என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கணிதம்"
- 4-ம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர்.
- பள்ளிப் பாட புத்தகங்களில் உள்ள தகவல்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் கல்வி முறையை நாம் பின்பற்றி வருகிறோம்.
புதுடெல்லி:
விகிதம் மற்றும் விகிதாசாரம் தர்க்க ரீதியான பகுப்பாய்வு, இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் கேட்கப்பட்ட அடிப்படை கேள்விகளுக்கு பதில் அளிக்க இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 80 சதவீத கணித ஆசிரியர்கள் தடுமாறுவதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உள்ள 152 பள்ளி களைச் சேர்ந்த 1,300-க்கு மேற்பட்ட கணித ஆசிரியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கணிதப் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களின் பாட அறிவை அறிந்து கொள்ளும் வகையிலான ஆய்வு ஒன்றை கல்விக்கான முன்னெடுப்புகள் (இஐ) என்ற தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் நடத்தியது.
அந்த ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு கணிதப் பாடம் சார்ந்த முதல்நிலை மதிப்பீட்டு பயிற்சி தேர்வு நடத்தப்பட்டது. அவர்கள் பணிபுரியும் பள்ளிகளின் முதல்வர்களுக்கும் இந்த அறிக்கை பகிரப்பட்டது. இது தொடர்பான ஆய்வில் கூறியிருப்பதாவது:-
அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் திறனை மேம்படுத்த உதவும் விகிதம் மற்றும் விகிதாசாரம், தர்க்க ரீதியான பகுப்பாய்வு இயற்கணிதம் உள்ளிட்ட பாடங்களில் இருந்து அடிப்படையான கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு பதில் அளிக்க 80 சதவீத கணித ஆசிரியர்கள் தடுமாறினர்.
4-ம் வகுப்பு தரத்திலான கணிதப் பாட கேள்விகளுக்கு 73.3 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர். ஆனால் 7-ம் வகுப்பு தரத்திலான கேள்விகளுக்கு 36.7 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே சரியாக விடை அளித்தனர்.
பயிற்சி தேர்வில் கேட்கப்பட்டிருந்த கேள்விகளில் 50 சதவீத கேள்விகளுக்கு 75 சதவீத ஆசிரியர்கள் சரியாக பதில் அளித்தனர். 25 சதவீத கேள்விகளுக்கு எந்தவித தவறுகளும் இல்லாமல் 25 சதவீத ஆசிரியர்கள் மட்டுமே பதில் அளித்தனர்.
இந்த ஆய்வு குறித்த நிறுவனத்தின் துணை நிறு வனர் ஸ்ரீதர்ராஜகோபாலன் கூறியதாவது:-
பள்ளிப் பாட புத்தகங்களில் உள்ள தகவல்களை அப்படியே மனப்பாடம் செய்து தேர்வு எழுதும் கல்வி முறையை நாம் பின்பற்றி வருகிறோம்.
இதை நிறுத்தி விட்டு புதிய சிந்தனைகளைத் தூண்டும் வகையில் நமது கல்வி முறையை மாற்றி அமைப்பதற்கான விழிப்புணர்வாக நாம் இந்த ஆய்வை எடுத்துக் கொள்ள வேண்டும்.
நவீன கால பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் மாணவர்களிடம் புதிய கண்டுபிடிப்புகளை மேம்படுத்தும் திறனை அதிகரிக்கும் நோக்கிலும் தேசிய கல்விக் கொள்கை வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதேபோல் வடிவியல் பாடம் சார்ந்த அடிப்படைக் கேள்விகளுக்கும் தவறான புரிதலோடு ஆசிரியர்கள் பதில் அளித்தனர். தசம எண்களை முழு எண்களாக எடுத்து மதிப்பீடு செய்வது போன்ற தவறுகளையும் ஆசிரியர்கள் செய்தனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டங்கள் அடங்கிய குரூப்புகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
- மாணவர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மதுரை:
தமிழகத்தில் தற்போது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முடிந்து பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தீவிர மாக நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டத்தை பொறுத்த அளவில் 117 அரசு பள்ளிகள், 80-க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள், 200-க்கும் மேற்பட்ட மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
இவற்றில் மொத்தமாக அறிவியல் மற்றும் கலைப் பிரிவுகளில் 40 ஆயிரத்திற் கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. மேல்நிலைப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் தொழில் கல்வி, கலை பிரிவில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளே முக்கியமான நுழைவு வாயிலாக இருக்கிறது.
பிளஸ்-1 வகுப்பில் எடுக்கும் பாடத்திட்டங்களே மாணவர்களின் கல்லூரி படிப்பையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பவையாக உள்ளன. எனவே 10-ம் வகுப்பு முடித்துவிட்டு பிளஸ்-1 வகுப்பில் சரியான பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதுகுறித்து தனியார் பள்ளிகள் தாளாளர் கூட்டமைப்பின் தலைவர் கூறுகையில், தற்போது பிளஸ்-1 வகுப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பெரும்பாலானோர் கம்ப்யூட்டர் சயின்ஸ், வணிகவியல் படங்களுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். கூடுமானவரை கணிதம், உயிரியல் பாடங்களை தவிர்க்கின்றனர்.
கலைப் பிரிவில் எந்த பாடத்தை தேர்வு செய்தாலும் அதனுடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமும் இடம்பெறுவது போல் இருக்கும் குரூப்புகளையே மாணவர்கள் தேர்வு செய்ய விரும்புகின்றனர். மாணவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பெரும்பாலான தனியார் பள்ளிகளும் பல்வேறு பாடத்திட்டங்களுடன் இணைந்து கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும் கற்பிக்கும் வகையில் குரூப்புகளை பெற்றுள்ளனர்.
இந்த வகை பாடத்திட்டங்களுக்கு இருக்கும் இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. ஒரு சில பள்ளிகளில் முற்றிலுமாக அறிவியல் பாடத்திட்டம் என்ற வகையில் உயிரியல் போன்ற பாடத்தை மட்டுமே கொண்ட குரூப்புகளை வைத்துள்ளன. இவற்றில் கணிதம் கற்பிக்கப்படுவது இல்லை.
மாணவர்களின் 10-ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக வைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் தேவையான பாடப்பிரிவுகளை வழங்கும் வகையில் மாணவர் சேர்க்கை வேகமாக நடைபெற்று வருகிறது என்றார்.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 350-க்கும் அதிக மான மதிப்பெண்களை பெற்ற மாணவி ஒருவர் கூறுகையில் கணிதம், இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்கள் அடங்கிய குரூப் பாடத் தையே தேர்வு செய்ய விரும்புகிறேன். எதிர்காலத் தில் ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் பாடத்திட்டத்தை தேர்வு செய்ய விரும்புகிறேன் என்றார்.
அதே நேரத்தில் பெரும் பாலான மாணவர்கள் கணிதம் தவிர்த்த கலைப் பிரிவு படங்களுக்கே முக்கி யத்துவம் அளித்து வருகின்ற னர். நீட் தேர்வின் மீதான தயக்கம் காரணமாக பெரும் பாலான மாணவர்கள் உயிரியல் பாடத்தை தேர்வு செய்வதில் தயக்கம் காட்டு வதாக தனியார் பள்ளிகள் தரப்பில் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அரசு பள்ளியில் படிக்க விரும்பும் மாணவர்கள் பரவலாக பல்வேறு குரூப்புகளிலும் சேர்வதில் ஆர்வம் காட்டி வருவதாக அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், 10-ம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அரசுப் பள்ளிகளில் பல்வேறு குரூப்புகளை தேர்வு செய்ய மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
அரசு பள்ளிகளை பொறுத்தவரை கலைப் பிரிவு, வணிகப்பிரிவு, அறிவியல் பிரிவு என்ற பேதங்கள் இல்லாமல் மாண வர்களின் விருப்பம் மற்றும் மதிப்பெண்களை அடிப்ப டையாக வைத்து மாணவர் சேர்க்கை அளிக்கப்படுகிறது.
அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர் களுக்கு உயர்கல்வியில் பல்வேறு துறைகளிலும் 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு இருப்பதால் மாணவர்கள் பாடத்திட்டங்களை தேர்வு செய்வதில் எந்தவித தயக்க மும் இல்லை.
அதே நேரத்தில் மாண வர்கள் உயிரியல் பாடத்தை தவிர்ப்பது குறித்து தனியார் பள்ளி தாளாளர் ஒருவர் கூறுகையில், ஒரு சில மாணவர்களுக்கு உயர் கல்வியில் மருத்துவம் படிக்க விருப்பம் இருந்தா லும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வ தில் தயக்கம் உள்ளது. எனவே அவர்கள் பிளஸ்-1 பாடத்தில் உயிரியலை தவிர்த்த படங்களையே எடுக்க விரும்புகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் வணிகவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திட்டங்கள் அடங்கிய குரூப்புகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மெட்ரிக் பள்ளிகள் போன்ற தனியார் பள்ளிகளில் கணிதம் அல்லாத உயிரியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் இணைந்த பாடத்திட்டங்கள் வேகமாக நிரம்பி வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரி வாக இருந்தாலும், உயிரியல் பிரிவாக இருந்தாலும், கலை பிரிவாக இருந்தாலும் மாணவர்கள் கணிதம் இடம்பெறுவதை தவிர்க் கவே விரும்புகின்றனர்.
கணித பாடத்தில் பிளஸ்-2 தேர்வில் கேட்கப்படும் சிறப்பு கேள்விகளை எதிர்கொள்வதில் மாணவர்கள் மத்தியில் தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே கணிதம் வேண்டாம், உயிரியல் வேண்டாம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மட்டும் போதும் என்பதே எதிர்காலத்தை தேடும் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- அறிவியல் சார்ந்த செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்படக்கூடியது அறிவியல் மன்றம் ஆகும்.
- அமிலத்தன்மை நீக்கும் சோதனையை மாணவர்கள் செய்து காண்பித்தனர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கணித மற்றும் அறிவியல் மன்றம் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, ஆடின் மெடோனா, உமா மகேஸ்வ ரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக மாணவி மோனிகா அனை வரையும் வரவேற்றார்.
மன்னார்குடி பான் செக்கர்ஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கணிதத்துறை உதவி பேராசிரியர் விமலா கலந்து கொண்டு பேசுகையில்:-
கணித மன்றத்தின் மூலம் கணித புதிர்கள் மற்றும் கணித விளையாட்டுகள் வேதகால கணிதம் மற்றும் மின்னல் வேக கணிதம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பயன்பாடுகள், போட்டி தேர்வுகளுக்கு தயாராவதற்கு ஏதுவாக எளிய முறையில் கணித பயிற்சி மேற்கொள்ளுதல் போன்றவை கணித மன்றத்தின் செயல்பாடுகள் ஆகும். மாணவரின் முழுமையான வளர்ச்சிக்கு பயன்படும் அறிவியல் சார்ந்த பல செயல்பாடுகளை மேற்கொள்வதற்கு பயன்பட க்கூடியது அறிவியல் மன்றம் ஆகும் என்றார்.
பின்னர், திரவ அடர்த்தி வேறுபாடு சோதனையை சந்தோஷ், அமிலத்தன்மை நீக்கும் சோதனையை புஷ்பா ஆகியோர் செய்து காண்பித்தனர். முடிவில் மாணவி அகத்தியர் நன்றி கூறினார். நிகழ்ச்சியை மாணவி ஷாலினி தொகுத்து வழங்கினார். இதில் ஆசிரியர்கள் பாஸ்கரன், சக்கரபாணி, நடராஜன், முகமது ரஃபீக், பாலசுப்பி ரமணியன் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு களை ஆசிரியர்கள் மீனாட்சி சுந்தரம் மற்றும் விஜயகுமார் செய்திருந்தனர்.
- கடந்த 3 ஆம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது.
- பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு பாடங்களுக்கு தேர்வு நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த 3 ஆம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு நிறைவடைந்தது.
இந்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேள்வி எண் 47(b)-க்கு மாணவர்கள் பதிலளிக்க முயற்சித்து இருந்தால் கூடுதல் மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
- தமிழ் மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்கள் கற்றுத்தரப்பட்டது.
- ஏ.டி.எம். பயன்படுத்தும் முறை, வங்கியில் பணம் எடுக்கும் முறை குறித்து கற்றுத்தரப்பட்டது.
சீர்காழி:
கொள்ளிடம் ஒன்றி யத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் முற்றிலும் எழுத படிக்க தெரியாத கல்லாதோருக்கு அடிப்படை எழுத்தறிவை தெரிந்து கொள்ள கொள்ளிடம் ஒன்றியத்தில் 38 மையங்களில் சுமார் 780 கற்போர்கள் பயின்று வந்தனர்.
இவர்களின் கற்றலை மதிப்பிடும் வகையில் 38 மையங்களில்அடிப்படை எழுத்தறிவு தேர்வுநடை பெற்றதுதேர்விற்கு முதன்மை கண்காணிப்பாளராக தலைமை ஆசிரியரும் அறை கண்காணிப்பாளராக தன்னார்வலர்களும் செயல்பட்டனர்
தேர்வு நடைபெற்ற மையங்களை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதி வட்டார வளமைய மேற்பார்வை யாளர் ஞானபுகழேந்தி ஆசிரியர் பயிற்றுநர்கள் பாக்கியலட்சுமி ஐசக் ஞானராஜ் கவிதா ஆகியோர் மையங்களை பார்வையிட்டனர்.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி கூறும் போது முழுவதும் எழுதப் படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தமிழ் மற்றும் கணிதத்தில் அடிப்படைத் திறன்களை கற்றுத் தரப்பட்டது.
ஏடிஎம் பயன்படுத்தும் முறை, வங்கியில் பணம் எடுக்கும் முறை, பேருந்து மற்றும் ரயில் டிக்கெட் பதிவு செய்யும் முறை, அஞ்சல் நிலையங்களில் பணம் செலுத்தும் முறை, ஆகியவை கற்றுத் தரப்பட்டது.
இத்தேர்வை கோயில்கள் பள்ளிகள் மற்றும் அவர்கள் வேலை செய்யும் இடங்களுக்கே சென்று தேர்வு வைக்கப்பட்டது இத்தேர்வில் கற்போர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேர்வை எழுதினர் என்றார்.
- விழாவுக்கு கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார்.
- போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதவியல் மன்ற விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதல்வர் (பொறுப்பு) ஜமுனா ராணி தலைமை தாங்கினார். கணிதத்துறை பேராசிரியர் புஷ்பராணி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அன்னை ஹாஜிரா பெண்கள் கல்லூரி பேராசிரியை ஆனந்த லெட்சுமி கலந்து கொண்டு கணிதத்தின் மூலம் உலகைப் புரிந்து கொள்வது என்ற தலைப்பில் உரை யாற்றினார். விழாவில் கணித மாதிரிகள் கண்காட்சி நடைபெற்றது.
கணித மன்ற விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கணிதவியல் துறை மூன்றாமாண்டு மாணவி முத்து சரஸ்வதி நன்றி கூறினார். விழா ஏற்பாடு களை கணிதத் துறை பேராசிரியர்கள் கீதா, தேன்மொழி, பிரேசில், பொன் செல்வகுமாரி, ஸ்டெபி ராஜ வின்செலஸ், ஜாபியா டினோ மெர்ஸி ஆகியோர் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்