • கோடைகாலம் தொடங்கினாலே பீருக்கு கிராக்கி ஏற்படும்.

    புதுச்சேரி:

    பிரெஞ்சு ஆட்சி காலத்தில் இருந்தே மது வகைகளுக்கு புகழ்பெற்ற பகுதியாக புதுச்சேரி விளங்குகிறது. விலை குறைவு, விதவிதமான மது வகைகள், வெளிநாட்டு மதுபானங்கள் போன்றவை புதுச்சேரியை நோக்கி மதுப்பிரியர்களை இழுக்கச் செய்கிறது.

    புதுவையில் 400-க்கும் மேற்பட்ட மதுபானகடைகள் உள்ளன. புதுவையில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், ஜின், ஓட்கா, டக்கீலா என 1000-க்கும் மேற்பட்ட விதவிதமான பிராண்டு மதுவகைகள் விற்பனையாகிறது.

    புதுவையில் கிடைக்கும் மதுரகங்களை ருசி பார்க்க என நாட்டின் பல பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.

    இதேபோல் புதுவையில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பிராண்டுகள் உள்பட 35 வகையான பீர்கள் முழு பாட்டில்களில் கிடைக்கிறது.

    டின் மற்றும் பின்ட் பாட்டில்களிலும் பீர் சிறிய அளவிலும் கிடைக்கிறது. புதுவையில் பீருக்கு என தனியான எக்ஸ்குளூசீவ் பார்கள் உள்ளது.

    கோடை காலம் வந்து விட்டால் மது பிரியர்கள் வெப்பத்தின் தாக்கம், நாவறட்சியில் இருந்து தப்பிக்க பீருக்கு மாறுவது வழக்கம். புதுவையில் கடந்த மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி விட்டது. பகல் நேரங்களில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் அவதித்குள்ளாகி உள்ளனர்.

    கோடைகாலம் தொடங்கினாலே பீருக்கு கிராக்கி ஏற்படும். இதனால் மதுகடை உரிமையாளர்கள் பீர் கேஸ்களை அதிக அளவில் வாங்கி விற்பனைக்கு ஸ்டாக் செய்கின்றனர். வழக்கமான காலத்தை விட கோடை காலத்தில் 3 முதல் 5 மடங்கு பீர்கள் விற்பனையாகிறது.

    வாடிக்கையாளர்களை திருப்திபடுத்த ஒவ்வொரு கோடையிலும் புதிய பீர்களும் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் அதுபோல் புதிய ரக பீர்கள் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ.100 முதல் ரூ.250 வரையில் விதவிதமான பீர்கள் விற்பனை செய்யப்படுகிறது.வெயில் தாக்கம் அதிகரிப்பால் பீர் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பொதுவாகவே பீர்களை சில் கூலிங்காக குடிப்பது தனி ருசி தரும். இதனால் பீர் கேட்கும் வாடிக்கையாளர்கள் அனைவரும் சில் கூலிங் பீர் கேட்கின்றனர். கொஞ்சம் குறைவான சில் கூலிங் இருந்தாலும் வாடிக்கையாளர் பீரை மாற்றி புல் சில் தரும்படி கேட்கின்றனர்.

    இதனால் கூலர்களில் தொடர்ந்து பீர்களை போட்டு கடை விற்பனையாளர்கள் நிரப்பி வருகின்றனர். கடைகளில் உள்ள கூலர்களை விட வாடிக்கையாளர் கோரிக்கை அதிகம் என்பதால் விற்பனையாளர்கள் திணறுகின்றனர்.

    சில கடைகளில் பீரை கூலிங் செய்ய அதிக கூலர்கள் இல்லாதது சில் கூலிங் பீருக்கு தடுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சில் கூல் பீர் கிடைப்பதில்லை என்ற புகார் வாடிக்கையாளர் மத்தியில் எழுந்துள்ளது.

    • ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது
    • கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.

    மனிதர்களின் பழமையான உணவுப்பொருள்களில் முக்கியமானது, வெங்காயம். இது ரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை உடையது என்பதை அறிந்த பண்டைய கிரீஸைச் சேர்ந்த வீரர்கள் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட்டார்கள்.

    ரோமை சார்ந்த மல்யுத்த வீரர்கள் உடல் அழகு கூடும் என்பதற்காக வெங்காயத்தை அரைத்து உடலில் பூசி கொண்டு இருந்திருக்கிறார்கள்.

    வெயில் காலம் வந்து விட்டது. அங்கும் இங்கும் அலைந்து திரிந்து வியர்வையுடன் வீடு திரும்பும் அனைவரும் வெங்காயத்தை அதிகமாக சாப்பிட வேண்டும்.


    ஒரு வெங்காயத்தை பொடிதாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் நீர்க்கடுப்பு வராது. குழந்தைகளை வெப்பத்தில் இருந்து காப்பாற்ற அவர்களுக்கு வெங்காயத்தை மோரில் கலந்தும் நெய்யில் வறுத்தும் சாப்பிட கொடுக்கலாம். இதன் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை காப்பாற்றலாம்.

    வெங்காயத்தை சிறிதளவு தினமும் பச்சையாக சாப்பிட்டு வருவதால் நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைகின்றது. வெங்காயத்தில் உள்ள சல்பர் சத்தானது ரத்தத்தை சுத்தம் செய்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

    வெங்காயத்தில் இருக்கும், அலர்ஜியை எதிர்க்கும் தன்மை சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் இருந்து நம்மை காக்கிறது. அண்டிமிக்ரோஃபியல் என்னும் சத்து நாம் உண்ணும் உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகளை, வயிற்றில் சரி செய்கிறது.

    பைட்டோ கெமிக்கல் எனும் சத்து அல்சரை தடுக்கிறது. நம் குடலில் நல்ல பாக்டீரியாக்களை வளரச் செய்ய கரையும் நார்ச்சத்தானது உதவி செய்கிறது. ஆன்டி-செப்டிக் தன்மையானது காச நோயை வரவிடாமல் தடுக்கிறது.

    நம் உடம்பிற்கு தீங்கு விளைவிக்கும் டாக்சின் என்ற நச்சை இது கட்டுப்படுத்துகிறது. இதனால் நம் உடலில் உள்ள ரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

    நாம் உடலிலிருந்து மலம் வெளியேறுவதில் சிரமம் இருந்தால் அந்த சமயம் ஆசனக்கடுப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது உடல் உஷ்ணத்தால் ஏற்படக் கூடியது. வெங்காயத்தை வதக்கி அதை நாம் சாப்பிடும் போது நம் உடல் உஷ்ணம் குறைந்து, ஆசனக் கடுப்பும் நீங்கிவிடும். மலம் சுலபமாக வெளியேறும்.


    வெள்ளை வெங்காயத்தை வதக்கி தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கிவிடும்.

    நம் மூளையின் செயல் திறனை அதிகப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது. நம் உடலையும், மூளையையும் தேற்றும் ஒரு மருந்தாக இது பயன்படுத்தப்படுகிறது.

    • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக ஜிகரெண்டா மலர்கள் பூத்து குலுங்குகிறது.

    கொடைக்கானல்:

    சர்வதேச சுற்றுலாத்தலமான கொடைக்கானலின் இயற்கை அழகினை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொடைக்கானலில் கோடைகாலத்தை வரவேற்கும் விதமாக கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளை புன்னகையோடு வரவேற்கும் விதமாகவும் மலைச்சாலைகளின் இருபுறமும் பூத்துகுலுங்கும் ஜிகரெண்டா மலர்கள் வெகுவாக கவர்ந்து வருகிறது.

    கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு மற்றும் பழனி செல்லக்கூடிய சாலை ஓரங்களில் உள்ள இந்த மரங்களில் இளநீல ஊதா நிறத்தில் மரம் முழுவதும் பூக்கள் பூத்து குலுங்குகிறது. இந்த பூக்கள் கோடைகாலத்தை வரவேற்கும் வகையில் மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் மட்டுமே பூக்கக்கூடிய பூக்களாகும். தற்போது இவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கும் விதமாக பூத்து குலுங்குகிறது.

    • சிறப்பு ரெயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.
    • தெற்கு ரெயில்வேயில் 20 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    புதுடெல்லி:

    இந்த ஆண்டு கோடை காலத்தில் ரெயில் பயணிகளின் வசதிக்காகவும், பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் 217 சிறப்பு ரெயில்கள் மூலம் கூடுதலாக 4010 சிறப்பு போக்குவரத்துக்கு இந்திய ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    இந்த சிறப்பு ரெயில்கள், நாடு முழுவதும் உள்ள முக்கியமான இடங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட உள்ளது.

    அதிகபட்சமாக தென்மேற்கு ரெயில்வேயில் 69 சிறப்பு ரெயில்களும், தென்மத்திய ரெயில்வேயில் 48 சிறப்பு ரெயில்களும், தெற்கு ரெயில்வேயில் 20 சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட உள்ளன.

    இருக்கைகளை முடக்கிவைத்தல், அதிக கட்டணம் வசூலித்தல், இடைத்தரகர் நடவடிக்கை போன்ற முறைகேடுகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    • பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.
    • கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது.

    திருவாரூர்:

    நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியை சோ.கமலசுந்தரி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

    பழங்கள் நமது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதவை.

    நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள் என்று சொல்லப்படும் உயிர்சத்துக்கள் மற்றும் தாது உப்புகளை நாம் பழங்கள் உண்பதன் மூலம் பெற முடியும்.

    ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதனும் குறைந்தபட்சம் 150 கிராம் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிவித்துள்ளது.

    பழங்கள் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

    உற்பத்தி செய்யப்பட்ட பழங்கள் சந்தைக்கு விற்பனைக்கு வரும் போது அவற்றின் விலை அதிகமாக காணப்படுகிறது.

    மேலும் சரியான சேமிப்பு கிடங்கு வசதிகள் இல்லாததால் சந்தைக்கு விற்பனைக்காக வரும்போது அவற்றின் தன்மை குறைந்துவிடுகிறது.

    மேலும் கோடை காலத்தில் தர்பூசணி, திராட்சை, வாழைப்பழம், பப்பாளி, தக்காளி போன்ற பழங்கள் அதிக சேதம் அடைகின்றது. பழச்சாறு உள்ளிட்ட பானங்கள் வடிகட்டிய பழகூலுடன், சர்க்கரை, சிட்ரிக் அமிலம் சேர்த்து தயார் செய்வதன் மூலம் பானங்களை கெடாமல் வைத்திருக்க முடியும்.

    இதற்கான பயிற்சிகள் அனைத்தும் வேளாண்மை அறிவியல் நிலையத்தால் வழங்கப்படுகிறது.

    ஒவ்வொரு வேளாண் விளைப்பொருட்களுக்கு ஏற்றவாறு பல்வேறு தொழில்நுட்பங்கள் கற்று தரப்படுகின்றது.

    ஆர்வமுள்ளவர்கள் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் நீர் மோர் பந்தல் நடந்தது.
    • மாவட்ட தலைவர் தரணி முருகேசன் திறந்து வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் பா.ஜ.க. சார்பில் கோடை கால நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. இதனை மாவட்ட தலைவர் தரணி முருகேசன் திறந்து வைத்தார். மாநில பொதுச் செயலாளரும், பெருங்கோ ட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம், தேசிய பொது குழு உறுப்பினர் சுப.நாகராஜன், மாவட்ட பார்வையாளர் முரளிதரன், ஒன்றிய கவுன்சிலர் எஸ்.முருகன், மாநில மகளிரணி துணை தலைவி கலா ராணி, செயலாளர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் பிரவீன், ராமச்சந்திரன், ரஜினிகாந்த், மாவட்ட பொறுப்பாளர்கள் ஆத்மா கார்த்திக், மணி மாறன், பவர் நாகேந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • 50 ஆயிரம் எக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.
    • கிழக்கு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    உடுமலை :

    உடுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 50 ஆயிரம் எக்டேர் பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது.தென்னையில் இருந்து தேங்காய் உற்பத்தி மட்டுமின்றி பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரித்து ஏற்றுமதியும் செய்யப்படுகிறது.அவ்வ கையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இளநீர், கிரீம், ஜாம், சிப்ஸ், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

    இது ஒருபுறமிருக்க சிலர் தென்னை ஓலைகளில் இருந்து தடுக்கு பின்னும் தொழிலில் ஈடுபட்டும் வருகின்றனர்.அதன்படி ஜல்லிப்பட்டியில், நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த தொழிலில் ஆர்வம் காட்டுகின்றனர். நாள் ஒன்றுக்கு தனி நபர் ஒருவர் 100 தடுக்கு வீதம், 2,000 ஆயிரம் தடுக்குகள் வரை பின்னுகின்றனர். இவை கிழக்கு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

    இது குறித்து பணியா ளர்கள் கூறுகையில், கூரை நெய்தல் மட்டுமின்றி, கோழிப்பண்ணைகளில் அதிகளவில், தடுக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.தற்போது, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், குளிர்ச்சியை உண்டாக்கும் தடுக்கினை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் பந்தல் அமைக்கப்படுகிறது. விற்பனையும்சற்று அதிகரிக்கிறது என்றனர்.

    • மதுரையில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நடந்தது.
    • விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    மதுரை

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்ட பிரிவின் சார்பில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் ரேஸ்கோர்ஸ் எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் 15 நாட்கள் நடந்தது. இதில் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து.

    கையுந்துபந்து, வளைகோல்பந்து, கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் இலவசமாக நடத்தப்பட்டது. பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு காலை முட்டையும், மாலையில் பிஸ்கெட், கண்டல் வழங்கப்பட்டது. பயிற்சி முகாமின் நிறைவு விழா நடந்தது.

    மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, வரவேற்றார். 6-வது பட்டாலியன் தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். முன்னாள் மண்டல முதுநிலை மேலாளர் முருகன், மதுரை மாவட்ட நீச்சல் கழக செயலாளர் கண்ணன், மண்டல இந்திய வங்கி முதன்மை மேலாளர் அண்ணாமலை, இந்தியன் வங்கியின் மாவட்ட கோர்ட்டு கிளை மேலாளர் பாலகுமார், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று 202 வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். விளையாட்டு விடுதி மேலாளர் கண்ணன் நன்றி கூறினார்.

    • நரிக்குடி ஒன்றியம் சார்பில் கோடைகால சுற்றுலாவுக்கு புறப்பட்டனர்.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவ லர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் அகத்தாகுளம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகவள்ளி சீனிவாசன் தலைைமயில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு நர்கள், தூய்மைப்பணியாளர்கள், பணித்தள பொறுப்பாளர்கள், நூலகர் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோர்களை ஒருங்கிணைத்து நரிக்குடி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அகத்தாகுளம் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கோடைகால சுற்றுலாவுக்கு புறப்பட்டனர். சுற்றுலா வாகனத்தை நரிக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி (கி.ஊ) வழியனுப்பி வைத்தார். இதில் ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவ லர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது.
    • அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது.

    தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வெயில் வாட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது. கோடைகாலத்தில் மாணவர்களுக்கு நோய் பரவுதலுக்கு வாய்ப்புகள் அதிகம். அம்மை போன்ற நோய் அதிகளவில் கோடைகாலத்தில் பரவுகிறது. இதனை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம். மாணவர்கள் கோடைகாலத்தில் அதிகளவு நீர் அருந்த வேண்டும். இதனால் மாணவர்களுக்கு வரும் பெரும்பாலான நோய்கள் தடுக்கப்படுகிறது.

    ஆடை தேர்ந்தெடுப்பிலும் மிக கவனமாக இருக்க வேண்டும். பெரும்பாலும் பருத்தியால் ஆன மெல்லிய ஆடைகளை அணிவது மிகவும் நல்லது. கருப்பு நிறத்திலான ஆடைகளை தவிர்ப்பது நல்லது. கூடுமானவரை மாணவர்கள் பகல் நேரத்தில் வெளியில் சென்று விளையாடுவதை தவிர்க்க வேண்டும். அதிக வெயிலின் தாக்கத்தினால் உடலில் ஒவ்வாமை பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

     வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதனை சமாளிக்க சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், கரும்புச்சாறு, நுங்கு, தர்பூசணி போன்ற இயற்கையான உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

    குளிர்சாதன பெட்டியில் வைத்து நீரை அருந்தாமல் மண்பானையில் உள்ள நீரை அருந்துவது உடலுக்கு குளிர்ச்சியை அதிகரிக்கும்.

    கோடைகால விடுமுறையில் நேரத்தை டி.வி., மொபைல் போன் பார்ப்பது என வீணடிக்காமல் கோடைகால பயிற்சி வகுப்புகள், கணினி வகுப்புகள், நீச்சல் பயிற்சி போன்ற வகுப்புகளில் சேரலாம். காலை நேரத்தில் மெல்லிய சூரிய ஒளிக்கதிர்கள் படும் இடத்தில் நிற்பதால் வைட்டமின் டி அதிகளவில் உடம்பில் உற்பத்தி ஆகிறது.

    மேலும் சிறிய அளவிலான உடற்பயிற்சிகளை செய்வதால் உடலும், மனமும் மேம்படுகிறது. காலையும், மாலையும் இருவேளைகளிலும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் உடலை சுத்தமாக வைத்திருப்பதுடன் புத்துணர்வையும் அளிக்கிறது.

    கோடை காலத்தில் செய்ய வேண்டிய முதல் முக்கிய விஷயம், நிறைய தண்ணீர் அருந்துவது; நாம் பேசிய மூன்று மருத்துவர்களும் குறிப்பிட்டு கூறிய முதல் செய்தி இது; அதிகப்படியான நீர்ம உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும் எலுமிச்சை சாறு, ஆரஞ்சு அல்லது பிற பழ சாறுகளை எடுத்து கொள்ளலாம்.

    அதிகப்படியான வியர்வை வெளிவருவதால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க மோரில் உப்பு போட்டு அருந்துவது சிறப்பாக இருக்கும். மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும், கறுப்பு மற்றும் பிற பிரகாசமான நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் அவைகளைத் தவிர்த்து, வெள்ளை போன்ற நிறங்களில் உடைகள் அணியலாம்.

    பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு. முடிந்தவரை உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்கலாம். அவ்வாறு வெளியே செல்ல நேர்ந்தால் குடை அல்லது குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்லலாம்.

    ஜங்க் ஃபுட் எனப்படும் சிறு தீனிகளை பொதுவாக தவிர்ப்பது நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் அதை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளுக்கு கோடைகால வயிற்றுப்போக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள் அதிகமாக உள்ளன; எனவே சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.

    முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் போவதை தடுக்க தண்ணீர் எடுத்து கொள்வதை தவிர்ப்பார்கள், ஆனால் வயதின் காரணமாக அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு குறைந்து விடும் எனவே நீர்ச்சத்து குறைபாடு, மிக குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை ஏற்பட கூடிய வாய்ப்பு உள்ளதால் குறைந்தது 2-3 லிட்டர் நீரை பருக வேண்டும்.

    இருதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு உடைய நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப் படி நீர் அருந்த வேண்டும்.

    நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்; கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால் அது ஒரு சிறந்த உணவாக இருக்கும்; தர்பூசணி போன்ற நீர் பழங்களையும் அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.

    நீரழிவு நோயாளிகளுக்கு, பசி உணர்வு குறைந்து காணப்படும் எனவே அதற்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றில், மருத்துவர்களின் பரிந்துரையுடன் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.

    கோடை காலத்தில், குழந்தைகளுக்கு வியர்வைக் கட்டிகள் மற்றும் வேர்க்குருகள் அதிகமாக வர வாய்ப்புள்ளது; அவ்வாறு வருவதை தடுக்க உடலை சுத்தமாக வைத்து கொள்வது மிகவும் அவசியம். மேலும் அவற்றின் மீது பவுடர்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை வியர்வை துவாரங்களை அடைத்து கொண்டும் மேலும் பிரச்சனைகளை உருவாக்கக் கூடும்.

    அடிக்கடி முகம் கழுவது இரண்டு முறை குளிப்பது என்று சுத்தமாக இருக்க வேண்டும்; சிறிது வெதுப்பான நீரில் குளிப்பது சிறந்ததாக இருக்கும். குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது.

    கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் அதிகமாக ஏற்படும் என்பதால் வெளிப்புற உணவுகளில் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்தமாக இருக்கக்கூடும் என்று நாம் உறுதியாகக் கூற இயலாது எனவே பெரும்பாலும் அதை தவிர்ப்பது நல்லது.

    • விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.
    • சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமிழக மாணவ, மாணவிகள் எந்த விளையாட்டுப் பிரிவில் சிறந்து விளங்குகிறார்கள் என்பதைக் கண்டறிந்து, அவ்விளையாட்டுக்களில், மாணாக்கர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கி விளையாட்டுத் திறனை ஊக்கு விக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ கத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.

    இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு 29.4.2024 முதல் 13.5.2024 வரை கால்பந்து, வாலிபால், கபாடி, கூடை பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும் என்றும், அதற்காக இந்த ஆண்டு கோடைகால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

    கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் கூறுவதற்கு விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

    அம்மா அரசில், மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

    மாவட்டந்தோறும் விளையாட்டு மைதானங்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்படும் என்றும், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளை பிரதம மந்திரியை வைத்து ஆரம்பித்து வைத்தோம் என்றும், உலக செஸ் போட்டியை தமிழகத்தில் நடத்திவிட்டோம் என்றும் சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் தி.மு.க. அரசின் பொம்மை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாரிசு அமைச்சரின் கீழ் செயல்படும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களிடம் இருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பாரா ஒலிம்பிக் உலகப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றேன் என்று கடையில் வாங்கிய கோப்பையுடன் வந்த நபரை உச்சி முகர்ந்து அவரோடு படம் எடுத்தது மட்டுமின்றி, தன் முதல்-அமைச்சர் தந்தையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெற்று விளம்பரம் தேடிய அதிபுத்தி சாலி மந்திரியிடம் இதை விடப் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது.

    எனவே பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்றும் இந்த அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கியது.
    • வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாட்டால் மழை பெய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். தினமும் இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கி வருகிறது.

    குறிப்பாக வட உள் மாவட்டங்களில் வெயிலின் உக்கிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் வெளியே நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினார்கள். சாலைகள் வெறிச்சோடின. பகலில் வெப்ப உஷ்ணத்தால் உடலில் இருந்து வியர்வை கொட்டுகிறது. புழுக்கமும் காணப்படுகிறது.

    தண்ணீர் எவ்வளவு குடித்தாலும் ஒருவித சோர்வு ஏற்படுகிறது. நேற்று அதிகபட்சமாக கரூர், பாமத்தி, மதுரை விமான நிலையத்தில் 43.8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகி உள்ளது. அதாவது 111 டிகிரி வெப்பம் தாக்கி உள்ளது.

    இந்த நிலையில், மேலும் 4 நாட்களுக்கு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரி வித்துள்ளது. ஈரோட்டில் 110 டிகிரி, வேலூர், திருப் பத்தூர் ஆகிய இடங்களில் 108 டிகிரி வெப்ப நிலை பதிவாகி உள்ளது. 14 மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் தாக்கியது.

    தமிழக உள் மாவட்டங்களில் இன்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும் 3 நாட்களுக்கு 4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கும். வட தமிழக உள் மாவட் டங்களில் இன்று மிக அதிக மாக வெப்பத்தின் தாக்கம் இருந்தது. தொடர்ந்து ஒரு சில மாவட்டங்களில் வெப்ப அலை வீசுவதற்கும் வாய்ப்பு உள்ளது.

    இதற்கிடையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடிமின்னல்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ண கிரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்யக் கூடும்.

    வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாட்டால் மழை பெய்து வருகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் பிரதிப்ஜான் கூறியதாவது:-

    தமிழகத்தின் வட உள் மாவட்டங்களில் கரூர், ஈரோடு, நாமக்கல், வேலூர், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய இடங்களில் வெயில் அதிகமாக தாக்கும். 4 நாட்கள் வரை பல மாவட்டங்களில் வெப்ப நிலை அதிகமாக இருக்கும். அதன் பிறகு குறையத் தொடங்கும்.

    10, 12-ந் தேதி வாக்கில் வெப்ப நிலை குறைய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை தொடர்ந்து பெய்வதற்கு வாய்ப்புள்ளது. அதனால் வெப்பம் தணியும்.

    மேலும் குமரி கடல் பகுதி யில் மேலடுக்கு சுழற்சி ஒன்று உருவாகும் சூழல் உள்ளது. அதனால் தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×